Friday, May 25, 2012

திராவிட தேசத்தை ஆளப்போகும் அஜித்

அஜித்தின் பில்லா 2 திரைப்படமே இன்னும் ரிலீஸ் ஆகேல, அதற்குள் இன்னமும் படப்பிடிப்பே ஆரம்பமாகாத பெயரிடப்படாத விஷ்ணுவர்த்தனின் படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்காகிவிட்டது என்றே சொல்லத்தோன்றுகின்றது. முதல் காரணம் 2007 இல் வெளிவந்த பில்லா பீவர்தான்.. அந்த படத்தில் அஜித்தை ஸ்டைலாக காட்டியதுபோல வேற எந்தவொரு நடிகர்களையும் இதுவரை பார்க்கமுடியேல, அந்தளவுக்கு அஜித்தின் ஒவ்வொரு அசைவுகளுமே ஸ்டைலிசா இருந்திச்சு.. படமும் சக்கைப்போடு போட்டது.. பாட்ஷா படம் வந்தாப்பிறகு ரஜினி-கமல் போட்டியில் ரஜினி எப்பிடி மேலே போனாரோ அதேபோல அஜித்துக்கும் பில்லா வரும்போது போட்டி நடிகர்களிலிருந்து எங்கயோ உச்சத்துக்கு போய்விட்டார்.... அஜித் என்ற அந்த மூன்றெழுத்து மந்திரத்துக்கப்பால் பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம் படத்தில் நடிக்கும் மற்றைய நட்சத்திரங்கள்தான்.. முதலில் தெரிவுசெய்யப்பட்டவர் ஆர்யா, இவருக்கு இறுதியாக ஹிட் குடுத்த படம் என்றால் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம்தான். அதுக்கப்புறம் வெளிவந்த சிக்குபுக்கு, அவன்-இவன் இரண்டுமே பெரிதாக ஓடவில்லை. ஆர்யாவுக்கென்று தனி மவுசு இருக்கின்றதென்று சொல்லமுடியாட்டிலும். அவரது நகைச்சுவை பாங்கான நடிப்பு எல்லோரையுமே இலகுவாக கவரும். ஆனாலும் அஜித் படத்தில் வழமையான ஆர்யாவை பார்க்கமுடியாது,"பாஸ் என்கிற பாஸ்கரன்" இற்கு முந்தய ஆர்யாவைத்தான் பார்க்கப்போறோம். ஆமா அவரிற்கு வில்லன் ரோல்...................
ஆர்யாவுக்கு அடுத்ததாக இணைந்தவர்கள் நயன்தாரா, மற்றும் டப்சி ஆகியோர். அஜித் படங்களை பொறுத்தவரையில் எப்பவுமே அஜித்தை சுற்றித்தான் கதை போகும்.. ஹீரோயின்களுக்கு வேலை கொஞ்சம் குறைவுதான்.. அத்துடன் தற்போதைய நிலையில் நயன்தாரா, மற்றும் டப்சி ஆகியோர் டாப் நிலையில் இல்லாதவர்கள். இதால இந்த படத்துக்கு இவர்களால் எதிர்பார்ப்பு கூடபோவதில்லை.. கஜால் அல்லது சமந்தாவை இணைத்திருந்தால் அவர்களாலும் ஒரு எதிர்பார்ப்பு படத்திற்கு கிடைத்திருக்கும்.. அடுத்ததாய் இசையமைப்பாளர் யுவன், இது சொல்லவே தேவையில்லை 1980/90 களில் ரஜினி-இளையராஜா கூட்டணி எப்பிடி தமிழ்சினிமாவை ஆட்டிப்படைச்சுதோ அதேபோல அஜித்-யுவன் கூட்டணி இன்று அசத்திக்கொண்டிருக்கிறது.. ஏகன் தவிர இவர்கள் இருவரும் இணைந்த தீனா,பில்லா,மங்காத்தா மூன்று படங்களுமே பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டவை.. ஆதலால் யுவனின் சரவெடி இசை மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.... அடுத்ததாய் அஜித்தால் சிபாரிசு செய்யப்பட்ட அஸ்வின், இவர் மங்காத்தாவில் அசத்தலா தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார்... நிச்சயம் இதிலும் தகுந்த பாத்திரம் வழங்கப்படின் சிறப்பான பங்களிப்பை குடுப்பார் என்பதில் சந்தேகமில்லை....
அடுத்ததாய் இணைந்தவர்கள் பிரித்திவிராஜ் மற்றும் அரவிந்தசாமி.... இவற்றில் பிரித்திவிராஜ்கு தமிழில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிடினும், கேரளாவில் மம்முட்டி-மோகன்லாலுக்கு அடுத்ததாய் இவருக்கு பெரிய ஒபெநிங் இருக்கின்றது என்றாலும் பிரித்திவிராஜ் இருக்கிறதால கேரளா மக்கள் முண்டியடித்து பார்ப்பார்கள், வசூல்ல அடித்து தூள் கிளப்பும் என்றெல்லாம் சொல்லமுடியாது.. காரணம் அங்குள்ள நம்பர் ஒன் சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி-மோகன்லால் போன்றோரே ஐந்து பத்து கோடியில் படம் எடுத்திட்டு அதை ஹிட் ஆக்க படும்பாடு!!!!.... அவர்களின் இன்றைய நிலையில் ஒரு படம் ஹிட் அடிச்சா நாலைந்து படங்கள் தொடந்து ஊத்தும்.. அந்தளவு மோசமான நிலையிலே அவர்களின் பிழைப்பும் போகுது.. குறிப்பாக தமிழ்நாடு மக்கள் போலல்லாது கேரளாவில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் சனத்தின் எண்ணிக்கையும் பயங்கர குறைவு.. என்றாலும் தனியே அஜித்தின் படம் என்டதைவிட பிரித்திவிராஜூம் கூட நடிக்கும்பட்சத்தில் கூடுதலான வசூல் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கத்தான் செய்யும்.. அதனால் அவரின் பிரசன்னம் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை... அடுத்ததாய் அரவிந்தசாமி... ஏனையா இந்தாளை எடுத்தாங்க? எடுத்ததை விட எடுக்காம விடுறதுதான் என்னைப்பொறுத்தவரையில் சிறந்த முடிவென தோன்றுகிறது... விஸ்ணுவுக்கு ஏன் இந்த விஷ பரீட்சையோ தெரியல............
இறுதியா இந்த லிஸ்டில் இணைந்தவர்கள்தான் மிகமிக முக்கியமானவர்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களான ரவிதேஜா மற்றும் நாகார்ஜுன்.. அதற்குமுன் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இது மட்டும் சாத்தியமாகுமெனின் அஜித்தின் எதிர்கால நகர்வுகளுக்கு மிகமுக்கிய பங்காற்றும் என்பதை மறுக்கமுடியாது.. காரணம் தெலுங்கு மாக்கட் என்பது கன்னடம்,மலையாளம் போலல்லாது மிகப்பெரியது... ஏன் தமிழைவிடவே சற்று அதிகம் என்றும் சொல்லலாம். இன்றைக்கு ரஜினி,கமலுக்கு அப்புறம் சூர்யா,கார்த்தி ஆகியோருக்கு தெலுங்கிலும் அதிக ஒபெநிங் உண்டு.. அவர்களின் படங்கள் நன்றாக அமைந்து தமிழ் கடந்து ஓடுவது ஒருபுறம், மற்றையது தங்களது படங்களுக்கு ஆந்திரா சென்று அங்கயும் புரமோஷன் செய்து வருகின்றனர்... எந்தவொரு மொழியிலும் நடிகர் படத்தை புரமோஷன் செய்யாவிடின் படத்தை வெல்லவைப்பதென்பது கஷ்டமான விடயம்.. இதற்காகவே ஹிந்தி ஹீரோக்கள் நிறைய சாகசங்கள்,கூத்துகள் காட்டுவார்கள்... ஆனா, அஜித்தை பொறுத்தவரையில் தான் புரமோஷன் செய்வதை விரும்பாத மனிதர். ஆனால் தமிழில் அவருக்கென்று ஒரு வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருப்பதால் புரமோஷன் தேவைப்படுவதில்லை.. ஆனா அவரின் படங்கள் வேறு மொழியிலும் சக்கைப்போடு போடவேணும் என்றால் கட்டாயம் களத்தில இறங்கி புரமோஷன் செய்தே ஆகணும்.. அதற்கு எப்போதும் அஜித் சம்மதிக்கமாட்டார்..ஆதலால், தெலுங்கு முன்னணி நடிகர்களை படத்தினுள் உள்வாங்குவதன்மூலம் அவர்கள் மூலமாக ஒரு ஒபெநிங்கை பெற்று தனது பெயரையும் நிலைநாட்டி காலப்போக்கில் தமிழ்நாட்டைப்போல தெலுங்கையும் ஆளலாம்............
மற்றும் அஜித் விட்ட இன்னுமொரு பிழை என்னவென்றால், பில்லா(2007) படத்தை தெலுங்கி டப் பண்ணி ரிலீஸ் பண்ணாமல் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கு உரிமையை விற்றது... பில்லா படம் மட்டும் மங்காத்தா போல தெலுங்கிலையும் டப் பண்ணி விட்டிருந்தா நிச்சயம் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டிருக்கும்.. அஜித்தின் இன்றைய நிலையும் எங்கயோ போயிருக்கும்.. இப்ப சூர்யாக்கு தெலுங்கில் எப்பிடி ஒபெநிங் இருக்குதோ அதேபோல 2007 இலே அஜித்த்துக்கு அப்பிடியொரு நிலை ஏற்பட்டிருக்கும். காலம் கடந்துதான் அஜித்துக்கு அந்த அறிவு வந்திருக்கு என்று சொல்லத்தோன்றுகிறது.... இப்பவெல்லாம் அஜித் படங்கள் நேரடியாவே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.. அண்மையில் மங்காத்தா செம ஹிட் ஆகிச்சு, இனி பில்லா 2 உம் டப்பாகி வெளிவரப்போகுது.. அதுக்கடுத்ததாய் விஷ்ணுவுடனான படமும் அவ்வாறு டப்பாகி ரிலீஸ் ஆகப்போகுது.. 
மொத்தத்தில் மலையாளம்,தெலுங்கு என திராவிட தேசத்தையே கலக்கப்போகும் படம் அஜித்+விஷ்ணு கூட்டணியிலான படம்... என்னதான் விஷ்ணுட படத்தில மலையாள,தெலுங்கு நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அதில் சூரியனா சுடர் விடப்போவது நம்ம தலைதான்....................... ரஜினி படங்களை பார்த்தால் தெரியும் ஒரு பட்டாளமே நடிக்கும்.. ஆனால் தண்ட பங்கு குறையுமே எண்டு ரஜினி அதைப்பற்றி வருத்தப்படுவதில்லை, காரணம் என்னதான் பட்டாளம் இருந்தாலும் ரஜினி என்ற ஒரு மனிதன் இல்லாவிடில் அந்த படம் படமல்ல பப்படம்தான்........ அதே நிலைக்கு தற்போது அஜித்தும் வந்துவிட்டார்............. வாழ்த்துக்கள் தல...............

5 comments:

 1. //என்னதான் பட்டாளம் இருந்தாலும் ரஜினி என்ற ஒரு மனிதன் இல்லாவிடில் அந்த படம் படமல்ல பப்படம்தான்........ அதே நிலைக்கு தற்போது அஜித்தும் வந்துவிட்டார//

  அது தான் தல.

  அருமையான பதிவு சஜி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா தங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் தல...............

  ReplyDelete
 4. // என்னதான் விஷ்ணுட படத்தில மலையாள,தெலுங்கு நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அதில் சூரியனா சுடர் விடப்போவது நம்ம தலைதான்....................... ரஜினி படங்களை பார்த்தால் தெரியும் ஒரு பட்டாளமே நடிக்கும்.. ஆனால் தண்ட பங்கு குறையுமே எண்டு ரஜினி அதைப்பற்றி வருத்தப்படுவதில்லை, காரணம் என்னதான் பட்டாளம் இருந்தாலும் ரஜினி என்ற ஒரு மனிதன் இல்லாவிடில் அந்த படம் படமல்ல பப்படம்தான்........ அதே நிலைக்கு தற்போது அஜித்தும் வந்துவிட்டார்............. வாழ்த்துக்கள் தல//


  தலையோட ரசிகனா நான் என் நண்பர்கள் கிட்ட இதத்தான் சொல்லுவேன்..

  ReplyDelete

comment