Saturday, May 12, 2012

மங்காத்தாவும் நொந்துபோன உதயநிதியும்....


காலை நித்திரையால எழும்பி வெப்சைட்டுக்களில் என்ன செய்திகள் வந்திருக்குதெண்டு சும்மா தட்டி பார்த்தா செம அதிர்ச்சி, அது வேற ஒண்டுமில்லை "ஒருகல் ஒருகண்ணாடி" பற்றி உதயநிதி தெரிவித்த ஒரு கருத்துத்தான்... "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.".. இதுதான் அவர் கூறின கருத்து.... அவற்றை கருத்திண்ட ஆழம் இதுதான்.. தமிழ்நாடு அண்மைய வசூல் ஒப்பீட்டு நிலவரப்படி முதலாவது ஏழாம் அறிவு அடுத்தது ஓகேஓகே அடுத்தது மங்காத்தா எண்டு...... இதை நினைத்து சிரிக்கிறதா இல்லை அழுகிறதா எண்டு கொஞ்சநேரம் ஒரே குழப்பமா இருந்திச்சு.......... சரி, அதுக்குமுதல் தயாரிப்பாளராக உதயநிதியை பற்றி கொஞ்சம் பார்ப்பம்......

 ஒருகல் ஒருகண்ணாடியானது உதயநிதியின் தயாரிப்பில் வெளிவந்த ஐந்தாவது திரைப்படமாகும், ஓகேஓகே ஐ தவிர இவர் தயாரித்த மிகுதி நான்கு படங்களுமே வெற்றிப்படங்கள் அல்ல, அதில் குருவி,மன்மதன் அம்பு ஆகிய ரெண்டு படங்களும் படுதோல்விப்படங்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமும்கூட.. மற்றைய ரெண்டு படங்களான ஆதவன்,ஏழாம் அறிவு ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் மிக்ஸ் ரிப்போட்தான், கிளீன் ஹிட் என்றில்லை... இரண்டுமே அவேரேஜ் படம்தான். அப்பிடி என்றால் வெற்றியா தோல்வியா என்று பார்த்தால் தோல்வியென்றுதான் சொல்லணும்.. இதேபோலத்தான் அஜித்தின் திருப்பதி,பரமசிவன் படங்கள், மற்றும் விஜயின் ஒருசில தோல்விப்படங்களுக்கும் இதே கதிதான்... அவேராஜ்ஜா ஓடின படமென்றாலும் வெற்றியா/தோல்வியா என்றுதான் இறுதியில் பார்ப்பார்கள்.. அப்போது அவை தோல்வியாகவே கணிக்கப்படும்.. என்னதான் ஒவ்வொரு படத்திலயும் அடிவாங்கினாலும் விடுற பில்டப்புக்கு அளவே இல்லை.. குருவி படத்துக்கு 150வது நாள் வெற்றிவிழாவை பிரமாண்டமாய் செய்து, படங்களின் ஓடிய நாட்களை வைத்து வெற்றியை அறிவிக்கும் மரபையே கேவலப்டுத்தினார்கள். அதற்கப்புறம் ஆதவன் வெளிவந்தசமயம் வசூல் நிலவரங்களை "சிவாஜிக்கு அடுத்ததாய்" என்ற ஒரு சொல்லை பயன்படுத்தியே பில்டப் விட்டார்கள்.. அடுத்ததாய் மன்மதன் அம்பு படத்திற்கு வசூல் ரீதியில் பில்டப் விட்டதா தெரியவில்லை.. அதற்கப்புறம் கடைசியா வந்த ஏழாம் அறிவிற்கு விட்ட பில்டப்பை ஊரே அறியும்...... 100 கோடியே தாண்டாத படத்தை எந்திரன், சிவாஜிக்கு அடுத்ததாய் மிகப்பெரிய வசூலிச்ச படமாய் விளம்பரப்படுத்தினார்கள்.. இவ்வாறு உதயநிதி விடும் பில்டப்புக்கு அளவே இல்லை எண்டு சொல்லலாம்..... இவற்றை தயாரிப்பில அல்லது வெளியீட்டில் ஏதாவது படங்கள் ரிலீசானா டுவீட்டர் பக்கம் தலைகாட்டவே முடியாது... அந்தளவுக்கு ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொருநாளும் எல்லா சோவும் ஓடி முடிஞ்சாப்பிறகு வந்த கலக்சனை எல்லாம் கூட்டி பார்த்தாள்போல வசூல் கணக்குகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார்... பாவம் உதயநிதி.. ஊருக்கே தெரிஞ்சிட்டு இவற்றை பித்தலாட்டம்.. ஆனா, இன்னமும் இவர் தான் சொல்லுறதை எல்லாம் நம்பிட்டு இருக்காங்க எண்டு நம்பிட்டிருக்கார்...



சரி, நாம விடயத்துக்கு வருவோம்.....
எந்திரன் வெளிவந்து அடுத்த இரண்டாண்டுகளில் வெளிவந்த படங்களில் எந்தவொரு மிக்ஸ் ரிப்போட்டும் இல்லாமல், வெளியான அனைத்து இடங்களிலுமே சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் மங்காத்தாதான்... மொத்த வசூலிலும் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்தபடியாய் இன்றுவரை அதிக வசூலிச்ச படம் என்றாலும் மங்காத்தாதான்.... நினைத்துக்கூட பார்க்கமுடியாதளவிலான வெற்றி அது, வெறும் நாற்பது கோடிகளில் தயாரிச்ச படம் மொத்தமாக 130 கோடிகள் வசூல் செய்தது.. அதற்கடுத்ததாய் மொத்தவசூல் அதிகம் என்றால் ஏழாம் அறிவை குறிப்பிடலாம்(net profit அல்ல).. ஆனால் உதயநிதியின் கருத்தை ரெண்டுவிதமாய் பார்த்தால், ஒன்று மங்காத்தாவை விட ஏழாம் அறிவின் தமிழ்நாட்டு வசூல் கூட என்பது.. மற்றது ஓகேஓகே ட தமிழ்நாடு வசூல் மங்காத்தாவை விட அதிகம் என்பது...

இதற்கு நான் சொல்லும் பதில் இதுதான்.....ஏழாம் அறிவுட பட்ஜெட் கிட்டத்தட்ட எண்பது கோடி என்று சொன்னார்கள், அதே சந்தேகப்படவேண்டிய ஒரு விடயம்தான்...அந்தப்படத்தை பார்த்தா தெரியும் எண்பது கோடி செலவழிக்கிற அளவுக்குக்கு பிரமாண்டம் எண்டு எதுவுமில்லை..குறிப்பாக முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு நிமிட சீனுக்கும் ஒவ்வொரு கோடி செலவளித்தோம் என்று சொன்னாங்களே!! சப்பா தாங்கமுடியேலப்பா! சரி அதைவிடுவம், எண்பது கோடி எண்டே எடுத்தாலும்,எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவு படத்துக்கு விநியோகிஸ்தரும் உதயநிதிதான்.. ஆதலால் உதயிடமிருந்து நேரடியாக தியேட்டருக்கே சென்றிருக்கும். எப்பிடியும் 90 கோடியளவில் வியாபாரம் நடந்தாலும் மங்காத்தாட வசூலை முறியடித்தது என்றால் 130 கோடிகள் தாண்டியிருக்கணும், கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபா நிகரலாபம்.... எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவுக்கு நாற்பது கோடி நிகர லாபம் என்றால் ஏழாம் அறிவு சூப்பர்ஹிட் அல்லது பிளக்பஸ்டர் என்றல்லவா அறிவிக்கப்பட்டிருக்கணும்? ஏன் எல்லா வெப்சைட்டும் அவேரேஜ் எண்டு குடுத்திருக்காங்க?? என்ன சிரிப்பென்றால் ஹிட் என்றுகூட வெப்சைட்டுகள் அறிவிக்கவில்லை.. பட்ஜெட்டுக்கேற்ப நிகரலாபத்தை அடிப்படையா வைச்சு வருடமுடிவில் வெளியான அறிக்கையில் வேலாயுதத்துக்கு பிறகே ஏழாம் அறிவு இடம்பிடித்தது...... அவரேஜ் ரக படம் என்றதால் மட்டுமட்டாக 100 கோடிகளை எடுத்திருக்கவே சந்தர்ப்பம் அதிகம். பொதுவாக மொத்த வசூலில் 70% ஆனவை தமிழ்நாட்டிலே வசூல் ஆகும்.. அதற்கடுத்ததாய் rest of tamilnadu, malaysiya, uk, us and canada இல் முறையே அதிக கலக்சனை வசூலிக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.. இதில் தெலுங்கு, யூகே போன்றவற்றில் ஏழாம் அறிவு மங்காத்தாவை விட சற்று அதிகமாய் அதிகம் வசூலிச்சது, மற்றைய தமிழ் நாடு தவிர்ந்த இடங்களிலும் மங்காத்தாவிற்கு சற்று அதிகமான வசூல்..... அப்பிடி இருக்கும்போது தமிழ்நாட்டில் எப்பிடி மங்காத்தாவை விட ஏழாம் அறிவு கூட வசூலிச்சிருக்கும்?... சந்தர்ப்பமே இல்ல........


அடுத்த விடயம் ஓகேஓகே.........மூன்றாம் வார முடிவில் behindwoods இன் தரவுப்படி சென்னை வசூல் மங்காத்தாவை விட அதிகம்தான். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலும் மங்காத்தாவிட அதிகம் என்பது சின்னப்பிள்ளைத்தனமா இல்ல? 70% ஆன கலக்சன் தமிழ்நாட்டில இருந்து வரேக்க, உதயநிதியின் கருத்துப்படி மொத்த வசூலை மதிப்பிட்டால் கிட்டத்தட்ட 90 கோடிகளை தாண்டியல்லவா இருக்கணும்???............. அப்பிடியாயின் ஏன் behindwoods verdict- superhit என்று குடுத்திருக்காங்க? Blockbuster குடுத்திருக்கலமே!................. அண்ணை உதயநிதி! உங்கட பிராட்டு வேலையெல்லாம் ஊருக்கு தெரிஞ்சுபோச்சு.... இனியாவது ரூட்டை மாத்துங்க...............................
(behindwoods இணையத்தளம் ஒருபோதுமே அஜித்துக்கு ஆதரவா இருந்ததில்ல, எப்பவுமே அஜித்தை நான்காம்,ஐந்தாம் இட நடிகராகவே தரப்படுத்துவார்கள்.. அதனால்தான் எதிரிரியின் தகவல்களை source ஆக எடுத்துள்ளேன்......)

                                            வருகைக்கு நன்றி..

25 comments:

  1. Unaku en intha veen vela ok ok ku mangatha betternu sollum bothae nee oru dash or thivira ajith rasihan nu oru therinji duchi po poi velaya paru nee
    brother last one request
    nee idha kanaku eduthu pottathala yarukum nastamum illa poi vazkaila munnera paru

    ReplyDelete
    Replies
    1. நீங்க அப்ப முன்னேறாமல் என்னத்துக்கு வாசித்தநீங்கள்..எழுதினதுல என்ன பிழை இருக்கு இப்டி கமெண்ட் அடிக்கும் போதே தெரியுது நீ ஒரு விசை பான் எண்டு பொத்தீட்டு மாறுரியா..சஜி என்ன செய்தாலும் அது சரிதான் நீ மாறு...

      Delete
    2. whiteman//// எனக்கு ஏன் இந்த வேலை என்டதுக்குமுன் உனக்கு ஏன் இந்த வேலை? உனக்கு பிடிக்காட்டி கமெண்ட்ஸ் அடிக்கவேணாம்......

      Delete
    3. கோசுபா/// நன்றி நண்பா உன் ஆதரவிற்கு... சிலருக்கு சில உண்மைகளை சொன்னால் கசக்கத்தான் செய்யும்... போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.. எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை......

      Delete
    4. Dai... Whiteman moodevi... OKOK ellam oru padamaada... Santhaanatha thavira padathula oru MAYIRUM illa... Actual-a santhaanam than padamay... Nee atha Mankatha kooda compare panriya...???
      Aama sajirathan-a vasul pathi kavala padama poi munneru-nu sollriye... Appo enna myithukku nee inga comment podra... Aduthavans munnera sollrathukku munnadi mudhalla un kannula ulla thoosiya paaru... Ithu Avar blog... Mudhalla unakku inga enna da vela... Ithula irunthey theriyuthu nee vetti mundam veenapona thandam-nu... I think the whiteman is udhayanidhi himself... Out of envy he's commenting like this... Bloody butthurt jerks.. Get a life Moron...
      Mr.Sajirathan Keep the work up dude...:)

      Delete
    5. Anonymous/// ரெம்ப நன்றி நண்பா தங்களின் ஆதரவுக்கு........... மங்காத்தாவின் வெற்றியை நிறைய அஜித் எதிர்ப்பாளர்களால் பொறுக்க முடியேல.. அதன் ஒரு வெளிப்பாடுதான் Whiteman இன் பின்னூட்டலும்......

      Delete
    6. yes saji you are correct...

      Delete
  2. என்வழி என்ற இணைய தளம் ஒரு கணக்கெடுப்பில் இதுவரை வந்த தமிழ் சினிமாவின் வசூல் படி மங்காத்தா முன்றாம் இடம் . முதல் மற்றும் இரண்டு இயந்திரன் , சிவாஜி . ஓகே ஓகே நன்றாக ஓடுகின்றது .. அனால வசூலில் மன்காத்தாவை மிஞ்ச வாய்ப்பில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பா, சந்தர்ப்பமே இல்லை...... பச்சை பச்சையா பொய் சொல்லுறதொண்டும் உதயநிதிக்கு புதிதில்லை......

      Delete
  3. உங்கள் பதிவில் ஓட்டு படைகளை ஏன் இணைக்க வில்லை ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆமா நண்பா முயற்சிக்கிறேன்..

      Delete
  4. mankatha va minjanumna athu aduthu vara billa 2 thaan...................rajni, kamalai thavirthu................

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க பாஸ்...... நன்றி நண்பா வருகைக்கு..

      Delete
  5. காமெடி பஜார் தான் இப்போ சினிமா :P

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்..... வருகைக்கு நன்றி மைந்தன்..

      Delete
  6. he he he ajitha rasigarai arumayana pathivu uthayanithyku aapu............

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுதன் வருகைக்கு...

      Delete
  7. சூப்பர் நண்பா

    ReplyDelete
  8. உதயநிதி ஒரு ஆளா சஜி? அவரையெல்லாம் போய் நம்ம தல படத்தோட கம்பேர் பண்ணிகிட்டு?

    ReplyDelete
  9. தப்புத்தான் நண்பா.... சில விசமிகள் உதயநிதி சொன்னதை தூக்கி பிடிச்சுக்கொண்டு புலம்புறாங்க.. அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும் என்பதே எனது நோக்கம்...

    ReplyDelete
  10. super super super ella vishayathayum putu putu vachuteenga nanbare

    ReplyDelete
    Replies
    1. ha...ha nanri nanba ungal karuththukku...

      Delete
    2. boss i am hala fan like o be in ouch with u

      Delete
  11. Ajith kooda compare panna thaguthiyaana orae aalu Vijay mattum thaan... Afetr Rajini - Kamal, its Ajith - Vijay... Next may be Surya - Vikram (But not yet comfirmed)... Please dont compare Ajith with these small boy Surya and Udhayanithi (u will see his real status once the second movie is released)...

    ReplyDelete

comment