ஒரு கல் ஒரு கண்ணாடி வந்து ஒரு மாதங்களே ஆகவில்லை, அதற்குள் மீண்டுமொரு முழுக்க முழுக்க காமெடியிலான படம்... சுந்தர்சியின் இருபத்தைந்தாவது படமும்கூட.. எல்லோருக்கும் வாற அந்த கதாநாயகன் ஆசைதான் சுந்தர்சியின் இயக்குனர் எண்ட சினிமா பயணத்திற்கு இடையே சின்ன தடங்கல் ஏற்பட்டாலும், மனுஷன் நல்லா பட்டு தெளிந்துவிட்டார்போலும்.. மீண்டும் இயக்குனராகவே விஸ்வருபம் எடுத்திட்டார். சுந்தர்சி ஹீரோவாக நடிக்கும்போது அந்த படங்கள் தோல்வியடையவேணும் என்று நான் நினைத்ததுண்டு, ஏனென்டா அப்பதானே மீண்டும் முழுநேர இயக்குனராக மாறுவார் எண்ட அந்த ஆசைதான்.... மணிரத்தினம்,சங்கர்,பாலா,அமீர் போன்ற முதல்தர இயக்குனர் இல்லாவிடினும் ரசிகர்களை ஏமாற்றாத இயக்குனர்களில் இவர் முதன்மையானவர்... உள்ளத்தை அள்ளித்தா, வின்னர்,கிரி,லண்டன்,ரெண்டு என்று சந்ததி சந்ததியா பேசும் அளவுக்கு நகைச்சுவைகளை இவரின் படங்களில் அவதானிக்கலாம்.. அதே வரிசையில்தான் இந்த "கலகலப்பு" திரைப்படமும்.....................
சரி இனி விமர்சனத்துக்கு போவோம்.....
நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா
இயக்கம்- சுந்தர்சி
இசை- விஜய் எபநிசியர்
ஒளிப்பதிவு- சுந்தர்
தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி
வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV)
முதற்பாகம்..................
விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல... இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் கையெழுத்துபோடணும் எண்டதால விமலோடையே சேர்ந்து இருக்கிறார்... அப்பிடியே ரெண்டு அழகுப்பதுமைகளும் விமலுக்கு அஞ்சலியும், சிவாக்கு ஓவியாவுமாக ஆளுக்கொன்றாக செட் ஆகுறார்கள்.. இதற்கிடையில் அஞ்சலிக்கு ஊரில மாப்பிளை பார்க்க, அவசரம் அவசரமாக அஞ்சலிட ஊருக்கு கிளம்புறார் விமல்.... இதோட முதற்பகுதி ஓவர்......................
இரண்டாம் பாகம்...
இந்தப்பட கதையை ரெண்டு பகுதியா பிரிச்சு எழுத காரணமே சந்தானம்தான்... காரணம், அவர் முதற்பாதியில் இல்லை... அவர் இல்லாத அந்த முதற்பாதி என்னைப்பொறுத்தவரையில் பெரிதாக இல்லை எண்டே சொல்லத்தோன்றுகிறது.. சிவாவின் மொக்கை ஜோக்குகளை முதற்பாதியில சகிக்கவே முடியல.. ஏதோ ஜோக் அடிக்கிறேன் எண்டு கோவம் வாறமாதிரி காமெடி பண்ணினார்.... ரெண்டாம் பாகத்தில சந்தானத்திண்ட அறிமுகத்தோட படமும் விறுவிறுப்பாக நகரத்தொடங்கியது.. குறிப்பாக சந்தானத்திண்ட அறிமுகமே செமையா இருந்திச்சு, ரஜினி,அஜித்,விஜய்க்கே இல்லாத ஒரு மாஸ் இன்ட்ரோடக்சன்.. ஆனா அவர் மாசா இல்ல தூசா எண்டு படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்க..........
சந்தானம்- ஒருவிதத்தில் நோக்கும்போது சூப்பர்ஸ்டாருக்கும் சந்தானத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. ரஜினிட படங்களை பார்த்தால் தெரியும், கிட்டத்தட்ட மல்டிஸ்டார்ஸ்ட படம்போலவே இருக்கும், படத்தில வாற ஒவ்வொருத்தருமே அடிக்கடி திரையில் பார்த்த முகங்களாய் இருக்கும்.. ஆனால், எத்தனை பேர் வந்தாலும் படம்பார்த்துமுடிய ரஜினி மட்டுமே மனதுக்குள் நிற்பார்.. அதுபோலவே சந்தனமும்.. மற்ற எல்லா நடிகர்களையும் பின்தள்ளிவிட்டு அவற்றை காட்சிகளே படம் பார்த்துமுடிந்தபின் மனதில் நிற்கும்... ஓகேஓகே கு பிறகு மீண்டும் கலக்கியிருக்கிறார்..... இந்தப்படத்திலும் இடைவேளையின்பின் சந்தானத்தின் வருகைக்குப்பிறகுதான் படம் செம கலாட்டாவா போகுது.....
சுந்தர்சி- இடைவேளைக்கு பிறகு காமெடியுடன் விறுவிறுப்பாகவும் எடுத்திருக்கிறார். பரவாயில்ல ரகமே குடுக்கலாம்... இன்னமும் அவருடைய பழையபாணியிலே நிக்கிறார்... சந்தானம் எண்ட ஒராள் படத்தில் இருப்பதால் சுந்தர்சிட தலை தப்பிக்கும்போல இருக்கு...
விமல்- விமலுக்கு முழுநீள காமெடிப்படம் சரிப்பட்டுவராதுபோலவே தோன்றுகிறது... சீரியசான கதாபாத்திரத்துடன் அப்பப்ப சில காமெடி சீன்களே இவருக்கு மிகப்பொருந்தும்.. என்றாலும் பரவாயில்ல.. சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. இயன்றளவு முயற்சித்திருக்கின்றார்...
சிவா- கடுப்பேத்திட்டார் மைலோட்..... இவரு மேடையில நிகழ்ச்சி தொகுத்துவழங்கும்போது எப்பிடி இருப்பாரோ! அதேபோலவே படத்திலும் ஒவ்வொரு dialog delivery and face reactions. எனக்கு சிவாவின் நடிப்பில் திருப்தியில்லை.... நான் படம் பார்த்த திரையரங்கில் கொஞ்சப்பேர்தான் இருந்தபடியால் மற்றவர்களின் response எப்பிடி என்று சொல்லமுடியாதுள்ளது....
அஞ்சலி,ஓவியா- அசத்திட்டாங்க... (எல்லாத்திலையும்)
இசையமைப்பாளர், பாடல்கள்- முதன்முதலா தியேட்டர்ல படம் பார்க்கும்போதுதான் பாடல்கள் கேட்டேன்.. நல்லாய் இருந்ததுபோன்றதொரு உணர்வு.... பின்னணி இசையும் நன்றாகேவே இருக்கின்றது..
ஒளிப்பதிவு- குறை சொல்வதற்கில்ல... சிறப்பாகவே உள்ளது.
படத்தில் மேலும்சில குறைநிறைகள்...
எடிட்டிங் படு சொதப்பல்.. காட்சிகள் திடீர் திடீரென துண்டாடப்படுகின்றது. interest ஆக ஒரு சீன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென துண்டாடப்பட்டு மற்ற சீன் வருகிறது. எடிட்டரின் பிழை என்றாலும் சுந்தர்சி இதை திருத்தியிருக்கணும்... கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பார்முலாவில் இதுவொரு பெரிய பிழையாக தெரியாது..காரணம் ரசிகர்கள் அப்போது கதைக்கும்,நடிப்புக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. பிலிம் மேக்கிங்,ஸ்கிரீன்பிளே தொடர்பில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள்... ஆனால், இப்போ காலம் மாறிட்டு, சுந்தர்சிதான் இன்னும் மாறேல.. இது சுந்தர்சியின் update ஆகாத direction formula ஐயே காட்டுகின்றது.....
சந்தானம்,விமல், மனோபாலா இந்த மூன்றுபேரும் தங்களுக்கிடையில் வாகனத்தில் துரத்துப்படும் காட்சி எல்லோரையும் ரசிக்கவைக்கிறது.....
படத்தில் வரும் காமெடி பஞ்வசனங்களும் சூப்பரா இருக்கு....
படத்தில பஞ்ச சுப்பு குழுவினரின் ஆரம்பகாட்சிகள், குறிப்பாக வைரக்கடை வைத்திருந்து பின் வைரத்தை எடுத்திட்டு தாங்களே கடைக்கு நெருப்புவைத்திட்டு, அவங்க போடுற சீன்கள் ரெம்ப போரா இருந்திச்சு......
காமெடி படம் என்றபடியால் லாஜிக் பிழைகள் பெரிதாக அவதானிக்கப்படாது... இது இந்தப்படத்துக்கு ஒரு பிளசாக இருக்கும்... மேலும்,
பொதுவாக காமெடி படங்கள் பெரிதாக சூப்பர்ஹிட்டோ, பிளாக்பஸ்டர் ஹிட்டோ அடித்ததாய் இல்லை.. அந்தளவுக்கு தமிழக ரசிகர்கள் விரும்பி பார்க்கமாட்டார்கள்.. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓகேஓகே வெளிவந்து தற்சமயம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கு.. இன்னிலையில் ஓகேஓகே வெளிவந்து ஒருமாதமே ஆகாதநிலையில் இன்னொரு முழுநீள காமெடிப்படமான கலகலப்பு படத்தின் வெளியீடு வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது......
ஓகேஓகே அளவுக்கு இல்லையென்றாலும் ஓகே அளவுக்கு இருக்கின்றது..
மொத்தத்தில் எனது கருத்துப்படி படம் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்........
அருமை...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ////
Deleteஅருமையான விமர்சனம் .. இன்று தான் இந்த படத்தை பார்க்கலாம் என நினைக்கிறன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்......
Deleteநிச்சயமாக பாருங்கள் நண்பா...... இரண்டரைமணி நேரமும் என்ஜாய் பண்ணலாம்..
இன்று
ReplyDeleteவிஜய்யை எதிர்க்கும் பா.ம .க
ஆமா ஆமா படிச்சிட்டேன் உங்கள் பதிவை.. அப்பிடியே பினூட்டலையும் இட்டுவிட்டேன்........
Deletearumayana vimarsanam anna...........
Deleteநன்றி சுதன் வருகைக்கும் பினூட்டலிற்கும்...
Delete//பொதுவாக காமெடி படங்கள் பெரிதாக சூப்பர்ஹிட்டோ, பிளாக்பஸ்டர் ஹிட்டோ அடித்ததாய் இல்லை.. அந்தளவுக்கு தமிழக ரசிகர்கள் விரும்பி பார்க்கமாட்டார்கள்.. ///
ReplyDeleteஇது கொஞ்சம் பிழையான தகவல் பாஸ்... அந்த காலத்துல இருந்து நிறைய எக்ஸாம்ப்ள்ஸ் இருக்கு.. காதலிக்க நேரமில்லை:பிளாக்பஸ்டர், உள்ளதை அள்ளித்தா: பிளாக்பஸ்டர், சில கமல் படங்கள் :சூப்பர் ஹிட், பாஸ்(எ) பாஸ்கரன: சூப்பர் ஹிட், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஓகேஓகே சூப்பர் டூப்பர் ஹிட் அண்ட் பிளாக்பஸ்டர்(ஏற்கனவே மங்காத்தா கலெக்ஷன பீட் பண்ணியாச்சி, ஆபிசியல்)
காதலிக்க நேரமில்லை:பிளாக்பஸ்டர், உள்ளதை அள்ளித்தா: பிளாக்பஸ்டர்/// இது இரண்டும் ஓகே.... பாஸ்(எ) பாஸ்கரன் பிளாக்பஸ்டர் இல்லை என்று நினைக்கிறேன், காரணம் இந்த படம் வந்து மூன்றாம் வாரம் எந்திரன் வந்திட்டு....................... நான் குறிப்பிடும்போது "பொதுவா" என்றுதான் குறிப்பிட்டேன், காரணம் நீங்க சொல்வது போல எனக்கு தெரியாம சில படங்கள் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கலாம் என்றபடியால்.....
Deleteநன்றி நண்பா உங்களின் வருகைக்கு..எனது பிந்திய பதிலுக்கு வருந்துகிறேன்.. உங்கள் பின்னூட்டலை இப்பதான் பார்த்தேன்...
Deleteஇந்த படம் அந்தளவுக்கு வருமான்னு தெரில, பட் நீங்க சொன்னது மாதிரி ஜஸ்ட் ஓகே, அதாவது ஜஸ்ட் ஹிட் ஆகும்....
ReplyDeleteஹிட் ஆகிட்டு மாமா..............
Delete