Sunday, May 20, 2012

பாக்ஸ் ஆபீஸ் கலாட்டா....

தமிழ் சினிமாவில் வருடாவருடம் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தாலும் அந்த படங்களின் நிலை என்ன? மொத்த வசூல் என்ன? படம் வெற்றியா தோல்வியா எண்டு எவராலுமே உறுதிசெய்ய முடியாத நிலை.. அதற்கு முதலாவது காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள்தான், இவர்களுக்கு மட்டும்தான் படத்தின் உண்மை நிலவரங்கள் தெரியும், அது மட்டுமல்ல உத்தியோகபூர்வமாக படத்தின் வசூல் கணக்கை வெளியிடவேண்டிய பொறுப்பும் இவர்களுக்கே உண்டு.. ஆனால் இவர்களில் எத்தனை பேர் வசூல் கணக்கை வெளியிடுகிறார்கள்? ஏதாவது ஓரிரு படத்திற்கே உண்மையான வசூல் நிலவரங்களை மக்கள் அறிய முடிகிறது.... இதற்கு உண்மையான காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்டவர்கள் வசூல் கணக்கை வெளியிடுவதில்லை? என்று பார்த்தால், ஒரு காரணம் அதிகமாக வசூலிச்சபடங்களின் உண்மை நிலவரங்களை வெளியிட்டா அதிகப்படியான வரி செலுத்தவேணும் என்று, ஆனால் இதற்கான தேவை மிகமிக குறைவென்றே சொல்லணும்.. ஏனென்றால் நூற்றுக்கணக்கான படங்கள் வருடாவருடம் வெளிவரும்போது அதில் தேறுபவை கிட்டத்தட்ட பத்து பதினைந்து படங்களே! அதிலும் மூக்கில விரலை வைக்கிறளவுக்கு வெற்றிப்படங்கள் என்றா நான்கு அல்லது ஐந்து படங்கள்தான்.. கடந்த ஆண்டை எடுத்து பார்த்தாலே புரியும் blockbuster ரக படங்கள் என்றால் மங்காத்தா,கோ,காஞ்சனா மட்டுமே... 
சரி, உண்மையான வசூல் கணக்கை வெளியிடாமைக்கான மற்ற காரணம் என்னவெண்டு பார்த்தால், "ஹீரோக்கள்ட கௌரவ பிரச்சனைதான்" உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்ட படங்கள் பிளாப்பாகி தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வரும்போது உண்மையான வசூல் கணக்கை சொன்னால் அவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டிடும் என்றதுக்காக உண்மையான வசூலை சொல்வதில்லை. அதில் கொடுமை என்னவென்றால் ஓடாத மொக்கை படங்களுக்கும் "விண்ணைத்தாண்டும் விஸ்வரூப வெற்றி" என்று பில்டப் விடுவதுதான்.. சில நடிகர்கள் தங்களின் படங்கள் வெளிவந்து ரெண்டாம், மூன்றாம் நாளிலே மீடியாக்களுக்கு போய் "சக்சஸ் மீட்டிங்" என்று வைத்திடுவாங்க, அதில தங்களின் படங்களின் கலக்சன் எந்திரனை உடைச்சிட்டு, சிவாஜியை தாண்டிட்டு என்று கொஞ்சம்கூட வாய்கூசாமல் சொல்வார்கள். இதில பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் தயாரிப்பாளர்கள்/ விநியோகிஸ்தர்கள்/ தியேட்டர் ஓனர்கள்தான்.. என்ன செய்ய உண்மை நிலவரங்களை சொன்னால் பிழைப்பு நாறிடும், அதால அமைதி காத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.. சிலவேளைகளில் தொடந்து ஒரு நடிகரின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் பப்ளிக்காயே குரல்கொடுப்பார்கள்..அப்போதுதான் சிலசில உண்மைகள் வெளிவரும். 
இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு "சக்சஸ் மீட்டிங்" வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள், ஆனா சுறா என்ற படம் வந்து படுஊத்தல் ஊத்தவே இனியும் அமைதியா இருந்து பிரயோசனம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கெதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள்..அதுபோலவே அண்மையிலும் தனுசின் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளும், அதிகரிக்கும் அவரின் சம்பளத்துக்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள், அடுத்த படத்தை வெல்ல வைக்கணும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள்.. அல்லாவிடில் சம்பளத்தையும் அதிகரித்து ஹீரோக்கள் நல்லா பிழைப்பார்கள், தயாரிப்பாளர்/விநியோகிஸ்தர் பாடுதான் திண்டாட்டமா போகும்.. 
அதைவிட இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பாக ஊடகங்களின் செய்திகள்... இதை முழுமையாக ஆராயப்போனால் பத்து பதிவுகளே தாண்டிடும். வெறும் இரண்டாயிரம் ரூபா இருந்தாலே போதும் நாமும் ஒரு வெப்சைட்டை தொடக்கி மனம்போல செய்திகளைபோட.. அண்மையில் நண்பன் வெளிவரும்போது superwoods.com இல் வரும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்டை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், ஒவ்வொரு நாளும் உலகம்பூராக எவ்வளவு வசூல் எண்டு கணித்து போடுவாங்கள்... எப்பிடியையா சாத்தியம்? ஒரு இரவுக்குள்ள உலகம் முழுவதும் ரிலீசான படத்திண்ட கலக்சனை எண்ணி அனுப்புவாங்களோ! ஆங்கில படங்களுக்கு வேணும்னா சாத்தியப்படலாம். ஆனா இந்திய திரைப்படங்களுக்கு அறவே சாத்தியமில்லை............
எல்லாத்தையும்விட மிகப்பெரிய முறைகேடு என்னவென்றால் அண்மையில் வெளிவந்த ஓகேஓகே படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்தான். 2007 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை வார இறுதியில் behindwoods.com இல் வெளிவரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிவரும் காலப்பகுதியில் அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போகும் என்றுதான் சொல்ல தோணுகிறது, ஆமா மூன்றாம் வார முடிவில் 7.85cr என்று போட்டிருந்தார்கள், அதன் பிறகு என்ன மாயம் நடந்திச்சோ தெரியல நான்காம் வாரம் முடியேக்க 15cr என்று போட்டிருந்தார்கள்.. சரி, மறுபடியும் பழைய நிலவரங்களை பார்ப்பம் என்றால், முந்தய வார வசூல் எல்லாவற்றையுமே மாற்றி கூட்டிவிட்டார்கள்.... என்னய்யா பித்தலாட்டம்? official site என்று behindwoods ஐ நம்பி பார்த்தால் எங்கட காதிலையே பூ வைப்பார்கள்போலும்.... அது மட்டுமல்ல வல்லவன் படம் பிளாப் என்று முன்னர் behindwoods ல போட்டிருந்தார்கள்.. பிறகு சிம்பு எல்லா மேடைகளிலும் வல்லவன் வெற்றி வெற்றி என்று பில்டப் விட இவங்களும் ஹிட் என்றே அறிவித்துவிட்டார்கள். அதேபோல அண்மையில் வெளிவந்த நண்பனுக்கு மூன்று/நான்கு வாரம் கழிந்தபின் ஹிட் என்று அறிவித்தாங்க, பின்னர் சில நாள் கழித்து நண்பன் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக கலக்சனை அள்ளிட்டு என்று ஒரு செய்தியை போட்டு நண்பனை "சூப்பர் ஹிட்" ஆக அறிவித்தார்கள்.. 150cr வரை வசூலித்த சிவாஜியை நண்பன் பிரேக் பண்ணிட்டு என்றால் ஏனையா சூப்பர் ஹிட் குடுக்கிறீங்க? பேசாம பிளக்பாஸ்டர் குடுக்கவேண்டியதுதானே!!!..... ஒன்று மட்டும் சொல்லமுடிகிறது behindwoods ஆனது சிலரின் கைப்பிள்ளையாக செயற்படத்தொடங்கிவிட்டது.. சாதாரண மயிர்புடுங்கி இணையத்தளங்கள் ஒரு பக்க சார்பாக செய்திகள் போடுவது வேற விடயம், ஆனால் எல்லோராலும் நம்பப்படும் ஒரு இணையத்தளம் இவ்வாறு பக்கசார்பாக நடப்பது வேதனைக்குரிய விடயம்தான்........................................ இனி எந்த படத்தினதும்ம் உண்மையான வசூல் நிலவரங்களை அறிந்துகொள்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.. காரணம் நடுநிலையான ஊடகங்கள் என்று எவையுமே இல்லை.................... 

- வருகை தந்தமைக்கு நன்றி- 

14 comments:

 1. //இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள்,

  ///


  சரியா சொன்னிங்க .. ஆனால் எவனும் கேட்க்க மாட்டான்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக... எவ்வளவுதான் மரண அடி வாங்கினாலும் ஹீரோக்களை காப்பாற்றுவதிலையே குறியா இருக்காங்க.......

   Delete
 2. சுறா உலகமகா வெற்றி பெற்ற படமல ...வேட்டைக்காரன் ஆஸ்கார் வாங்க வேண்டிய படம்

  ReplyDelete
 3. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
  மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

  ReplyDelete
  Replies
  1. அருமையான பதிவு.....ஒரு தெளிவொன்றை மாணவர்கள், மற்றும் பெற்றோர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..

   Delete
 4. thala padam mattum enna mangatha collected only 60 crores but everyone telling hit. you dont you include tht in to your review????? moodikittu velayaparunga

  ReplyDelete
 5. அருமையான பதிவு சஜி. உண்மையில் எந்த படம் அதிக வசூல் பண்ணியது என்பது மக்களுக்கு தெரியும். நீங்கள் உங்கள் பதிவை தமிழ் 10, தமிழ் மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளில் இணைத்தால் உங்கள் பதிவுகளை இன்னும் பலர் படிப்பார்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்தமைக்கு நன்றி நண்பா...... நீங்கள் சொன்னபடியே இணைத்துவிட்டேன்

   Delete
 6. All vijay films are totally flop...They are creating a fake record...He is fit for only dancing and not for other thing else!!!!!!!!!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. yow Anonymous mudreeya ? asingama thitta varum...... idelam engalukku therinja visayom thaan... vijey oru zero nu.......

  ReplyDelete
 9. check this out. it kind of reflected ur thoughts.
  http://www.myoor.com/tamilnadu-box-office-13july12-19july12/

  ReplyDelete

comment