Friday, November 23, 2012

அஜித்தும் கிங் ஆப் ஓபெநிங்கும்....

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஒபெநிங் யாரெண்டு கத்துக்குட்டி ரசிகனை கேட்டாலே சொல்லுவான் அஜித்தான் எண்டு, இந்த "கிங் ஆப் ஒபெநிங்" எண்ட சொல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிட்ட நடிகருக்கெண்டு பழக்கத்தில் இல்லாத சொல். தமிழ் சினிமா நடிகர் அஜித்துக்கெண்டு இருக்கும் விசேட பட்டப்பெயர்தான் இது.. இது சூப்பர்ஸ்டார்,உலக நாயகன் போல பட இயக்குனரால்,தயாரிப்பாளரால் வைக்கப்பட்ட பெயரோ "தல" என்ற பெயர்மாதிரி படத்தில் வரும் கரக்டருக்கான பெயரோ இல்லை.. அஜித் படம் வெளியாகும்போது முதல் வாரத்தில் தியேட்டருக்கு வரும் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை, ஒபெநிங் கலக்சனை வைச்சு மீடியாக்கள் மற்றும் சினி விமர்சகர்களால்தான் அஜித் "கிங் ஆப் ஓபனிங்" என அழைக்கப்படுகிறார். இது இன்று நேற்றல்ல பத்துவருடத்துக்கு மேலாகவே கிங் ஆப் ஒபெநிங் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் அஜித். ஜனா,ஆஞ்சநேயா மற்றும் ஏகன்,அசல் போன்ற தொடர் தோல்விகளிலும்கூட அஜித்தின் கிங் ஆப் ஒபெநிங்க்கு எதிர் விமர்சனம் இல்லை.. எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கு அடுத்தாற்போல வரும் படத்திற்கு முந்தயதிலும் பார்க்க பிரமாண்ட ஒப்நிங்கை அஜித் ரசிகர்கள் வழங்குவார்கள்.. இதுதான் அஜித்துக்கு உள்ள மிகப்பெரிய பலம். 
சரி, இப்போ இன்னொரு முக்கிய பிரச்னைக்கு போவோம்.... வேற ஒண்டுமில்ல பில்லா 2 ஒபெநிங்கும் துப்பாக்கி ஒபெநிங்கும்... பில்லா 2 படம் வெளியாக முன்னர் அஜித்தை பிடிக்காதவர்கள் இது "ஏ" சேட்டிபிக்கட் படம், அது இதெண்டு நிறைய புலம்பினாங்க... ஆனா படம் வந்தாப்பிறகு அதை பாதிப்பேரு மறந்துவிட்டார்கள், அதிலும் துப்பாக்கி வந்தாப்பிறகு அனைத்து அஜித் எதிர்ப்பாளர்களுமே பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதை மறந்துவிட்டார்கள்... ஏனென்டா பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதால அதற்கு 30% வரி உண்டு..அதாவது பில்லா 2 இன் மொத்த கலக்சனில் 30% ஆனா பங்கு அரசாங்கத்துக்கு வரியாக சென்றுவிடும். மீதி 70% ஆனா பங்கே கலக்சனாக கருதப்படும்.. அதாவது தமிழக பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் யாவுமே வரியாக செலுத்தவேண்டியது போக மீதி 70% ஆனா பங்கே ஆகும்.. 70% ஆனா பங்கை துப்பாக்கியின் முழு கலக்சனுடன்  ஒப்பிடுவதற்காக சேட்டிபிக்கட் விஷயத்தை மறந்தே போனார்கள்போலும். ஆனால் அதைவைத்துத்தான் படம் வெற்றியா? தோல்வியா?அவரேஜ்ஜா? என கணிக்கப்படும்.. ஏனென்டா மீதி 70% ஆனா பங்கு கலக்சன்தானே விநியோகிஸ்தர்கள்,தியேட்டர் அதிபர்களுக்கு போகப்போகுது???......
ஆனா, அஜித்தை பிடிக்காதவர்கள்(எல்லோருமல்ல, குறிப்பிட்ட சிலர்) இதை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே இந்தப்பதிவை நான் எழுதணும் என்று எண்ணினேன்... கொஞ்சம் அடிப்படையிலிருந்தே போவோமென்...உதாரணத்துக்கு அஜித் ரசிகர்களின் பல்வகமையை பார்த்தால் அதில் கிட்டத்தட்ட 90% ஆனோர் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களே!, ஆனா விஜய் ரசிகர்களை பார்த்தா அவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது வீதமானோர்தான் ஆண்கள், அதிலும் அநேகமானோர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள்.. மிகுதி தரப்பினர் பெண்கள்,மற்றும் குடும்ப ரசிகர்கள்.. சூர்யா ரசிகர்களை பார்த்தா கிட்டத்தட்ட முப்பது வீதமானோர்தான் ஆண்களா இருப்பார்கள்.... சுருக்கமா சொன்னால் அஜித்தின் ரசிகர்கள் இளைஜர்கள், விஜயின் ரசிகர்கள் சிறுவர்கள்,பெண்கள்.... சூர்யாவின் ரசிகர்கள் பெண்கள்,குடும்பத்தினர் .... இந்த ரசிகர்களின் பல்வகமைதான் அஜித்தின் "கிங் ஆப் ஒபெநிங்" கு அடிப்படை காரணம்......    
ஆனா, இதில காமெடி என்னவெண்டா இன்னொரு நடிகரின் பட கலக்சனோடு அஜித்தின் பில்லா 2 பட கலக்சனை ஒப்பிடேக்க 30% வரி போக மீதி 70% ஆனா பங்கை வைச்சு ஒப்பிடுவதுதான்... நான் தெரியாமல்தான் கேக்குறேன் வரியா செலுத்திய 30% ஆனா கலக்சன் என்ன வானத்தில இருந்தா வந்திச்சு? அதுவும் பில்லா 2 படத்தை பார்க்கவந்தவர்களால வந்த கலக்சன்தானே!..  அப்போ இன்னொரு படத்துடன் பில்லா 2 பட கலக்சன்களை ஒப்பிடும்போது உண்மையான கலக்சனையல்லவா ஒப்பிடணும்??? குறிப்பாக துப்பாக்கி வெளிவந்தாப்பிறகுதான் இவ்வாறான சுவாரிசயங்கள் இடம்பெறத்தொடங்கின. 
சரி முதல்ல சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை பார்ப்பம்... 
பில்லா 2 இன் முதல் முன்று நாள் மொத்த கலக்சன் 4 கோடிகள் (நெட் கலக்சன் 2.8 கோடிகள்.(source)
துப்பாக்கி முதல் 6 நாள் மொத்த கலக்சன் 4.83 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 10.85 கோடிகள் (நெட் கலக்சன் 7.525 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 9.25 கோடிகள் (source)

தமிழகத்தில் முதன் 3 நாள் வசூல் 
பில்லா 2 மொத்த கலக்சன் 27.15 கோடிகள் (நெட் கலக்சன் 19 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 22.15 கோடிகள் (source)
இப்போ புரிந்திருக்கும் யார் கிங் ஆப் ஒபெநிங் எண்டு. 
துப்பாக்கி படத்துக்கு யூ சேட்டிபிகேட் எண்டதால எந்தவித வரி அறவிடலும் இல்ல...மொத்த கலக்சன்தான் நெட் கலக்சன். ஆனா உண்மை நிலை (தெரிந்தும்) தெரியாது ஒரு சில அஜித் எதிர்ப்பாளர்கள் சமுக வலைத்தளங்களில் துப்பாக்கியின் மொத்த கலக்சனை பில்லா 2 இன் நெட் கலக்சனுடன் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்..  இதிலிருந்து அவர்களின் இயலாத்தன்மை புலப்படுகிறது..
தமிழகம் தவிர்ந்த கேரளாவில் முதன் நாள் வசூலில் மாற்றான் 96.5 லட்சங்களும் துப்பாக்கி 87 லட்சங்களும் வசூலிச்சுள்ளமை குறிப்பிடத்தக்கது (source)..வெளிநாடுகளில் வசூல் நிலைமைகள் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்.. என்னதான் பெரிய ஹிட் எண்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா சிங்கப்பூரில் 5 கோடிகள், யூ .கே, அமெரிக்காவில் மொத்தமா முன்று கோடிகளும், கேரளாவில் நான்கு கோடிக்களும்தான் வசூலிக்கும்.  இதனால் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிரதேச கலக்சன் நிலவரங்கள் மொத்த கலக்சனில் பெரிதாக பாதிப்பு செலுத்தாது. பொதுவா மொத்த கலக்சன்களில் வெறும் 10% - 15% ஆனைவையே தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து தமிழ் படம் ஒன்றுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                                          thala-the king of opening forever

Sunday, November 11, 2012

அஜித்தும் அஜித் ரசிகர்களும்... ஸ்பெசல் அலசல்;நீண்டகாலமா அஜித் பற்றிய எந்தவொரு பதிவும் போடாததால் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்... அஜித்,அஜித் ரசிகர்கள் போக்குகள் பற்றிய சிறியதொரு தொகுப்பே இது... முதலில் அஜித் ரசிகர்கள் எப்பிடிப்பட்டவர்கள் என்று பார்ப்பம்.. அஜித் ரசிகர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள்தான். பொதுவா எல்லோரினதும் கருத்து என்னவென்றால் அஜித் ரசிகர்கள் எல்லாம் வில்லங்கம் பிடித்தவர்கள் என்பது, ஓரளவுக்கு உண்மையும்கூட அதற்கு காரணம் இல்லாமலல்ல..  அமர்க்களத்தில் தான் ஒரு மாஸ் ஹீரோ எண்டதை வெளிக்காட்டினபின் இன்றுவரை அவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று சொல்பவையில் பெரும்பாலானவை நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடித்த படங்களே! ஹீரோ படத்தில் எப்பிடியிருப்பாரோ அது அவரின் வெறித்தனமான ரசிகர்களின் போக்கிலும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதில் மறுப்பில்லை. இதை நீங்க ரஜினி,கமல் ரசிகர்களுக்கிடையிலான வித்தியாசத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம்..  அதுமட்டுமல்ல அஜித் என்ற நடிகனை தாண்டி நிஜ வாழ்க்கையில் அஜித் என்ற மனிதனை நேசிக்கிறதுக்கே ஒரு பெரிய கூட்டம் இருக்கு... 
தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும் அஜித்திடம் ரசிகர்களுக்கு வெறி உண்டாக முக்கிய காரணங்களாகும். அஜித் ரசிகர்கள் அஜித்திடம் வைத்துள்ள வெறித்தனத்தை வேற எந்தவொரு நடிகர்களிடமுமே பார்க்கமுடியாது.. தமிழ் சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவா இருந்தா மட்டுமே ரசிகர்கள் வெறித்தனமா இருப்பார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்... எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரும் நிஜத்திலும் ஹீரோவாக இருப்பதாலேயே அவர்களுக்கு பின்னால் வெறித்தனமான ரசிகர்கள் நிறையவே இருந்தார்கள்.
 அதில், எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கு அப்போதைய மக்களின் அறியாமையும் ஒரு சாதகமாக அமைந்தது என்பதில் மறுப்பில்லை.. எம்.ஜி.ஆர் தனது வாழ்நாள் முழுவதுமே மக்களின் அறியாமைத்தனத்தால் நன்றாகவே பிழைத்தார்.. அதேபோல ரஜினியின் ஆரம்ப தசாப்தகாலங்களும் இதேபோலவே.. ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் எல்லோரும் விழிப்படைந்துவிட்டார்கள்.. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை நன்றாகவே புரிந்துவிட்டார்கள். அப்பிடியிருக்கையில் அஜித்துக்கு இருக்கும் இவ்வளவு பெரிய வெறித்தனமான கூட்டம் எல்லோரையுமே வியக்கவைக்கிறது.. சரி, அஜித் ரசிகர்கள் அஜித்தை எவ்வாறு திரையில் பார்க்க விரும்புகிறார்கள்? எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்... 
அஜித்துக்கு மிகப்பெரிய மைனசே டான்ஸ் மற்றும் காமெடிதான். இதில் அஜித் டான்சிலுள்ள குறைபாடு அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் ஜோக்கை அஜித் ரசிகர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அஜித் எப்போதுமே தீனா, அட்டகாசம், பில்லா, மங்காத்தாவில் வந்ததுபோல கெத்தா இருக்கணும் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பம். தமது ஹீரோவை ஒரு காமெடிப்பீசாக பார்ப்பதற்கு எந்தவொரு அஜித் ரசிகனும் விரும்பமாட்டான். அதனால்தான் என்னவோ எல்லோராலும் விரும்பப்பட்ட கிரீடம் திரைப்படம் அஜித் ரசிகர்களை கவராததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதே காமெடி அம்சங்களுடன் விஜய் நடித்திருந்தால் அவரது ரசிகர்கள் நிச்சயம் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்திருப்பார்கள்.. 
இதைவிட ஹீரோயினுக்கு பின்னால முன்னால திரியிறது, அதிகம் அலம்புறது, ஹீரோயினுடன் பாடல் காட்சிகளில் சல்லாபப்படுறது, சாப்டான பாத்திரங்களில் நடிப்பது.. இப்பிடி ஏதாவது படத்தில் இருக்குமாயின் காறித்துப்பக்கூட தயங்கமாட்டார்கள்.. சில நடிகர்கள் லிப்டு லிப் கிஸ் குடுத்திட்டு அதை எப்பிடி குடுத்தேன் எண்டு பப்ளிக்கில விளக்கம்வேற சொல்வார்கள், சிலர் லிப்டையே கடிப்பார்கள், சிலர் உண்மையிலே கிஸ் குடுக்காம வேற தொழிநுட்பங்களை பயன்படுத்தி லிப்டு லிப் கிஸ் சீனை வைச்சிடுவாங்க..ஆனா, அஜித் அதெல்லாம் சரிப்பட்டுவராதெண்டு மங்காத்தாவில் வெங்கட்பிரபுவிடம் உறுதியாகவே சொல்லிட்டார்.. ஆரம்பத்தில் யாரின் துணையின்றி கஷ்டப்பட்ட காலங்களில் கைவிட்ட மீடியாக்கள் இப்ப என்னடா எண்டா அஜித் ஒரு இடத்துக்கு போனால் என்ன நிற சேட்டு போட்டு போனார்? எப்பிடி ஹெயார் ஸ்டைல் இருந்திச்சு? எண்டதையெல்லாம் புட்டு புட்டு எழுதுறாங்கள்(சத்தியம் தியேட்டருக்கு அஜித் போனபோது அண்ட் வேறு சில தருணங்களில்).. அது மட்டுமல்ல அண்மையில் விஜய் டிவியால் அஜித்துக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகள் அஜித் விழாவுக்கு போகாததால் விஜய் டீவி நிறுவனரே நேரடியாக அஜித்தின் வீட்டுக்கு சென்று வழங்கி, அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை விழாவின் காணொளிபிரதியுடன் சேர்த்து டீவியில் ஒளிபரப்பாகி பப்ளிசிட்டி தேடினார்கள்.. இதற்குமுதல் ரஜினிக்கு எந்திரனுக்கான மக்கள் விருது மற்றும் செவாலியார் சிவாஜி விருதை, ரஜினி வராததால் அவரின் வீடு தேடி சென்று கொடுத்து இதேபோல செய்தார்கள்..
எது எப்பிடியோ எத்தனையோ எதிரிகளின் எதிர்ப்புக்கும்,சூழ்ச்சிக்கும் நடுவே விடாப்பிடியாக அஜித் கடைப்பிடித்த கொள்கைகள் இன்று ரசிகர்களால் அவருக்கு தலைக்கு மேல் ஆதரவை அள்ளிக்குடுத்துக்கொண்டிருக்கிறது.. விழாக்களுக்கு செல்லாமை, தனது படங்களுக்கு புரோமோஷன் செய்யாமை, ரசிகர் மன்றங்களை கலைத்தமை இவற்றையெல்லாம் ஒரு குறையாக பப்ளிசிட்டி பண்ணின வேளையிலும் அஜித் ரசிகர்கள் அஜித் மேலுள்ள அந்த விசுவாசத்தை கடுகளவேனும் குறைக்கவில்லை மாறாக படத்துக்கு படம் ரசிகர்கள் அளிக்கும் ஒபெநிங் எல்லோரையும் வியக்கவைக்கிறது.. 
                          வாழ்க தல! வளர்க உன் புகழ்....

comment