Friday, June 28, 2013

மீடியாக்களால் அஜித் படும் பாடு


எந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே! அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.சில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் "படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா? சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.


Billa 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை! ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.


ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா?? காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68%  வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.
ஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.
                                         

Wednesday, June 26, 2013

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


இந்தப்பதிவை எழுத கொஞ்சம் தர்மசங்கடமாய்தான் இருக்கிறது, ஏன்னா சமுகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்களாக,விமர்சகர்களாக இருப்பவர்கள் அனேகமாக மணிரத்தினம், பாலா, பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் ரசிகர்களாகவே தங்களை காட்டிக்கொள்வார்கள் அதுமட்டுமல்ல மசாலா இயக்குனர்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள். அப்பிடி மசாலா பேர்வழிகளை பிடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாம கொஞ்சம் வித்தியாசம்தான் பேரரசு போன்ற காரமசாலா இயக்குனர்களையும் விரும்பமாட்டம், பாலா போன்றவர்களையும் விரும்பமாட்டம். இடைநிலை மசாலா இயக்குனர்களான சங்கர்,ரவிக்குமார்,ஹரி,முருகதாஸ்,கே.வி ஆனந்த் போன்றோரே நம்ம பேவரைட். உண்மையை சொல்லப்போனால் அதிகப்படியானோர் ரசிப்பது இவர்களின் படங்களைத்தான். அதில் இந்தப்பதிவில் ஹரியைப்பற்றி பார்ப்போம்.


சரணின் அசிஸ்டெண்ட்டா இருந்து 2002 இல் தமிழ்சினிமாவில் இயக்குனராக காலடி வைத்த இவர் இன்றுவரை 11 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 ஆவது திரைப்படமான சிங்கம் 2 எதிர்வரும் ஜூலை 5 இல் வெளியாகவுள்ளது. இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் தரமுன் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துதல் சிறந்ததென்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் இயக்குனர் சேரன் உரையாற்றுகையில் மசாலா இயக்குனர்கள் எப்பபாரு ஒரே விடயத்தையே திரும்ப திரும்ப படமா எடுக்கிறார்கள், வித்தியாசமா எந்தவொரு படைப்பையும் வழங்குறார்கள் இல்லை என்றார். அதற்கு ஹரி சொன்ன பதில் "வித்தியாசமா எடுக்கணும் என்றால் சொந்தமா முதல் போட்டு படத்தை எடுங்கள், அடுத்தவனின் முதலை அழிக்காதீர்கள். என்னுடைய படங்கள் எப்போதுமே இயக்குனர்களுக்கு நஷ்டத்தை குடுப்பதில்லை என்றார்."..... இதுதான் ஹரி.


இன்றைய இயக்குனர்களில் மினிமம் கரண்டி இயக்குனர்களில் ஹரியும் முதன்மையானவர். இவரின் படங்களை பார்த்தீர்களாயின் படம் முழுக்க முழுக்க பக்கா கமெர்சியல் அம்சங்களை கொண்டிருக்கும், திரைக்கதையில் எப்போதுமே ஒரு வேகம் இருக்கும். இது ஆங்காங்கே வரும் பிழைகளையும் மூடி மறைத்துவிடும், மேலும் படங்கள் பொதுவா கிராமத்துப்படங்களே. வெளிநாடுகளில் பொதுவா சூட்டிங் எடுப்பதில்லை (சிங்கம் பாடல் காட்சிகள், சிங்கம் 2 தவிர), மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது குறுகிய காலப்பகுதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார், மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள். இப்பிடியான அம்சங்களால் இவரின் படங்களால் பொதுவாக விநியோகிஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் வருவதில்லை. (வேங்கை திரைப்படம் மட்டும் சிலவேளைகளில் சில தரப்பினர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கலாம். மற்றய படங்கள் அவ்வாறில்லை.)


இவர் இதுவரை எடுத்த 11 திரைப்படங்களில் தமிழ், சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் ஆகிய ஆறு படங்கள் கிளீன் ஹிட். கோவில், அருள், ஆறு, சேவல் ஆகிய நான்கும் அவரேஜ். வேங்கை மட்டுமே வந்ததே தெரியாமல் சென்ற திரைப்படம். இந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக தேர்வு செய்ததே முதலாவது பிழை, அத்துடன் கதைக்களத்திலும் ஹரி விட்ட தவறு படத்தை தோல்வியடைய செய்துவிட்டது.

ஹரியின் படங்களில் எனக்கு பிடித்த டாப் 5

5. தாமிரபரணி


மற்றைய ஹரி படங்களுடன் ஒப்பிடும்போது இதில் ஆக்சன் குறைவு. விஷாலின் ஹீரோ வால்யுவை துல்லியமா மதிப்பிட்டு குடும்ப செண்டிமெண்டை வைச்சே படத்தை ஹிட் குடுத்துவிட்டார்.

4. சாமி


இந்தப்படம் வந்த காலப்பகுதியில் விக்ரமுக்கு இருந்த செல்வாக்கின் பாதியளவுகூட இப்போ விக்ரமுக்கு இல்லை என்றே சொல்லலாம். போலீஸ் கதையில் உருவான இந்த திரைப்படம் "காக்க காக்க" எப்பிடி மக்கள் மத்தியில் இன்னொரு ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல மசாலா போலீஸ் படங்களில் என்னுடைய ரசனையில் இதுவொரு வித்தியாசமான திரைப்படம். மேலும் இப்படத்தில் விவேக்கின் காமெடி, காதல் காட்சிகள் எல்லோரையும் கவருபவையாகவே இருந்தது. தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி ரிலீசாகப்போகிறது.

3. தமிழ் 


பிரஷாந்த்,சிம்ரன் என்ற அழகான இரு ஜோடிகளை வைத்து காதலுக்கு கொஞ்சம் கூடுதலா முன்னுரிமை கொடுத்த திரைப்படம். 

2. சிங்கம் 


ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம். மூடிய நிலையில் இருந்த தமிழகத்து திரையரங்குகள் சில சிங்கத்தால் ரீ.என்றி அடைந்தன.

1. வேல்


ஒரு மசாலா திரைப்படம் எப்பிடி இருக்கவேணும், எல்லா தரப்பையும் கவருமாறு எப்பிடி படம் எடுக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக சொல்லவைத்த திரைப்படம் இது. 2007 இல் வெளிவந்த ஆக்சன்,கதை,குடும்ப செண்டிமெண்ட்,காதல்,காமெடி என்று எதிலுமே சளைக்காமல் நேர்த்தியான ஸ்கிரீன்பிளேயில் உருவான திரைப்படம்.

*இதேபோல சிங்கம் 2 உம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்* 

Tuesday, June 4, 2013

தீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)


பண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே! இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...

2012


இவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.

2011இவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.

2010


இம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.

2009


இம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..

2008


இம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹரியின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.

2007


இம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.

2006


அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.

2005


இவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

2004


இம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2003


அஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.

2002


இவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.

comment