Tuesday, March 26, 2013

அஜித்தும் சமூக போராட்டங்களும்


தற்போது தமிழகம் ,முழுவதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதராவாக மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். இவ்வளவு நாளும் மூச்சு பேச்சில்லாம இருந்த நடிகர் சங்கமும் ஏப்ரல் 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. என்ன போராட்டம் நடந்தாலும் ரஜினி,கமல் போன்ற நடிகர்கள் அதில் ஏதாவதொரு பங்களிப்பை செய்யணும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இது வெறும் எதிர்பார்ப்புடன் இருந்தால் ஓகே, அதைவிடுத்து கட்டாயப்படுத்தல், ஆதரவளிக்கும்பட்சத்தில் தாறுமாறா அவர்களுக்கெதிரா கதைத்தல் அர்த்தமற்றதொன்றே! அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நாங்கள் ஒருபோதும் தலையிடமுடியாது. நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசுக்கு அவர்களை எடுத்த எல்லாத்துக்கும் குரல் கொடுக்கணும் என்பது பிழையானததொன்றாகும். மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரையரங்கு சென்று டிக்கட் எடுக்கும் அந்தக்கணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு படம் நல்லா இருக்கணும், இரண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கணும் என்றதா? இல்ல, நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசால அவங்க கோடிக்கணக்கா சம்பாதிக்கணும் எண்டதா? ஒரு படத்தை மக்கள் பார்க்கும்போது பார்ப்பவர்களும் சந்தோசப்படுகிறார்கள், படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் போன்றோரும் தங்கள் உழைப்புக்கேற்ப ஊதியத்தை பெற்றுக்கொள்கிராகள். இது நம்மவர் பலருக்கு பொறுக்குதே இல்ல. ஆனா சில நடிகர்கள் தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை வேணுமெண்டே படங்களின் ஊடாக மக்களுக்கு சித்தரிக்கிறார்கள், கேட்டா அது படக்கதைக்கேற்பவே வடிவமைக்கப்பட்டது, அதுவும் இயக்குனர்களால்தான் வடிவமைக்கப்பட்டது என்று ரீல் விடுவார்கள். அது ரீல் என்றாலும் அதை நம்பி அவர்களை தலைவர் என்று கருதிற நாங்கள்தான் நம்பர் ஒன் முட்டாள் என்பதை மறந்துபோகவேணாம். இனியாவது சினிமா ஹீரோக்களை நிஜத்தலைவர்களாக கற்பனை பண்ணுவதை தவிருங்கள்.
அடுத்து மேட்டருக்கு வருவோம், தமிழக போராட்டங்களில் அஜித்தும் ஒன்றும் செய்யவில்லை என்றெல்லாம் அவ்வப்போது கிளப்பிவிடப்படுகிறது, மேலும் அடுத்து வரப்போற உண்ணாவிரத போராட்டத்தில் அஜித் கலந்துகொல்வதட்கான சாத்தியப்பாடுகளும் குறைவே! இதனால் வருகிற கிழமை அஜித் தவிர போராட்டத்தில் பங்கேற்ற மற்றைய நடிகர்கள் மக்கள் தலைவர்களாகவும் அஜித் போன்ற பங்கேற்காதவர்கள் வில்லனையும் சித்தரிக்கப்படப்போரார்கள். சிலவேள அஜித் போனா தல தப்பிடும்.இல்லாவிடில் அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கு பெரியதொரு சவால் காத்திருக்கிறது. ஆமா அஜித் எதிர்ப்பாளர்களுடன் முட்டி மோதுவதுதான். முதல்ல அவர்களுக்கு ஒரு விடயத்தை நாம புரியவைக்கணும். அஜித்தை ரஜினியோ,கமலோ,விஜயோ,சூர்யா உடனோ ஒப்பிடவேணாம் இந்தவிடயத்தில். அதற்கான காரணங்களை அலசிப்பார்ப்போம்.

1. அஜித் ஒரு தனிமனிதன். ரசிகர்கள் தவிர அஜித்துக்கு எந்தவொரு பின்புலமுமில்ல,குறிப்பாக அரசியல் மட்டத்திலோ, மீடியா மட்டத்திலோ அஜித்துக்கு அன்றும் இன்றும் சப்போட் இருந்ததில்லை, நாளையும் இருக்கப்போவதில்லை.காரணம் தமிழ் சினிமாவின் பிழைப்பிற்காக ஜால்ரா அடிக்காத ஒரே மனிதன் அஜித்தான்.. அதனால்தான் இந்த கதி.. மாணவர்களுக்கு ஆதரவாக சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை தமிழக அரசு ஒருபோதும் விரும்பாது. விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த பிரச்சினைபோல் நாளை அஜித் படத்துக்கு எதிரா ஒரு பிரச்சினை கிளம்புமாயின் அஜித்துக்கு சப்போட்டா ரசிகர்கள் தவிர வேற யாரும் கதைக்கப்போறதில்லை. இதே வேறு முன்னணி நடிகர்களுக்கு நடந்தா உயர் மட்டங்களில் இருந்து நிறைய ஆதரவுகள் வரும். அல்லாவிடில் ஆட்சியாளரின் காலிலாவது போய் விழுவார்கள். அஜித்தான் அப்பிடி இல்லையே!


2. அஜித் ஒருபோதும் தன்னுடைய படங்களை வந்து பாருங்கள் என்று மக்களிடையே புரமோட் பண்ணுவதில்ல, ஏன் படம் சம்பந்தமான எந்தவொரு விழாக்களுக்கும் செல்வதில்லை. தனது பட விழாக்களுக்கோ வேறு தேவைக்காகவோ தனது ரசிகர்களை கூட்டம் கூட்டமாக வரவழைத்து பகடைக்காயா பயன்படுத்துவதில்லை.

3. தனது படங்களில் தான்தான் மக்களின் தலைவன் என்றெல்லாம் போலி மாயையை ஒருபோதும் உருவாக்கியதில்லை அல்லது மிகமிக குறைவு. ஆதலால் அஜித் ரசிகர்கள் ஒருபோதும் அஜித் அரசியலுக்கு வருவார், அவர்தான் அடுத்த முதலமைச்சராகணும், ஏதாவது அநீதி நடந்தா அஜித் குரல் கொடுக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமா நடிகர்கள் வேறு நிஜ தலைவர்கள் வேறு என்பதை தனது நடவடிக்கையால் ரசிகர்களுக்கு சரியான வழியை காட்டியுள்ளார்.

4. அஜித் பொதுவாகவே எந்தவொரு விழாக்களிலும் பங்குபற்றுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுபவர். நடிகர்களுக்கு ஆதாயம் தேடும் போராட்டங்களிலே அஜித் கலந்துகொள்வதில்லை, உதாரணமாக நடிகர்களை பாதிக்கும் வரிவிலக்கை எதிர்த்து அண்மையில் நடந்த போராட்டத்திலே அஜித் பங்குபற்றவில்லை. அப்பிடி இருக்கும்போது வேறு போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி நிர்ப்பந்திப்பது அர்த்தமற்றதொன்றாகும்.

5. நாலுபேருக்கு பப்ளிக்கில உதவிசெய்து தன்னை பெரியாளாக காட்டிக்கொள்ளுவதில்லை.மாறாக சத்தமின்றி எத்தனையோபேருக்கு உதவிகளை செய்து வருகின்றார். இதெல்லாம் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதில்லை. உதவிபெற்றவர்கள் மூலமாக பலவருடங்களுக்கு பிறகே தெரியவரும். அதனால் சமுக பிரச்சினைகளில் அவரின் பங்கை ரசிகர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை.


இதற்குமுதல் இலங்கைத்தமிழருக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றிய அஜித் மற்றும் அர்ஜுனுக்கு எதிரா சரத்குமார் போன்றோர் எப்பிடியெல்லாம் குற்றங்களை சோடிச்சார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் ஒரு அநீதிக்கெதிரா சுயலாபம் கருதாமல் போராடுபவர்கள் எப்போதும் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆனா, போராடாமல் ஒதுங்கி இருப்பவர்களை துரோகிகளாக பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. சினிமா நடிகர்களை ஒரு சராசரி மனிதர்களாக பாருங்கள். அவர்கள் எங்களால் கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பலவருட உழைப்புக்கு கிடைத்த பலன். இதுக்கப்புறமும் நடிகர்களை குறை சொல்பவர்களுக்குக்கு தில் இருந்தா அவர்களின் படத்தை பார்க்காமல் இருங்கள்..

Saturday, March 16, 2013

தமிழ் சினிமாவின் சாதாரண ரசிகர்கள் vs அறிவுஜீவிகள்


ரசிகர்களிடையே எவ்வளவு பாகுபாடு? எல்லோருக்கும் வெளிப்படையா பார்க்கும்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் தமக்கிடையே முட்டி மோதிக்கொள்வதுதான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனா மறைமுகமா அடிமட்ட ரசிகர்களுக்கும் அறிவுஜீவிகளுக்குமிடையிலான மோதல்கள் கண்ணுக்கு தெரிவது அரிதே! சமுகவலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக் பாவிப்பவர்கள்,பிளாக் வாசிப்பவர்களுக்கே இவ்வாறான பிரச்சினைகள் தெரியவரும். அதாவது இப்பிடியொரு பிரிவினைவாதத்தை தூண்டுவது இந்த அறிவுஜீவிகள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டு திரியும் ஒருசிலர்தான். அவர்கள் பொதுவாக குறிப்பிட்டு தாக்குவது ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களைத்தான். அதாவது இவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாம், தங்கள் கதாநாயகனை நடிகன் என்றதற்கு அப்பால் மேலே தூக்கி வைத்து கொண்டாடுவது, குறிப்பாக இவர்களின் கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது போன்ற செயல்கள் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்கிறதே இல்லை,மேலும் இவர்களின் படம் என்றால் நம்பமுடியாத ஒபெநிங் சீன், ஒரே டைம்ல இருபதுமுப்பது பேருக்கு சேர்த்துவைச்சு அடிக்கிறது, பஞ் டயலாக்,தத்ரூபமான படங்களைவிட்டு எப்ப பார்த்தாலும் கமர்சியல் படங்களை தேர்வுசெய்து நடிக்கிறது இதெல்லாம் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்காதாம்.. 
பாலாட படங்களைப்போல தலைக்கு மொட்டையடிச்சோ/ முகத்துக்கு வர்ணம் பூசியோ/ உடம்பில புழுதி பூசியோ/ தாடி,முடி வளர்த்தோ, ஹீரோக்களை எப்பபாரு ஏதோ ஒரு குறையை வைச்சு காட்டினாலோ அந்த கருமாந்திரங்களைஎல்லாம் ஆமை வேகத்தில போற படமெண்டாலும் பாப்பாங்க, பொதுவா கமல்,மணிரத்தினம்,பாலா படங்களை விரும்புவோர்தான் தங்களை தாமே அறிவு ஜீவிகள் என சமுகத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். காரணம் இவர்களின் படங்கள் எல்லோருக்கும் புரியாது ஆதலால் வசூலில் பெரிதா கல்லா கட்டுவதில்லை, இதனால் இவர்களின் படங்களை வாங்குவதில் தயாரிப்பாளர்கள் பின்நிற்பது கூட, இந்த விரக்தியில்தான் இவர்களின் ரசிகர்கள் தங்களின் ஆத்திரத்தை மற்றவர்களிடம் திணிக்கிறார்கள் "ரசனை குறைந்தவர்கள், வித்தியாசமா எடுத்தா அதை புரிந்துகொள்ளுற அளவுக்கு இவர்களிடம் அறிவில்லை" என்றெல்லாம் மற்றவர்களை எள்ளிநகையாடுவார்கள்.

ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ளவேணும், சினிமா என்பது பொழுதுபோக்கே! அந்த கண்ணோட்டத்தில்தான் அநேகமானோர் திரையரங்குக்கு செல்கின்றனர். ஆனா, பொழுதுபோக்கு அம்சங்களை தகுந்த முறையில் மக்கள் ரசிக்கும்படியாக வழங்குதல் வேணும். பில்லா 2, வேலாயுதம், அலெக்ஸ் பாண்டியன்,ராஜபாட்டை போன்ற படங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்து பேச வரேல.மாறாக மங்காத்தா, சிவாஜி,துப்பாக்கி,சிங்கம் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கை வழங்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பிடியான படங்களை பாமரை ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள். தசாவதாரம், விஸ்வரூபம் போல இதை புரிந்துகொள்ள ஏழாம் அறிவெல்லாம் தேவையில்லை. சரி, அவங்க வாதப்படி தொடந்து அரைச்ச மாவை அரைக்க்காது வித்தியாசமான படைப்புக்களை வழங்கவேனும் என்றாலும் முதலில் கவனிக்கவேண்டியது எவ்வாறு அந்தப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதென்பது!! இதுவே முக்கியம்... என்னதான் உலகத்தரத்தில் படம் எடுத்தாலும் மக்களுக்கு புரியிறமாதிரி படம் இல்லாவிடில் மக்கள் எப்பிடி அதற்கு வரவேற்பு அளிப்பார்கள்??? இன்றையதினம் பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டேன்,உண்மையில் சிறந்ததொரு படம். தேயிலைத்தொழிளார்கள் முன்னைய காலப்பகுதியில்(தற்போதும்???) பட்ட அவலங்களை துல்லியமாக பாலா சித்தரித்திருக்கிறார், வரவேற்கப்படவேண்டிய திரைப்படமும்கூட. ஆனா இந்தப்படத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்களா என்றா இல்லை. அதுக்காக அவர்களை குறை சொல்ல முடியுமா? சிறுவர்கள்,பெண்கள்,பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களைப்போய் இந்தப்படம் பார் எண்டு சொல்லமுடியுமா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை. அதை இந்த அறிவுஜீவிகள் புரிந்துகொள்வார்களா? 
இந்த விடயத்தில் சில மசாலா பிரியர்கள் மத்தியில் வித்தியாசமான குழப்பங்கள் எழும் எவ்வாறெனின், கமல்,பாலா,மணி போன்றோரின் படங்களை பார்த்தவுடன் யாரவது படம் எப்பிடி என்று கேட்டா என்ன சொல்வது? சிலவேள மனசு பிடிக்கேல என்று சொன்னாலும் அதை பப்ளிக்கா சொன்னா தங்களை கேவலப்படுத்துவாங்களோ! என்ற தயக்கம். அதால அடிமட்ட ரசிகர்கள் அவ்வப்போது தங்களை அறிவுஜீவிகளா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பங்களும் உண்டு... மாசோ! கிளாசோ! மக்களுக்கு புரியிற மாதிரி படம் எடுங்கப்பா.........
இப்படிக்கு நானும் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.

Wednesday, March 6, 2013

இந்திய மைதானங்களும் இடதுகை துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கமும்


இந்தப்பதிவில் 2000 ஆண்டிற்கு பின்னர் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் வெளிநாட்டு அணியின் ஆரம்ப இடதுகை  துடுப்பாட்ட வீரர்/வீரர்கள் இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் பெற்ற ஓட்டங்கள் பற்றி அலசப்பட்டுள்ளது. அது என்னவோ தெரியல, ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்களுக்கு இந்திய மைதானங்கள் சொர்க்காபுரியாகவே இன்றும் இருந்துவருகின்றது. ஒரு தொடரில் அனேகமாக அவர்களே அதிகப்படியான ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் விசேடம் என்னவென்றால் குறிப்பிட்டு சொல்லுற அளவுக்கு பெரிய துடுப்பாட்ட வீரர்களல்லாத சில இடதுகை துடுப்பாட்ட வீரர்களும் இந்தியாவில் சாதித்துள்ளார்கள். மேற்கிந்தியாவின் வேவல் ஹைன்ட்ஸ், பாகிஸ்தானின் சல்மான் பட், நசீர் ஜாம்செட் போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம். சரி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த நாடுகளின் ஆரம்ப இடதுகை துடுப்பாட்டவீரர்கள் பெற்ற ஓட்டங்களின் பட்டியலுக்கு செல்வோம்.

தென்னாபிரிக்க இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.


south africa in india 2000kristen- 115, 0, 93, 72,1 ஓட்டங்கள் 
south africa in india 2005smith- 48,3,134,24 ஓட்டங்கள் 
south africa in india 2010 (ஆரம்ப இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அணியில் இடம்பெறவில்லை)
Icc world cup 2011- smith- 16 ஓட்டங்கள் 

அவுஸ்திரேலியா இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.
australia in india 2001
hyden- 99,57,111,36 ஓட்டங்கள் 
ghilli- 63,6,76 ஓட்டங்கள் 

hyden-47, 0,44,19 ஓட்டங்கள் 
ghilli-83,41,111,7 ஓட்டங்கள் 

ghilli..-12,0,29,18,79,51,19 ஓட்டங்கள் 
hyden-34,75,60,92,29 ஓட்டங்கள் 

marsh-5,112,6 ஓட்டங்கள் 

marsh- 0 ஓட்டங்கள் 


இங்கிலாந்து இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.
treskothick 121,13,36,18,35,95 ஓட்டங்கள் 
knight  0,14,10,74,105,0 ஓட்டங்கள் 

strauss- 0,61,7,7,74,25 ஓட்டங்கள் england in india 2008 
cook 11 ஓட்டங்கள் 

cook 60,0,3,10,63 ஓட்டங்கள் 

cook 75,17,17,76,22 ஓட்டங்கள் 

strauss- 158 ஓட்டங்கள் 
பாகிஸ்தான் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.
butt-108 ஓட்டங்கள் 

butt- 26,36,101,48,21,3 ஓட்டங்கள் 

butt- 50,37,129,0,36 ஓட்டங்கள் 
jamshed- 101,106,35 ஓட்டங்கள் 

இலங்கை இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய மண்ணில்.sanath- 27,0,15,16,8,19 ஓட்டங்கள் 
sanga-27,138,8,39 ஓட்டங்கள் 
tharanga-28,6 ஓட்டங்கள் 

tharanga-14,11,1 ஓட்டங்கள் 
sanath-63,9,2,22 ஓட்டங்கள் 

tharanga-67,37,73,118,0 ஓட்டங்கள்

Icc world cup 2011
tharanga- 2 ஓட்டங்கள்


மிகுதி அடுத்த பதிவில்...

comment