Sunday, February 26, 2012

பேஸ்புக்கின் "Theme" ஐ மாற்றுவதற்கு...

1. முதலாவதாக நீங்க எந்த browser பயன்படுத்துகிறீர்களோ அதற்கு எதிரேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..


2. நீங்க கிளிக் செய்ய ஒரு சிறு extension தானாக தரவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் browser இல் Install செய்யப்படும்.


3. அப்புறம் உங்கள் பேஸ்புக்கின் theme புதிய வடிவத்துக்கு மாறியிருக்கும். 
    (இரண்டுவகையான மாதிரிகள் கீழே தரப்பட்டுள்ளன..)


மாதிரி 1
download for Mozilla Firebox: http://is.gd/cRNXCR
download for Internet Explorer: http://is.gd/eKoHTF
download for Google Chrome: http://is.gd/cRNXCRமாதிரி 2

download for Mozilla Firebox: http://is.gd/W0OMFe
download for Internet Explorer: http://is.gd/yldWIo
download for Google Chrome: http://is.gd/W0OMFe
                                                                                                          -நன்றி-

Saturday, February 25, 2012

"அது இது எது"... "பவர் புவர் ஐடியா" ஸ்டார்ஸ்விஜய் Tv யின் "அது இது எது" நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் 
வெள்ளிவிழா நாயகன்(??) பவர்ஸ்டார், சாம் அன்டர்சன், மற்றும் லொள்ளு சபா புகழ் ஈஸ்டர்....... சிவகார்த்திகேயன் சும்மாவே வாரு வாரெண்டு வாருவார்.. இவங்கவேற திருநெல்வேலி அல்வா போல செமையா மாட்டிட்டாங்க.. விடவா போறார்???? சாம் அன்டர்சனுக்கு "ஐடியா ஸ்டார்" என்று ஒரு பட்டம் வேற கொடுத்திட்டாங்க, ம்ம்ம்..என்ஜாய் பண்ணுங்க...


part 1


Part 2


Part 3


Part 4


Part 5
(ஆட்டமா? தேரோட்டமா?.... நோட்டமா? கதிராட்டமா????............
 தலைவா யூ ஆர் கிரேட்........)Thursday, February 23, 2012

டாப் 10 மழைப்பாடல்கள்- எனது அலசலில்...பொதுவாக பாடல் காட்சிகளில் என்னவோ தெரியவில்லை மழை நடுவே காட்சியமைக்கப்படின் என்னதான் இசை, பாடல்வரிகள் பிடிக்காவிடினும் காட்சி மனதைவிட்டு அகலாது..அது சோகப்பாட்டாக இருக்கலாம், டூயட்டா இருக்கலாம், குத்துப்பாடல்களா இருக்கலாம் அங்கே விழுகின்ற ஒவ்வொரு மழைத்துளியும் அடி மனதை தொடுவது போன்ற உணர்வு பெரும்பாலான சினிப்பிரியர்களுக்கு ஏற்படுவது இயல்பே! தமிழ் சினிமாவில் மழை பாடல்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்..குறிப்பாக மணிரத்தினம் போன்றோரின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்ல, அணு அணுவா ஒவ்வொரு frame ஐயும் ரசிக்கலாம். தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த முதல் பத்து மழைப்பாடல்களை பட்டியலிட்டுள்ளேன். பழைய, இடைக்கால பாடல்கள் தவிர்த்து ரஹ்மானுக்கு பிந்திய காலத்து பாடல்களையே முழுவதும் தெரிவுசெய்துள்ளேன்.. இவற்றைவிட சில பாடல்கள் சிறந்த பாடல்களாகக்கூட இருக்கலாம், தற்சமயம் எனக்கு நினைவில் வந்த பத்து பாடல்களை எனது ரசனைக்கேற்ற ஒழுங்கில் ஒழுங்குபடுத்தியுள்ளேன்.


10. விழியே விழியே (ஈரம்)
நடிகர்கள்- ஆதி, நந்தா, சிந்துமேனன்..
இயக்குனர்- அறிவழகன் வெங்கடாச்சலம்.
இசையமைப்பாளர்- தமன். 
பாடியவர்கள்- ரஞ்சித். 
பாடல் வரிகள்- விவேகா.

9. சில் சில் சில் மழையே ( படம்- அறிந்தும் அறியாமலும்)
நடிகர்கள்- ஆர்யா, நவதீப், சாமிக்ஸா..
இயக்குனர்- விஷ்ணுவர்த்தன்.. 
இசையமைப்பாளர்- யுவன் சங்கர் ராஜா.. 
பாடியவர்கள்- சத்தயன், சின்மை.. 
பாடல் வரிகள்- பா.விஜய்.. 8. என்னை கொஞ்சம் கொஞ்சம் ( படம்- ஆதி)
நடிகர்கள்- விஜய், திரிஷா.
இயக்குனர்- ரமணா..
இசையமைப்பாளர்- வித்தியாசாகர்.. 
பாடியவர்கள்- ஹரிஹரன், சுஜாத்தா..
பாடல் வரிகள்- யுகபாரதி..7. தொட்டு தொட்டு போகும் தென்றல் (படம்- காதல் கொண்டேன்)
நடிகர்கள்- தனுஷ், சோனியா அகர்வால்..
இயக்குனர்- செல்வராகவன்.
இசையமைப்பாளர்- யுவன் ஷங்கர் ராஜா. 
பாடியவர்கள்- ஹரிஹரன், சுஜாத்தா..
பாடல் வரிகள்- யுகபாரதி..6. வெண்மேகம் (படம்- குரு)
நடிகர்கள்- விக்ரம், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யாராய்.
இயக்குனர்- மணிரத்தினம். 
இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்- உத்ய முதுமார், ஸ்ரேயா ஹோசல். 
பாடல் வரிகள்- வைரமுத்து.5. சின்னமேகமே சின்னமேகமே (படம்- மழை)
நடிகர்கள்- ஜெயம் ரவி, ஸ்ரேயா.
இயக்குனர்- ராஜ்குமார்..
இசையமைப்பாளர்- தேவிசிறிபிரசாத்.
பாடியவர்கள்- சித்ரா. 
பாடல் வரிகள்- வைரமுத்து.4. அடடா மழை (படம்- பையா)
நடிகர்கள்- கார்த்தி, தமன்னா.
இயக்குனர்- லிங்குசாமி.
இசையமைப்பாளர்- யுவன் சங்கர் ராஜா..
பாடியவர்கள்- ராகுல் நம்பியார், சைந்தவி.
பாடல் வரிகள்- நா.முத்துக்குமார்.3.எவனோ ஒருவன் (படம்- என் அலைபாயுதே)
நடிகர்கள்- மாதவன், ஷாலினி.
இயக்குனர்- மணிரத்தினம். 
இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்- சுவர்ணலதா 
பாடல் வரிகள்- வைரமுத்து.2. ஏ நிலவே ( படம்- முகவரி)
நடிகர்கள்- அஜித், ஜோதிகா..
இயக்குனர்- துரை. 
இசையமைப்பாளர்- தேவா.. 
பாடியவர்கள்- உன்னிமேனன்
பாடல் வரிகள்- வைரமுத்து.1. சின்ன சின்ன மழைத்துளிகள்  (படம்- என் சுவாசக்காற்றே)
நடிகர்கள்- அரவிந்தசாமி, இஷா கோபிகர். 
இயக்குனர்- மணிரத்தினம். 
இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்- சிறீக்குமார்.  
பாடல் வரிகள்- வைரமுத்து.                                                                                                                       -நன்றி -

Monday, February 20, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்- எப்பொழுதும் உன் கற்பனைகள்: விமர்சனம்-
நடிகர்கள்- அதர்வா, அமலாபால், ஜெயப்பிரகாஸ், நாசர், சந்தானம் 
இயக்கம்-எல்றேட்குமார்
இசை- ஜீவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு-ஆர்.எஸ்.இன்போர்டைன்மென்ட்

எல்றேட்குமாரின் இயக்கத்தில் அதர்வா, அமலாபால்,ஜெயப்பிரகாஷ்,நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". இந்த திரைப்படம் வரமுதல் படத்துக்கு பாரிய எதிர்பார்ப்பிருந்தது, இதற்கு இயக்குனரோ அல்லது நடிகரோ காரணம் இல்ல, படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போர்டைன்மென்ட் தான், காரணம் இவர்கள் இதற்குமுதல் வெளியிட்ட "கோ" மற்றும் "விண்ணைத்தாண்டி வருவாயா" ஆகிய இருபடங்களுமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற படங்கள். இந்த நிறுவனத்துக்கு கீழே வரும் படங்களுக்கு கதை அந்நிறுவனமே தெரிவுசெய்வது வழக்கம், அப்புறம் அவர்கள் அதற்கேற்றாற்போல தகுந்த இயக்குனரை தேர்வுசெய்வார்கள். இந்தப்படமும் ஆரம்பத்தில் வேறொரு இயக்குனர் இயக்கிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனத்துடனான முரண்பாட்டையடுத்து படம் எல்றேட்குமாரின் கைக்கு மாறியது. இயக்குனர் எல்றேட்குமாருக்கு உதவியாக முதலிரு பட இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் தமது இணை இயக்குனர்கள் ஒருசிலரை இவருக்கு துணையாக அனுப்பினார்கள். அதனால்தான் என்னவோ படத்திலும் கௌதம் மேனன்ட பட சாயல் தெரிகிறது. 
படத்தை சுருக்கமா பார்ப்போமாயின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவரின் அன்பில் சாய்ந்திருக்க துடிக்கும் ஒரு ஆணின் கதைதான் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதல் காட்சிகளில் குறிப்பாக சைக்கோ காதலையே இயக்குனர் படம் பிடித்து காட்டியிருக்கார். இவ்வாறான கதையம்சமுள்ள படங்கள் நிறைய தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், இதில் இயக்குனர் பழைய ரெண்டிலிருந்து விலகி சற்று சூடாகவே படைத்திருக்கிறார்..  
 சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆறுதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.  ஆனால் அவளோ வெறும் நட்பாகவே பழகுகிறாள். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமலாபால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும்(கற்பனையில்) என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.


அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, அப்போதுதான் ஒருத்தி இல்லாமலே அவ இருப்பதாக கருதும் அதர்வாவின் சைக்கோ காதல் அமலாவால் உணரப்படுகிறது. அதன்பிறகு மாமனார் ஜெயப்பிரகாசுடன் சேர்ந்து அதர்வாவை எப்பிடி குணப்படுத்தலாம் என்று சிந்தித்து முதல் கட்டமாக அதர்வாவின் ஆரம்ப வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக அவரின் சொந்த ஊருக்கு சென்று கடந்தகால விடயங்களை நாசர் மூலம் கேட்டகின்றனர், அப்போதுதான் அதர்வா சிறுவயதிலிருந்தே அம்மாவின் பாசமிகு அரவணைப்பில் வாழ்ந்தது, பின்னர் தாயாரின் இழப்பு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரோ ஒருவரின் அன்பு அவனுக்கு தேவைப்படுகின்றது என்ற விடயம் அமலா மற்றும் ஜெயப்பிரகாசால் உணரப்படுகிறது. அதன்பின் ஜெயப்பிரகாசின் அறிவுரைக்கமைய அமலா அதர்வாவை குணப்படுத்தும் நோக்கோடு அவன் வீட்டிலேயே இருந்து அவரை காதலிக்கிறமாதிரி நடிக்கத்தொடங்கினார்.. அச்சமயம் அமலாவுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மணமகனின் இரு நண்பர்கள் அமலாவை கடத்தி கொலைசெய்ய முயற்சிக்கின்றனர், காரணம் அவர்கள் மூன்று பேரும் ஆண்-ஆண் உறவுமுறைப்பழக்கம் உடையவர்கள்.. அமலாவின் வருகை தங்கள் உறவை பாதித்துவிடும் என்பதற்காகவே கொலைசெய்ய முயற்சித்தார்கள், அச்சமயம் அதர்வா வந்து சண்டைபோட்டு, அதன்பிறகு அதர்வா-அமலா சேர்வதோடு படமும் ஓவர்...


என்னுடைய பார்வையில் படத்தின் சில குறை நிறைகள்.

1 என்னதான் பழைய கதை என்றாலும் சிறப்பான மேக்கிங் உடன் சுடச்சுட இயக்குனர் தந்திருக்கார்.. ஒவ்வொரு சீனையும் பார்க்கும்போது இது அறிமுக இயக்குனரின் படமா என வியக்கத்தோன்ருகிறது. முதல் படத்திலே பாரியதொரு சுமையை இயக்குனர் ஏற்றுள்ளதால் சில சில தவறுகளும் வெளிப்படையாகவே தெரிகின்றது. 

2 ஒரு சில சீனைத்தவிர படம் எந்தவொரு கணத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய செய்யவில்ல, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை..

3 இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றாலும் அதர்வா, அமலாபாலின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது குறிப்பாக அதர்வாவின் இரண்டாம் படம் என்று சொல்லமுடியாதளவுக்கு முதிர்ச்சியான நடிகராக தென்பட்டார்.

4 சந்தானத்தின் காமெடி பெரிதாக இல்லையென்றே சொல்லணும், அவருக்கு ஏற்கனவே ரசிகர்களின் அமோக ஆதரவு இருப்பதால் அவர் வரும் சீன்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் கிடைத்ததே தவிர(நான் பார்த்த திரையரங்கில்), மற்றும்படி ஒன்றுமில்லை.. சந்தானத்தை இந்தப்படத்தில் உள்ளடக்கியதால் படத்தின் ஸ்கிரீன்பிளேயில் தொய்வு ஏற்பட்டிப்பது போன்ற உணர்வு. எந்த இடத்தில் எப்பிடியான காமெடி சீனை வைப்பதெண்ட இயக்குனரின்  குழப்பம் வெளிப்படையாகவே தெரிகின்றது. 

5 படம் முழுக்க முழுக்க A கிளாஸ்  ஆடியன்ஸ்சுக்குரிய படம், கிராமப்புற மக்களில் எத்தனைபேர் இந்த படத்தை விரும்புவார்கள் என்பது சந்தேகமே! 6 இடைவேளைக்குமுதல் சப்பா..... எவ்வளவு டுவீஸ்ட், இடைவேளை வரைக்கும் என்ன நடக்குதென்றே சொல்லமுடியாதளவுக்கு குழப்பம், அமலாபால் இருவேடங்களில் நடிக்கிராவோ என்ற சந்தேகம்... இடைவேளையின் போது படம் பார்க்கவந்தவர்கள் பெரும்பாலானோர் எவருமே திருப்தியுறாதமாதிரி இருப்பதை காணமுடிந்தது..

7 தங்களின் ஆண்-ஆண் உறவு குழம்பிடும் எண்டதுக்காக அமலாவை அதர்வாவின் நண்பர்கள் கொலை செய்ய முயற்சிப்பது(ஏற்கனவே மூன்று பெண்களை இதே காரணத்துக்காக கொலை செய்துவிட்டார்கள்) கொஞ்சம் ஓவராய்த்தான் இருந்தது.. இந்த உண்மையை சொன்னாலே ஒரு தமிழ் பெண் தானாகவே கல்யாணம் வேண்டாம் ஆளைவிட்டாபோதும் என்று ஓடிவிடுவாங்க.. இப்பிடியெல்லாம் கொலைதான் செய்யவேண்டும் என்றில்ல...

8 ஜீவிபிரகாசின் படத்துக்கான பின்னணி இசை பரவாயில்லை, பாடல்கள் பற்றி நான் சொல்லவிரும்பேல, காரணம் நான் புதிய பாடல்கள் கேட்பதில்லை.. ஆனால் படத்தில் அளவுக்கதிகமான பாடல்கள் சலிப்படைய செய்தன.. பெரும்பாலான பாடல்கள்(நான்கு) ஒரே பார்முலாவில் காட்சியமைக்கப்பட்டமை இன்னொரு மைனஸ்...

9 படத்தில்வரும் சண்டைக்காட்சிகள் ரஜினி, அஜித்,விஜய் போன்றோரின் படங்களில் இருப்பதுபோல கொஞ்சம் ஓவரா இருக்கின்றது..இதை ரஜினி, அஜித்,விஜய் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஆனா அதர்வாவை அப்பிடியொரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சந்தேகமே! 


படத்தில் குறைகளைத்தான் அதிகம் சுட்டிக்காட்டிவிட்டேன்போல தோன்றுகிறது, என்ன செய்ய நிறைகளை சொல்லபோனால் இன்னும் இரண்டு பதிவுகள்வரை நீண்டுவிடும்.. மொத்தத்தில் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்... இந்தப்படம் சிறப்பான வெற்றியடையுமானால்   அதர்வாக்கு பெரியதொரு திருப்புமுனை கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை///  
 

Wednesday, February 8, 2012

அஜித்தை கட்டிப்போடும் இமேஜ் வட்டம்... அதிலிருந்து மீளுவாரா அஜித்?தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிடையே இமேஜ் வட்டம் என்பது ஓரிருவரை தவிர்த்து மிகுதி எல்லோரையும் கட்டிபோட்டுள்ளண்டே சொல்லலாம். இது இன்று மட்டுமல்ல எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது. அந்த வட்டத்தில் சிக்கப்படும் நடிகர்கள் அதிலிருந்து மீளமுடியாது, அவ்வாறு மீண்டு வித்தியாசம் வித்தியாசமா ஏதாவது நடித்தாலும் அந்த படங்கள் பெரிதா போகாததும் கண்கூடு. இது தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய மைனஸ் என்றுகூட சொல்லலாம். குறிப்பாக மாஸ் அந்தஸ்துள்ளவர்களே இந்த வட்டத்தினுள் அடக்கப்படுகிறார்கள். கமல், விக்ரம் போன்ற ஒருசிலர் மட்டும் இதற்கு விதிவிலக்காக கருதப்படுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் அமையும். கமல், விக்ரம் படங்கள் என்றால் இந்த பார்முலாவில்தான் இருக்கும் என்று சொல்லேலாது, அவரது ரசிகர்களும் அவர்களிடமிருந்து வித்தியாசமான படைப்புக்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ரஜினி,அஜித்,விஜய் போன்றோரின் படங்கள் பெரும்பாலும் ஒரே பார்முலாவில்தான் பெரும்பாலும் இருக்கும். அத்தோடு அவர்களது ரசிகர்களும் தமது கதாநாயகர்கள் இப்படித்தான் இருக்கணும் என்று முதல்லே ஒரு எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள், குறிப்பாக ஹீரோயிசத்தை அவர்களது ரசிகர்கள் கூடுதலாக எதிபார்க்கிறார்கள், ரஜினி,அஜித்,விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் முடிவில் இறந்துபோவதுபோல படம் எடுத்தால் எத்தனை ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே! தியேட்டர் ஸ்கிரீன் கிழியிறதுதான். இது அவர்களை வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடிப்பதற்கு இடையுறாக அமைகின்றது. இந்தவகையில் அஜித்தின் இன்றைய நிலையை பார்த்தா ரஜினிக்கு அப்புறம் "கிங் ஆப் ஒபெநிங்" என்று எல்லோராலும் கருதப்படுபவர், அதிகமான இளையோர் பட்டாளத்தை ரசிகர்களா கொண்டுள்ளதால் இவருக்கு கிடைக்கும் ஒபெநிங் இவரின் ரஜினிக்கு அப்புறம் வேற எவருக்குமே எதிர்பார்க்கேலாது.அவரின் பார்முலாவை பார்த்தால், ஆரம்ப காலங்களில் சாக்லேட் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபல்யமாயிருந்தவருக்கு 1999 இல் அவர் நடித்து சக்கைப்போடு போட்ட "அமர்க்களம்" என்ற படம் அவருக்கு முதல் "மாஸ்" ஹிட். ரஜினி-கமல் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் மாஸ் அந்தஸ்துள்ள நடிகரா முதலில் கருதப்பட்டவர் அஜித்தான், அமர்க்களம் படம் மூலம். பொதுவா படங்களில் எந்தவகையான கதாபாத்திரத்தை ஒரு நடிகர் ஏற்று நடிக்கிறாரோ அதே பாத்திரத்தோடு ரசிகர்கள் ஒன்றித்துபோவது தமிழ்சினிமா ரசிகர்களிடையே தவிர்க்கமுடியாதொன்றாகிவிட்டது. என்னதான் கமல் போன்ற நடிகர்கள் சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டும் வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை மக்களுக்கு தந்தாலும் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள், ஒபெநிங் பெரிதா சொல்வதற்கில்லை, காரணம் முதற்சொன்னதுதான், அவர் தெரிவுசெய்து நடிக்கும் படங்களின் தன்மை.  அந்தவகையில் அமர்க்களம் படத்தில் அஜித்தின் "தாதா" கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தாலும் 2001 இல் வெளிவந்த தீனா திரைப்படம் அவருக்கு பெருமளவில் வெறித்தனமான ரசிகர்களை உருவாக்கியதுடன் ரசிகர்கள் அஜித்தை ஒருவட்டத்தினுள் சிக்கவைச்சிட்டார்கள். தீனா இயக்குனர் முருகதாஸ் ஓரிடத்திற்கு சென்றவேளை அங்குள்ள ஒரு தாதாக்கும்பல் தங்கள் தலைவனை பார்த்து "தல" என்று அழைப்பதை அவதானிச்ச்சபின்னரே அந்த இரண்டெழுத்து பெயரை படத்தினுள் அஜித்தின் கதாபாத்திரத்தினுள் புகுத்தினார், அன்றிலிருந்துதான் அஜித் ரசிகர்களிடையே "தல" என்று பிரபல்யமானார். அதன்பிறகு அஜித்திடம் இந்தவகையான(அக்சன்+நெகடிவ்) படங்களையே அவரது ரசிகர்கள் எதிபார்க்க தொடங்கினார்கள்.அதுக்கப்புறம் சிட்டிசன், வில்லனில் அவரது நடிப்புக்கும் ரசிகர்கள் சரியான அங்கீகாரத்தை கொடுக்க தவறவில்லை. அதைத்தொடந்து ௨௦௦௪ இல் மீண்டும் தனது ரசிகர்களுக்கு அவர்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் விருந்துவைச்சார், ஆமாம் அட்டகாசம் படத்தின்மூலம், தடாரிப்பாளரின் பணப்பிரச்சனைக்கு மத்தியில் வெறும் முப்பதாயிரம் ரூபாவை சம்பளமா வாங்கி அடிச்சு தூள் கிளப்பயிருந்தார். இந்தப்படத்தின் தாக்கம் இன்றும் தூத்துக்குடி பக்கம் போனால் தெரியும் அது "தல" ஏரியான்னு, அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்த படம். அப்புறமாக 2006 இல் வெளிவந்தது "வரலாறு"  என்ற மிகப்பெரும் காவியம்,  அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் அசத்தலா நடிச்சிருந்தார். இதில் எந்தளவுக்கு நடிப்பில பொதுவான ரசிகர்களை கவர்ந்தாரோ அந்தளவுக்கு அதிலுள்ள ஒரு நெகடிவ் ரோல் மூலம் தனது ரசிகர்களுக்கும் ஒரு கிக்கை கொடுத்தார். இந்தப்படம் வேறு ஐந்து படங்களுடன் பொங்கலுக்கு வெளியாகி பட்டையை கிளப்பியதுடன், அந்த வருடத்தின் அனைத்து படங்களின் வசூலையும் அடித்து நொறுக்கி பாக்ஸ்ஆபீசில் முதலிடத்தை பெற்றது. இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தை அழைத்து விருந்துவைத்தார், அந்தவேளையில்தான் "பில்லா" பட ரீமேக் உரிமையை  சூப்பர்ஸ்டார் அவர்களிடமிருந்து அஜித் வாங்கிக்கொண்டார்.இவ்வாறு 2007 இல் டான் கதாபாத்திரத்துடன் வெளிவந்த பில்லா திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றையே ஒருதடவை புரட்டிப்போட்டதெண்டு சொல்லலாம், அதுவரை அப்பிடியொரு ஸ்டைலிசான படத்தை மக்கள் பார்த்ததே இல்லை, அந்தளவுக்கு அஜித்தின் ஒவ்வொரு அசைவையும்  ஸ்டைலிசா காட்டினார் இயக்குனர் விஸ்ணுவர்த்தன். படமும் சக்கைபோடு போட்டது. அதே காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் வசூல் லிஸ்டில் "சிவாஜி"க்கு அடுத்ததா அதிகூடிய வசூலை பெற்ற படமாக பில்லா அமைந்தது. இவ்வாறு நெகடிவ் ரோலில் நடிச்சு பல வெற்றிகளை சுவைத்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களாயிருந்து (வாலி,அட்டகாசம்,வரலாறு,பில்லா) ஏதோ ஒரு ரோலில் நல்லவராகவும், மற்றயதில் கெட்டவராகவும் சித்தரித்தார்கள். அமர்க்களம், தீனா போன்ற படங்களும் நெகடிவ் ரோலை ஆரம்பத்தில் காட்டி பிறகு திருந்திறமாதிரி அல்லது காதல்,செண்டிமெண்ட் என்று அதை மழுப்பி படத்தை லாஜிக்காக முடித்தார்கள், இதுக்கெல்லாம் காரணம் நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்காது நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது, மற்றும் சினிமாவில் வரும் கதாநாயகர்களை நிஜ கதாநாயகர்களாக பாவனைசெய்து பார்த்தல், வில்லன் என்றால் படமுடிவில் தண்டிக்கப்படவேணும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு. எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தா தெரியும் அநேக படங்களில் அவர் வில்லனை கொலைசெய்யமாட்டார், கிளமைக்ஸ்ல பார்த்தா போலிஸ் வந்து அரஸ்ட் பண்ணுறமாதிரியே படம் முடியும். இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் கடந்த ஆண்டு (2011) வந்ததுதான் மங்காத்தா, படம் முழுக்க நெகடிவ் ரோலில் நடித்து அசத்தினார் அஜித். தமிழ்சினிமா வரலாற்றில் எந்தவொரு மாஸ் ஹீரோவுமே இப்படி ஒரு வேடத்தில் படம் முழுவதுமே நெகடிவ் ரோலில் நடித்ததில்லை,  இந்தப்படத்தில் இறுதியில்கூட அஜித் தண்டனைக்குள்ளாகிறமாதிரியோ! அல்லது திருந்திறமாதிர்யோ! காட்டப்படவில்லை மாறாக 500 கோடி ரூபாவை அலாக்கா அர்ஜுனுடன் சேர்ந்து கடத்தி நாட்டைவிட்டு தப்பிச்செல்லுகின்றமாதிரியான கிளைமாக்ஸ், இந்தப்படம் தொடங்கமுதலே இயக்குனர் வெங்கட்பிரபு இந்தக்கதையை அஜித்திடம் சொல்லி "இதில நீங்க முழுக்க முழுக்க கெட்டவனாய் வருவதுபோல படம் அமையும் இதை ரசிகர்கள் எப்பிடி எதிர்கொள்வார்களோ தெரியேல" என்று சந்தேகத்துடன் கேட்க.. அதுக்கு அஜித் "பிரபு நான் CM ஆக விரும்பல, நான் ஒரு நடிகன்.. எனக்கு விதம்விதமா தீனி தேவை, நீங்கள் எடுங்க" என்று தன்னுடைய ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து கூறினார். படமும் வெளியாகி மிகப்பெரிய ஒபெநிங்குடன் சக்கைப்போடு போட்டு ரஜினி-கமல் படங்களுக்கு அடுத்ததாய் பாக்ஸ்ஆபீசில் அதிக வசூலிச்ச படமா அமைந்திட்டு. தான் "கிங் ஆப் ஒபெநிங்" மட்டுமல்ல "கிங் ஆப் பாக்ஸ்ஆபீஸ்" என்பதையும் உணர்த்தினார். இவ்வாறு அஜித் அநேகமான படங்களில் நெகடிவ் ரோலில் நடிப்பதால் ரசிகர்களும் அதே பார்முலாவுக்கு உள்வாங்கப்பட்டுவிட்டனர் என்றே சொல்லணும், சமூகவலைத்தளங்களான முகப்புபுத்தகங்களில்கூட அஜித் ரசிகர்களின் இதேமாதிரி படங்களுக்கான எதிர்பார்ப்பை அறியமுடிகிறது. இப்படியான எதிர்பார்ப்பு அஜித்தை எந்தளவுக்கு எதிர்காலத்தில் தூக்கிவைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். எவ்வளவு காலத்துக்கு தீனா, அட்டகாசம், மங்காத்தா மாதிரியான நெகடிவ்+அக்சன் படங்கள் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே!! அஜித்தை பொறுத்தளவில் நடிப்பை வெளிக்காட்டும் படங்களில் சிறப்பாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர், இவ்வாறான இமேஜ் வட்டத்தில் சிக்கியுள்ளதால் அதிலிருந்து மீளமுடியாமல் தவிர்க்கிறார். "சிட்டிசன்" படம்கூட எல்லோரும் பாராட்டும் விதத்தில அற்புதமாய் நடித்திருந்தார். படம் ஓடினாலும் பெரிய வெற்றியை அவரால அந்தப்படத்தின்மூலம் பெறமுடியவில்லை. அதேபோலவே "கிரீடம்" திரைப்படமும் பொதுவான ரசிகர்களை நன்கு கவர்ந்தபோதிலும் அஜித் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை முழுக்க முழுக்க திருப்தி செய்யாததால சராசரியாகவே ஓடிச்சு. இதனால் அஜித் தனது ரசிகர்களின் வழிக்கே செல்லத்தொடங்கினார் அதன்விளைவே பில்லா, மங்காத்தா போன்ற பட வெற்றிகளை அவரால் சுவைக்கமுடிந்தது. தொடந்தும் பில்லா2 , விஸ்ணுவின் படம் போன்றவையும் தனது ரசிகர்களை இலக்குவைச்சே அவர் தெரிவுசெய்தார்போல தெரிகிறது..அஜித்தை பொறுத்தவரையில் இன்றைய சினிமாவில் தவிர்க்கமுடியாத சக்தி. எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுவதில்லை, ரசிகர் மன்றங்கள் இல்லை, ரசிகர்களை சந்திப்பதில்லை, தன்னுடைய படம் ஓடவேணும் என்பதற்காக ஒவ்வொரு இடம் இடமாய் சென்று புரோமோஷன் செய்வதில்லை ஆனாலும் இஅவருக்கிருக்கும் ரசிகர்பலம், ஒபெநிங் சகலரையும் வாய்பிளக்கவைக்கிறது. படம் நடித்ததும் சிவனே என்று தன்பாட்டிலிருக்கும் இவரால மட்டும் எப்பிடி இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கமுடிகிறது? என்பதுதான் எல்லோருடைய அங்கலாய்ப்பு!! அவ்வளவு எதிர்பார்ப்புடைய அஜித் இமேஜ் வட்டத்திலிருந்து வெளியேறி வித்தியாசம் வித்தியாசமா படங்கள் நடிக்கவேணும் என்ற எதிர்பார்ப்பை எத்தனை ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதுதான் இன்றைய எனது சந்தேகம்....
- நன்றி -

Friday, February 3, 2012

மெரீனாவில் நான்ஒரு விடயத்தை முதல்ல சொல்லிடணும், மெரீனா படத்திண்ட ஹீரோ சிவகார்த்திகேயன் எண்டு நம்பி போய்விடாதீர்கள். அவர் அங்க ஒரு கெஸ்ட்ரோல்தான், ஏன்தான் படம்வரமுதல் சிவா..சிவா எண்டு பில்டப் விட்டாங்களோ தெரியல. சரி விடயத்துக்கு போவோம். என்ன ஆர்வக்கோளாறோ தெரியல காலையில தெஹிவளை வழியா போகேக்க கொன்கோட் தியேட்டர்ல மெரீனா கட்டவுட்டை பார்த்ததிலிருந்து எப்பிடியாவது இண்டைக்கே (முதன்நாளே) அந்த படத்தை பார்த்திடனும் எண்டு முடிவெடுத்துவிட்டேன். சரி ஒருவாறாக இரவு 7.00pm ஷோவுக்கு டிக்கட்டை எடுத்திட்டு உள்ளபோய் அமந்தாச்சு.

பசங்க புகழ் பாண்டிராஜ்ட நம்பிக்கை ஒருபுறம், மற்றும் ஹீரோ சிவகார்த்திகேயன் ஆதலால் காமெடிக்கு பஞ்சமிருக்காது, ஏனென்டா அவர் விஜய் டீவியில மற்ற நடிகர்கள், நிகழ்ச்சியில பங்குபற்றும் நேயர்களை போட்டு வாங்குறதை நான் அறியாதவனில்ல. ஆதலால தண்ட கரியர்ல கொஞ்சம் கவனமாயிருப்பார்தானே! என்ற நம்பிக்கை. ஒருமாதிரி படம் ஆரம்பிச்சாச்சு. ஆரம்பத்தில ஒரு சிறுவனை வைச்சு ஒரு பாடல்காட்சி, சென்னையில் உள்ள கூவம் முதற்கொண்டு ஆயா வடைசுடுறது வரைக்கும் சுருக்கமா சென்னை நிலவரத்தை அந்த பாட்டில காட்டினாங்க. அப்புறம் படத்தில் இருகதைகள் இருவேருவிதமா சென்றுகொண்டிருந்தன, வழமையா கடற்கரையோரங்களில் அவதாநித்துபார்த்தா இருவிதாமான தரப்பினரையே அதிகமாக காணக்கூடியதாயிருக்கும் ஒன்று கொஞ்சம் கைலெவலா இருக்கிற காதல்ஜோடிகள், மற்றொன்று சுண்டல்,ஐஸ்கிரீம் விற்கும் சில்லறை வியாபாரிகள், களியாட்டங்கள் செய்து வருமானத்தை பெறுவோர், பிச்சைக்காரர்கள் போன்ற தரப்பினர். இந்தப்படத்தில் இயக்குனர் சொல்லவந்த விடயம் இதுதான் சென்னை மெரீனா கடற்கரையோரங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், மேற்குறிப்பிட்ட இருதரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்பனவே இதன் மையக்கரு. 

அதன்படி வயிற்றுப்பிளைப்புக்காய் சில்லறைவியாபாரங்களில் ஈடுபடும் சிறுவர்களின் (அதில ஒராள்தான் இந்த படத்திண்ட ஹீரோ எண்டுகூட சொல்லலாம்) வாழ்க்கைமுறையும், சிவகார்த்திகேயன் -ஓவியாவின் காதல் சீன்களும் சமாந்தரமாய் சென்றுகொண்டிருக்கு..சிவாவை சொல்லப்போனா விஜய் டீவியில நிகழ்ச்சி தொகுப்பாளரா என்ன செய்தாரோ அதையேதான் இங்கயும் பலோ பண்ணியிருக்கார். ஓவியாவை கலாய்க்கிறார் கலாய்க்கிறார் சப்பா.. தியேட்டர்ல ஐம்பதுபேர்தான் இருந்தாலும் சிவாட என்ரியில "தலைவா" எண்டு கோசம் எழுப்பியதிலிருந்து சிவா வாறா ஒவ்வொரு சீனுமே தியேட்டர்ல செம கைதட்டல்.. ஒவ்வொரு வசனமும் அந்தமாதிரி இருக்கு.. நான் நினைக்கிறேன் இந்தப்படத்தில சிவாட டயலாக்குகளை அவரேதான் எழுதியிருக்கிறார்போல.

அதேபோல மறுபக்கம் வெவ்வேறு குடும்பங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக தாய்தகப்பனை இழந்து/பிரிந்து சென்னைக்கு பிழைக்கவந்த சிறுவர் பட்டாளத்தின் வாழ்க்கையை இயக்குனர் சித்தரிச்சுள்ளார்..இப்பிடியே மாறிமாறிப்போய் கிளைமாக்சில் சிறுவர்தொழிலாளிகள் எல்லோரும் பொலிசாரால் பிடிச்சு அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி அவர்கள் எல்லோரும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அத்துடன் படமும் ஓவர். மறுபுறம் சிவாட முதற்காதல்(ஓவியாவுடன்) புட்டுக்கிச்சுபோய் கொஞ்சம்கூட சளைக்காமல் மனுஷன் அடுத்த லவ்வையும் சிறப்பாக(?) கண்டினியூ பண்ணுறமாதிரி சீன், அத்தோட இதுக்குமுதல் அதுவும் ஓவர். 
இப்படத்தில் பெரிய ஏமாற்றம் என்னவெண்டா இரண்டு கதைகளை சமாந்தரமா எடுக்கும்போது இரண்டுக்கும் இடையில் ஏதோவொரு சம்பந்தத்தை காட்டியிருக்கவேணும். ஆனா இங்க அப்பிடி எதுவும் செய்யவில்ல பார்வைக்கு இரண்டு படங்களை துண்டு துண்டா பல பாகமாக பிரிச்சு முதலில் ஒருபடத்தின் ஒரு பாதியும் பிறகு மறு படத்தின் ஒரு பாதியும் என மாறிமாறி கோர்த்துவிட்டதுபோல இருந்திச்சு அத்துடன் படம் சீரியஸா போய்க்கொண்டிருக்கும்போது பொத்தெண்டு முடிந்ததுபோலவும் ஒரு உணர்வு. மொத்தத்தில் மெரீனா ஒரு சுமாரான படம். 
(இது எனது பார்வையில் மெரீனா..அவ்வளவுதான்! உங்க பார்வைகள் வேறுபடலாம். அத்துடன் இது எனது சுயமா எழுதுற முதல் பதிவு. ஏதாவது பிழைகள் இருந்தா உங்களுக்குள்ள மட்டும் சிரியுங்கப்பா, அடுத்தவங்கிட்ட எல்லாம் சொல்லி சிரிக்காதீங்க)comment