சே இப்பிடியொரு நல்ல படத்தை வெறும் ஒன்றே முக்கால் மணிநேரத்தில ஏன்தான் முடித்தாங்களோ தெரியேல... மூன்று மணிநேரம் என்றாலும் சலிக்காம பார்த்துக்கொண்டிருக்காலாம்... படம் கமெர்ஷியல் படமோ, ஆக்சன் படமோ அல்லது commedy sequence அதிகம் உள்ள படமோ இல்லை... கிட்டத்தட்ட அங்காடித்தெருபோல நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கதையை பக்காவா எடுத்திருக்கிறார்கள்... சாமுராய், காதல், கல்லூரிக்கு பிறகு பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வழக்கு எண் 18/9.. முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றே சொல்லலாம், முக்கியமான பாத்திரங்கள் எல்லாவற்றையுமே புதுமுகங்களை வைத்து பின்னியிருக்கிறார்...
சரி இனி கதைக்கு வருவோம்....
நடிகர்கள்- மிதுன் முரளி, சிறீ, ஊர்மிளா மகன்தா, மகேஷ் யாதவ்.
இயக்கம்- பாலாஜி சக்திவேல்.
இசை- ஆர்.பிரசன்னா.
ஒளிப்பதிவு- விஜய் மில்டன்.
தயாரிப்பு- சுபாஸ் சந்திரபோஸ், ரூனி ஸ்கிரீவ்லா.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன்(இந்த படத்தின் ஹீரோ) வீட்டு கஷ்டத்தை உணர்ந்து கடனை அடைப்பதற்காக படிப்பை கைவிட்டு வெளியூர் செல்கிறான்.. அங்கே ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வரும்போது அவனின் பெற்றோர் ஊரில் இறந்த செய்தியை ஊரில் இருந்து தொலைபேசியில் ஹோட்டல் முதலாளிக்கு தெரியப்படுத்தியும் முதலாளி அவனுக்கு சொல்லாமல் வேலைவாங்கிட்டு இருக்கையில் அங்கு வந்த நண்பன் மூலம் நிலைமையை கேட்டறிந்து அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் வேளையில் சேர்ந்து பிளாட்பாரத்திலே வாழ்க்கையோ செலுத்திக்கொண்டிருக்கிறான்....
அப்போது அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்குகின்றான்... இதற்கிடையில் அந்த பெண்ணும் இன்னொரு வீட்டை வேலை செய்யும் ஒரு வேலைக்காரி என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கு சமாந்தரமாக ஹீரோவின் காதலி பணிபுரியும் வீட்டு பெண்ணுக்கும், இன்னொரு பையனுக்குமிடையிலான காதல்வேற போய்க்கொண்டிருக்கும்.. அதை காதல் எண்டு சொல்லேல்லாது, காதலிக்கிற மாதிரி அவன் நடிச்சு ஏமாத்த முயற்சிக்கிறான்... இவ்வாறே சமாந்தராமாக இரு கதைகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும்.... அதற்கப்புறம் ஹீரோவின் ஒருதலைக்காதல் ஜெயிக்குதா? மற்ற ஜோடிகளுக்கு என்ன ஆச்சு என்பதே படத்தின் தொடர்ச்சி.. அதை படத்தை பார்த்தே அனுபவியுங்கள்.....
இயக்குனர்- சாமுராய்,கல்லூரி என்ற தோல்விப்படத்தையும் காதல் என்ற வெற்றிப்படத்தையும் வழங்கிய பாலாஜி சக்திவேலுக்கு நிச்சயம் இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.. முழுக்க முழுக்க இயக்குனரின் ஆதிக்கம்தான் இந்தப்படத்தில்.... ஸ்கிரீன்பிளே, பிலிம் மேக்கிங் இரண்டுமே சூப்பர்... தரமான பாத்திரத்தெரிவு, குறிப்பாக தன்னை மட்டும் நம்பி புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் தரமானதொரு படைப்பை வழங்கியிருக்கின்றார்... அவருக்கு ஒரு சல்யூட்.....
ஒளிப்பதிவாளர்- இயக்குனருக்கு அடுத்ததாய் இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான்... அவருடைய ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றது. குறிப்பாக படம் தொடங்கையில் ஒரு பெண் கண்சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது கண்ணுக்குள் இருந்து கமெரா பிடிக்கப்பட்டதுபோல் ஒரு காட்சி எடுத்திருந்தார்... மற்றும் சமையல் செய்யும்போது அடுப்பினுள் இருந்து கேமரா ஷாட் எடுத்ததுபோன்ற சீன்.... இதைவிட background colour எல்லாமே சூப்பராக இருந்தது..
ஹீரோ- சங்கர்,கே.வி ஆனந்த, முருகதாஸ் போன்றோரின் படமெண்டால் இவரை பாட்டு சீனுக்கு ஹீரோக்கு பின்னால நின்று ஆடவிடுவாங்க என்று சொல்வதே சந்தேகம்தான்... சராசரியான படம் ஒன்றின் ஹீரோவுக்குரிய தோற்றப்பாடு இல்லாவிடினும், இந்த படக்கதைக்கு மிக நன்றாகவே பொருந்துகின்றார், ஒவ்வொரு அசைவும் படத்துடன் நன்றாகவே ஒட்டிக்கொள்கிறது.... சொல்லப்போனால் ஆடுகளம் படத்தில் தனுஷ்ட body language எவ்வாறு படத்துடன் ஒன்றித்துப்போனதோ அதேபோல கிட்டத்தட்ட இந்தபட ஹீரோவும் சிறப்ப்பனதொரு perfomanceஐ வழங்கினார்.. மற்றைய நடிகர்களும் தத்தமது பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்...
இசையமைப்பாளர்- இசையமைப்பாளரும் படத்திற்கேற்ப சிறப்பாகவே பணிபுரிந்திருக்கிறார்.. சிலசில சீன்களில் வேறு படப்பாடல் வரிகளை background music ஆக போட்டு அசத்தியிருக்கிறார்(அதை சிறப்பாக கருதமுடியாது)... rinhing tone கு அவர் குடுத்த பாடல்வரி, மற்றும் கவுண்டமணியின் ஜோக் வரிகள் தியேட்டரில் நிறைய கைதட்டல்களை வாங்கியிருக்கின்றது....படத்தில் இரண்டு பாடல்கள், இரண்டுமே பின்னணியில் செல்லும்... அதில் ஒரு பாடல் சிறப்பானதாக அமைந்திருக்கின்றது...
படத்தில் ஒருசில குறைநிறைகள்.......
படத்தின் இரண்டாவது ஹீரோ எப்பிடிப்பட்டவர் என்று அவரின் சீன் வந்து கொஞ்ச நேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிகிறது, அப்பிடி இருக்கும்போது தொடந்தும் அவர் நல்ல பிள்ளைபோல காதலியிடம் கொஞ்சிகுலாவுவதை நீண்ட நேரம் காட்டுவது சலிப்பை ஏற்படுத்துகிறது... அவர் எப்பிடிப்பட்டவர் என்றதை கடைசியிலே காண்பித்திருக்கலாம்...
அண்மையில் வெளிவந்த தனுசின் 3 படத்தின் இரண்டாம்பாகம் நிறையப்பேருக்கு பிடிக்காமல் போனதுபோன்றதொரு பிழையை இப்பட இயக்குனர் விடவில்லை.படம் என்னதான் சீரியஸா போய்க்கொண்டிருந்தாலும், இடையிடையே சிலசில வசனங்கள், நடிகர்களின் அசைவுகள் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறது, மேலும் படம் ஓரளவு வேகத்துடன் திரில்லிங்காயும் நகர்கிறது.. இதுவும் ஒரு பிளஸ் என்றே சொல்லணும்.....
படம் வெறும் 1.45 மணிநேரத்தில் முடிவடைகிறது... ஏன் இவர்களுக்கு இந்த விபரீத முடிவோ தெரியவில்லை...குறைந்தது 2.15 மணிநேரமாவது இருந்திருக்கணும்...
எப்பவும் படத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது இலகுவான விடயம்..இந்தப்படத்துக்கு நிறைகளை சொல்லப்போனால் இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் தேவைப்படும்...... மொத்தத்தில் படம் சூப்பர்.. தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல படைப்பை ரசிகர்களுக்கு தந்திருக்கின்றது......
appa paarkkathaan venum...
ReplyDeleteநிச்சயமாக பார்க்கவும்...வருகை தந்தமைக்கு நன்றி kohhulan..
DeleteMIka nalla comment..
ReplyDeleteவருகை தந்தமைக்கு நன்றி ஜி.....
Deleteஹீரோ சினிமாவுக்கு புதிது; ஆனால் விஜய் டிவி ரசிகர்களுக்கு பரிச்சியமானவர்; கனாக்காணும் காலங்களில் கலக்கிய ஸ்ரீ தான் ஹீரோ!!
ReplyDeleteஇந்தப்படத்தின் நேரம் குறைவடைந்தது மகிழ்ச்சி, இப்படியான படைப்புக்களின் நேரம் இன்னும் குறையனும்!!! இப்படியான படங்களுக்கு பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லாதவிடத்து 90 நிமிடம் போதுமானது!!! அது படத்தை தொய்வடைய விடாமல் வேகமாக முடிக்க உதவும்!!!
வருகை தந்தமைக்கு நன்றி அண்ணா......
Deleteஆனால் விஜய் டிவி ரசிகர்களுக்கு பரிச்சியமானவர்; கனாக்காணும் காலங்களில் கலக்கிய ஸ்ரீ தான் ஹீரோ!! /// இந்த விடயம் இப்பதான் எனக்கு தெரியும்.. நான் கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சி ஒருபோதும் பார்த்ததில்லை....
இந்தப்படத்திலுள்ள இரு பாடல்களும் பின்னணியில்தான் செல்கிறது, வழமையான பட பாணிபோல் பின்னணி அல்லாது புறம்பாக ஐந்து பாடல்கள் வைத்திருந்தால் நிச்சயமாக பட நேரம் இரண்டை தாண்டியிருக்கும்.....
இந்தப்படத்தின் நேரம் குறைவடைந்தது மகிழ்ச்சி//// ஏன் இப்பிடி சொல்றீங்க எண்டு புரியேல.. எனக்கு இன்னும் ஒருமணிநேரம் அதிகமாக இருந்திருந்தால்கூட ரசிச்சு பார்த்திருப்பேன்...
உங்களுக்கு ஓகே, பலருக்கும் இப்படியான (பொழுதுபோக்கு அம்சம் குறைவான) படங்கள் அதிகநேரம் இழுத்தால் பிடிக்காது!! படம் slow என்று சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பார்கள்!!!
Deleteஆமா நிச்சயமாக
ReplyDeleteசஜீ அருமையாக அலசிக் காயப் போட்டிருக்கிறீர்கள்...
ReplyDeleteஅந்த முகத்தை பார்த்தது போல இருக்கே என்று விட்டு கீழே பார்த்தபோது தான் ஜீவதர்சன் சொன்னதும் டியூப்லைட் பத்திக்கிச்சு...
ஹீ..ஹீ நான் முதல் தடவையாகவே இந்த படத்தில்தான் பார்த்தேன்... ஜீவாண்ணா சொல்லித்தான் எனக்கும் தெரியும்...... வருகை தந்து கருத்தளித்தமைக்கு நன்றி அண்ணா.....
Deleteதங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி........ நிச்சயமாக எனது பதிவை உங்கள் தளத்தில் இடுகின்றேன்.....
ReplyDelete