Saturday, June 16, 2012

பில்லா 2 Vs சகுனி மூன்றாம்கோண அலசல்

வழமையா பொங்கல்,புதுவருடம், தீபாவளி என்று பண்டிகையால, அன்றையதினம் வெளியாகும் திரைப்படங்களும் களைகட்டுவது வழக்கம்.இப்ப என்னடா என்றால் வெளியாகும் படங்களால் பண்டிகைபோல தமிழகம் களைகட்டிக்கொண்டிருக்கின்றது. ஆமா, பில்லா 2, சகுனி இந்த இரண்டினதும் வெளியீடுதான் இதற்கு காரணம்.. வழமையா பண்டிகைக்காலங்களில்தான் ஒன்றிற்கு மேற்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் நேருக்குநேர் மோதும், காரணம் பண்டிகைக்காலங்களில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் அமைதல், பண்டிகையை என்ஜாய் பண்ணுவதற்காக நிறையப்பேரு தியேட்டர் பக்கம் செல்லுதல்.. அதாவது பண்டிகைக்காலங்கள் போன்ற விசேட தினங்களில் மட்டும் தியேட்டர் வாசல் மிதிக்கும் கூட்டம் நிறையவே நிறைய இருக்கு.. அதனால பண்டிகைக்காலங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் நேருக்குநேர் மோதும்போது வழமையான தினங்களுக்கு மாறாக எல்லாத்தரப்புக்குமே சாதகமாக இருக்கும்.(படம் மொக்கையா இருந்தா ஒன்றும் செய்யேலாது, அது சோலோவா வந்தாலும் ஊத்தும்.).. இந்தமுறை என்னவென்றால் பண்டிகை அல்லாத நாளில் மேற்படி இரண்டு படங்களும் நேருக்குநேர் மோதுவதுதான் பிரச்சனை. தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டுக்கு அப்பால் குறிப்பிட்ட இலாபத்தை வைத்து விநியோகிஸ்தர்களுக்கு விற்க, விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு ஒருபகுதி இலாபம் வைத்து தியேட்டர் ஓனர்களுக்கு விற்றுவிடுவார்கள்.. இந்த இரண்டு தரப்பும் தப்பிச்சுவிடும்... ஒட்டுமொத்தமா மாட்டிக்கப்போவது தியேட்டர் ஒனர்கள்தான். (சில சமயம் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்படவும் சாத்தியம் இருக்கு, வேலாயுதம் படைத்தால ஆஸ்கர் ரவி நஷ்டப்பட்டது எல்லோருக்குமே தெரிந்த விடயம்.. பில்லா 2 உம் ஆஸ்கர்தான் வெளியிடுவதால் கவனமாய்த்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.).. அதைவிட ஏட்டுக்கு போட்டியா விநியோகிஸ்தர்கள் தியேட்டர்களை புக் பண்ணுவதிலும் நிறைய ரிஸ்க் எடுக்கவேணும்..

பில்லா ஆரம்பத்தில ஏப்ரலுக்குதான் ரிலீஸ் பண்ணத்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள், ஆனால் பெப்சியின் வேலை நிறுத்தம், எஸ்.ஏ.சி இடையில கொண்டுவந்த திட்டம் இதனால் உரிய தினத்துக்கு படப்பிடிப்பை முடிக்க இயலாமல் மே, ஜூன் என்று பல தேதிகளுக்கு பிற்போடப்பட்டன. இறுதியில் ஜூன் 22 ரிலீஸ் என்ற நிலைக்குவந்திருந்தது, படம் அப்போ சென்சருக்கு போகாததால் தயாரிப்பாளரால் உத்தியோகபூர்வமாக ரிலீஸ் திகதி அறிவிக்கப்படவில்லை.. ஆனால் தமிழகம் தவிர்ந்த வெளிநாடுகளில் ஜூன் 22 டிக்கட் அடிச்சே விற்றுவிட்டார்கள்.. இதன் மர்மம்தான் எனக்கு இன்னமும் புரியவில்லை..
சரி நாம பிரச்சினைக்கு வருவோம்..... 
ஆரம்பத்தில பில்லா 2 ஜூன் 22 ரிலீஸ்என்றிருந்தவேளை சகுனி ஜூலை 6 என்று அறிவித்தார்கள்..பிறகு என்னவாச்சோ தெரியல திடீரென சகுனியும் ஜூன் 22 ரிலீஸ்என்று அறிவித்தார்கள்..இதிலிருந்துதான் சிக்கலே ஆரம்பித்துவிட்டது.. அதாவது கார்த்தியை அஜித்துடன் மோதவிட்டதன் நோக்கம் என்ன? இதுதான் தற்போதைய சூடான அலசல்.. தமிழ் சினிமாவின் "கிங் ஆப் ஒபெநிங்" என்று வர்ணிக்கப்படும் அஜித்துடனேயே மோதுமளவுக்கு கார்த்திக்கு தைரியம் வந்திட்டா? என்பதுதான் ஆச்சரியமாயிருக்கு... வேல் Vs அழகிய தமிழ்மகன், சிறுத்தை Vs காவலன், வேலாயுதம் Vs ஏழாம் அறிவு.... இந்த மூன்று கடந்தகால நேரடிப்போட்டிகளில் விஜயை ஜெயிச்சாச்சு, அப்பிடியே அஜித்தையும் ஜெயிச்சா தற்போதைய தலைமுறையில் தாங்கதான்(சூர்யா-கார்த்தி) டாப் ஆகலாம் என்ற நோக்கமா தெரியேல... ஏனெனில் பில்லா 2 இன் பட உரிமை விற்பனையாகி ஓரிரு நாளிலே சகுனியும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் உரிமை கிட்டத்தட்ட பில்லா 2ஐ நெருங்கிவிட்டதாகவும் கார்த்தி தரப்பு அறிவித்திருந்தது.. அதில காமெடி என்னவெண்டா இவ்வாறு அறிவுப்பு வெளியாகியபோது பட சூட்டிங்கே முடியேல, மீள்படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.. அந்த சமயத்தில் எவ்வாறையா படத்தின் உரிமை விற்க சாத்தியம்?... இவ்வாறான சம்பவங்கள் வேணுமெண்டே அஜித்தை சீண்டுவதுபோல தென்படுகிறது... ஆனால், இவையாவும் ஊகத்தின் அடிப்படையிலான சந்தேகங்கள் என்பதை மறுக்கேலாது... இதன் மறுபக்கத்தையும் ஒருக்கா ஆராய்வம்....
சகுனி படம் தெலுங்கில் சுமார் பத்து கோடிக்கு விற்கப்பட்டது... ஒரு தமிழ் படமொன்றுக்கு தெலுங்கில் பத்துக்கோடி உரிமம் என்பது மிகப்பெரிய தொகைதான்... இந்தளவுக்கு தமிழ் படம் தெலுங்கில் வசூலிப்பது கொஞ்சம் கடினமான விடயம்தான்... ஆகவே, தமிழுக்கு சமாந்தரமாக தெலுங்கு நிலவரத்தை கார்த்தி தரப்பு அலசிப்பார்க்கும்போது ஜூன் கடைசியிலும், ஜூலை முதல் வாரத்திலும் தெலுங்கில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ராஜமௌலியின் "நான் ஈ" திரைப்படமும் அல்லு அர்ஜுன் நடித்த மற்றுமொரு திரைப்படமும் வெளிவர உள்ளது.. இதனால் சகுனி ஜூலை 6 இல் ரிலீசானால் தெலுங்கில் முன்னணிப்படங்களோடு அதிக தியேட்டர்களை பெற்று போட்டி போடுவது கஷ்டம்.. அதே நேரத்தில் தெலுங்கு பட விநியோகிஸ்தர்களும் சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டு சகுனியை வேளைக்கே ரிலீஸ் பண்ணச்சொல்லி சொல்லியதாகவும், அதனால்தான் ஜூன் 22 இற்கு ரிலீஸ் திகதி மாற்றப்பட்டதாகவும் சினி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.............. இவ்வாறு திரைமறைவில் ஆயிரம் விடயங்கள் நடக்கும், எது எப்பிடியோ ரசிகர்கள் வீண்விவாதங்களை தவிர்த்து வரப்போகும் இரு படங்களையும் பார்த்து மகிழுங்கள்.....
இதற்கிடையில் பில்லா 2 இற்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படத்திற்கு புதிய சிக்கலை கொண்டுவந்துவிட்டது... "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் 30% entertainment tax அறவிடப்படும்.. அத்துடன் இது "வயது வந்தவர்களுக்கு மட்டுமான" படமாக கருதப்படும்.. குறிப்பாக 18 வயதுக்கு குறைவானவர்கள் தியேட்டர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.. ஆனாலும், எல்லா திரையரங்குகளிலும் இந்த நடைமுறையை கடைப்பைடிக்கமாட்டாங்க.. multiplex centers களில் இந்த நடைமுறை கடுமையாக பின்பற்றப்படும்.. இதனால் multiplex centers களில் கலக்சன் வெகுவாகவே பாதிக்கப்படும்..குறிப்பாக சென்னை பாக்ஸ் ஆபீசில் வீழ்ச்சியை சந்திக்கவும் வாய்ப்புண்டு.. மேலும் குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தயங்கவும்கூடும்.... இது இந்தியா தவிர வெளிநாடுகளில் எந்தவகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் சொல்ல முடியேல.. தெரிந்தவர்கள் பின்னூட்டலில் அதுபற்றி தெரிவிக்கவும்.. (அஜித்தின் வாலி திரைப்படத்துக்கும் ஏ சான்றிதழே வழங்கப்பட்டது).... சென்சார்க்கு போகும்போது அவர்கள் U /A சான்றிதழ் வழங்கவேணுமெனின் நிறைய சீன்களை கட் பண்ணவேணும் என்று சொல்ல அதுக்கு பில்லா தரப்பு சம்மதிக்கவில்லை.. இரு தரப்பிற்குமிடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. தற்போது மும்பையிலுள்ள மேல்சென்சார் பாட்டுக்கு படத்தை அனுப்பவுள்ளதாக தற்சமயம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது... இதனால் படவெளியீடு ஒருவாரத்துக்கு(ஜூன் 29) பிற்போடப்பட்டுள்ளது...  
இது தவிர பில்லா 2 பட தயாரிப்பாளர்கள், மற்றும் படக்குழுவினரின் ஆளுமையான செயற்பாடுகளையும் விமர்சகர்கள் கடுமையாக சாடுகிறார்கள், இதுவும் தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது... எது எப்பிடியோ தற்போதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பில்லா 2ற்கு 1200 இற்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைத்துள்ளனவாம்... குறிப்பாக பிரான்சில் எந்தவொரு தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத வரவேற்பு பில்லா 2இற்கு கிடைத்திருக்கு.. மொத்தமாக அங்கு 13 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.. அது மட்டுமன்றி முதல் தடவையாக பெல்ஜியத்தில் தமிழ் திரைப்படம் ஒன்று(பில்லா 2 ) ரிலீஸ் ஆகின்றது......         
தல நீ ஆடு தல.......

6 comments:

 1. அந்த சகுனி குடும்பத்தின் நினைப்பு உயரத்தில் இருப்பவர்களை சீண்டிப்பார்த்தால் தான் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற நினைப்பு போல...
  தம்பி கார்த்தி "தலயை தொட்டுப்பார்க்க நினைக்காதே பொசுங்கி விடுவாய்.." இது வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை..பில்லா-II வெளிவரட்டும்..கார்த்தி "மாமா உனக்கு சங்கு தாண்டா..."

  அது மட்டும் இல்லை எனக்கு பில்லா-II இல் சீன்கள் வெட்டுப்படுவதில் உடன்பாடு இல்லை...சீன்கள் வெட்டுப்படாமல் வந்த வாலி என்ன தோத்து விட்டதா...இல்லை...
  பில்லா-II ஒரு செம வெற்றி...ஒரு உலக சாதனையை நிகழ்த்தி வைக்க ரசிகர்கள் ஆகிய நாங்கள் தயார்..ஆனால் படத்தி வெளியிடுவதற்க்கு இன்னும் அவர்கள்தான் தயாராக இல்லை...(சகுனிக்கு சங்கு...)

  "உடல் மண்ணுக்கு உயிர் என் தலயிற்க்கு..."

  ReplyDelete
  Replies
  1. vidu machchi..padam varaddum.. thanks 4 ur visit

   Delete
 2. தல பற்றிய கலக்கல் பதிவு சஜி. நானும் பில்லா 2 படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. nanri prasad unga varukaikkum comment kum..... billa2 postporned to june 28/29.........

   Delete
 3. vidunga brother........thala eppovum namakku kingdhan

  ReplyDelete
  Replies
  1. namakkilla.. ellorukkume kingthaan... nanri nanba ungal varukaikku

   Delete

comment