Monday, August 12, 2013

அஜித்துக்கு போட்டி சூர்யாவா? விஜயா?


கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவருக்குமே கிட்டத்தட்ட இளைஜர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என ஒரேமாதிரியான ரசிகர் மட்டங்கள் இருந்தனர்.ஆனால் போகப்போக இருவருக்குமிடையேயான ரசிகர் பரம்பல்கள் மாறத்தொடங்கிவிட்டன. அமர்க்களத்தை தொடந்து தீனா,அட்டகாசம்,பில்லா போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நடித்ததாலும் அவரின் சினிமாவுக்கு வெளியேயான அவரின் வெளிப்படையிலான பேச்சுக்கள் இளைஜர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதே காரணிதான் அஜித் "கிங் ஆப் ஒபெநிங்" ஆயிருப்பதற்கு காரணம். அதேபோல டான்ஸ், காமெடி என்று மசாலா படங்களில் நடித்ததால் சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என அவரின் ரசிகர் வட்டம் வேறுபடத்தொடங்கியது. ஆதலால் அஜித், விஜய் ஆகியோர் தொடர்ந்தும் இதே பாணியில் பயணித்துக்கொண்டிருந்ததால் எத்தனை படங்கள் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மாறவில்லை, காரணம் வேறு தெரிவு இல்லை. இடையிடையே வேறு நடிகர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் வகையில் 2007/08 இற்கு பின்னரான காலப்பகுதியில் சூர்யாவின் வளர்ச்சி அமைந்தது. சரி, சூர்யாவின் வளர்ச்சியால் அஜித்துக்கு ஆப்பா? விஜய்க்கு ஆப்பா எண்டு பார்ப்போம்.


ஒரு நடிகனுக்கு இருக்கும் சிறுவர், பெண், குடும்ப ரசிகர்களானது எப்போதுமே நிரந்தரமானதல்ல. காரணம் சிறுவர்கள் அறியாமை காலப்பகுதியில் ஒரு ஹீரோவை ரசிப்பார்கள் பிறகு வயது ஏற ரசிப்புத்தன்மை மாறுபடவே தங்களது ஹீரோவையும் மாற்றிக்கொள்வார்கள். இன்று விஜயகாந்தை கழுவி ஊத்தும் அநேகப்பேர் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவயதா இருக்கும்போது சண்டைக்காட்சிகளுக்காக அதே விஜயகாந்த் படங்களைத்தான் முண்டியடித்து பார்த்தார்கள். அதேபோலவே அர்ஜுனையும் ரசித்தார்கள். இன்று அதே அர்ஜினுக்கு யார் ரசிகர்கள்? அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு கொஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி??? வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா? சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது?? அதுபோக சுருங்க சொன்னா பெண்களுக்கு எப்ப ஒரு அழகான ஹீரோ தென்படுகிராரோ அப்போதே அவர்களுக்கு ரசிகர்களாகின்றனர்.. அதேபோலவே குடும்ப ரசிகர்கள், இவர்கள் அநேகம்பேர் இந்த ஹீரோக்குதான் ரசிகர் என்றில்ல. சிம்பு,தனுஷ் போன்றோர் குடும்ப ரசிகர்களை கவரும்விதமாக படம் நடித்தாலே அவர்களின் படங்களை முண்டியடித்து பார்ப்பார்கள். அப்பிடி இருக்கேக்க எங்க ஹீரோக்கு சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என எல்லா மட்டத்திலையும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வெட்டித்தனமாக சுயதம்பட்டம் அடிப்பது காமேடித்தனம். இதே அந்தக்ஹீரோ தொடர்ச்சியாக நாலைஞ்சு மொக்கைப்படங்கள் குடுத்து அந்த இடைவெளியில் போட்டியா வேறு ஹீரோக்கள் வந்திட்டா இந்தக்கூட்டங்கள் அப்பிடியே மற்ற ஹீரோக்கு மாறிடுவார்கள். இளைஜர்களின் நாயகனாக எந்த ஹீரோ இருக்கிறாரோ அவர்தான் எப்பவுமே கிங்!


சரி சூர்யா மேட்டருக்கு வருவோம், இப்பவெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதைவிட சூர்யாவையே அதிகம் கலாய்க்கிறார்கள். காரணம் விஜய் எந்தவகையில் எந்த மட்ட ரசிகர்களை கவரும்வகையில் படங்கள் நடித்தாரோ! அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே! ஒருநடிகனுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமே ஹிட் என்று சொன்னா உண்மையான ஹிட்டாகிவிடாது. அப்பிடி பார்த்தா அஜித் ரசிகர்களுக்கு அசல்,ஏகன் எல்லாமே ஹிட்தான். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில் ஆரம்பகாலங்கள்போல விஜய் தரப்பால் இனியும் ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா வைத்து ரசிகர்களை முட்டாளாக்க முடியாது.


ஆரம்பத்தில் நடிப்பு, பைட், டான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா இன்று காமெடியை தவிர மிகுதி எல்லாவற்றிலுமே பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பார்வைக்கு கட்டுமஸ்த உடல்வாகு மற்றும் முகவசீகத்துடன் இருக்கின்றார். விஜயும் தான் அழகுதான் எண்டதுக்காக முகத்துக்கு மேக்கப் பண்ணி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பது அண்மையில் வந்த ஒருசில படங்களில் தெரிகிறது, ஆனா பாவம் முடியல. மேக்கப்புக்கு செலவு செய்யும் நேரம், காட்டும் கரிசனையில் பாதியளவாவது நடிப்பதில் கவனம் செலுத்தினால் இன்றைக்கு இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம். கண் இமையையும், வாயையும் தவிர தளபதியின் முகத்தில் வேறு எதுவுமே அசையாது. அது சோகமோ, காதலோ, சந்தோசமோ, கோபமோ!! என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், "எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே!! அதுபோல அஜித்தின் "பில்லா"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம்!! சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும்? மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க? காலம் மாறிச்சு தளபதி அவர்களே!!! இப்பெல்லாம் புதுசா வாற கத்துக்குட்டியளே விழுந்து புரண்டு ஆடுது.

சரி மேட்டருக்கே போவம் இன்றைய பெண்களின் கனவுநாயகன் யாரெண்டு கேட்டால் நிச்சயப்படுத்தி சொல்லலாம் சூர்யாதான் எண்டு. அதேபோலவே தரமான கதையம்சங்களுடனான படங்களை தேர்வுசெய்து நடிப்பதால் விஜய் போன்ற பொம்மை நடிகர்களை ரசித்தவர்கள் எல்லாம் சூர்யாவை ரசிக்க தொடங்கிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் இடம், ரசிகர்பலம் எப்போதுமே நிரந்தரம். சூர்யா, விஜயில் ஒருவர் தொடர்ச்சியா ரெண்டு படங்கள் பிளாப் கொடுத்து மற்றயவர் அந்த இடைவெளியில் ஹிட் குடுத்தால் எல்லாமே தலைகீழாகிடும். அண்மையில் சிங்கம் 2 பெரு வெற்றியை அடைந்தது. மறுபக்கம் தலைவா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்க்கு ஜில்லாவும் சொதப்பி சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் கிடைக்குமாயின் நிச்சயம் ரஜினி-கமலுக்கு பிறகு அஜித்-சூர்யாதான்... அதில் சந்தேகமில்ல.

comment