பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சகுனி விமர்சகர்களால் மிகமோசமாக தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.. இதுவரையில் எந்தவொரு நேர்மறையான விமர்சனத்தையும் நான் பார்க்கேல.. வழமையா நான் தியேட்டருக்கு படம் பார்க்கச்செல்லுமுன் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லை, படத்தை பார்த்துவிட்டுவந்து எனது பிளாக்கில் விமர்சனத்தை எழுதியபின்னரே மற்றவர்களின் விமர்சனங்களை பார்ப்பேன்.. காரணம், விமர்சனங்களை முதலே பார்த்தால் படம் பார்க்கும்போது விறுவிறுப்பு இருக்காது அத்துடன் நாங்கள் சொந்தமா விமர்சனம் எழுதும்போது அதில் மற்றவிமர்சகர்களின் வசன, சொற்பிரயோகங்கள் இயல்பாகவே எங்களிடம் ஒட்டிவிடும் என்பதற்காகவே முதல்லே விமர்சனகளை பார்ப்பதை தவிர்க்கின்றனான்..
ஆனால் இம்முறை சகுனி பார்க்கப்போகமுதலே மற்றவர்களின் விமர்சனங்களை படித்திடனும் என்று தோன்றிச்சு,காரணம் தல அஜித்துடனே போட்டியிட சகுனியை களமிறக்க முயன்றமைதான்.. ஆனால், சென்சார் பிரச்சனை,பில்லா 2 தமிழ்நாடு விநியோகிஸ்தர் ஆஸ்கர் ரவியின் "ஸ்பைடர் மான்" வெளியீடு, அப்புறமாக விநியோகிஸ்தர்களின் வேண்டுகோள் காரணமாக பில்லா 2 ஜூலை 13இற்கு பிற்போடப்பட்டுவிட்டது.. என்றாலும் அப்பிடி என்னதான் சகுனி சாதிச்சுவிடப்போகுது என்ற எதிர்பார்ப்புத்தான் முதலே விமர்சனங்களை பார்க்க தோணிச்சு, பார்த்தா எல்லாமே நெகடிவ் ஆகவே இருந்திச்சு..மிகமோசமாக விமர்சித்திருந்தார்கள். சந்தானம்-கார்த்தியின் காமெடியைத்தவிர மோசமான திரைக்கதை, தேவையில்லாத இடத்தில பாடல்கள்,சண்டைகள், அதிக இடங்களில் லாஜிக் மீறல் என்று அடுக்கடுக்கா பிளாக் மற்றும் முகப்பு புத்தகங்களில் மோசமாக விமர்சித்திருந்தார்கள்.. சரி படம் படுமொக்கையாத்தான் இருக்குது எண்ட எண்ணத்தில பார்க்கப்போனா எல்லாமே நேர்மாறாகவே எனக்கு தோணிச்சு. படுமொக்கை என்று எதிர்பார்த்துபோனதால கொஞ்சம் நல்லா இருந்ததாலையோ என்னவோ எனக்கு குடுத்த காசுக்கு ஓகே என்றே இருந்திச்சு.. லாஜிக் மீறல்கள் இருப்பது உண்மைதான், சாதாரண அப்பாவி இளைஜனா வரும் ஹீரோ சீஎம்மை பிடிக்கேல எண்டதுக்காக கந்துவட்டி ராதிகாவை சென்னை மேயராக்கியது, பலவருடங்கள எதிர்க்கட்சித்தலைவரா இருந்த கோட்டா சிறீனிவாசனை முதலமைச்சராக்கியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. ஆனா விமர்சனங்களில் வந்ததுபோன்று மொக்கையா படம் இருக்கவில்லை.. படம் முடியும்வரை சலிப்பில்லாமல் பார்க்கக்கூடியவாறு இருந்திச்சு...சரி ஏன் சகுனி இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகின்றது என்று ஒருக்கா அலசிப்பார்ப்பம்....
அடிப்படைகாரணம் படத்திலுள்ள ஓட்டைகள்தான்,அப்புறமா பார்த்தால்
ரசிகர்கள் பெரிய ஹீரோக்கள்ட படம் என்றால் வேறு கோணத்திலும், பிரபல்யமாகாத ஹீரோக்கள்ட படம் என்றால் வேற கோணத்திலையுமே பார்க்கிறார்கள்.. என்னைப்பொறுத்தவரையில் சகுனி மொக்கைப்படமேண்டால், ஒருகல் ஒரு கண்ணாடி, கலகலப்பு இவையிரண்டுமே மொக்கைதான்.. அதில மட்டும் லாஜிக் பிழை இல்லையா?.. சகுனி பார்க்கப்போகும்போது கார்த்தியை உதயநிதி,விமல்,சிவா ரேஞ்சில பாவனை செய்தால் நிச்சயம் சகுனியும் எல்லோரையும் திருப்திப்படுத்தியிருக்கும்.. அதைவிடுத்து ரசிகர்கள் பெரியாக்கள்ட படம் என்றால், அந்த குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் எங்கை பிழை பிடிக்கலாம் என்ற நோக்குடன் படத்தை பார்ப்பதால்தான் இவ்வாறான படங்கள் கடுமையா விமர்சிக்கப்படுகின்றன..
அடுத்ததாக இவர்களின்மீது உள்ள வெறுப்பும் ஒரு காரணம்...
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சூர்யா-கார்த்தி மேல எரிச்சல்ல இருக்கும்போது, சகுனி படத்தால அஜித் ரசிகர்களும் கார்த்தியை வெறுக்கத்தொடங்கிவிட்டார்கள்.. காரணம் பண்டிகைக்காலம் அல்லாத நாளில் பில்லாவுடன் சகுனியை களமிறக்கியது.. ஆனால் இது எந்தளவுக்கு கார்த்தி தரப்பில் பிழை என்று சொல்லமுடியவில்லை.. இதுபற்றி விரிவாக முதலொரு பதிவில் எழுதியுள்ளேன்(இங்கே கிளிக் செய்யவும்). இதனால் அஜித்-விஜய் ரசிகர்கள் எப்பிடியாவது சகுனி பிளாப் ஆகணும் என்று சமுகவலைத்தளங்களில் சகுனிக்கெதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறாகள்.. அது மட்டுமல்ல இப்பெல்லாம் சூர்யா-கார்த்தியின் படங்கள் எதிர்பார்ப்புக்கு மேலதிகமா செல்வாக்கால் நிறைய திரையரங்குகளை பெற்றுக்கொள்கிறார்கள்.. அத்தோடு தங்களது படங்களுக்கு இவர்கள் விடும் பில்டப் எல்லாம் சூர்யா-கார்த்தி ரசிகர்கள், சினிமா பற்றி ஆழமா ஆராயாது படங்களை பார்த்ததோடு சரி என்றிருக்கு ரசிகர்கள் தவிர மிகுதி எல்லோருமே இந்த அண்ணா தம்பியில லைட்டா பொறாமை கலந்த வெறுப்பை கொண்டிருக்கிறார்கள். அதால பிளாக், வெப்சைட் வைத்திருப்பவர்கள் சகுனியை வாரு வாரெண்டு வாருகிறார்கள்.(பிளாக், வெப்சைட் வைத்திருப்பவரகளுக்கு சினிமா அறிவு கொஞ்சம் ஜாஸ்திதான். அன்றாட சினிமா நிலவரங்களை அவதானிச்சுக்கொண்டிருப்பவர்களாச்சே!..அப்போ இவர்களின் கூத்து கும்மாளங்களை பார்த்து பார்த்து நொந்துபோய்ய்த்தானே இருப்பார்கள்?)
அடுத்து சகுனியில என்னதான் கார்த்தி சகுனி ஆட்டம் ஆடினாலும் அதன் பிளசே கார்த்தி-சந்தானத்தின் ஜோக்தான். இதுவும் ஒரு மைனஸா இருக்கலாம்.. எப்பிடி என்றா அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே, கலகலப்பு இரண்டும் முழுநீள காமெடிப்படங்கள். நீண்ட நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடின/ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்.. உண்மையை சொல்லப்போனால் ரசிகர்கள் இன்னும் ஒரு வருடத்துக்கு ஜோக் படமே தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு திருப்திப்படுத்தின படங்கள்.. அப்பிடி இருக்கும்போது மீண்டும் ஒரு கிட்டத்தட்ட முழுநீள ஜோக்கான சகுனி திரைப்படம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.. குறிப்பாக சந்தானத்தின் தொடர்ச்சியான ஜோக் ரசிகர்கள் மத்தியில் புளிச்சுப்போனதாகவும் மாறியிருக்கலாம்.. இதும் சகுனிக்கு எதிர்மறையான விமர்சனங்களை வரக்காரணமாக இருக்கலாம்..
அதைவிட சிலபேருக்கு விசித்திரமான கோபம் சகுனிமேல.. ஏனென்டா லட்டு மாதிரி கதாநாயகியை வைத்துக்கொண்டு சரிவர பயன்படுத்தவில்லை எண்டு.. ஆமாங்க அம்மணி இடைவேளைக்கு முதல் கொஞ்ச சீனில வாரா,அப்புறமா கிளமாக்சிலதான்.. ஏன்னா ஹீரோவுடன் ஹீரோயின் சேர்ந்திட்டா எண்டதை காட்ட. (ஹீரோவுடன் ஹிரோயின் சேரேல எண்டாலே பீல் பண்ணுற ஒரு கூட்டம் இன்றும் இருக்குத்தானே!)
எது எப்பிடியோ படம் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் மிகப்பெரிய ஒபெநிங் கலக்சன் கிடைக்கும்.. அதற்கப்புறம் கலக்சன் நிலவரங்களை பொறுத்திருந்துதான் பார்க்கணும்...
வருகை தந்தமைக்கு நன்றி..
thiraippada vimarsanam eluthuvathil ummai adiththukkolla aal illai aiyaa...ennamaa eluthureenkal...
ReplyDeleteha..ha ean machchi appidi solluraay?... thanks 4 ur comments
Deleteada poppa விஜய் ரசிகர்கள் சூர்யா-கார்த்தி மேல எரிச்சல்ல இருக்கும்போது......................, சூர்யா-கார்த்தியின் படங்கள் எதிர்பார்ப்புக்கு மேலதிகமா செல்வாக்கால்....சகுனியில என்னதான் கார்த்தி சகுனி ஆட்டம் ஆடினாலும்.... அத்தோடு தங்களது படங்களுக்கு இவர்கள் விடும் பில்டப் எல்லாம் சூர்யா-கார்த்தி இவர்களின் கூத்து கும்மாளங்களை பார்த்து பார்த்து சகுனி திரைப்படம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்..
ReplyDeleteada poppa விஜய் ரசிகர்கள் சூர்யா-கார்த்தி மேல எரிச்சல்ல இருக்கும்போது......................, சூர்யா-கார்த்தியின் படங்கள் எதிர்பார்ப்புக்கு மேலதிகமா செல்வாக்கால்....சகுனியில என்னதான் கார்த்தி சகுனி ஆட்டம் ஆடினாலும்.... அத்தோடு தங்களது படங்களுக்கு இவர்கள் விடும் பில்டப் எல்லாம் சூர்யா-கார்த்தி இவர்களின் கூத்து கும்மாளங்களை பார்த்து பார்த்து சகுனி திரைப்படம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்..
ReplyDeleteReply
neenga enna sollavaareenga endu puriyela bro!
Deletenalla alasal.......nanapa......
ReplyDeleteenna irunthaalum...... sinna paiyan sakuni namma billa kitta mothunathu thapputhane....
ha..ha.... vidunga brother.. pilaiththu pokaddum... thangal varukaikku nanri nanbaa....
Deleteavan kathaiyai inkai ilukkaathenka bass...avan ellam neththu paetha m...... mulaiththa kaalaan...:p
Deleteகோசுபா ha..ha correct machchan.... வல்லத்தான் um oru ajith fan thaan, avatrai blog poi paarunga....
Delete