Wednesday, June 27, 2012

சகுனியும் கேவலங்களும் (இது விமர்சனம் இல்லை )

பலத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை போடுகின்றதென்று ஒருசில மீடியாக்களால் சகுனி தூக்கிவைத்துகொண்டாடப்படும் இவ்வேளையில், சத்தமில்லாமல் இன்னுமொரு காரியத்தையும் சகுனி படக்குழுவினர் செய்துவிட்டனர்.. ஆமாங்க "சக்சஸ் மீட்டிங்" ஐ வைத்துவிட்டார்கள்.. தமிழகத்தின் புதிய பாக்ஸ் ஆபீஸ் கிங் எண்டு கார்த்தி,சூர்யா ரசிகர்களால் விளம்பரப்படுத்தப்படும் கார்த்தி, தமிழகத்தின் புதிய சக்சஸ் மீட்டிங் கிங் எண்டு எல்லா ரசிகர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். உண்மையை சொல்லப்போனால் கார்த்தியின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும்போது சகுனியின் ஒபெநிங் கலக்சனானது கிட்டத்தட்ட ஒன்றரை,இரண்டு மடங்காகியுள்ளது உண்மைதான்.. காரணம் முன்னைய படத்தைவிட அதிக விளம்பரப்படுத்தல், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை.. அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டால் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக்கொள்ளலாம்.. எவ்வாறெனின் படம்வரமுதல் முற்பதிவு செய்வதால் ஒரு குறிப்பிட்ட வருமானம் முதல்லே கிடைக்கும். மேலும் எப்பிடியும் படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே விமர்சங்கள் அதிகப்படியா வரத்தொடங்கும், இதற்கிடையில் அதிகப்படியானோர் படத்தை பார்த்துவிடுவார்கள்.. இதன் காரணமாக சகுனியும் ஒபெநிங் கலக்சனில தப்பிச்சுக்கொண்டதெண்டே சொல்லலாம்..
சரி, நாம சக்சஸ் மீட்டிங் பக்கம் திரும்புவம்... இந்த கொடுமை எப்பதான் தமிழ் சினிமாவை விட்டு போகப்போகுதோ தெரியேல.. ரெண்டு வருடங்களுக்கு முதல் பாரத்தமண்டா ஒரு முன்னணி நடிகர் மட்டுமே இந்த விடயத்தில கில்லாடியா இருந்தார்.. அட்டர் பிளாப் படங்களுக்கெல்லாம் அவர் நடத்தின சக்சஸ் மீட்டிங்கை அவரது ரசிகர்களே இப்பவும் மனதுக்குள் நினைத்து நினைத்து சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படியான சில நடவடிக்கையால்தான் குறித்த அந்த நடிகர் சமுகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தவிர மிகுதி எல்லா ரசிகர்களாலும் மோசமாக கலைய்க்கப்பட்டு வருகின்றார்.. இப்ப என்னடா என்றா கார்த்தி தம்பியும் ஏட்டுக்கு போட்டியா சக்சஸ் மீட்டிங் வைத்துவிட்டார்.. நான் நினைக்கிறேன் சகுனிக்கு வந்த மோசமான விமர்சங்கள் படத்தின் கலக்சனுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் என்ற பயத்தில ஒரு முன்னெச்சரிக்கையா இந்தவேலையை கச்சிதமா முடித்துவிட்டார்போலும்..
சக்சஸ் மீட்டிங்:பாகம் 1 (video)
சக்சஸ் மீட்டிங்:பாகம் 2 (video)
சக்சஸ் மீட்டிங் வைக்கிறது என்னைப்பொறுத்தவரையில் தப்பென்று சொல்லமாட்டேன்.. ஆனால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியா, நம்பும்படியா வைக்கணும்.. படம் வெளிவந்து மூன்றாம்,நான்காம் வாரங்களில் படம் உண்மையிலே அதிகப்படியாக வசூலிக்கும் பட்சத்தில் வைத்தா அதை ஏற்றுக்கொள்ளலாம்.. அதைவிடுத்து முப்பது,நாற்பது கோடிகளுக்கு படத்தை விநியோகிஸ்தர்களுக்கு விற்றுவிட்டு முன்றாம், நான்காம் நாளில் சக்சஸ் மீட்டிங் வைத்தா என்னய்யா கதையிது? கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சகுனி திரைப்படம் கடந்த ஜூன் 22 இல் உலகெங்கும் ரிலீசாகி ஜூன் 25 அன்று(படம் ரிலீசாகி நான்காம் நாள்) காலை ஹைதராபாத்திலும், மதியம் சென்னையிலும் சக்சஸ் மீட்டிங் வைத்தார்கள்.. அப்பிடியாயின் முதல் முன்று நாளில் அதன் வசூல் ஐம்பது கோடியை தாண்டிவிட்டதா?.... இருபதுகோடிகூட தாண்டியிராது.. அதற்குள் சக்சஸ் மீட்டிங் வைத்து கொண்டாடுறாங்க... தயாரிப்பாளரும், விநியோகிஸ்தர்களும் படத்தின்ட உண்மையான வசூலை ஹீரோக்களுக்கு பயப்பிடாது எப்ப பகிரங்கமாக தெரிவிக்கிறார்களோ! அப்பத்தான் இவ்வாறான பேர்வழிகளும் திருந்துவாங்கள்....
தற்போது காலம் எங்கையோ போய்விட்டது..இதொண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி, மற்றும் ரஜினி-கமல்,அஜித்-விஜயின் ஆரம்ப காலம் இல்ல.. சக்சஸ் மீட்டிங், போஸ்டர்ல பந்தா காடுறது, ஓடாத படங்களை காசு குடுத்கு ஓடவைத்து ரசிகர்களை ஏமாற்ற.....இப்பவெல்லாம் பேஸ்புக்,டுவீட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் நன்கு பிரபல்யமாகிவிட்டது.. என்னதான் வெட்டி பந்தா விட்டாலும் மக்கள் மத்தியில் எடுபடாது.. ஒவ்வொரு ரசிகனும் தத்தமது பிரதேசங்களில் ஒரு படம் எப்பிடி ஓடுகின்றதெண்டு பலபேருடன் கருத்துக்களை சமுகவலைத்தளங்களின் ஊடாக பகிருவதால் எது உண்மை எது பொய் என்ற நிலவரங்களை எல்லோராலும் பெற்றுக்கொள்ளமுடிகிறது...

15 comments:

 1. குறித்த அந்த நடிகர் சமுகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தவிர மிகுதி எல்லா ரசிகர்களாலும் மோசமாக கலைய்க்கப்பட்டு வருகின்றார்...entha rasiganum than rasikkum nadiganai vida matha rasigaragalai kalaipathil aachrayam onnum illai saji anna.......cinema oru business.....business kaga ethum seiyalam..........na vaalthukkalalla pathivu thodar

  ReplyDelete
  Replies
  1. nalla pathivu thodara vaalthukkal.............(thavaruruthala type pannu pattutu)

   Delete
  2. illa suthan..... eg- ajith i vijay fans maddumthaan kalaayppaanga......... natra actors da fans ellaam ajith la oru respect vaichchirukkaanga.....

   Delete
 2. இனிமே படம் ரிலீஸ் ஆகும் அன்றே சக்சஸ் மீட்டீங் வச்சாலும் வச்சுடுவாங்க.....

  ReplyDelete
  Replies
  1. intha karuththu nalla irukku saththaampoddu sollathenka bass...karthi thampikku keddudum....:p

   Delete
  2. கோசுபா padam varamuthal vaikkaaddi ok...... nanri sakotharare ungal varukaikki

   Delete
 3. ha..ha appidi nadanthaalum nadakkum nanba...... unga varukaikku nanri nanbaa

  ReplyDelete
 4. ஏன் சஜி நம்ம தலய பற்றி எழுதாம 'கொசுக்களை' பற்றி எழுதி டைம் வேஸ்ட் பண்றீங்க? இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...

  ReplyDelete
  Replies
  1. aama anna... enakku enna kavalai endaa,ippidiyellaam success meeting vaichchu oorai emaaththurathai avanga avanga fans ellaamnamburaangale!!!!....... success meeting vaichchiddaanga so,film hit..hit endallavaa panthaa kaadduraanga?

   Delete
  2. nanri N.H.பிரசாத்...ungal varukaikku..

   Delete
 5. இப்போல்லாம் படம் ஓடுறதே அதுக்கு கொடுக்குற பில்டப்புல தான் இருக்கு..., படம் வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால இருந்து எல்லா டி.விலையும் பயங்கரமா மொக்க போட்டு உசுர வேற வாங்குறானுங்க.., படம் வரதுக்கு முன்னாலையே சக்ஸஸ் மீட் வைச்சாலும் வைப்பாங்க போல..,

  ReplyDelete
  Replies
  1. sariya sonneenga brother........ ennathaan success meeting vaichchu fraud panninaalum unmaiyai maraikkelaathu.. but, anthantha actorsda fans maddum ithai oththukkave maaddaanga.............................

   Delete
 6. nanri nanbaa ungal varukaikku..

  ReplyDelete
 7. Karthi yoda alumbu thaangalae!!! Please dont compare Karthi with Ajith... you should not compare Ajith with even Surya... Karthi yoda unmayaana nilavaram oorukkae theriyum... Karthi pathi success news padikkum pothu sirippu thaan varum...naan againsta comment kooda podamaaten yenna news padikira ellarukkum unmai enna nu theriyum... This is my first comment against Karthi because ennaala Ajith ah Karthi yoda compare opanratha thaankikka mudilae... Please stop this... U can compare Ajith with only Vijay...

  ReplyDelete

comment