Saturday, March 31, 2012

"3" பட விமர்சனம்: எனது அலசலில்....


அப்பாடா ஒரு மாதிரி எங்கள் எல்லோரையும் பிடித்துக்கொண்டிருந்த கொலைவெறி கொஞ்சம் ஆறிவிட்டது என்றுதான் சொல்லணும்.....இந்த படத்தில் அமைந்த "வை திஸ் கொலைவெறி" என்ற ஒரு பாடல் ஒரு படத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் என்று கொஞ்சம்கூட படக்குழுவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.. "தமிங்கிலத்தில்" தனுஷ் எழுதி, பாடிய இந்த பாடல், வழமையான பார்முலாவுக்கு அப்பால் அதன் compose பண்ணுகின்ற வீடியோவை பரீட்சார்த்த முயற்சியாக படம் ரிலீஸ் ஆவதற்கு(Mar 30, 2012) பலமாதங்கள் முன்னதாகவே வெளியிட்டார்கள்(Nov 16,2011)... பாடலும் எதிர்பார்ப்பிற்கு பலமடங்கு மேலாக மொழி,நாடு கடந்து சகலதரப்பாலும் youtube மூலம் பார்க்கப்பட்டது... இறுதியில் படத்தின் வியாபாரத்தையே இந்த ஒரு பாடல்தான் நிர்ணயித்திருக்கின்றது... சுமார் 20 கோடிகளுக்கு உட்பட்ட செலவில் எடுத்துமுடிந்த படம், அதன் மூன்றுமடங்கிலும் அதிகமாக(65-70crores) தமிழ்,தெலுங்கு,ஹிந்தியில் விநியோக்கிக்கப்பட்டிருக்கின்றது.......





சரி இனி படத்தை ஒருக்கா அலசித்தான் பார்ப்போமே!.....

நடிகர்கள்- தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர், பிரபு, பானுப்பிரியா, ரோகினி
இயக்கம்- ஐஸ்வர்யா.R.தனுஷ்.
இசை- அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
தயாரிப்பு-கஸ்தூரி ராஜா.

வாழ்க்கையின் மூன்று பருவங்களில் ஆண்- பெண் இடையே நிகழும் காதல் பற்றிய கதையைத்தான் "3" படம் பெயருக்கேற்றாற்போல் சித்தரிக்கின்றது.. காலேஜ் பருவம், திருமண வயதுப்பருவம், திருமணத்துக்கு பிந்திய வாழ்க்கை என்பனவே அந்த மூன்று பருவங்களும்.. ஒரு மரண வீட்டில் ஸ்ருதி அழுதுகொண்டிருப்பதிலிருந்து ஆரம்பமான கதை தொடர்ச்சியாக ஸ்ருதியின் பிளாஸ்பேக்காயே படம் நகர்ந்துகொண்டிருக்கின்றது... ஒருபுறம் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்திட்டு இருக்கும் ஸ்ருதி குடும்பம், மறுபுறம் தனுஷ், சிவா, சுந்தர் என கலக்கல் கூட்டணியின் பிரசன்னம் என படத்தின் முதல்பாதி சுவாரிசயமாக போகின்றது, தனது காதலை ஸ்ருதியிடம் சொல்லி, இரு வீட்டாரின் அரைகுறை சம்மதத்துடன் கிளப் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.......... அதன்பின், படத்தின் இரண்டாம்பாதியில் பல திருப்புமுனைகள் நிகழ்கின்றன... தனுஷ் ஒரு bipolar disorder நோயாளி என்பது தெரிய வருகின்றது.. இந்நோய் உடையவர்கள் பொதுவாக உளவியல் ரீதியாய் இருமுனை சீர்குலைவு உள்ளவர்களாக இருப்பார்கள்.. இப்பிடியான மனநிலையுடைய தனுஷ் எப்பிடி குடும்பத்தை கொண்டு செல்கிறார்? அவரின் இந்த நோயின் தாக்கம் மனைவி, நண்பர்களை எப்பிடி பாதிக்கின்றது? இறுதியில் தனுசுக்கு என்ன நிகழ்கிறது? என்பதுவே படத்தின் தொடர்ச்சி.........


தனுஷ்.....
இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாவதற்கு முதலாவது காரணமே தனுஷ் எழுதி, பாடிய அந்த கொலைவெறி பாடல்தான்.. சரி அதை விடுத்து திரையில் அவரது பங்கை பார்ப்போமாயின், மிகச்சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிக்காட்டியுள்ளார்... "வேங்கை" படத்தில் அரிவாள் சைசிலிருந்து சுத்தி இருக்கிற வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளி எங்களையும் கடுப்பேத்தினமாதிரி அல்லாமல், தனது வழமையான பாணியில் மிகத்தத்ரூபமாக காமெடி,சோகம்,கோவம்,ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் மனுஷன் பின்னி எடுத்துள்ளார்..  "வேங்கை" தவிர எந்தவொரு படத்திலுமே தனுஷ் தன்னுடைய நடிப்பால் படத்தை சொதப்பியதே இல்லை.. இதிலும் அப்பிடித்தான்.... ஒரு தேசிய விருது பெற்ற நாயகன் என்பதை நடிப்பால் உணர்த்தியுள்ளார்............


ஸ்ருதி ஹாசன்....
என்னவோ தெரியேல,பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் பொதுவா ஹீரோக்களை மையமா வைத்துதான் கதை போகும், ஹீரோயின்களை ஊறுகாய் போலவே பயன்படுத்துவார்கள், ஆனா ஸ்ருதிக்கு மட்டும் தொடர்ச்சியா இரண்டாவது படத்திலும் heavy role ஒன்று வழங்கப்பட்டுள்ளது.. இடைவேளைக்குமுதல்வரை திருப்தியாக இருந்த ஸ்ருதியின் பிரசன்னம், இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கடுப்பேத்தியதுபோல இருக்கு.... காரணம் இயல்புக்கு அப்பால் மிகைப்படுத்திய நடிப்பு, இன்னொன்று கதை... கதைக்கேற்றாற்போல இடைவேளைக்கு பிறகு ஒன்றரை மணிநேரமா அழுமூஞ்சியுடனே காணப்படுகின்றார்.... பார்க்கவே சினம் கொள்ளவைத்தது...

அனிருத்
இசை சிறப்பாகவே இருக்கின்றது.. குறை சொல்ல இடமில்ல, இடைவேளைக்கு பிறகு கதைக்கேற்றாட்போல மெதுவான அவரின் இசை திகிலாக செல்லும் கதைக்கு நன்றாகவே ஒத்துப்போகின்றது... மேலும் பாடல்கள் பெரும்பாலானவை முதலே ஹிட் ஆகிவிட்டன. 


ஐஸ்வர்யா தனுஷ்
என்ன செய்தாலும் இந்த பெண்மணிக்கு பெரிய மனசுதான் பாருங்க, தன்னுடைய புருசனை வைத்தே என்னமாதிரி ஸ்ருதியுடன் நெருக்கமா எடுத்திருக்கின்றார்???? அறிமுக இயக்கம் என்பதால் ஒருசில பிழைகள் இருந்தும், பெரியதொரு அனுபவ முதிர்ச்சி படத்தில் தென்படுகின்றது... உண்மையிலே முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவின் கற்பனைதானா? அல்லது நியூட்டனின் கண்டுபிடிப்புக்களைப்போலவா? என்பது கொஞ்சம் சந்தேகமாய்த்தான் இருக்கு..
இந்தப்படத்தில் ஆரம்பத்தில் ஸ்ருதிக்கு பதிலாக அமலபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு கால்ஷீட் பிரச்சனையால்(??) அமலா மாற்றப்படார், இந்த நிகழ்வின்பின் ஐஸ்வர்யாவின் சினிமா ஆளுமை பற்றி கடுமையா விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. 


வேல்ராஜ்(ஒளிப்பதிவாளர்)
இந்தப்படத்தில் தனுசின் நடிப்புக்கு அடுத்ததாக வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவே மிகத்துல்லியமாகவும்,சிறப்பானதாகவும் அமைந்திருக்கின்றது. குறிப்பாக மாலை,இரவு, மழைகாட்சிகளை இயற்கையுடன் ஒன்றித்துப்போகும்வாறு சிறப்பாகவே அமைத்துள்ளார்... 

பாடல்கள் 
நான் புதுப்பாடல்கள் கேட்பதில்லை என்பதால் இதிலிருந்து "எஸ்" ஆகிறேன்.... ஆனால், ஊடங்கங்களில் படித்ததன் அடிப்படையில் பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்... குறிப்பா "கொலைவெறி" பாடல் டெரா ஹிட்............

கதை
கதை என்று பெரிதா சொல்வதற்கில்லை, சின்னதொரு கதைக்கருவை வைத்து நடிகர்களின் நடிப்புக்கு களம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கின்றது....


படத்தின் சில குறை நிறைகள்......
1. தனுஸ், ஸ்ருதிக்கு அப்பால் நடித்த துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.. குறிப்பாக சிவாவின் நையாண்டி நடிப்பும்,ஸ்ருதியின் தங்கையா நடித்தவரின் குழந்தைத்தனமான நடிப்பும் , அதைவிட சுந்தரின் சீரியசான நடிப்பும் படத்துக்கு வெகுவாகவே உயிரூட்டியுள்ளது... குறிப்பாக தனுசுக்கு bipolar disorder என்ற நோய் இருப்பது தெரியவந்ததன்பின் சுந்தரின் பங்கு எல்லோரையும் வெகுவாகவே கவர்ந்துள்ளது....

2. மூன்று பருவங்களிலும் தனுஷ், ஸ்ருதியின் தோற்றத்தை (look) சிறப்பாகவே காட்டியிருக்கார்கள்.. காலேஜ் பருவத்தில் தனுஷ், ஸ்ருதி ஆகியோர் ரெம்பவே இளமையாக தோன்றுகிறார்கள். lunch box உடன் தனுஷ் செல்வது, ரெட்டைப்பின்னலுடன் காலேஜ் சீருடையில் ஸ்ருதி தோற்றமளிப்பது எல்லோரையும் ரசிக்கவைத்திருக்கின்றது. மேலும் போகப்போக வயது முதிர்ச்சிக்கேற்ப முகத்தோற்றத்தையும் சிறப்பாக இயக்குனர் காட்டியிருக்கிறார்..

3. படத்தின் பிரதான குறை என்னவென்றால், இந்த படம் பார்க்கும்போது இடைவேளைக்கு பின்னரான சீன் முழுவதும் தனுசின் இதற்கு முதல் படமான "மயக்கமென்ன" படத்தை நினைவுபடுத்தியது.... அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் வந்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது....


4. படத்தின் இரண்டாம் பாகம் ஆமைவேகத்தில் செல்லுகின்றது, இது எனது பார்வையில் சரியாக இருந்தாலும் சரியான அளவு கமெர்ஷியல் காட்சிகள் இல்லாததால் சிலருக்கு பிடிக்காமல் போய்விடலாம்... மேலும் இரண்டாம் பாகத்தின் கதை,தனுசின் அபரித நடிப்பு  திகிலானதாக இருக்கின்றது, பார்க்கிற எங்களுக்கே அந்த நோய் வந்திடும்போல இருக்கின்றது..... இது படத்தின் கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாகம் முழுவதும் அப்பிடியே காட்சி நகருவது கொஞ்சம் ஓவராய்த்தான் போச்சு, குறிப்பாக பதினைந்து-இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கேலாது.......... படம் என்னதான் நல்லா இருந்தாலும் அதை ஆடியன்ஸ் ரசித்து பார்க்கும்படி இருக்கவேணுமென்பதே மிகமுக்கியம்... அந்த விடயத்தில் படக்குழுவினர் தோற்றுப்போய்விட்டார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது....

5. முதல்பாதியில் படத்தின் காட்சியமைப்பும் சிறப்பாக சொல்லுமளவுக்கு இல்லை என்றே சொல்லவேணும், குறிப்பாக மணிரத்தினம்,கௌதம்மேனன் போன்றோரின் படங்களின் மேக்கிங் உடன் ஒப்பிட்டுபார்க்கும்போது அதன் குறைகளை தெரிந்துகொள்ளலாம். சிவா+தனுஷ் காம்பினேஷன் சிறப்பா இருந்ததால் விறுவிறுப்பாய் போனது.... முதற்பாதியில் டியுசன் சீன் நிறையத்தரம் தொடர்ச்சியா வந்தமையும் சற்று தொய்வை ஏற்படுத்தியது. 

6. படம் ரிலீஸ் ஆவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முதல்லே இந்த படத்தில் தனுசுக்கு இறுதியில் என்ன நடக்குது என்று மீடியாக்களில் கசியவந்தது.. பிறகு அம்முடிவு சூப்பர்ஸ்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் பின்னர் அது மாற்றப்பட்டதெண்டும் செய்திகள் வெளியாகின...  மேலும் படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலே இறுதியில் தனுசுக்கு என்ன நடக்குதென்று ஊகிக்கக்கூடியதாயிருக்கின்றது.. இதுவும் சில ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.


படத்துக்கு இன்னுமொரு நெருக்கடி என்னவென்றால் இதன் உச்சக்கட்ட வியாபாரம்தான்.... நான் மேலே சொன்னதுபோல் போட்ட பட்ஜெட்டின் மூன்று மடங்குக்கு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, (மலையாளம்????) என பரவலாக விற்றுவிட்டார்கள்.... இதனால் கஸ்தூரிராஜாவுக்கு செம இலாபம், மாட்டிக்கொள்ளப்போவது விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்தான்... படத்தை பார்த்துவிட்டுத்தான் விநியோகிஸ்தர்கள் வாங்கினார்களா? அல்லது கொலைவெறி பாடலின் ஹிட்டை வைத்துத்தான் இந்த விலைக்கு வாங்கினார்களா? என்பது சந்தேகமே!! காரணம் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்றால் குறைந்தது 80 கோடிகளையாவது வசூலிக்கவேணும்..  குறிப்பாக ஆக்சன் படங்கலால்தான் அவ்வாறானதொரு வசூலை பெறமுடியும்... இந்தப்படம் நாற்பது கோடிகளை தொடும் என்பதே சந்தேகமாய்த்தான் இருக்கு..இறுதியில் ரஜினியின் பாபா படத்துக்கு வந்த நிலைமையும் வரலாம்...... எதற்கும் கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்ப்போம்... ஹிந்தி,தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் சிலவேளை இந்த படம் எடுபடுதோ தெரியவில்ல... "அவன் இவன்" படம்கூட தமிழில் சரிவர போகவில்லை, ஆனால் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.....


 படத்தில் என்னதான் குறைகள் இருந்தாலும் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்.. எவ்வளவு நாளைக்குத்தான் ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், காமெடியை பார்க்கிறது???..... சமூகத்திலே வெளிவாரத சில பிரச்சினைகள், குறிப்பாக bipolar disorder நோயாளி பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? இவ்வாறான படங்களின் மூலம்தான் சில பிரச்சனைகள் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுகின்றன.... எனக்கு அஜித்துக்கு அப்புறம் பிடித்த இரு நடிகர்களில் தனுசும் ஒருவர்... தனுஷ் இந்தப்படத்தில் எத்தனைபேரை ஏமாற்றினாலும் என்னை ஏமாற்றவில்லை............. தனுஷ் ராக்கிங்......

7 comments:

  1. Superb. Thanks. . . .

    ReplyDelete
  2. Super. . . . .




    By ur kettavan kumar fb frnd

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கு...

      Delete
  3. நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது இந்த படம் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நிச்சயமா அது நல்ல படமா இருக்க கூடும்...ஏன் என்றால் நல்ல படங்கள் ஐ தமிழ் ரசிகர்கள் விரும்பவுதில்லை..நீங்கள் என்னதான் "எவ்வளவு நாளைக்குத்தான் ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், காமெடியை பார்க்கிறது???" என்று ஆதங்க பட்டாலும் நமது தமிழ் சினிமா ரசிகர்கள் இவற்றை தான் ஆதரிக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனைக்கு உரிய விடயம்.
    தனுஷ் உண்மையிலேயே சிறந்த நடிகர் தான்...அவருக்கு தகுந்த கதாபாத்திரங்கள் கிடத்தல் பின்னி எடுப்பார் என்பதற்கு ஆடுகளம் சிறந்த உதாரணம். அதை விடுத்து அரிவாள் சைசில் இருந்து கொண்டு ஆயிரம் வில்லன்களை அடித்து விழுத்தும் மாப்பிள்ளை, படிக்காதவன், வேங்கை போன்ற மாசாலா படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். நான் 3 படம் பார்க்கவில்லை இன்னும்...பார்த்து விட்டு எனது கருத்தை சொல்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆகாஷ். இந்த படம் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் எதிர்மறையான விமர்சனங்களைத்தான் கொடுக்கின்றன... ஆனால் படம் பார்க்கலாம்......

      Delete
  4. படமாடா இது கொலைவெறி கொலவேரின்னு பாடி படத்துல கொன்னுட்டாங்க மச்சி..........
    தயவு செய்து யாரும் அந்த பக்கம் கூட போயிராதிங்க மச்சி.................

    ReplyDelete
    Replies
    1. அது உங்களின் தனிப்பட்ட கருத்து.... உங்கட தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து எல்லோருடைய ரசனையை முடிவெடுக்க முடியாது...

      Delete

comment