Wednesday, March 14, 2012

தமிழ் சினிமாவில் இரு ஹீரோக்களின் ஆதிக்கத்தை சூர்யா உடைப்பாரா?


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் யாராவது இரு நடிகர்கள்தான் முன்னிலைவகிப்பார்கள் அல்லது  முன்னிலை வகிக்கவைக்கப்படுவார்கள்.. அவற்றிற்கேற்ப ரசிகர்களும் பெரும்பாலானோர் இரண்டாக பிரிந்திருப்பார்கள். இது இந்தியாவின் எந்தமொழி சினிமாவுக்கும் இல்லாததொன்றாகும், பொதுவாக மீடியாக்களே இந்தவேலையை கச்சிதமாக செய்கின்றன. ஒரு காலகட்டப்பகுதியிலுள்ள முன்னணி,போட்டி நடிகர்கள் இருவரை இந்த லிஸ்டில் அடக்குகிறார்கள், அவர்களுக்கிடையிலான போட்டித்தன்மை வலுவிழக்கும் சமயத்தில் அடுத்த தலைமுறை நடிகர்களிடையே இது தாவுகின்றது.. இவ்வாறான இந்த போட்டித்தன்மையால் இரு நடிகர்களுக்கும் நிறைய வெறித்தனமான ரசிகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உருவாகிறார்களோ அந்தளவுக்கு எதிர்ப்பாளர்களும் உருவாகிறார்கள். இதனால் அந்த குறிப்பிட்ட இரு நடிகர்களின் படங்கள் வரும்போது விமர்சகர்கள்,மற்றும் எதிர்த்தரப்பு நடிகரின் ரசிகர்களால் அவை உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது, காரணம் அதில எங்கை எல்லாம் பிழைபிடித்து எதிர்மறையான விமர்சனங்கள் வழங்கலாம் என்ற நோக்கம்தான். இதனால் அந்த வட்டத்தில் சிக்கப்படும் இரு நடிகர்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை, உதாரணத்துக்கு அண்மையில் வந்த விக்ரமின் மொக்கைப்படமான ராஜபாட்டைக்கு வந்த விமர்சனங்களையும், கடந்த காலங்களில் வந்த அஜித்-விஜயின் சுறா,வில்லு,ஏகன் போன்ற படங்களுக்கு வந்த விமர்சனங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.. போட்டிநடிகர்களது படங்கள் மொக்கையானால் எந்தளவுக்கு மோசமான விளைவுகளை பெற்றுக்கொடுக்கின்றதெண்டு. ஆனால், இதைவிட இன்னொரு உண்மையையும் மறுக்கேலாது, உதாரணத்துக்கு அஜித்-விஜய் ரசிகர்கள் என்னதான் முட்டி மோதிக்கொண்டாலும் அஜித் படம் வருகுதென்றால் அஜித் ரசிகர்களின் பலமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் ரசிகர்களும்தான் அந்த படத்தை எதிர்பார்க்கிறார்கள், ஏனென்டால் படத்தை பார்த்தால்தானே ஏதாவது பிழைபிடிக்கலாம் என்ற அந்த ஒரேயொரு நோக்கம்தான்.. அதனால்தான் போட்டி நடிகர்களின் படங்களுக்கு அதிக ஒபெநிங், மொத்த வசூல் என்பன அதிகரிக்ககாரணம்.  பாக்ஸ்ஆபீசிலும்கூட இவர்களது படங்களே முன்னிலை வகிக்கின்றன/இவ்வாறான போட்டி நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது முன்றாம் நடிகர்களாக சிலர் முன்னேறிய வரலாறும் உண்டு, அவர்கள் என்னதான் பெரிய ஹிட் குடுத்தாலும் நீண்டகாலத்துக்கு அவர்களால் நிலைத்துநிற்க முடியாமல் போவதும் கண்கூடு. எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் துருவங்கள் தமிழ்சினிமாவை ஆண்டபோது முன்றாவது நடிகராக ஜெமினிகணேசன் அவர்கள் அந்தக்காலத்தில் பெருமளவில் பேசப்பட்டார், ஆயினும் அவரால் எம்.ஜி.ஆர்- சிவாஜியின் பாதியளவு புகழைக்கூட பெறமுடியவில்லை என்பது உண்மை. அதேபோல அடுத்த தலைமுறை நடிகர்களில் ரஜினி-கமல் ஆகிய இருவரும் சிம்மாசனமிட்டுக்கொண்டார்கள், இவர்களுக்கு அடுத்தாற்போல நடிகர் மோகன் ஒரு காலகட்டத்தில தொடர்ச்சியான ஹிட்டுக்களை குடுத்துவந்தார், அதுவும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா கண்ட திரைப்படங்கள் குறிப்பிட்டளவு அடங்குகின்றன.. ஆதலால்தான் இன்றுவரை தமிழ்சினிமாவில் "வெள்ளிவிழா நாயகன்" என்ற அந்த பட்டத்தை தொடந்தும் தன்வசப்படுத்தியிருக்கார், அப்பிடியிருந்த மோகனாலும் சினிமாவில் ரஜினி-கமலைப்போன்று நீண்டகால நிரந்தர இடத்தை பிடிக்கமுடியவில்லை.. 


அதற்கப்புறம் 1996/97 காலப்பகுதியில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாய் படம் நடிப்பதை நிறுத்திவிட்டதாலும், ரஜினி-கமல் போட்டியில் ரஜினி அசைக்கமுடியாதளவுக்கு எங்கேயோ உச்சத்துக்கு சென்றுவிட்டதாலும் ரஜினி-கமல் போட்டி வலுவிழக்க தொடங்கிவிட்டது, அதுக்கப்புறம்தான் அஜித்-விஜய் என்ற போட்டி ஆரம்பமானது, நான் நினைக்கிறேன் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியைப்போல மற்ற தலைமுறையினருக்கிடையில் விறுவிறுப்பு இருந்ததா தெரியேல.. காரணம் எம்.ஜி.ஆர், ரஜினி மாஸ் படங்களையும், சிவாஜி,கமல் கிளாஸ் படங்களையும் கூடுதலா நடிச்சதால், மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுக்கே போட்டியின்றி அதிக வரவேற்பை பெற்றன.. ஆனால் அஜித் விஜய் இருவருமே மக்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாகவே தங்களை காட்டிக்கொள்கிறார்கள், மக்களும் அதட்கேற்ப அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர் என்றே சொல்லணும்.


அஜித்-விஜயின் கடும் போட்டிக்கு மத்தியில் முன்றாவதாக முதலில் உருவெடுத்தவர்தான் நடிகர் பிரஷாந்த், இவர் அஜித்-விஜய்க்கு முதலே சினிமாவுக்குள் வந்துவிட்டாராயினும், போட்டி வட்டத்தினுள் முதல் இரு இடத்தை பிடிக்க இவரால் முடியவில்லை.. முன்றாவதாகவே இருந்தார்.. இவரும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குடுத்தாலும், தன்னுடைய சாக்லேட் பட பாணியிலிருந்து ஆக்சன் பாணிக்கு மாறியதால் ஏற்பட்ட தோல்விகள், தகுந்த ஆளுமையின்மை குறிப்பாக சொந்த ஆளுமையின்றி அப்பா பிள்ளையாக இருந்துவந்தார், இவருடைய படங்களின் கதைகள் பெரும்பாலும் இவரது அப்பா தியாகராஜனாலே தெரிவு செய்யப்பட்டன (இதேநிலைமைதான் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளைத்தவிர அதுக்குமுதல் இருந்தது) ,மற்றும் திருமணத்துக்கு பின்னரான குடும்ப சிக்கல் சிலவற்றாலும் திடீரென பீல்ட்அவுட் ஆனார்.. நீண்டகாலத்துக்குப்பிறகு அண்மையில் வந்த "மம்பட்டியான்" திரைப்படமும் சரிவர போகவில்லை. அதன்பின் விக்ரம் அந்த லிஸ்டில் பேசப்பட்டாலும் தொடர்ச்சியற்ற அவரின் வெற்றிகள், தேர்ந்தெடுத்த கிளாஸ் வகையிலான படங்கள் போன்றன அஜித்-விஜயை நெருங்க அவரால் முடியாமல் போனது.. ஆனாலும் அவர் தொடர்ச்சியாக தனது பாணியில் வித்தியாசம் வித்தியாசமாக படைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்.இவருக்கு அடுத்ததாக இந்த போட்டி வட்டத்துக்குள் இணைந்தவர்தான் சூர்யா.. அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் தோல்வியடைந்த சமயம் முன்னேறியவர் என்றும், அவர்கள் கைவிட்ட படங்களை நடிச்சே இந்தளவுக்கு முன்னேறினார் என்றும் பலராலும் விமர்சிக்கப்படுபவர், இந்த விமர்சனம் எவ்வளவு மடமைத்தனம் என்பது சினிமா தெரிந்த எல்லோருக்குமே புரியும்..அதைவிடுவோம்.. சூர்யாவை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அஜித்-விஜய் சேர்ந்து நடிக்கவிருந்த நேருக்குநேர் படத்தில், இறுதியில் அஜித் விலக அவருக்கு பதிலாக சூர்யா அந்த படத்தில் நடித்ததன் மூலம் 1997 இல் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அறிமுகமாகி ஆரம்பத்தில் விஜயகாந்த்,விஜய் போன்றோருடன் நடிச்ச்ச ஒருசில படங்கள் ஓரளவுக்கு ஹிட் குடுத்தாலும் தனித்துநின்று சாதிக்கமுடியவில்லை, அதுபோல அவரால் நடிப்பு,டான்ஸ்,ஸ்டைல்,காமெடி என்று எதிலுமே அப்போது சிறப்பாக பிரகாசிக்கமுடியவில்லை, அதன் பிறகு 2001 இல் அவர் நடித்த நந்தா திரைப்படம்தான் அவரின் நடிப்புக்கு முதன்முதலில் பட்டை தீட்டியதென்று சொல்லலாம், பாலாவின் பாசறையில் நேர்த்தியாக பட்டைதீட்டப்பட்டார்.. அதன்பிறகு காக்ககாக்க,கஜினி, வேல், வாரணம் ஆயிரம் எண்டு நிறைய ஹிட் குடுத்தாலும் அதுவரையிலும் அஜித்-விஜய்க்கு நெருக்கடியானதாய் இருந்தாரெண்டு சொல்லமுடியாது. காரணம் அவர் நடித்த படங்கள் முழுக்கமுழுக்க மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்று இல்ல. ஆனால் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. தமிழ்சினிமாவில் என்னதான் கஷ்டப்பட்டு தரமான படைப்புக்களை நடிகர்கள் வழங்கினாலும் மாஸ் ஹீரோக்களைத்தான் தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், அதன்விளைவுதான் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்றோரின் அபரிதமான வளர்ச்சி. சூர்யாவின் இவ்வாறான திரையுலகப் பயணத்தில் 2009 இல் வெளிவந்து சக்கைப்போடு போட்ட "அயன்" திரைப்படம்தான் அவரை அஜித்-விஜய் நிலைக்கு அருகாமையில் உயர்த்தி பேசவைத்தது, அதுமட்டுமல்லாது சூர்யாவுக்கென்றும் ஒரு ரசிகர் கூட்டத்தை குறிப்பிட்டளவில் உருவாக்கிய படமும் அயன்தான்.. அதன்பின் வந்த ஆதவன் தோல்வியடைய "சிங்கம்" மீண்டுமொரு புளோக்பாஸ்டரை அவருக்கு அளித்தது, சிங்கம் திரைப்படம் விஜயின் "சுறா" திரைப்படம் வெளியாகி கொஞ்ச நாட்களில் வெளிவந்து சுறா படுதோல்வியடைய சிங்கம் அடித்து தூள் கிளப்பியது.. இது சூர்யாவுக்கு பெரும் மாஸ் அந்தஸ்தை கொடுத்தாலும் முதன்முதலில் சூர்யாவுக்கென்று வெளியே கண்கூடாக பெருமளவு எதிர்ப்பாளர்களை உருவாக்கியதும் சிங்கம் படத்துக்கு பிறகுதான். அவர்கள் வேறு யாருமில்லை, விஜய் ரசிகர்கள்தான் பெருமளவில் சூர்யா எதிர்ப்பாளர்களாக மாறினார், அஜித் ரசிகர்களிலும் ஒரு சிலர் எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.. இவர்கள் அவரின் படங்களில் உள்ள குறைகளால் வந்த எதிர்ப்பாளர்கள் இல்லை.. அவரின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் வயித்தெரிச்சலால் உருவான கூட்டம்.. இவர்களின் பொறாமைத்தீக்கு எண்ணெய் ஊத்தும்வகையில் கடந்த ஆண்டு வந்த படம்தான் "ஏழாம் அறிவு" படம்வந்தவுடன் இந்த படத்துக்கு வந்ததுபோன்ற எதிர்மறை விமர்சங்களை அண்மையில் நான் வேறு எந்தவொரு படத்திற்கும் பார்க்கவில்லை, காரணம் படம் வெளிவரமுதல் இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் உதயநிதி இந்த படம்தொடர்பாக தெரிவித்த அந்த ஓவர் எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்புக்கு படம் திருப்தி செய்யவில்லை என்பது உண்மைதான்.. ஆனா படம் வெளிவந்து ஒரு வாரம் கழிச்சு வசூல் விபரங்கள் வெளிவரும்போதுதான் தெரிந்தது எதிர்விமர்சனங்களால படத்தின் வசூல் வேட்டையை தடுக்கமுடியல, ரஜினி, கமல், அஜித் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமா ஏழாம் அறிவு சாதனை புரிந்துள்ளது.. படம் நன்றாக வசூலிச்சாலும் போட்ட உயர் பட்ஜெட்டுக்கு ஏழாம் அறிவு அவரேஜ்ஜாகவே இறுதியில் கணிக்கப்பட்டது. பலத்த எதிர்விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஜய்ட வேலாயுதம் படத்துடனும் வந்த ஏழாம் அறிவு பட வசூல் நிலவரம் ஒட்டுமொத்த சினிமா விற்பன்னர்களையே வாய்பிளக்க வைக்கின்றது..  அது மட்டுமல்ல சூர்யாவின் அடுத்த படமான மாற்றான் படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பு, அவரின் படங்களுக்கு உள்ள வியாபாரம், படத்துக்கு முதலிடப்படும் பட்ஜெட்டின் அளவு, சம்பளம், தமிழகம் தாண்டி தெலுங்கில் சூர்யாக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து பார்த்தால் இவர் மோகன், பிரசாந்த் மாதிரி அல்லாமல் இருவரின் கைக்குள் இருக்கும் தமிழ் சினிமாவின் மரபையே மாற்றி அமைப்பார்போல தெரிகிறது.. மோகன், பிரசாந்த் போன்றோரின் வீழ்ச்சியை வைத்து சூர்யாவை மட்டம்தட்டுவது பொருத்தமில்லை என்பதுதான் என்வாதம். ஏனென்டால் அவர்கள் இருவரது படங்கள் பெரும்பாலும் ஒரேமாதிரியானவை, ஆக்சன் படங்கள் அவர்களுக்கு பெரிதா கைகுடுக்கவில்லை மேலும் அவர்கள் சாக்லெட் ஹீரோ சப்ஜெட் படங்களையே அதிகம் தேர்வுசெய்து வெற்றி பெற்றார்கள். சாக்லேட் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் பலமான நிரந்தர ரசிகர் கூட்டம் இருப்பது சாத்தியமில்ல. ஆனால் சூர்யா வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை வழங்கும் ஒரு நடிகர், முழுக்க முழுக்க கமெர்சியல், மாஸ் ஹீரோ என்று சொல்லமுடியாவிட்டாலும் அதில் குறிப்பிட்டளவு வெற்றியை பெற்றவர்.. இன்னும் சில படங்கள் ஹிட் குடுத்துவிட்டு எதிர்காலத்தில் தொடர்ச்சியான மாஸ் கலந்த கமெர்சியல் படங்கள் நடிக்க தொடங்குவாராயின் மக்கள் நிச்சயம் சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக அங்கீகரிப்பார்கள்... அதன்பின் அவரின் வளர்ச்சி தவிர்க்க,தடுக்கமுடியாததொன்றாகும்.. இரு ஹீரோக்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரக்கூடிய காலமும் வெகுதொலைவில் இல்லை என்றும் சொல்லலாம்....

20 comments:

 1. Hope u hv written this article in your dream,,Ajith Vijay mudinjhu Dhanush Simbju poitu irukku thambi,,ippa vandhu pudusa surya va pathi pesara,,po poi vers velai irundha paaru

  ReplyDelete
  Replies
  1. simbu, dhanush a? sema commedy..... konjam vidda solluvaaypola vijayakantha da son vs T.R da son kuralarasan um vanthiddaanga endu....... current cinema patri theriyaaddi poththiddu po, inga vanthu comment adikkavenam...

   Delete
 2. You are absolutely correct about Single SINGAM Surya.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு...

   Delete
 3. neenga onu therinjukanum even ajith & vijay film flop agum pothu than sury mela vanthurukaru but ajith & vijay already have a lot fans. in same ajith & vijay good film koduthangana surya film pathi yarum yosika mattanga ....

  ReplyDelete
  Replies
  1. sure,,,, 100% correcet.. but, avanga film surya da film alavukku quality illa...

   Delete
 4. Thuppakki release piragum intha article la naburingala boss??? (Ajith - Vijay) kitta kooda surya vaala nerunga mudiyaathu... Surya oru small boy. Avara poi Ajith Vijayoda compare panrathu comedy ah irukku...

  ReplyDelete
 5. Neenga sollarathu umai thaan, aana ippo illa... AJith - Vijay, Vijay - Prasanth, Vijay - Vikram, Vijay - Surya, After Billa again Ajith - Vijay, then Surya - Vijay, after Mankaatha again Ajith - Vijay... Now Vijay - Ajith... I am sure if Ajith and Vijay give even continuous flop , it wont affect their status but if Surya gives one more flop he will be gone like prasanth and Vikram...

  ReplyDelete
  Replies
  1. vijay have lots of fan but in acting skill any one cant beat vikram..
   best actor for ever..one day he come back again

   Delete
 6. 2011 - 2012 internet la athigamaa ootapattavar (still ootapadubavar) Surya thaan... High Lights: Singam,Kaiyil Oru kodi mokka kelvi, Bedhi tharmar sorry Bodhi Dharmar 7 am Arivu, Maatrann (oorukkay theriyum Maatran comedy piece aana kadhai)... Surya , Vijay idatha pidichittar nu sonnaangae...enakku ippo thaan theriyuthu athu entha idam nu...Internet la Surya ku munnadi Vijay (Villu, Kuruvu and Sura) thaan periya comedy piece ah irundaar, ippo Surya antha idattha pidichuttaar... Maatran (award vaanguvaare surya kandippa Red Vijayakanth nae sollalam Surya va) surya va Vijakanth range ku kondu poirukku...Singam 2 - Suryaa va power star range ku kondu ponalum aacharriya padurathuku illa... wait and reply to me after Singam 2.

  ReplyDelete
 7. சந்திரமுகி, சச்சின் , மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ் ல ஆனந்த விகடன் போட்ட article ல விஜய் கமல் இடத்த பிடிசிடாறா நு pottanga ...ithu கமல் ரசிகர்கள விஜய் கு எதிரா திருப்பிவிட்டது... அப்புறம் அஜித் விக்ரம் கொடுத்த தோல்வி படங்களால கமல் ரசிகர்களால் விஜய் கு எதிராக ஆதரவு கொடுக்கப்பட்டு பிறகு நடுநிலை வாதிகள் என்று கூறிக்கொண்ட வர்கள் (அஜித் மற்றும் விஜய் கு எதிராக) ஆதரவு கொடுக்கப்பட்டு ஆரம்ப காலத்தில் வளர்கப்பட்டவர் தான் இந்த சூர்யா.
  இதன் பிறகு விஜய் படங்கள், அஜித் மற்றும் கமல் ரசிகர்கள் மற்றும் நடுநிலை வாதிகளின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டி இருந்தது ... அனால் மறுபுறம் சூர்யா வோ கமல் மற்றும் நடுநிலை வாதிகளின் ஆதரவையும் , விஜய் ரசிகர்களின் எதிர்பயுமே சந்திக்க வேண்டி இருந்தது .... கவனிக்க சூர்யா படத்திற்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஆதரவோ எதிர்போ தரவில்லை ...
  வாரணம் ஆயிரம் படம் வெளிவந்த பிறகு அஜித் மற்றும் விஜய் இன் போக்கிரி மற்றும் பில்லா படங்களை மசாலா படங்கள் என்றும் படத்தின் வெற்றி வசூலை பொருத்தது இல்லை என்றும் கடுமையாக சாடிய இந்த நடுநிலை வாதிகள் வாரணம் ஆயிரம் படத்தை கொண்டாடினார்கள் ... கமல் ரசுகர்களின் ஆதரவு வேறு இந்த படத்திற்கு ... ஆனாலும் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல நடுகர் என்ற பெயரை பெட்ட்றுத் தந்தது surya kku...

  ReplyDelete
 8. அதன் பிறகு வந்த வேல் படம் சூர்யாவின் பெயரை லேசாக கெடுத்து விட, கமல் ரசிகர்கள் சூர்யா விற்கு கொடுத்த ஆதரவை நிருதிகொண்டார்கள் ... அனால் இந்த நடுநிலை வாதிகள் எல்லாரும் எதிர்பார்த்த படி வேல் படத்தை சாடாமல் , அந்த படத்தின் வியாபாரம் , வசூல் பற்றி பேச ஆரம்பித்தார்கள் ... இந்த நடுநிலை வாதிகளில் சில விமர்சகர்களும் அடங்குவார்கள் ...அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது இந்த அஜித் விஜய் எதிர்பாளர்களை பற்றி ... இதன் பிறகு இவர்கள் நடுநிலை வாதிகளாக பார்க்கப்படவில்லை மாறாக அஜித் விஜய் எதிர்ப்பாளராக பார்க்கப் பட்டனர் ... இந்த சமயம் விஜய் பற்றி லயோலா காலேஜ் ரிப்போர்ட் ஒன்று இவர் ரஜினி யை மிஞ்சி விட்டதாக செய்தி வெளியிட்டது ... இதற்கும் விஜய் கும் எதாவது சம்பந்தம் உண்டா என்று தெரிய வில்லை.. அனால் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய நடுநிலை வாதிகள் சாரி அஜித் விஜய் எதிர்ப்பாளர்கள் , இதை வைத்து விஜயை புகழ்வது போல ரஜினி ரசிகர்களை சீண்டி விட்டனர் ... இப்போது ரஜினி ரசிகர்களும் விஜய் கு எதிராக திரும்பினார்கள் ... அப்போது விஜய் கு எதொராக அரசியல் ரீதியாக DMK வும் திரும்பியது ... விளைவு வில்லு படம் அஜித், கமல், அஜித்-விஜய் எதிர்பாளர்கள் மற்றும் மிகபெரும் சக்தி கொண்ட ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பையும் , அரசியல் ரீதியாக DMK வின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டி இறந்தது... அதன் பிறகு வில்லு படத்திற்கு நேர்ந்த கதி நாள் சொல்லி தெரிய வேண்டியதில்லை ... மாறாக சூர்யா விற்கு அப்போது கமல் ரசிகர்களின் ஆதரவுடன், அஜித் - விஜய் எதிர்பாளர்களின் ஆதரவும் , அரசியல் DMK ஆதரவும் , சன் டிவி யின் பலமும் பக்க பலமாக இருந்தது... அயன் படத்திற்கு இருந்த ஒரே எதிர்ப்பு விஜய் ரசிகர்கள் ... ஆனாலும் சும்மா சொல்ல கூடாது விஜய் ரசிகர்களின் முயற்சியை ...படம் எல்லோராலும் எதிர்மறையான விமர்சனம் பெற்றது ... சரி இல்லை என்று ... அனால் சன் டிவி யின் தந்திரமும் சின்னத் திரை செல்வாக்கும் அயன் படத்தை மிகபெரிய வெற்றி படமாக்கியது (இதில் சூர்யா பெருமை பட ஒன்றும் இல்லை )....அயன் படத்திற்கு பிறகுதான் அஜித்-விஜய் எதிர்பாளர்கள் தங்களை அதிகாரபூர்வமாக சூர்யா ரசிகர்கள் என்று அறிவித்து கொண்டார்கள் .... அயன் படம் சூர்யா வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது ... அதாவது இதுவரை இருந்த அஜித்-விஜய் போட்டி விஜய்-சூர்யா என மாறிவிட்டதாக சூர்யா ரசிகர்கள் மற்றும் சில விமர்சகர்களும் கூறத் தொடங்கினார்கள் ... இது அஜித் ரசிகர்ளை கடுபாக்கியது... அஜித் ரசிகர்கள் சூர்யாவிற்கு எதிராக மாறினார்கள்...

  ReplyDelete
 9. அப்போது விஜய் யின் வேட்டைக்காரன் வந்தது ... படம் பரவா இல்லை என்றாலும் DMK வால் மறைமுகமாக தோல்வி படமாக மாற்றப்பட்டது ... இதோடு ரஜினி, கமல், சூர்யா ரசிகர்களின் எதிர்ப்பு வேறு ... DMk வுக்கு விஜயை டம்மியாக்க சூர்யா தேவை பட்டார்... முன்பு இதே DMk அஜித் கு எதிராக விஜயை வளர்த்துவிட்டது இப்போது விஜயை ஒழிக்க சூர்யா வை வளர்த்து விட நினைத்தது ... இந்த சமயத்தில் வந்தது தான் ஆதவன் படம் ... ஒரு புறம் ஆதவன் படத்திற்கு ஆதரவாக சூர்யா, கமல் பான்ஸ் மற்றும் DMk அரசியல் சக்தி ... மறுபுறம் ஆதவனுக்கு எதிராக இம்முறை விஜய் ரசிகர்களோடு அஜித் ரசிகர்களும் சேர்ந்து கொண்டார்கள் ... முடிவை நான் சொல்ல தேவை இல்லை ... அஜித் விஜய் ரசிகர்களின் எதிர்ப்பு அனைவரின் ஆதரவை மீறி படத்தை பெரும் தோல்வி படமாகியது ... ஆனாலும் DMk வின் அரசியல் பலத்தால் அப்படம் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது ... சூர்யா விற்கு அந்த ஆண்டு விருதுகளையும் வாங்கி கொடுத்தது ... ஆனாலும் உண்மை ஊருக்கு தெரியுமே ... விளைவு சூர்யா ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது கொதிப்படைந்தனர் ... இம்முறை இவர்கள் விஜய்-அஜித் ரசிகர்களை போல் இல்லாமல் வித்தியாசமாக பலி வாங்கினார்கள் ... அது என்ன வென்றால் சூர்யா வின் ரசிகர்கள் எண்ணிக்கை மிக குறைவு ... விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போல் தனித்து நின்று விஜய்-அஜித் படங்களை தோல்வி படங்களாக ஆக முடியாது ... எனவே தந்திரமாக செயல் பட்டனர் ... அஜித் பட விமர்சனம் மற்றும் செய்தி வெளியான வலை தளங்களில் அஜித் கு எதிராக விஜய ரசிகன் என்று கூறி கலைப்பது ... அதே போல் விஜய் படம் விமர்சனம் மற்றும் செய்தி வெளியான வலை தளங்களில் விஜய் கு எதிராக அஜித் ரசிகன் என்று கலாய்ப்பது ... இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை அவர்களுக்கு எதிராக திருப்பியது ... அஜித் ரசிகர்கள் விஜய் படத்தையும் விஜய் ரசிகர்கள் அஜித் படத்தையும் மாறி மாறி அவர்களே தோல்வி படமாக்கினர் ... இதில் அசல், சுறா, அடக்கம் ... சுறா படத்திற்கு DMk மறைமுக எதிர்ப்பும் கூட .... இந்த யுத்தியை பயன்படுத்தி அஜித்-விஜய் படங்களை அகல பாதலதிற்கு கொண்டு சென்றனர் ...வலை தளங்களில் விஜய் appothu அஜித், கமல், சூர்யா மற்றும் ரஜினி ரசிகர்களால் கேலி செய்யப்பட்டது ஊரே அறிந்த விஷயம் ... பிறகு வத்து தான் சிங்கம் ... சிங்கம் விஜய் அஜித் ரசிகர்களின் எதிர்பால் கலவையான விமர்சனம் பெற்றது ... மறுபடியும் DMk தலையீட்டால் படம் பெரிய வெற்றி என அறிவிக்க பட்டது ... படம் ஆதவன் அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் சுமாராக இருந்தது ... ஆனாலும் விஜய்-ajith rasigargal சூர்யா vai விட வில்லை ... வலை தளங்களில் அந்த படத்தை கேலி கூத்தாக்கினர் ... இந்த படத்திற்கு பிறகு சூர்யா மேல் இருந்த நம்பிக்கை போய் கமல் ரசிகர்கள் சூர்யா வை ஒரு மசாலா பட நடிகராக பார்க்க தொடங்கினர் ... இதன் பிறகு வந்தது தான் விஜய் இன் காவலன் ... இந்த படத்தில் தான் DMk நேரடியாக விஜய் யுடன் மோதியது ... இந்த படம் தோற்றால் விஜய் யின் அழிவு நிச்சயம் ... அவர் காணமல் போயிடுவார் என்றே அனைவரும் நம்பினர்... இதற்கிடையே அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களோடு கை கோர்க்க , DMk மற்றும் சூர்யா ரசிகர்களின் எதிர்ப்பை மீறி படம் வெற்றி வாகை சூடியது ... இம்முறை கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் விஜய் கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ... பிற கென்ன விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவோடு மங்காத்தா மிகபெரிய வெற்றி அடைய இப்போது உண்மையிலயே விஜயா அஜித்தா சூர்யாவா என்றாகியது ...

  ReplyDelete
 10. சூர்யா ரசிகர்கள் ஒருபடி மேலே போய் சூர்யா மாஸ்+ கிளாஸ் , சூர்யா ரஜினி+கமல் ...ரஜினி கமல் விஜய் அஜித் எல்லாரையும் விட சிறந்த நடிகர் சூர்யா நு சொல்ல இங்கதான் சூர்யா வோட அழிவு ஆரம்பம் ஆச்சு ... இப்போ ரஜினி கமல் ரசிகர்களும் சூர்யா விற்கு எதிரானாங்க ... DMk தேர்தல்ல படு தோல்வி அடைய அரசியல் சுப்போர்ட்டும் சூர்யா கு போயிடுச்சு ... இந்த நிலமையில வெளியான படம் தான் 7 ஆம் அறிவு . அனால் விஜயக்கோ வேலாயுதம் அப்படி இல்லை - சூர்யா ரசிகர்களோட எதிர்ப்பு மட்டும் தான் ... விளைவு வேலாயுதம் சுமார இருந்தாலும் பிரமாதமான வெற்றி அடைஞ்சது ... மறுபுறம் 7 ஆம் அறிவ பத்தி யும் அது காமெடி பீஸ் ஆனா தாயும் ஊரே அறியும் ... சும்மா சொல்ல கூடாதுங்க வலை தளங்கள்ள அவளோ popular இந்த பேதி தர்மர் ... இதுக்கு முன்னாடி சூர்யா விஜயோட இடத்த பிடிசுட்டர்னு சொல்லுவாங்க ஆனா வலை தளங்கள்ள விஜயோட இடத்த புடிக்க இந்த 7 ஆம் அறிவு தாங்க காரணம் ... சும்மா சூர்யா வ ஒட்டு ஒட்டு நு ஓட்டுனாங்க விஜய்-அஜித் ரசிகர்கள். அப்புறம் வந்தது தாங்க கையில் ஒரு கோடி விஜய் டிவி program ... இது வந்ததுக்கு அப்புறம் சூர்யா வ ஒட்டாத ஆளே இல்லைன்னு சொல்ல லாம் ... இதுவரை அஜித்-விஜய் ரசிகர்கள் மட்டுமே கிண்டலடித்த சூர்யாவை இப்போது ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என அணைத்து ரசிகர்களும் ஒட்டி எடுக்க , ஏகத்துக்கும் காமெடி பீஸ் ஆனார் சூர்யா. சூர்யா ரசிகர்களாக இருந்த பல பேர் சூர்யா ரசிகர் நு வெளியில் சொல்ல முடியாத நிலை (முன்பு விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை ). பின்பு சூர்யா ரசிகர்களே அவரை ஓட்ட ஆரம்பித்தனர் ... 'மச்சான் சும்மா இருக்கியா வா சூர்யா வ ஓட்டலாம் ' இந்த அளவுக்கு சூர்யா வை கொண்டு வந்து விட்டது கையில் ஒரு கோடி ...இருந்தாலும் சில சூர்யா ரசிகர்கள் மாற்றான் kv ஆனந்த் மீது இருந்த நம்பிக்கையில் அமைதி காத்தனர் ... பிறகு வந்த படம் தான் நண்பன் ... இம்முறை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவோடு கமல் ரசிகர்களும் விஜய் கு ஆதரவு கொடுத்தனர் ... ஒரு வழியாக விஜய் மீது கமல் ரசிகர்களுக்கு இருந்த கோபம் தீர்ந்தது ... விஜயை பிடிக்காதவர்களின் ஆதரவோடு நண்பன் வெற்றி வாகை சூடியது. நண்பன் படத்திற்கு எதரி என்று பார்த்தல் சூர்யா ரசிகர்கள் மட்டுமே ...படம் பற்றி positive ஆனா டாக் வெளியாகியதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை... மறுபடியும் அவர்கள் பழைய யுத்தியை செயல் படுத்த தொடங்கினர் ... அது மிகவும் புத்திசாலி தனமான ஒன்று ... நண்பன் வசூல் பற்றி பல கருத்துக்கள் இருந்த அந்த சமயத்தில் , விஜய் fan என்று போட்டு நண்பன் ஏந்திரன் சாதனையை முறியடித்து ... விஜய் ரஜினி யை மிஞ்சி விட்டார் என்ன்று கமெண்ட் போடுவது ... இது ரஜினி ரசிகர்களை விஜய் ரசிகர்களுக்கு எதிராக திருப்பும் ... பிறகு கமல் படம் விமர்சனம் மற்றும் செய்தி வரும் போது விஜய் fan என்று தங்களை கூறிக்கொண்டு படத்தை கலாய்ப்பது ... இது கமல் ரசிகர்களை விஜய்க்கு எதிராக திருப்பும் ... இவர்களின் இந்த செயலால் நண்பன் வசூல் மூலம் லேசாக ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சண்டை மூண்டது. ஆனால் ஏந்திரன் சாதனை யை அணைத்து வலை தளங்களும் வெளியிட , நண்பன் அதை முறியடிக்க வில்லை என்று உறுதியானதும் அந்த சண்டை அடங்கியது. பின்பு மாற்றான் ... ஏற்கனவே காமெடி பீஸ் ஆகா வலை தளங்களில் பார்க்கப்பட்ட சூர்யா விற்கு மட்ட்ருமொரு தோல்வி படம் ... வலை தலங்களி மாற்றான் எந்தளவு famous என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ... சூர்யா ரசிகர்களே , எனக்கும் சூர்யா விற்கும் சம்பந்தமே இல்ல மச்சான் படம் சரி இல்லேன்னா என்ன ஒட்டாத டா நு சொல்ல வச்சுடுச்சு ... இதுவரை சூர்யா வின் தொடர் தோல்விகளை பற்றி வெளியில் பேசாத பத்திரிக்கைகள் இப்போது சூர்யா வை சாட ஆரம்பித்துள்ளன ... ஆனால் இன்னும் சில சூர்யா ரசிகர்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல திரிவது காமெடியாக தான் உள்ளது ... பிறகு வெளியானது தான் துப்பாக்கி ... துப்பாக்கி யின் வெற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ... அணைத்து ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் விரும்பும் படமாக மாறியுள்ளது துப்பாக்கி ... சூர்யா ரசிகர்களில் கொஞ்ச பேர் விஜய் ரசிகர்களாக மாறி விட்டார்கள் என்றே கூறலாம் ... விஜய் ரசிகர்களும் பெருமையாக தங்களை விஜய் ரசிகன் என்று வெளிபடையாக கூறும் அளவுக்கு மாற்றிவிட்டது ...

  ReplyDelete
 11. ஆனாலும் சூர்யா ரசிகர்கள் விடுவதாக இல்லை ... துப்பாக்கி வசூலை மங்காத்தா படத்தின் வசூலோடும், ஏந்திரன் வசூலோடும் ஒப்பிட்டு விஜய் ரசிகர்கள் போல் எழுதி , பரப்பி ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை விஜய் கு எதிராக திருப்ப பார்கின்றநேர் ... அனால் இந்த வித்தை இப்போது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது ... யாரவது விஜய் fan என்று போட்டு துப்பாக்கி breaks ஏந்திரன் ரெகார்ட் என்றால் அது விஜய் ரசிகர் இல்லை சூர்யா ரசிகர் தான் அக்கருத்தை எழுதி இருக்கிறார் என்று அனைவரும் தெரிந்து கொண்டனர் ... துப்பாக்கி யின் வெற்றி சூர்யா வின் வெளி ஏற்றத்தையும் அஜித்-விஜய் யின் பலத்தையும் நிரூபித்துவருகிறது ...

  ReplyDelete
 12. சூர்யா அவரது உழைப்பால் வென்றி பெற்றார் ஆனால் விஜய்-அஜித் ஓடு ஒப்பிடும் அளவு வெற்றி இல்லை...சூர்யா அவரது திறமயால் கொஞ்சம் வளர்ந்தார் ... ஆனால் அரசியல் , அஜித்-விஜய் சண்டை, ரஜினி - கமல் ரசிகர்களுக்கு அவ்வபோது விஜய் மீது ஈற்பட்ட கோபம் சூர்யா வை வளர்த்து விட்டது ... இப்போது சூர்யா அவர் உண்மையாக இருக்க வேண்டிய இடத்திருக்கு சென்று கொண்டிருக்கிறார் ... எப்பொழுதுமே ரஜினி - கமல் கு அடுத்து அஜித்-விஜய் தான் ... இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. if u dont agree, send me an email to johnasdf9876@yahoo.com

  ReplyDelete
 13. Surya is a next super star + ulaga nayagani

  ReplyDelete
 14. அஜித் விஜய் போட்டிக்கு பிறகு அந்த இடத்தில் யாருமில்லை . சிம்பு தனுஷ் இடையே போட்டி இல்லை பொறாமை இருக்கிறது அதனால் சுரியா தலதளபதிக்கு அடுத்து பேரிய நடிகர் அனால் நிலைமை பார்த்தால் அஜித் விஜய் சுரியாவை தான்டி சத்தம் இல்லாமல் போயிக்கொன்டே இருக்கிறார் கார்த்தி

  ReplyDelete
 15. போட்டி நடிகர்கள் ஆதிகம் இனி இருக்காது

  ReplyDelete

comment