Wednesday, April 4, 2012

தப்புமா கார்த்தியின் சகுனி ஆட்டம்??.



ஜனவரி முதல் நாள் வருகிறது, பொங்கலுக்கு வருகிறது, புதுவருடத்துக்கு வருகிறதென்று ஏப்ரல் மாதமே வந்துவிட்டது.. இன்னமும் படம் எப்ப ரிலீஸ் ஆகுதென்ற திகதியை உறுதிப்படுத்தமுடியாமல் தவிர்க்கிறது சகுனி படக்குழு... கடசியாக 2011  பொங்கலுக்கு வந்த சிறுத்தைக்கு பிறகு ஒன்றரை வருடங்களுக்கு பிறகுதான் அடுத்த படமான சகுனி வெள்ளித்திரைக்கு வரும்போல....   அப்பிடி என்னதானையா செய்யிறாங்க என்று கொஞ்சம் அலசித்தான் பார்ப்போமேன்.........


கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஆடுகளம்,காவலனுடன் கார்த்தியின் சிறுத்தையும் வந்தது.. சிறுத்தை படமானது தெலுங்கின் "கமெர்சியல் கிங் இயக்குனர்" என வர்ணிக்கப்படும் ராஜமௌலியின் இயக்கத்தில் ரவிதேயா மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2006 இல் வெளிவந்த "விக்ரமகுரு" என்ற படத்தின் ரீமேக் ஆகும்... முழுக்க முழுக்க தெலுங்கின் காரமசாலாவை அடையாளப்படுத்தும் இந்த படம் தமிழில் எப்பிடி போகும்? ....அதுவும் வெறும் மூன்றே மூன்று படங்கள் நடித்த கார்த்தி ஒரே நேரத்தில இருபது வில்லன்களை போட்டுத்தள்ளினா தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம்வேற அவர்களுக்குள் இருந்தது... ஆதலால் இயக்குனர் சிவா, ராஜமௌலியுடன் கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் வரை கதைவிவாதத்தில் ஈடுபட்டாராம், அதாவது தமிழ் இந்த படத்தை ரீமேக் பண்ணும்போது எந்தெந்த சீன்களை மாற்றவேணும், எதை மாற்றக்கூடாது என்பது பற்றி... சரி, ஒருவாறு படம் திரைக்கு வந்தவுடன் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,எப்பிடித்தான் மாற்றினாலும் அச்சொட்டா தெலுங்கு வாடை இருப்பது.. 


 இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்து ஏன்டா இந்த படத்தை பார்த்தேன் என்றிருந்தது.. கார்த்தி வில்லன்களுக்கு அடிக்கிற ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்ததுபோன்றதொரு பீலிங்க்ஸ். செம மொக்கையா இருந்திச்சு.... படம் நிச்சயமாக ஊத்தப்போகுது என்றுதான் நான் நம்பி இருக்க, ஒருவார முடிவில் வசூல் நிவரங்கள் வரத்தொடங்க பெரிய ஆச்சரியமா இருந்தது... வசூலில் ஆடுகளம், காவலனை பின்தள்ளிவிட்டு சக்கைப்போடு போட்டது.. இன்றுவரை இந்தப்படம் எப்பிடி தமிழ் ரசிகர்களால் "சூப்பர் ஹிட்" ஆனது என்பதற்கான காரணம் சரிவர புரியவில்லை.. எப்பிடியோ கொஞ்சம் படத்துக்கு அப்பால் அலசும்போது ஒருசில காரணங்கள் எழுந்தன, ஒன்று இந்தப்படம் பண்டிகைக்காலங்களில் வந்ததமை,  பண்டிகைக்காலம் என்றா இயல்பாகவே திரையரங்குக்கு கூட்டம் ஒதுங்குவது புதிதல்ல, மற்றது சிறுத்தையுடன் போட்டிக்கு வந்த காவலன்,ஆடுகளம் படங்கள் ஆக்சன் படமாக அமையாதது.. போட்டிப்ப்டங்கள் ரெண்டு மூன்று வரும்போது என்னதான் மொக்கை அக்சன் படங்களும் கொஞ்சம் தப்பித்துவிடும்... மேலும் விஜய் படம் வந்ததால் விஜய் 
எதிர்ப்பாளர்கள் சிறுத்தைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம்...  


சரி , ஏதோ சிறுத்தை சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.. சரி இனி நாம சகுனி ஆட்டத்துக்குள் நுழைவோம்... அறிமுக இயக்குனரின் படம் எண்டதால இயக்குனர் மீதான எதிர்பார்ப்பை தூக்கி போடலாம்... முழுக்க முழுக்க கார்த்தி மீதான எதிர்பார்ப்புத்தான்... படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி, அரசியல்வாதிகளை நக்கலடிப்பதாகவே இருக்கும் என மீடியா வாயிலாக கேள்விப்பட்டேன்... குறிப்பாக ஸ்பெக்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. உண்மையில் எந்த பிரச்னையை சித்தரிக்கப்போறார்கள் என்று சரியாக புரியாவிடினும், படத்தின் போக்கு நிச்சயமாக தெலுங்கு சாயலைத்தான் கொண்டிருக்கபோகிறது என்பது படத்தின் டெயிலரை பார்க்க ஊகிக்கமுடிகிறது..... இக்கதையை தெரிவுசெய்வதட்கு "சிறுத்தை" அளித்த வெற்றிதான் முக்கிய காரணியாக இருக்கலாம்....


சிறுத்தை படத்தில் உண்மையிலே கார்த்தியை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? அல்லது நான் மேலே சொன்ன காரங்களால்தான் படம் ஒடினதா என்பதுதான் இப்போது இருக்கும் பிரச்சனை... அஜித், விஜய், சூர்யா போன்றோர்களே இருபது படத்திற்கு அப்பால்தான் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார்கள்... அஜித் 25வது படத்தில்(அமர்க்களம்), விஜய் 36 வது படத்தில்(திருமலை), சூர்யா 23வது படத்தில்(அயன்)...தனுஷ்,சிம்பு,ஜீவா,ஜெயம் ரவி போன்றோர் இன்னமும் அந்த லிஸ்டுக்குள் இல்லை... அப்பிடி இருக்கும்போது கார்த்தியால் எப்பிடி முடியும்???? ............... படமே வரேல அதுக்குள்ளே இப்பவே வெற்றி தோல்வி பற்றி கதைக்கிறதா? சரி..சரி... அப்பிட்யே இந்த விசயத்திலிருந்து "எஸ்" ஆவோம்....


ம்ம்ம்.... அடுத்து ஆரம்பத்திலே சொல்லவந்ததை சொல்லிமுடித்திடுவோம்.. சகுனி பட தாமதத்துக்கு என்ன காரணம்??, இந்த படம் கொஞ்ச நாளைக்கு முதல்லே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம்... சரி படம் எப்பிடி என்று சிவகுமார் மற்றும் சூர்யாவுக்கு காண்பிக்கப்பட்டதாம், அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமானது.. சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லனா நடித்தவரின் பெர்போமான்ஸ் சூர்யாவுக்கு திருப்தியளிக்கவில்லையாம்.. ஆதலால் பழைய வில்லனுக்கு பதிலாக பிரகாஸ்ராஜ்ஜை போட்டு வில்லன் வார சீன் முழுவதையும் திருப்பி எடுக்கச்சொல்லிட்டாராம்... பாவம் கார்த்தி, சின்னப்பிள்ளையாச்சே அப்பா, அண்ணாட சொல்லை தட்டேலாது.... சரி ஏதாவது நடத்துங்கப்பா என்று சொல்லிட்டு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் "அலெக்ஸ் பாண்டியன்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்....
(அயன் படத்தின்ட மைனசே வில்லன்தான்... எப்பிடி அதை சூர்யா மறப்பார்?)


எது எப்பிடியோ சகுனி ஆட்டத்தை பார்க்கப்போற ரசிகர்களில் திணிக்காது வில்லன்களில் திணித்தா போதும்...

3 comments:

  1. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
    Vist Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete
  2. நான் DVD இல்த்தான் சிறுத்தை பார்த்தேன், எனக்கு கார்த்தியின் மாஸ் பிடித்திருந்தது, அதிலும் போலீஸ்காரன் பொண்டாட்டியை காப்பாற்ற வில்லன் வீடு போய் அடிக்கும் ஒவ்வொரு அடியும் செமையா இருந்திச்சு; கார்த்தியின் மிகப்பெரும் பலம் காதல்காட்சிகள் + நகைச்சுவை, எல்லோருக்கும் எளிதில் அமையாத நகைச்சுவைதான் கார்த்தியை எல்லாராலும் ரசிக்க வைக்கிறது. அதுதான் ஆயிரத்தில் ஒருவன் தவிர கார்த்தியின் மிகுதி மூன்று படங்களையும் மக்கள் ரசிக்க காரணம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நிச்சயமாக காதல் காட்சிகள், காமெடி, சண்டை காட்சிகள் எல்லாமே கார்த்திக்கு சிறப்பாக பொருந்துகின்றது........ எண்டாலும் ஓவர் மசாலா என்றுதான் தோன்றுகிறது... பேரரசின் படங்களை மீழ ஒருதடவை ஜாபகப்படுத்தியது....

      Delete

comment