Friday, February 3, 2012

மெரீனாவில் நான்ஒரு விடயத்தை முதல்ல சொல்லிடணும், மெரீனா படத்திண்ட ஹீரோ சிவகார்த்திகேயன் எண்டு நம்பி போய்விடாதீர்கள். அவர் அங்க ஒரு கெஸ்ட்ரோல்தான், ஏன்தான் படம்வரமுதல் சிவா..சிவா எண்டு பில்டப் விட்டாங்களோ தெரியல. சரி விடயத்துக்கு போவோம். என்ன ஆர்வக்கோளாறோ தெரியல காலையில தெஹிவளை வழியா போகேக்க கொன்கோட் தியேட்டர்ல மெரீனா கட்டவுட்டை பார்த்ததிலிருந்து எப்பிடியாவது இண்டைக்கே (முதன்நாளே) அந்த படத்தை பார்த்திடனும் எண்டு முடிவெடுத்துவிட்டேன். சரி ஒருவாறாக இரவு 7.00pm ஷோவுக்கு டிக்கட்டை எடுத்திட்டு உள்ளபோய் அமந்தாச்சு.

பசங்க புகழ் பாண்டிராஜ்ட நம்பிக்கை ஒருபுறம், மற்றும் ஹீரோ சிவகார்த்திகேயன் ஆதலால் காமெடிக்கு பஞ்சமிருக்காது, ஏனென்டா அவர் விஜய் டீவியில மற்ற நடிகர்கள், நிகழ்ச்சியில பங்குபற்றும் நேயர்களை போட்டு வாங்குறதை நான் அறியாதவனில்ல. ஆதலால தண்ட கரியர்ல கொஞ்சம் கவனமாயிருப்பார்தானே! என்ற நம்பிக்கை. ஒருமாதிரி படம் ஆரம்பிச்சாச்சு. ஆரம்பத்தில ஒரு சிறுவனை வைச்சு ஒரு பாடல்காட்சி, சென்னையில் உள்ள கூவம் முதற்கொண்டு ஆயா வடைசுடுறது வரைக்கும் சுருக்கமா சென்னை நிலவரத்தை அந்த பாட்டில காட்டினாங்க. அப்புறம் படத்தில் இருகதைகள் இருவேருவிதமா சென்றுகொண்டிருந்தன, வழமையா கடற்கரையோரங்களில் அவதாநித்துபார்த்தா இருவிதாமான தரப்பினரையே அதிகமாக காணக்கூடியதாயிருக்கும் ஒன்று கொஞ்சம் கைலெவலா இருக்கிற காதல்ஜோடிகள், மற்றொன்று சுண்டல்,ஐஸ்கிரீம் விற்கும் சில்லறை வியாபாரிகள், களியாட்டங்கள் செய்து வருமானத்தை பெறுவோர், பிச்சைக்காரர்கள் போன்ற தரப்பினர். இந்தப்படத்தில் இயக்குனர் சொல்லவந்த விடயம் இதுதான் சென்னை மெரீனா கடற்கரையோரங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், மேற்குறிப்பிட்ட இருதரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்பனவே இதன் மையக்கரு. 

அதன்படி வயிற்றுப்பிளைப்புக்காய் சில்லறைவியாபாரங்களில் ஈடுபடும் சிறுவர்களின் (அதில ஒராள்தான் இந்த படத்திண்ட ஹீரோ எண்டுகூட சொல்லலாம்) வாழ்க்கைமுறையும், சிவகார்த்திகேயன் -ஓவியாவின் காதல் சீன்களும் சமாந்தரமாய் சென்றுகொண்டிருக்கு..சிவாவை சொல்லப்போனா விஜய் டீவியில நிகழ்ச்சி தொகுப்பாளரா என்ன செய்தாரோ அதையேதான் இங்கயும் பலோ பண்ணியிருக்கார். ஓவியாவை கலாய்க்கிறார் கலாய்க்கிறார் சப்பா.. தியேட்டர்ல ஐம்பதுபேர்தான் இருந்தாலும் சிவாட என்ரியில "தலைவா" எண்டு கோசம் எழுப்பியதிலிருந்து சிவா வாறா ஒவ்வொரு சீனுமே தியேட்டர்ல செம கைதட்டல்.. ஒவ்வொரு வசனமும் அந்தமாதிரி இருக்கு.. நான் நினைக்கிறேன் இந்தப்படத்தில சிவாட டயலாக்குகளை அவரேதான் எழுதியிருக்கிறார்போல.

அதேபோல மறுபக்கம் வெவ்வேறு குடும்பங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக தாய்தகப்பனை இழந்து/பிரிந்து சென்னைக்கு பிழைக்கவந்த சிறுவர் பட்டாளத்தின் வாழ்க்கையை இயக்குனர் சித்தரிச்சுள்ளார்..இப்பிடியே மாறிமாறிப்போய் கிளைமாக்சில் சிறுவர்தொழிலாளிகள் எல்லோரும் பொலிசாரால் பிடிச்சு அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி அவர்கள் எல்லோரும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அத்துடன் படமும் ஓவர். மறுபுறம் சிவாட முதற்காதல்(ஓவியாவுடன்) புட்டுக்கிச்சுபோய் கொஞ்சம்கூட சளைக்காமல் மனுஷன் அடுத்த லவ்வையும் சிறப்பாக(?) கண்டினியூ பண்ணுறமாதிரி சீன், அத்தோட இதுக்குமுதல் அதுவும் ஓவர். 
இப்படத்தில் பெரிய ஏமாற்றம் என்னவெண்டா இரண்டு கதைகளை சமாந்தரமா எடுக்கும்போது இரண்டுக்கும் இடையில் ஏதோவொரு சம்பந்தத்தை காட்டியிருக்கவேணும். ஆனா இங்க அப்பிடி எதுவும் செய்யவில்ல பார்வைக்கு இரண்டு படங்களை துண்டு துண்டா பல பாகமாக பிரிச்சு முதலில் ஒருபடத்தின் ஒரு பாதியும் பிறகு மறு படத்தின் ஒரு பாதியும் என மாறிமாறி கோர்த்துவிட்டதுபோல இருந்திச்சு அத்துடன் படம் சீரியஸா போய்க்கொண்டிருக்கும்போது பொத்தெண்டு முடிந்ததுபோலவும் ஒரு உணர்வு. மொத்தத்தில் மெரீனா ஒரு சுமாரான படம். 
(இது எனது பார்வையில் மெரீனா..அவ்வளவுதான்! உங்க பார்வைகள் வேறுபடலாம். அத்துடன் இது எனது சுயமா எழுதுற முதல் பதிவு. ஏதாவது பிழைகள் இருந்தா உங்களுக்குள்ள மட்டும் சிரியுங்கப்பா, அடுத்தவங்கிட்ட எல்லாம் சொல்லி சிரிக்காதீங்க)4 comments:

 1. நல்ல முயற்சி; தொடர்ந்து பாக்கிற படங்களுக்கு உங்கள் பார்வையை எழுதுங்க. இவற்றுடன் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை, நடனம், பாடல்கள் என்று உங்களுக்கு அந்தந்த விடயங்கள் எப்படி தோணிச்சோ அதை அப்டியே எழுதுங்க; அதில யாரும் பிழையோ குறையோ சொல்ல முடியாது, காரணம் - அது உங்க பார்வை.

  எழுத்து நடை சரளமா இருக்கு, விடாம எழுதுங்க....

  Best of luck .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு.

   Delete
 2. அட இவரை எங்கையோ பாத்திருக்கனே!!:P
  நல்ல விமர்சனம்...

  ReplyDelete
  Replies
  1. வேற எங்க கொழும்பு சைட்டில வெட்டியா திரிஞ்சிருப்பேன் அவ்வளவுதான்///நன்றி மைந்தன் உங்கள் கருத்துக்கு...

   Delete

comment