HOME
அஜித்
திரைப்பட விமர்சனங்கள்
சினி அலசல்
கிரிக்கட்
Monday, September 20, 2010
6 மொழிகளில் அசத்தும் ரோபோ
ஒன்றல்ல, இரண்டல்ல… 6 மொழிகளில் பேசுகிறது இந்த ரோபோ. பல்வேறு பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகிறது. அந்த வகையில் வரவேற்பாளராக வேலை செய்வதற்கேற்ப இந்த பன்மொழி பேசும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.>
சீனாவின் ஷாங்காயில் `இன்பினிட்டி பிளாசா’ அரங்கில் 2010-ம் ஆண்டுக்கான 50 நாள் கண்காட்சி நடைபெறுகிறது. இதைப் பார்வையிட பல்வேறு நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். பார்வையாளர்களை வரவேற்பதற்கும், அவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கும்தான் விசேஷ அம்சங்களுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பெயர் `ஹாய்போ ரோபோ’. இது 155 சென்டி மீட்டர் உயரம் உடையது. மொத்தம் 37 ரோபோக்கள் கண்காட்சிப் பணிக்காக தயாரிக்கப்பட்டிருந்தன. ரோபோக்களின் மார்பில் ஒரு திரை உள்ளது. அதில் கண்காட்சி விவரங்களை தொடுதிரை முலம் தெரிந்து கொள்ளலாம்.
ஷாங்காய் விமான நிலையத்திற்கும், கண்காட்சி வளாகத்திற்கும் இடையில் நின்றபடி 6 மொழிகளில் கண்காட்சி விவரங்களைக் கூறி பார்வையாளர்களை வரவேற்று கவர்ந்திழுத்தது இந்த ரோபோ. பார்வையாளர்கள் விரும்பினால் அவர்களை படம்பிடித்து கொடுக்கவும் செய்தது. பார்வையாளர்களை கண்காணிக்கும் வேலையையும், கனிவாக உபசரிக்கும் வேலையையும் கச்சிதமாக செய்த இந்த ரோபோக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
comment
No comments:
Post a Comment