நடிகர்கள்- அதர்வா, அமலாபால், ஜெயப்பிரகாஸ், நாசர், சந்தானம்
இயக்கம்-எல்றேட்குமார்
இசை- ஜீவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு-ஆர்.எஸ்.இன்போர்டைன் மென்ட்
எல்றேட்குமாரின் இயக்கத்தில் அதர்வா, அமலாபால்,ஜெயப்பிரகாஷ்,நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் "முப்பொழுதும் உன் கற்பனைகள்". இந்த திரைப்படம் வரமுதல் படத்துக்கு பாரிய எதிர்பார்ப்பிருந்தது, இதற்கு இயக்குனரோ அல்லது நடிகரோ காரணம் இல்ல, படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போர்டைன்மெ ன்ட் தான், காரணம் இவர்கள் இதற்குமுதல் வெளியிட்ட "கோ" மற்றும் "விண்ணைத்தாண்டி வருவாயா" ஆகிய இருபடங்களுமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற படங்கள். இந்த நிறுவனத்துக்கு கீழே வரும் படங்களுக்கு கதை அந்நிறுவனமே தெரிவுசெய்வது வழக்கம், அப்புறம் அவர்கள் அதற்கேற்றாற்போல தகுந்த இயக்குனரை தேர்வுசெய்வார்கள். இந்தப்படமும் ஆரம்பத்தில் வேறொரு இயக்குனர் இயக்கிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனத்துடனான முரண்பாட்டையடுத்து படம் எல்றேட்குமாரின் கைக்கு மாறியது. இயக்குனர் எல்றேட்குமாருக்கு உதவியாக முதலிரு பட இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் தமது இணை இயக்குனர்கள் ஒருசிலரை இவருக்கு துணையாக அனுப்பினார்கள். அதனால்தான் என்னவோ படத்திலும் கௌதம் மேனன்ட பட சாயல் தெரிகிறது.
படத்தை சுருக்கமா பார்ப்போமாயின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவரின் அன்பில் சாய்ந்திருக்க துடிக்கும் ஒரு ஆணின் கதைதான் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதல் காட்சிகளில் குறிப்பாக சைக்கோ காதலையே இயக்குனர் படம் பிடித்து காட்டியிருக்கார். இவ்வாறான கதையம்சமுள்ள படங்கள் நிறைய தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், இதில் இயக்குனர் பழைய ரெண்டிலிருந்து விலகி சற்று சூடாகவே படைத்திருக்கிறார்..
சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆறுதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது. ஆனால் அவளோ வெறும் நட்பாகவே பழகுகிறாள். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமலாபால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும்(கற்பனையில்) என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.
அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, அப்போதுதான் ஒருத்தி இல்லாமலே அவ இருப்பதாக கருதும் அதர்வாவின் சைக்கோ காதல் அமலாவால் உணரப்படுகிறது. அதன்பிறகு மாமனார் ஜெயப்பிரகாசுடன் சேர்ந்து அதர்வாவை எப்பிடி குணப்படுத்தலாம் என்று சிந்தித்து முதல் கட்டமாக அதர்வாவின் ஆரம்ப வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக அவரின் சொந்த ஊருக்கு சென்று கடந்தகால விடயங்களை நாசர் மூலம் கேட்டகின்றனர், அப்போதுதான் அதர்வா சிறுவயதிலிருந்தே அம்மாவின் பாசமிகு அரவணைப்பில் வாழ்ந்தது, பின்னர் தாயாரின் இழப்பு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரோ ஒருவரின் அன்பு அவனுக்கு தேவைப்படுகின்றது என்ற விடயம் அமலா மற்றும் ஜெயப்பிரகாசால் உணரப்படுகிறது. அதன்பின் ஜெயப்பிரகாசின் அறிவுரைக்கமைய அமலா அதர்வாவை குணப்படுத்தும் நோக்கோடு அவன் வீட்டிலேயே இருந்து அவரை காதலிக்கிறமாதிரி நடிக்கத்தொடங்கினார்.. அச்சமயம் அமலாவுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மணமகனின் இரு நண்பர்கள் அமலாவை கடத்தி கொலைசெய்ய முயற்சிக்கின்றனர், காரணம் அவர்கள் மூன்று பேரும் ஆண்-ஆண் உறவுமுறைப்பழக்கம் உடையவர்கள்.. அமலாவின் வருகை தங்கள் உறவை பாதித்துவிடும் என்பதற்காகவே கொலைசெய்ய முயற்சித்தார்கள், அச்சமயம் அதர்வா வந்து சண்டைபோட்டு, அதன்பிறகு அதர்வா-அமலா சேர்வதோடு படமும் ஓவர்...
என்னுடைய பார்வையில் படத்தின் சில குறை நிறைகள்.
1 என்னதான் பழைய கதை என்றாலும் சிறப்பான மேக்கிங் உடன் சுடச்சுட இயக்குனர் தந்திருக்கார்.. ஒவ்வொரு சீனையும் பார்க்கும்போது இது அறிமுக இயக்குனரின் படமா என வியக்கத்தோன்ருகிறது. முதல் படத்திலே பாரியதொரு சுமையை இயக்குனர் ஏற்றுள்ளதால் சில சில தவறுகளும் வெளிப்படையாகவே தெரிகின்றது.
2 ஒரு சில சீனைத்தவிர படம் எந்தவொரு கணத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய செய்யவில்ல, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை..
3 இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றாலும் அதர்வா, அமலாபாலின் நடிப்பு சிறப்பானதாக இருந்தது குறிப்பாக அதர்வாவின் இரண்டாம் படம் என்று சொல்லமுடியாதளவுக்கு முதிர்ச்சியான நடிகராக தென்பட்டார்.
4 சந்தானத்தின் காமெடி பெரிதாக இல்லையென்றே சொல்லணும், அவருக்கு ஏற்கனவே ரசிகர்களின் அமோக ஆதரவு இருப்பதால் அவர் வரும் சீன்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் கிடைத்ததே தவிர(நான் பார்த்த திரையரங்கில்), மற்றும்படி ஒன்றுமில்லை.. சந்தானத்தை இந்தப்படத்தில் உள்ளடக்கியதால் படத்தின் ஸ்கிரீன்பிளேயில் தொய்வு ஏற்பட்டிப்பது போன்ற உணர்வு. எந்த இடத்தில் எப்பிடியான காமெடி சீனை வைப்பதெண்ட இயக்குனரின் குழப்பம் வெளிப்படையாகவே தெரிகின்றது.
5 படம் முழுக்க முழுக்க A கிளாஸ் ஆடியன்ஸ்சுக்குரிய படம், கிராமப்புற மக்களில் எத்தனைபேர் இந்த படத்தை விரும்புவார்கள் என்பது சந்தேகமே!
6 இடைவேளைக்குமுதல் சப்பா..... எவ்வளவு டுவீஸ்ட், இடைவேளை வரைக்கும் என்ன நடக்குதென்றே சொல்லமுடியாதளவுக்கு குழப்பம், அமலாபால் இருவேடங்களில் நடிக்கிராவோ என்ற சந்தேகம்... இடைவேளையின் போது படம் பார்க்கவந்தவர்கள் பெரும்பாலானோர் எவருமே திருப்தியுறாதமாதிரி இருப்பதை காணமுடிந்தது..
7 தங்களின் ஆண்-ஆண் உறவு குழம்பிடும் எண்டதுக்காக அமலாவை அதர்வாவின் நண்பர்கள் கொலை செய்ய முயற்சிப்பது(ஏற்கனவே மூன்று பெண்களை இதே காரணத்துக்காக கொலை செய்துவிட்டார்கள்) கொஞ்சம் ஓவராய்த்தான் இருந்தது.. இந்த உண்மையை சொன்னாலே ஒரு தமிழ் பெண் தானாகவே கல்யாணம் வேண்டாம் ஆளைவிட்டாபோதும் என்று ஓடிவிடுவாங்க.. இப்பிடியெல்லாம் கொலைதான் செய்யவேண்டும் என்றில்ல...
8 ஜீவிபிரகாசின் படத்துக்கான பின்னணி இசை பரவாயில்லை, பாடல்கள் பற்றி நான் சொல்லவிரும்பேல, காரணம் நான் புதிய பாடல்கள் கேட்பதில்லை.. ஆனால் படத்தில் அளவுக்கதிகமான பாடல்கள் சலிப்படைய செய்தன.. பெரும்பாலான பாடல்கள்(நான்கு) ஒரே பார்முலாவில் காட்சியமைக்கப்பட்டமை இன்னொரு மைனஸ்...
9 படத்தில்வரும் சண்டைக்காட்சிகள் ரஜினி, அஜித்,விஜய் போன்றோரின் படங்களில் இருப்பதுபோல கொஞ்சம் ஓவரா இருக்கின்றது..இதை ரஜினி, அஜித்,விஜய் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், ஆனா அதர்வாவை அப்பிடியொரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சந்தேகமே!
படத்தில் குறைகளைத்தான் அதிகம் சுட்டிக்காட்டிவிட்டேன்போல தோன்றுகிறது, என்ன செய்ய நிறைகளை சொல்லபோனால் இன்னும் இரண்டு பதிவுகள்வரை நீண்டுவிடும்.. மொத்தத்தில் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்... இந்தப்படம் சிறப்பான வெற்றியடையுமானால் அதர்வாக்கு பெரியதொரு திருப்புமுனை கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை///
Super... Nice... Tamil Cinema News
ReplyDeletethanks 4 ur comments///
Deleteபார்க்க வேண்டும் என நினைத்து இதுவரை பார்க்காத பட லிஸ்டில் இதையும் சேர்த்துக்கிறேன் ....
ReplyDeleteRajini, Vijay, Ajith ilum parka Atharva vin fight scene parkka kudiyathaka irunthathu....
ReplyDeletenanri shayini ungalin varukaikku...
Deleteஇந்த உண்மையை சொன்னாலே ஒரு தமிழ் பெண் தானாகவே கல்யாணம் வேண்டாம் ஆளைவிட்டாபோதும் என்று ஓடிவிடுவாங்க.. :P
ReplyDeletenanri ano ungalin varukaikku...
Delete