Friday, July 5, 2013

சிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே!)


ஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.


நடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான்,                             ராதாரவி, நாசர்
இயக்கம்- ஹரி
இசை-தேவிசிறீ பிரசாத்
ஒளிப்பதிவு- பிரியன்
தயாரிப்பு- லக்ஸ்மன் குமார்
வெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)

கதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.


சூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.

ஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்திரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.

அனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.

விவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.

பாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.


படத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே!! நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..

*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


14 comments:

 1. Replies
  1. நிச்சயமாக.... நன்றி சஞ்சய் உங்கள் வருகைக்கு :))

   Delete
 2. Replies
  1. உங்கள் ரசனைக்கு பிடிக்கவில்லைப்போலும் :)) anyway வருகை தந்தமைக்கு நன்றி:))

   Delete
 3. konjam kuda logica illa summa padam fasta poganumnu yathatho solra thoothukudi pora south africa pora surya mattum thaan police mathavanga yellam chumma, africa police kuda chumma surya vela seiyuratha pinnadi thaan nikkiranga herova buildup pannalam aana story, dialogue, direction yellama suryankira mathiri romba buildup padam fulla surya odrar, kathrar, plan podrar avara yella theeviravathiyum ivarukku mattum thaan theriyumaam. Oru Doll mathiri intha padatha partha padam super.

  ReplyDelete
  Replies
  1. படத்தின் வெற்றி உங்களுக்கு பதில் சொல்லட்டும்... anyway வருகை தந்தமைக்கு நன்றி:))

   Delete
 4. niraiya padam 2 part eduthu flop aairuku ana singam 2 is block buster so....padam super........

  ReplyDelete
 5. Nice machan!!!!!, good reviews............ Plz continue.... it

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே:))

   Delete
 6. film ok...but songs are not good

  ReplyDelete
  Replies
  1. ஆனால் பாடல்கள் ஆடியோவா கேட்பதைவிட படத்தில் வீடியோயாவா பார்க்கும்போது நன்றாகவே இருக்கின்றது.

   Delete
 7. குப்னப் படம்

  ReplyDelete
  Replies
  1. இது என்ன மொழி பாஸ்?

   Delete

comment