Wednesday, June 26, 2013

எனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)


இந்தப்பதிவை எழுத கொஞ்சம் தர்மசங்கடமாய்தான் இருக்கிறது, ஏன்னா சமுகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்களாக,விமர்சகர்களாக இருப்பவர்கள் அனேகமாக மணிரத்தினம், பாலா, பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் ரசிகர்களாகவே தங்களை காட்டிக்கொள்வார்கள் அதுமட்டுமல்ல மசாலா இயக்குனர்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள். அப்பிடி மசாலா பேர்வழிகளை பிடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாம கொஞ்சம் வித்தியாசம்தான் பேரரசு போன்ற காரமசாலா இயக்குனர்களையும் விரும்பமாட்டம், பாலா போன்றவர்களையும் விரும்பமாட்டம். இடைநிலை மசாலா இயக்குனர்களான சங்கர்,ரவிக்குமார்,ஹரி,முருகதாஸ்,கே.வி ஆனந்த் போன்றோரே நம்ம பேவரைட். உண்மையை சொல்லப்போனால் அதிகப்படியானோர் ரசிப்பது இவர்களின் படங்களைத்தான். அதில் இந்தப்பதிவில் ஹரியைப்பற்றி பார்ப்போம்.


சரணின் அசிஸ்டெண்ட்டா இருந்து 2002 இல் தமிழ்சினிமாவில் இயக்குனராக காலடி வைத்த இவர் இன்றுவரை 11 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 ஆவது திரைப்படமான சிங்கம் 2 எதிர்வரும் ஜூலை 5 இல் வெளியாகவுள்ளது. இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் தரமுன் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துதல் சிறந்ததென்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் இயக்குனர் சேரன் உரையாற்றுகையில் மசாலா இயக்குனர்கள் எப்பபாரு ஒரே விடயத்தையே திரும்ப திரும்ப படமா எடுக்கிறார்கள், வித்தியாசமா எந்தவொரு படைப்பையும் வழங்குறார்கள் இல்லை என்றார். அதற்கு ஹரி சொன்ன பதில் "வித்தியாசமா எடுக்கணும் என்றால் சொந்தமா முதல் போட்டு படத்தை எடுங்கள், அடுத்தவனின் முதலை அழிக்காதீர்கள். என்னுடைய படங்கள் எப்போதுமே இயக்குனர்களுக்கு நஷ்டத்தை குடுப்பதில்லை என்றார்."..... இதுதான் ஹரி.


இன்றைய இயக்குனர்களில் மினிமம் கரண்டி இயக்குனர்களில் ஹரியும் முதன்மையானவர். இவரின் படங்களை பார்த்தீர்களாயின் படம் முழுக்க முழுக்க பக்கா கமெர்சியல் அம்சங்களை கொண்டிருக்கும், திரைக்கதையில் எப்போதுமே ஒரு வேகம் இருக்கும். இது ஆங்காங்கே வரும் பிழைகளையும் மூடி மறைத்துவிடும், மேலும் படங்கள் பொதுவா கிராமத்துப்படங்களே. வெளிநாடுகளில் பொதுவா சூட்டிங் எடுப்பதில்லை (சிங்கம் பாடல் காட்சிகள், சிங்கம் 2 தவிர), மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது குறுகிய காலப்பகுதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார், மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள். இப்பிடியான அம்சங்களால் இவரின் படங்களால் பொதுவாக விநியோகிஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் வருவதில்லை. (வேங்கை திரைப்படம் மட்டும் சிலவேளைகளில் சில தரப்பினர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கலாம். மற்றய படங்கள் அவ்வாறில்லை.)


இவர் இதுவரை எடுத்த 11 திரைப்படங்களில் தமிழ், சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் ஆகிய ஆறு படங்கள் கிளீன் ஹிட். கோவில், அருள், ஆறு, சேவல் ஆகிய நான்கும் அவரேஜ். வேங்கை மட்டுமே வந்ததே தெரியாமல் சென்ற திரைப்படம். இந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக தேர்வு செய்ததே முதலாவது பிழை, அத்துடன் கதைக்களத்திலும் ஹரி விட்ட தவறு படத்தை தோல்வியடைய செய்துவிட்டது.

ஹரியின் படங்களில் எனக்கு பிடித்த டாப் 5

5. தாமிரபரணி


மற்றைய ஹரி படங்களுடன் ஒப்பிடும்போது இதில் ஆக்சன் குறைவு. விஷாலின் ஹீரோ வால்யுவை துல்லியமா மதிப்பிட்டு குடும்ப செண்டிமெண்டை வைச்சே படத்தை ஹிட் குடுத்துவிட்டார்.

4. சாமி


இந்தப்படம் வந்த காலப்பகுதியில் விக்ரமுக்கு இருந்த செல்வாக்கின் பாதியளவுகூட இப்போ விக்ரமுக்கு இல்லை என்றே சொல்லலாம். போலீஸ் கதையில் உருவான இந்த திரைப்படம் "காக்க காக்க" எப்பிடி மக்கள் மத்தியில் இன்னொரு ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல மசாலா போலீஸ் படங்களில் என்னுடைய ரசனையில் இதுவொரு வித்தியாசமான திரைப்படம். மேலும் இப்படத்தில் விவேக்கின் காமெடி, காதல் காட்சிகள் எல்லோரையும் கவருபவையாகவே இருந்தது. தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி ரிலீசாகப்போகிறது.

3. தமிழ் 


பிரஷாந்த்,சிம்ரன் என்ற அழகான இரு ஜோடிகளை வைத்து காதலுக்கு கொஞ்சம் கூடுதலா முன்னுரிமை கொடுத்த திரைப்படம். 

2. சிங்கம் 


ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம். மூடிய நிலையில் இருந்த தமிழகத்து திரையரங்குகள் சில சிங்கத்தால் ரீ.என்றி அடைந்தன.

1. வேல்


ஒரு மசாலா திரைப்படம் எப்பிடி இருக்கவேணும், எல்லா தரப்பையும் கவருமாறு எப்பிடி படம் எடுக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக சொல்லவைத்த திரைப்படம் இது. 2007 இல் வெளிவந்த ஆக்சன்,கதை,குடும்ப செண்டிமெண்ட்,காதல்,காமெடி என்று எதிலுமே சளைக்காமல் நேர்த்தியான ஸ்கிரீன்பிளேயில் உருவான திரைப்படம்.

*இதேபோல சிங்கம் 2 உம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்* 

No comments:

Post a Comment

comment