Friday, July 19, 2013

மரியான்- சுருக்கமான விமர்சனம்


பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.


படத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.


இதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்பதிவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார்? என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.


தனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார்? வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை?? அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் "3" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே!                        


6 comments:

 1. மச்சி "தல" படம் வந்தால் தான் மிரட்டும் டா

  ReplyDelete
  Replies
  1. ஹ..ஹா அது சொல்லவா வேணும்..தமிழகமே அதிரும் மச்சி..

   Delete
 2. Super...... Thanks For Your Review Saji (y)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சஞ்சய்....

   Delete
 3. உண்மையான கருத்து........

  ReplyDelete

comment