Thursday, May 23, 2013

மறக்கமுடியாத தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தோல்விகள்

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் பரமரசிகர்களில் நானும் ஒருத்தன். எத்தனையோ வெற்றிகளை தென்னாபிரிக்க அணி பெற்றபோது கைதட்டி குதூகலித்தாலும் ஒருசில தோல்விகள் என்றுமே மறக்கமுடியாதவை. அதில் பெரும்பாலானவை உலகக்கிண்ண போட்டித்தொடர் மற்றும் சம்பியன் டிராபிக் போட்டித்தொடர்களில் பெற்ற தோல்விகளை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமான 2000 ஆண்டிற்கு பிறகேயான ஒருநாள் போட்டிகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

1. ICC Champions Trophy, 2002/03 / இந்தியா vs தென்னாபிரிக்கா (Scorecard)




கொழும்பில் நடைபெற்ற சம்பியன் கிண்ண அரையிறுதிப்போட்டியில், எதிரணி இந்திய அணி என்றதால் மிகுந்த ஆர்வத்துடனும் வெறியோடும் பார்த்த போட்டி. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்தில் மிக வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தாலும் பிற்பாடு 261 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 262 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடியபோது கிப்ஸ் சிறப்பானதொரு சதத்தை பெற்றும்,இறுதியில் கலீசின் மந்தமான துடுப்பாட்டத்தால் அநியாயமாக தோல்வியடைந்தது. என்னவோ தெரியேல இந்தப்போட்டிக்குப்பின் கலீசில் பயங்கர கடுப்பு.

2. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs மேற்கிந்தியா (Scorecard)


முதலில் துடுப்பெடுத்தாடிய மேட்கிந்தியதீவுகள் இறுதி இருபது ஓவர்களில் 170 ஓட்டங்கள்வரை எடுத்தது. இப்போ இது சாதரமான விடயம் எண்டாலும் பத்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு ரன்ஸ் எடுப்பது பெரியவிடயமே! தென்னாபிரிக்க அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும்போது முதலில் தாமதமாக பந்து வீசியதுக்காக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே இறுதியில் தோல்விக்கும் காரணமாச்சு, ஆம் மூன்று ஓட்டங்களால் தோல்வி.

3. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs இலங்கை (Scorecard)


டக்வோர்த்-லூயிஸ் முறையில் வெற்றியிலக்கை களத்தில் நின்ற துடுப்பாட்டவீரர்களுக்கு தவறாக வழங்கியதால் முதற்சுற்றுடனேயே தென்னாபிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது. டக்வோர்த்-லூயிஸ் முறையில் இரண்டு பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எண்டிருந்தது. அணித்தலைவர் பொலக் இரண்டு பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தாலே போதும் என்று களத்தில் துடுப்பெடுத்தாடிய வீரர்களுக்கு தவறுதலாக சொல்ல,பட்டிங் செய்துகொண்டிருந்த பவுச்சர் கடைசிக்கு முதல் பந்தில் சிக்சர் அடித்துவிட்டு, வெண்டாச்சுதானே எண்டு கடைசிப்பந்தில் ஓட்டம் பெறாமல் பந்தை மறித்துவிட்டார். ஆனா பிற்பாடுதான் போலக்குக்கு தெரிந்தது இந்தவிடயம். ஆகவே போட்டி சமநிலையில் முடிவடைந்து, தென்னாபிரிக்க அணி முதல் சுற்றோடே தொடரை விட்டு வெளியேறியது.
(மழை பெய்யத்தொடங்கியதால், 45 ஓவர்களில் போட்டி கைவிடப்ப்படுமாயின் டக்வேர்த்-லூயிஸ் முறைப்படி 230 runs எடுத்தா வெற்றி பெறலாம் என்றிருந்தது.மற்றும்படி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாட தொடங்குகையில் 45 ஓவர்களில் target 230 runs எண்டல்ல.... மழை இடையில்தான் வந்தது.)

4. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)


306 என்ற உயர்வான ஓட்ட எண்ணிக்கையை முதலில் துடுப்பெடுத்தாடி பெற்றும், டக்வேர்த்-லூயிஸ் முறையில் நியுசிலாந்து வெற்றி பெற்றது.            

5. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs பங்களாதேஷ் (Scorecard)


கடைக்குட்டி அணியான பங்களாதேசுடன் 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

6. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)



தென்னாபிரிக்கா அணிக்கு உலகக்கிண்ணம் என்றா என்னவோ தெரியேல முக்கியமான போட்டிகளில் பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாகிடுவார்கள். இது ஒவ்வொரு உலகக்கிண்ணபோட்டித்தொடரிலும் நடக்கிறது. பெரும்பாலும் தூரதிஸ்டத்தாலேயே வெளியேறிக்கொண்டுவந்தது. ஆனா கடந்தமுறை உலகக்கிண்ண போட்டியில் காலிறுதியில் கடைக்குட்டி அணியான நியுசிலாந்திடமே தோல்வியுற்றது எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. பார்க்கப்போனா காலிறுதியோ/அரையிறுதியோ நெதர்லாந்து,அயர்லாந்து அணி வந்தாலும் தென்னாபிரிக்காவால் வெற்றிபெறமுடியாதுபோல, அந்தளவுக்கு ஜென்மத்துசனியன் தென்னாபிரிக்காவை தொடர்ந்துகொண்டே போகிறது.


No comments:

Post a Comment

comment