Saturday, May 25, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1999 ஆம் ஆண்டு)


நான் தமிழ் சினிமா பார்க்கத்தொடங்கியது கிட்டத்தட்ட 1997,1998,1999 காலப்பகுதியில். அந்தக்காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் டீவி இல்லை, எங்கையாவது திருமணவீடு,பூப்புனித நீராட்டுவிழா என்றால் இரவில் அந்த வீட்டில் படம் போடுவார்கள். ஒரு ஊரே அங்கு திரண்டுவரும் படம் பார்க்க. அப்பவெல்லாம் படம் பார்க்கும்போது அநேகமாக ஒன்றும் புரியாது. சண்டைக்காட்சிகள் வந்தா மட்டும் மும்முரமா கண் டீ.வியை நோக்கி இருக்கும். மற்றும்படி நண்பர்களுடன் அரட்டை. கிட்டத்தட்ட அந்த நினைவுகள் கடந்து இன்றைக்கு பதினைந்து வருடங்கள் ஆகினும், அந்தக்காலத்தில் வெளியான படங்களே எப்போதும் எனது விருப்பத்தெரிவில் முதலிடம். அவற்றுள் 1999 இல் வெளியான என்னை கவர்ந்த சில படங்களின் தொகுப்பை பகிரலாம் என்று நினைக்கிறேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

படையப்பா 

நீ வயசானாலும் உன் அழகும்,ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை என்று ரஜினியைப்பார்த்து சொந்தர்யா ஒரு வசனம் சொல்வார். அதேபோலவே திரைப்படமும் பதினைந்து வருடங்கள் தாண்டியும் இன்னும் எல்லோரினதும் விருப்பத்துக்குரிய படமாகவே இருக்கிறது. படம் தொடக்கத்தில் சாதாரண கல்லூரி மாணவனா இருக்கும் ரஜினி படம் முடியும்போது தனது பிள்ளைகளுக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார். இளமை கெட்டப்பில் இருந்து முதுமை கெட்டப் வரை ரஜினிகாந்தை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் செவ்வனே நடித்திருக்கமுடியாது.

உன்னைத்தேடி 



சுந்தர்சி இயக்கத்தில் அஜித், மாளவிகா,விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். குடும்ப கதையம்சத்துடன்கூடிய திரைப்படம். தேவா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

வாலி 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் எண்டதை விட அசத்திய திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டி குடுக்கையில் தன்னுடைய கரியரில் தான் நடித்த படங்களில் தன்னுடைய நடிப்பால் வெற்றியடைந்தது என்று பெருமைப்படக்கூடிய முதலாவது திரைப்படம் வாலி என்றார். அந்தளவுக்கு பின்னி எடுத்திருப்பார். அண்ணன் தம்பியாக கெட்டப் வேறுபாடின்றி வாயசைவு,கண்ணசைவில் கதாபாத்திரங்களை வேறுபடுத்தி துல்லியமாக நடித்திருப்பார். இந்தப்படத்துக்காக அஜித்துக்கு இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.

ஆனந்த பூங்காற்றே



ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்,கார்த்திக்,மீனா நடிப்பில் வெளியான குடும்ப சித்திரம். பலமானதொரு திரைக்கதையை வைத்து இயக்குனர் சிறப்பாகவே காட்சியமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் அருமை.

அமர்க்களம்

சொல்லவே தேவையில்ல. நவீன அஜித்குமாரை செதுக்கிய திரைப்படம். தமிழ் சினிமாவில் மாஸ் மாஸ் மாஸ் என்று சொல்வார்களே! அதுக்கு வித்திட்டதே இந்த திரைப்படம்தான். முகத்தில் லேசான தாடி, அழகு,வெறித்தனம்,தாதாயிசம் என எல்லாமே உருவாக இந்தப்படத்தில் அஜித் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார். அஜித்தின் ரசிகர் வட்டத்தின் மிகப்பெரும் ஏற்றம் இந்தப்படத்துக்குப்பிறகே!

நீ வருவாயென 

பார்த்தீபன்,அஜித்,தேவயானி நடிப்பில் உருவான காதல் காவியம். பாடல்கள் அனைத்துமே இன்றைக்கும் பட்டையை கிளப்பவல்லது.

ஜோடி 

பிரசாந்த்,சிம்ரன் நடிப்பில் வெளிவந்த காதல்+குடும்ப காவியம். ஹீரோயினின் பெற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோவும், ஹீரோவின் பற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோயினும் என்ன செய்கிறார்கள்? இதுவே இப்படத்தில் சுவாரிசியம்.

ஆசையில் ஓரு கடிதம் 



பிரசாந்த்,கௌசல்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான அருமையான திரைப்படம். கௌசல்யாவில் வாழ்க்கையில் பிரசாந்தின் காமெடித்தனம் எவ்வாறு வினையாகிறது..இதுவே படத்தின் ஹைலைட்.

கண்ணுபடப்போகுதையா



பாரதி கணேஷ் இயக்கத்தில் விஜயகாந்த்,சிம்ரன்,கரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். எத்தனை தடவை வேணும்னாலும் சலிக்காம பார்க்கக்கூடிய குடும்பச்சித்திரம். பாடல்கள்,காட்சியமைப்பு எல்லாமே பிரமாதம். செண்டிமென்தான் கொஞ்சம் ஓவர். இது தற்கால சந்ததியினருக்கு ஒரு மைனசாவும் இருக்கலாம்.

துள்ளாத மனமும் துள்ளும்.



எனக்கு பொதுவா விஜயின் அக்சன் படங்கள் பிடிக்கிறேலை. இன்றுவரை விஜயின் பிடித்த முதல் ரெண்டு படம் எதுவென்று கேட்டா ஒன்று பிரியமானவளே மற்றயது துள்ளாத மனமும் துள்ளும். தகுந்த கதைக்களத்துடன் எழில் அவர்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள்,சிம்ரனின் அபரிதமான நடிப்பின் துணையோடு மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.

பாட்டாளி 



சரத்குமார்,தேவயாணி,ரம்யாகிரிஷ்ணன் நடிப்பில் உருவான முழுநீள காதல்+குடும்ப திரைப்படம். தேவயானியை காதலித்துக்கொண்டு ரம்யாவுடன் குடும்பம் நடத்தும் சரத்குமார் படும்பாடு என்ன?? இதுவே படத்தின் ஹைலைட்.

காதலர் தினம்

ரஹ்மானின் மந்திர இசையில் குணால்,சோனாலி பிந்துவே நடிப்பில் வெளியான அற்புதமான திரைப்படம். ஒரு பிள்ளையை வளர்க்கிற அளவுக்கு பெற்றோரிடம் பணவசதி இல்லை என்றால் பிள்ளையை பெறவேகூடாது. இதுவே படத்தில் கடைசியில் நாயகன் சொல்லும் தத்துவம். எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.


இதுதவிர இவ்வாண்டு வெளியான சூரியப்பார்வை, என்சுவாசக்காற்றே,கனவே கலையாதே,சேது உட்பட படங்களும் என்னை நன்றாக கவர்ந்த படங்கள். இதேபோல் இதுவரை பார்க்காத 1999 இல் வெளிவந்த படங்களும் உண்டு. இவ்வாண்டு மொத்தமாக 81 படங்கள் வெளிவந்தன.

No comments:

Post a Comment

comment