Friday, May 31, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1998 ஆம் ஆண்டு)


கடந்த பதிவில் தமிழ் சினிமாவின் பொற்காலம்(1999 ஆம் ஆண்டு) என்ற தலைப்பில் 1999 இல் வெளிவந்த எனக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்கியிருந்தேன்.அதன் தொடர்ச்சியா இப்பதிவில் 1998 ஆம் ஆண்டில் வெளியான என்னை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை பகிரவுள்ளேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

1. காதல் மன்னன் 


அஜித்-சரண் கூட்டனியில் உருவான இரண்டாவது திரைப்படம். முழுநீள காதல் திரைப்படம். வெறும் ஒருரூபாய்க்காக பந்தயம் பிடித்துவரும் ஹீரோ ஹீரோயினின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு போட்டோகிராபரா சென்று இறுதியில் அந்த பெண்ணையே கரம் பிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை.பாரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அருமை.

2. மூவேந்தர்


ஹீரோ,ஹீரோவின் அப்பா, தாத்தா என சண்டியர்களாகவே காலத்தை கழிக்கும் இவர்கள், சரத்குமார் தேவயானியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரத்,மற்றுமிருவரும் எவ்வாறு திருந்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை. வித்தியாசமான கதைக்கருவில் உருவான குடும்பத்திரைப்படம்.

3. மறுமலர்ச்சி 


மம்முட்டி,தேவயாணி நடிப்பில் உருவான முழுநீள கிராமத்து குடும்பக்கதை. வழமையான கதைக்களம் என்றாலும் இயக்குனர் பாரதி சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

4. நினைத்தேன் வந்தாய் 


வழமையான முக்கோண காதல் கதையாகினும், படத்தில் அமைந்த அனைத்துப்பாடல்களும் சுப்பரோ சூப்பர்.. மேலும் காமெடி காட்சிகளை அதிகம்கொண்டிருப்பதாலும் வழமையான முக்கோண காதல் கதையிலும் கொஞ்சம் மாறுபட்டதாகவே பார்ப்போரை மகிழ்விக்கும்.

5. ஜீன்ஸ் 


இருவேடங்களில் பிரஷந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படம். கதை பெரிதாக சொல்லுமளவுக்கு புதிதாயில்லாவிடினும் சங்கரின் பிரமாண்டம் மற்றும் இசைப்புயலின் அதிரடி பாடல்களுக்காக எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.

6. நட்புக்காக 



கே.எஸ் ரவிக்குமார் தனக்கேயுரிய பாணியில் அசத்திக்காட்டிய திரைப்படம். நட்பை சித்தரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அவை பொதுவாக கல்லூரி நண்பர்களின் நட்பு அல்லது நடுத்தர வயதினருடைய நட்பையே சித்தரிக்கும். இது வயதுபோன காலத்திலும் விஜயகுமார்-சரத்குமாரின் நட்பு எப்பிடி வலிமையானது?? என்பதை அழகாகவே இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கார்.

7. உன்னிடத்தின் என்னை கொடுத்தேன் 


அஜித்,கார்த்திக்,ரோஜா நடிப்பில் உருவான நகைச்சுவை+காதல்+குடும்ப திரைப்படம். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத திரைப்படம். பாடல்கள் அனைத்தும் இன்றும் எல்லோர் வாயில் முணுமுணுத்தபடியே இருக்கின்றது..

8. கண்ணெதிரே தோன்றினாள்


உயிருக்குயிரா நேசிக்கின்ற நண்பனின் தங்கையை காதலிக்கலாமா? அதனால் எப்பிடியான பிரச்சினைகள் நட்புக்குள் வரும்.. என்பது பற்றிய திரைப்படம்தான் இது. பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் உருவான மற்றுமொரு அற்புதமான திரைப்படம்.

இது தவிர அவள் வருவாளா,சிம்மராசி,பூவேலி,தாயின் மணிக்கொடி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களும் என்னை மிகவும் கவர்ந்த படங்களாகும். இவ்வாண்டு மொத்தமாக 67 திரைப்படங்கள் வெளியாகின.

No comments:

Post a Comment

comment