Sunday, April 29, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 2 (பிறந்தநாள் ஸ்பெசல்)

                              Happy advance birthday to my dear Thala Ajith

பாகம் 1 ஐ படிக்க
இன்று உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்தால் சொந்த உழைப்புக்கு அப்பால் ஆரம்பத்தில் யாராவது ஒருவரின் ஆதரவு இருந்ததெண்டே சொல்லலாம்.. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எவருமே இல்லை. அவர் எப்பிடி வந்தார்? யாரால வந்தார் என்பது இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கு. ஏனெனில் அவர் ஒரு சுயம்பு, தன்னந்தனியே போராடி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தைரியத்துடன் உழைத்து வெற்றிக்கொடியை ஏற்றியுள்ளார். இன்றும்கூட அவரின் வெற்றிக்கு,வளர்ச்சிக்கு யாருமே சொந்தமோ,உரிமையோ கொண்டாட முடியாது.. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்,வெற்றியிலும் அவர் மட்டுமே உரித்துரையவராவார்.. அஜித்தின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அஜித்தாலே செதுக்கப்பட்டது.. வாழ்க்கை கொடுத்த வலி இன்று அவரை பூரண மனிதனாகிவிட்டது.. தான் வாழ்வில் பட்ட துன்பங்களை தன்னுடைய ரசிகர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் அவருக்கு அதீத வெறி உண்டு.. 


இவர்தான் ராம்ஜி

அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "யாரையும் கண்மூடித்தனமாய் நம்பவேண்டாம்" என்று சொன்னார்.. இதுகூட அவரின் வாழ்வில் சந்தித்த ஒரு ஏமாற்றம்தான்... கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் "ராம்ஜி" என்று ஒரு நடன பயிற்சிவிப்பாளர் கொடிகட்டி பறந்தார், நடன இயக்குனர் என்பதற்கு அப்பால் ஹீரோக்களுக்கு டூப்பாக, ஹீரோக்களுடன் சிறுசிறு வேடங்களிலும் வந்து போனவர்.. இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர், இவரின் வளர்ச்சியில் அஜித்தின் பங்கு நிறையவே உண்டு.. ஒருதடவை பணஉதவி கேட்டு அஜித்திடம் சென்றபோது எவ்வளவு தேவை என்று கேட்க சற்று தயங்கவே... நண்பராச்சே வெற்று காசோலையில் கையொப்பம் இட்டு குடுத்தார் தேவையானதை எடுக்கச்சொல்லி.. ஆனா, இதை சாதகமாக பயன்படுத்திய ராம்ஜி மிகப்பெருமளவு பணத்தை அபகரித்துவிட்டு வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்... இது அஜித்தின் வாழ்விலே மறக்கமுடியாத நம்பிக்கை துரோகமாச்சு......... (ராம்ஜி காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு என்ற பாட்டு சீனில் ஆடியவர்) 

அஜித்தும் சூப்பர்ஸ்டாரும்...


அஜித்தும் சூப்பர்ஸ்டாரும் என்பதை பார்க்கமுன் ஒருவிடயத்தை உணர்ந்துக்கொள்ளணும்... தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வளர்ந்து வரும்போது முன்னைய தலைமுறை நடிகர்களே பிரிந்து புது தலைமுறை நடிகர்களுக்கு ஆதரவளிப்பார்கள்... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தலைமுறை நடிகர்களில் ஒருவர் மாஸ் ஹீரோவாக இருப்பார், அவரின் ரசிகர்களை யார் அடுத்த தலைமுறை நடிகர்கள் கவர்கிறார்கள் என்பதுதான் போட்டி.... எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பெருமளவானோர் அடுத்த தலைமுறையில் ரஜினிக்கு ஆதரவளித்தார்கள்... அதேபோல ரஜினியின் ரசிகர்களை அடுத்த தலைமுறை நடிகர்களில் யார் கவருவது??? இதுதான் இப்போதுள்ள தலைமுறை நடிகர்களான அஜித்,விஜய்க்கு இடையிலான போட்டி... இந்த விடயத்தில் ஆரம்பத்தில் அஜித் இது பற்றி கண்டும் காணாமலே இருந்தார்.. ஆனால் விஜய் மேடைக்கு மேடை ரஜினியை தலைவர் தலைவர் என்று துதிபாடி பக்காவா காய்நகர்த்தினார்..ரஜினியே ஒரு சமயத்தில் விஜய் தன்னுடைய ரசிகர்தான் என்றும், ஒரு மேடையில் விஜய்,விக்ரமை பார்த்து "இவர்களை பார்க்க நானும் கமலும் போல இருக்கு" என்றார்.. அதே சமயத்தில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஜித் "எனக்கு சூப்பர்ஸ்டாராக வர ஆசை உண்டு" என்று சொன்னார், அதை திருபடுத்திய மீடியாக்கள் அஜித் தான்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொன்னதாக பப்ளிசிட்டி பண்ணினார்கள்.. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் அந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களை விஜய் பக்கம் விரும்பியோ விரும்பாமலோ இழுக்க முக்கிய காரணமா போச்சு... அதன் தாக்கம் அன்று அஜித்தை வெகுவாய் பாதித்தது...


ஆனால், என்னதான் பாம்பை அணைத்து பால் குடுத்தாலும் அது பால் குடுத்தவனை கொத்தவே செய்யும்... அதை ரஜினி ரசிகர்கள் 2005/07 காலப்பகுதியில்தான் உணந்தார்கள்.. சந்திரமுகியுடன் போட்டியா சச்சினை இறக்கியது, மற்றும் வெறும் 2000 பேர் பங்குபற்றிய லோயா கல்லூரி வாக்கெடுப்பில் இரண்டு சதவீத வித்தியாசத்தில் வென்றுவிட்டு போட்ட கூத்துக்கள்..... உடனேயே ரஜினி ரசிகர்களை அஜித் பக்கம் சாதுவாக திசை திருப்ப செய்தன..... அதுக்கப்புறம் அஜித்தின் காட்டிலும் அடமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது... 2006 இல் அஜித் மூன்று வேடங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் சக்கைப்போடு போட்ட வரலாறு படத்தில் அஜித்தின் பிரமாத நடிப்பை பார்த்து தன்னுடைய இல்லத்துக்கு அஜித்தை விருந்துக்கு அழைத்தார் சூப்பர்ஸ்டார்... அன்றைய அந்தநாள் அஜித்தின் தலையெழுத்தையே மாற்றும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்... ஆமா, அப்போதுதான் தனது பலவருட கனவான பில்லா ரீமேக் உரிமையை ரஜினியிடம் கேட்டார் அஜித்... சூப்பர்ஸ்டாரும் உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.. அதுமட்டுமில்லை பட தொடக்கவிழாவுக்கு வந்து விளக்கேற்றியும் விட்டார்... படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது.... பாட்ஷா படம் வரும்போது அப்போதைய போட்டி நடிகர்களிலிருந்து ரஜினி எப்பிடி எட்டாத உயரத்துக்கு போனாரோ அதேபோல பில்லா வந்தாப்பிறகு அஜித்தும் போட்டி நடிகர்களுடன் ஒப்பிடுகையில் எங்கேயோ உச்சத்துக்கு போய்விட்டார்.. தமிழ் சினிமாவிலே பில்லா மாதிரி ஒரு முழுக்கமுழுக்க ஸ்டைலிசான படத்தை அதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை.. அதே பில்லாபோல தாங்களும் ஸ்டைலிசா நடிக்க ஆசைப்பட்டு போட்டிநடிகர் தோல்வியுற்றதும் எல்லோருக்கும் தெரிந்ததே..


அது மட்டுமில்லாது, ஆரம்ப காலத்தில் மனம்போல மேடைகளில்,மீடியாக்களுக்கு முன்னாள் பேசிவந்த அஜித்துக்கு ரஜினி வழங்கிய ஆன்மீக புத்தகம் அஜித்துக்கு வாய்க்கட்டு போட்டு அவரை பூரண மனிதனாக்கியது.. அதற்குப்பிறகு அவரின் பேச்சில் பக்குவம்,முதிர்ச்சி பளிச்சிட்டது....பின்னர் பாலா, அஜித்தை பணம் கேட்டு மிரட்டியபோது ரஜினி செய்த உதவி, அப்புறம் அசல் பட தொடக்கவிழாக்கும் ரஜினி வந்து சிறப்பித்தார்... அப்புறமாய் சந்திரமுகி பாகம் ரெண்டு கதையுடன் வந்த இயக்குனர் வாசுவுக்கு அஜித்தை சிபாரிசு செய்தார்..எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" வில் அஜித்தின் பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது.. இவ்வாறு இன்றுவரை ரஜினி-அஜித் உறவு பலம் மிக்கதாய் இருக்கின்றது..ஒரு அஜித் ரசிகனாய் எந்தக்காலத்திலுமே ரஜினி மீது மிகுந்த மரியாதையை ஒவ்வொரு அஜித் ரசிகனும் வைத்திருப்பான். எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது தமிழகத்தில் உள்ள ஒரு அஜித் ரசிகர் மன்றத்தினர்(எந்த இடம் என்று நினைவில் இல்ல) ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம்கூட செய்தார்கள். அதேபோல ரஜினி ரசிகர்களும் இன்று அஜித்தை ரெம்பவே நேசிக்கிறார்கள்......





21 comments:

  1. சிறந்த படைப்பு உங்களுடையது....படித்ததும் வியந்தேன்..ஆச்சரியபட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

      Delete
  2. உண்மைலேயே.தல தலதான்....ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாதவர்..

    ReplyDelete
  3. உங்களின் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்பார்க்குறேன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இந்த வார முடிவுக்குள் போடுவேன்..

      Delete
  4. இப்பொழுதுதான் தங்களது பிளாக்குக்கு வந்தேன்..இந்த பதிவை வாசித்தேன்..

    அஜித் அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.அழகான நடிகர்..அருமையான மனிதர்.நல்ல மனிதரை என்றுமே மக்களும் ரசிகர்களும் கைவிடுவதில்லை..அவர் மென்மேலும் பல வெற்றிகளை குவிப்பார் என்பதில் சந்தேகமில்லை.அவரது பிறந்த நாளுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ..

    தங்களது இந்த தொகுப்பு பாராட்டத்தக்கது.ரசித்தேன்.மிக்க நனறி.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி நண்பா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்..... அப்பிடியே தங்களில் பதிவுகளை எட்டிப்பாக்கும்போது புரிந்தது... தங்களின் பன்முகத்தன்மையான அறிவு.. அப்பிடி என்றா என்னவென்றே அறியாத பல விடயங்கள அலாக்காக ஆராய்ந்திருக்கீங்க....

      Delete
  5. உங்களின் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்பார்க்குறே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே....இப்போ கொஞ்சம் பிசியா இருக்கு. வியாழனுக்கு பிறகுதான் போடுவதாக உள்ளேன்...

      Delete
  6. nice my friend
    i waiting for ur part 3

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பா.......

      Delete
  7. very nice comment

    ReplyDelete
  8. Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  9. Happy to read about our Mr. Thala... I am Mr. Ajit rasigai from Malaysia... ajit is a good actor... His words in movies is like a proverbs of life... Proud to be Ajit sir rasigai... vaalu vaala vidu...superb sir....

    ReplyDelete
    Replies
    1. அருமையான பின்னூட்டம்.. வாழ்த்துக்கள்..

      Delete
  10. நண்பா, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் தலைக்கு செக் மோசடி பண்ணியவர் தான், தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்க (பெப்ஸி பிரச்சனையில்) தனது முதல் ஆசை கார்-ஐ விற்று ஒரே நாளில் திருப்பி காசை கொடுத்தார். அந்த ரத்னம் சார் இன்று கஷ்டத்தில் இருக்கையில் வலிய தனது அடுத்த படத்தினை அவருக்கே செய்கிறார். தல தல தான்...

    ReplyDelete
    Replies
    1. ஓ இந்த விடயம் எனக்கு தெரியாது... வருகை தந்தமைக்கும்,தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா,,,

      Delete
  11. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்..
    Simply Superb

    ReplyDelete
  12. பாட்ஷா ரீமேக்கில் அஜித் நடிக்க வேண்டும்.

    ReplyDelete

comment