Sunday, September 19, 2010

சூதாட்டத்தில் சிக்கிய பாக்.-கிரிக்கெட் ஆட தென் ஆப்பிரிக்க வீரர்கள் தயக்கம்

லண்டன்: மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தென் ஆப்பிரிக்க வீரர்கள் தயங்குவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

அடுத்த மாதம் அபுதாபி மற்றும் துபாயில் தென் ஆப்பிரிக்கா,பாகிஸ்தான  இடையிலான கிரிக்கெட் தொடர்நடைபெறவுள்ளது. 5 ஒரு நாள் போட்டிகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும், 2 டுவென்டி 20 ஆட்டங்களிலும் விளையாடவிருக்கின்றனர். 

ஆனால், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட மூத்த வீரர்கள் பலரும் விரும்பவில்லையாம். 

இதுகுறித்து ஒரு வீரர் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில், அவர்களுடன் விளையாடுவது பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவது போன்றாகும் என்றார்.

கிரிக்கெட் வாரியம் மறுப்பு:

ஆனால் பாகிஸ்தானுடன் ஆட வீரர்கள் மறுப்பதாக வெளியான செய்தியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைமை செயலதிகாரி ஜெரால்ட் மஜோலா கூறுகையில், எந்த வீரரும் பாகிஸ்தானுடன் ஆடுவது குறித்து அதிருப்தி தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானுடான தொடரை ரத்து [^] செய்யும் திட்டமும் எங்களிடம் இல்லை.

இந்தத் தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட தொடர். எனவே இது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment

comment