Monday, August 12, 2013

அஜித்துக்கு போட்டி சூர்யாவா? விஜயா?


கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவருக்குமே கிட்டத்தட்ட இளைஜர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என ஒரேமாதிரியான ரசிகர் மட்டங்கள் இருந்தனர்.ஆனால் போகப்போக இருவருக்குமிடையேயான ரசிகர் பரம்பல்கள் மாறத்தொடங்கிவிட்டன. அமர்க்களத்தை தொடந்து தீனா,அட்டகாசம்,பில்லா போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நடித்ததாலும் அவரின் சினிமாவுக்கு வெளியேயான அவரின் வெளிப்படையிலான பேச்சுக்கள் இளைஜர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதே காரணிதான் அஜித் "கிங் ஆப் ஒபெநிங்" ஆயிருப்பதற்கு காரணம். அதேபோல டான்ஸ், காமெடி என்று மசாலா படங்களில் நடித்ததால் சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என அவரின் ரசிகர் வட்டம் வேறுபடத்தொடங்கியது. ஆதலால் அஜித், விஜய் ஆகியோர் தொடர்ந்தும் இதே பாணியில் பயணித்துக்கொண்டிருந்ததால் எத்தனை படங்கள் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மாறவில்லை, காரணம் வேறு தெரிவு இல்லை. இடையிடையே வேறு நடிகர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் வகையில் 2007/08 இற்கு பின்னரான காலப்பகுதியில் சூர்யாவின் வளர்ச்சி அமைந்தது. சரி, சூர்யாவின் வளர்ச்சியால் அஜித்துக்கு ஆப்பா? விஜய்க்கு ஆப்பா எண்டு பார்ப்போம்.


ஒரு நடிகனுக்கு இருக்கும் சிறுவர், பெண், குடும்ப ரசிகர்களானது எப்போதுமே நிரந்தரமானதல்ல. காரணம் சிறுவர்கள் அறியாமை காலப்பகுதியில் ஒரு ஹீரோவை ரசிப்பார்கள் பிறகு வயது ஏற ரசிப்புத்தன்மை மாறுபடவே தங்களது ஹீரோவையும் மாற்றிக்கொள்வார்கள். இன்று விஜயகாந்தை கழுவி ஊத்தும் அநேகப்பேர் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவயதா இருக்கும்போது சண்டைக்காட்சிகளுக்காக அதே விஜயகாந்த் படங்களைத்தான் முண்டியடித்து பார்த்தார்கள். அதேபோலவே அர்ஜுனையும் ரசித்தார்கள். இன்று அதே அர்ஜினுக்கு யார் ரசிகர்கள்? அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு கொஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி??? வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா? சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது?? அதுபோக சுருங்க சொன்னா பெண்களுக்கு எப்ப ஒரு அழகான ஹீரோ தென்படுகிராரோ அப்போதே அவர்களுக்கு ரசிகர்களாகின்றனர்.. அதேபோலவே குடும்ப ரசிகர்கள், இவர்கள் அநேகம்பேர் இந்த ஹீரோக்குதான் ரசிகர் என்றில்ல. சிம்பு,தனுஷ் போன்றோர் குடும்ப ரசிகர்களை கவரும்விதமாக படம் நடித்தாலே அவர்களின் படங்களை முண்டியடித்து பார்ப்பார்கள். அப்பிடி இருக்கேக்க எங்க ஹீரோக்கு சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என எல்லா மட்டத்திலையும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வெட்டித்தனமாக சுயதம்பட்டம் அடிப்பது காமேடித்தனம். இதே அந்தக்ஹீரோ தொடர்ச்சியாக நாலைஞ்சு மொக்கைப்படங்கள் குடுத்து அந்த இடைவெளியில் போட்டியா வேறு ஹீரோக்கள் வந்திட்டா இந்தக்கூட்டங்கள் அப்பிடியே மற்ற ஹீரோக்கு மாறிடுவார்கள். இளைஜர்களின் நாயகனாக எந்த ஹீரோ இருக்கிறாரோ அவர்தான் எப்பவுமே கிங்!


சரி சூர்யா மேட்டருக்கு வருவோம், இப்பவெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதைவிட சூர்யாவையே அதிகம் கலாய்க்கிறார்கள். காரணம் விஜய் எந்தவகையில் எந்த மட்ட ரசிகர்களை கவரும்வகையில் படங்கள் நடித்தாரோ! அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே! ஒருநடிகனுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமே ஹிட் என்று சொன்னா உண்மையான ஹிட்டாகிவிடாது. அப்பிடி பார்த்தா அஜித் ரசிகர்களுக்கு அசல்,ஏகன் எல்லாமே ஹிட்தான். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில் ஆரம்பகாலங்கள்போல விஜய் தரப்பால் இனியும் ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா வைத்து ரசிகர்களை முட்டாளாக்க முடியாது.


ஆரம்பத்தில் நடிப்பு, பைட், டான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா இன்று காமெடியை தவிர மிகுதி எல்லாவற்றிலுமே பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பார்வைக்கு கட்டுமஸ்த உடல்வாகு மற்றும் முகவசீகத்துடன் இருக்கின்றார். விஜயும் தான் அழகுதான் எண்டதுக்காக முகத்துக்கு மேக்கப் பண்ணி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பது அண்மையில் வந்த ஒருசில படங்களில் தெரிகிறது, ஆனா பாவம் முடியல. மேக்கப்புக்கு செலவு செய்யும் நேரம், காட்டும் கரிசனையில் பாதியளவாவது நடிப்பதில் கவனம் செலுத்தினால் இன்றைக்கு இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம். கண் இமையையும், வாயையும் தவிர தளபதியின் முகத்தில் வேறு எதுவுமே அசையாது. அது சோகமோ, காதலோ, சந்தோசமோ, கோபமோ!! என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், "எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே!! அதுபோல அஜித்தின் "பில்லா"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம்!! சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும்? மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க? காலம் மாறிச்சு தளபதி அவர்களே!!! இப்பெல்லாம் புதுசா வாற கத்துக்குட்டியளே விழுந்து புரண்டு ஆடுது.

சரி மேட்டருக்கே போவம் இன்றைய பெண்களின் கனவுநாயகன் யாரெண்டு கேட்டால் நிச்சயப்படுத்தி சொல்லலாம் சூர்யாதான் எண்டு. அதேபோலவே தரமான கதையம்சங்களுடனான படங்களை தேர்வுசெய்து நடிப்பதால் விஜய் போன்ற பொம்மை நடிகர்களை ரசித்தவர்கள் எல்லாம் சூர்யாவை ரசிக்க தொடங்கிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் இடம், ரசிகர்பலம் எப்போதுமே நிரந்தரம். சூர்யா, விஜயில் ஒருவர் தொடர்ச்சியா ரெண்டு படங்கள் பிளாப் கொடுத்து மற்றயவர் அந்த இடைவெளியில் ஹிட் குடுத்தால் எல்லாமே தலைகீழாகிடும். அண்மையில் சிங்கம் 2 பெரு வெற்றியை அடைந்தது. மறுபக்கம் தலைவா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்க்கு ஜில்லாவும் சொதப்பி சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் கிடைக்குமாயின் நிச்சயம் ரஜினி-கமலுக்கு பிறகு அஜித்-சூர்யாதான்... அதில் சந்தேகமில்ல.

50 comments:

  1. Thala pola varuma .....true news

    ReplyDelete
  2. அருமையான சமகால கட்டுரை.. பாராட்டுக்கள் நடிப்பிலேயே(?)மட்டும் நின்று இருந்தால் விஜய் ஓரளவுக்கு சமாளித்து இருப்பார் ....ஆசை அளவுக்கு அதிகமாயிடுச்சு,அப்பா அதிகமாக மூக்கை நுழைக்க தொடங்கி விட்டார்...விஜய் மக்களுக்கு நன்மை செய்கிறதா படத்தில் மட்டும் காட்டினால் போதாது நிஜத்திலும் செய்யணும்...அஜித் சூர்யா போட்டி பார்ப்பதுக்கு ஆரோக்கியமாக இருக்கும் நடிக்கத் தெரிந்த நடிகர்கள் போட்டி போட்டு நடிப்பது ரசிகர்களுக்கு நன்மையே ரஞ்சன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரஞ்சன் அண்ணா... எவ்வளவு காலத்துக்கு போலி மார்கெட்டை மக்கள் மத்தியில் உருவாக்கி பிழைக்கப்போறார்கள் என்றதை பொறுத்திருந்து பார்ப்போம்! நன்றி உங்களின் வருகைக்கு..

      Delete
  3. நன்றி Vetri Velan மற்றும் rifthiy////

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி சாரா உங்களின் வருகைக்கு//

      Delete
  5. என்னிக்குமே தல தான் தளபதி'க்கு போட்டி. தளபதி'க்கு தலதான் போட்டி.
    தல தளபதி'க்கு உள்ள ரசிகர் மோதலும் சரி. ரசிகர்கள்க்குள்ள நட்பும் இது வரைக்கும் எம்.ஜி.ஆர். - சிவாஜி,
    ரஜினி - கமல் யாருக்குமே இருந்ததில்ல.. இதுக்கு அப்புறம் வர்றவங்களுக்கும் இருக்க போறதுமில்ல.

    சூர்யா நல்லா நடிகந்தான்யா. அதுக்காக விஜய் கூட ஒப்பிடுறது ரொம்ப ஓவர்.
    அதே மாதிரி அஜித்'க்கு போட்டியா சூரியாவ சொன்னா அது அஜித்'க்குத்தான் அசிங்கம்.
    அஜித்தனய்யா சொல்லிருக்காரு. எனக்கு நண்பனா இருக்க தகுதி தேவைஇல்ல. எதிரியா இருக்க தகுதி வேணுன்னு.


    அந்த தகுதி சூர்யா'ட்ட கிடையாது.

    தல தளபதி போல வருமா. . .

    எங்க கிட்டயே படமா. . .



    ReplyDelete
    Replies
    1. செம பஞ் மச்சி...

      ///அஜித்'க்கு போட்டியா சூரியாவ சொன்னா அது அஜித்'க்குத்தான் அசிங்கம்.///////

      ஆனா அதே சூர்யாவுக்கு கீழ்தான் விஜய் இருப்பார்....

      Delete
  6. pls dont compare thala with any damn shit... pls..\\\\
    thala is an role model for youngsters..
    one who acts is called actor = thala is great in that...
    next to him is vikram ...
    one more thing thala irukkum podhu yethuvum aada mudiyathu... thala pola varathu da..

    ReplyDelete
    Replies
    1. @prabhu
      அருமையாக சொன்னீங்க நண்பரே!!!

      Delete
    2. one more thing thala irukkum podhu yethuvum aada mudiyathu... thala pola varathu da..

      first unga thalaya aada solra apparam intha dialoge lam pesalam...

      Delete
    3. avanukku thaan adave theriyaathe........?

      Delete
  7. Boss ena sonalum sari thala thalapathi than. Suriya 2flop kodutha kandipa kanama poiruva. But thala and thalapathy parunga. Evlo flop koduthalum mass than. Athu suriya Ku vararhuku konjam ela niraya yrs akum.

    ReplyDelete
    Replies
    1. aanaa inivarum kaalangalil vijay 2/3 flop kudukkekka surya 2 hit kuduththaa nilamai maaridum boss...

      Delete
    2. eanda vijay mela porama pidichsu thirijura

      Delete
    3. பொறாமைப்படுற அளவுக்கு அவரொண்டும் வேர்த் இல்ல....

      Delete
  8. ஒரே தல அஜித் மட்டும் தான்

    அவருக்கு போட்டியா எவனாச்சு இருந்தால் அவனுக்கு எதிர்காலமே இருக்காது ..

    குள்ளன இருந்தாலும் அணிலா இருந்தாலும் வெட்டு தான் டி

    அஜித் அண்ணா இந்த சின்ன பசங்கள சேர்க்காதீங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹ....ஹா செம பஞ் டா சிவா////

      Delete
    2. உங்க ஒரே தலயால ஏன் இப்ப தொடர்ந்து 2 ஹிட் கூட கொடுக்க முடியல?

      Delete
  9. vijay ajith fight pavum mudiyathu .surya chinna payan vijay 8 flopkuduthalum surya market vanum na yaralam ana fans epothuma vijay ku than athikam.vijay oda flop padamlam hit solluranga kavalan,velayudam etha pathi oru artical eluthalama.

    ReplyDelete
    Replies
    1. ///surya chinna payan vijay 8 flopkuduthalum surya market vanum na yaralam ana fans epothuma vijay ku than athikam.////

      அப்பிடியொரு மாயையை சம்பந்தப்பட்ட தரப்பு செய்திட்டு வருது..ஆனா உண்மை நிலை சூர்யா பக்கம் மாறிக்கொண்டு வருது....

      Delete
    2. ajith a nadakkama naikka sillu da flop str

      Delete
    3. //suman sumii// அழுகிபோன மூஞ்சியை வைச்சு ஹீரோ எண்ட பேர்ல தம்பட்டம் அடிக்கிறதுக்கு அது பரவாயில்ல...

      Delete
    4. தாத்தா மாதிரி இருந்துட்டு அவனே நடிக்கும் போது தளபதி நடிக்கலாம்

      Delete
    5. குரங்கு மனித இனமே இல்லடா..

      Delete
    6. உன் இனம் மனித இனம் இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும்

      Delete
  10. ஆமா இது புதுசா சுட்ட வடைபோல!... உண்ட வீட்டோட வைச்சிரு, வெளிய போனா நாறிடும்.

    ReplyDelete
  11. அதான பாத்தேன் என்னட விஜய் படம் ஒன்னு ப்ளாப் ஆகிடுச்சே இன்னும் அஜித் ரசிகர் யாரும் ரொம்ப நல்லவன் மாதிரி பதிவு போடலையே நு நெனச்சேன் நீங்க போட்டுடிங்க.... அஜித்துக்கு போட்டி யாருன்னு தலைப்பு போட்டதே தப்பு என்ன இப்போ பாக்ஸ் ஆபிஸ்ல 1.ரஜினி(எந்திரன்) 2.கமல்(விஸ்வரூபம்) 3.விஜய்(துப்பாக்கி) 4.சூர்யா(சிங்கம் 2) 5.அஜித்(மங்காத்தா) இப்படி தான் இருக்கு சூர்யா தான் அஜித்தை முந்தி விட்டார். இப்ப விஜய்க்கு போட்டி அஜித்தா இல்ல சுர்யாவானு தான் பாக்கணும்... அப்பறம் நீங்க சொல்ற ஏகன் அசல் எல்லாம் எங்க இருக்குனே தெரியல ஆனால் நண்பன், வேலாயுதமும் டாப் 10 ல இருக்கு அஜித் படம் மங்காதா மட்டும் தான் டாப் 10 ல இருக்கு இதுல இந்த பில்ட் அப் வேறைய??? அப்பறம்

    ReplyDelete
  12. நிலைமை இப்போது மாறிவிட்டது அஜித் தனது சொந்த வாழ்வில் நல்லவராக இருக்கிறார் ஆனால் அவரது சினிமா வாழ்வு சொல்லிகொல்லும்படி இல்லை என்பது தான் உண்மை அண்மைகாலமாக சூர்யா அஜித்தை ஓவர் டேக் செய்துவிட்டார் துப்பாக்கி வசுலை முரியடிதுவிட்டால் அவர் விஜயையும் ஓவர் டேக் செய்து விடுவார் அதும் இன்னும் சிறுது காலத்தில் நடந்து விடும்...

    ReplyDelete
  13. முதலில் துப்பாக்கி வசூலை அஜித் படம் முரியடிக்கட்டும் அப்பறம் இதையெல்லாம் யோசிக்கலாம்.
    அஜித் கடந்த 10 ஆண்டில் 3 ஹிட் படம் மட்டுமே கொடுத்துள்ளார் அவரது சினிமா வாழ்கை அவரது ரசிகர்கள் புண்ணியத்தில் தான் போய்கொண்டு இருக்கிறது அதனால் தான் அஜித் படத்திற்கு ஒபெநிங் வசூல் நன்றாக உள்ளது ஆனால் இரண்டாவது வாரம் வசூல் சொல்லிகொள்ளும் படி இல்லை
    இந்த நிலை தொடர்ந்தாள் அஜித் பின் செல்வது உறுதி ரஜினி முன்னணியில் இருப்பது அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பது மட்டும் காரணம் அல்ல அவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை தந்தவர் அதனால் தான் அவர் முன்னாடி உள்ளார்.
    விஜய் படம் தோல்வி படமாக இருந்தாலும் அதை இரண்டாவது ரிலிஸ் செய்யும் போது ஓரளவுக்கு வசூல் வருகிறது இது திரையரங்கு உரிமையாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
    ஆனால் அஜித் படம் ஏதும் இரண்டாவது ரிலிஸ் செய்து வசூல் வருவது இல்லை

    ReplyDelete
    Replies
    1. ellam dubbing padama edutha eppadi irukum.sontha sarakku onnuma illa antha vijaykku

      Delete
  14. தலைவா படம் இத்தனை பிரச்சனைகளில் சிக்கி பல டிவிடிகள் வெளிவந்தும் இன்டர்நெட்டில் வெளியாகியும் பல எதிமறை விமர்சனகள் வந்தும் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியிட்டனர்.
    கேரளாவில் இதுவரை வெளியிட்ட அனைத்து தமிழ் படங்களின் வசூல் சாதனையை தலைவா முறியடித்து உள்ளது
    நீங்கள் சொல்ல மறந்த இன்னாரு விஷயம் விஜய் கு கர்நாடக, கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் அதிகமாக உள்ளனர்.
    சூர்யாக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர் ஆனால் அஜித்துக்கு வெளி மாநிலங்களில் சொல்லிகொல்லும்படி ரசிகர்கள் இல்லை அஜித்தின் படமும் வெளிமாநிலங்களில் அவ்வளவாக ஓடுவது இல்லை.
    ரஜினிக்கு அடுத்து விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு வெளி மாநிலத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. சூர்யாவின் தம்பி கார்த்திக் படம் சகுனிக்கு பயந்து பில்லா 2 படத்தை தள்ளி ரிலிஸ் செய்தார் அஜித்
    அப்படி இருந்தும் பில்லா தோல்வி அடைந்தது
    ஆனால் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான சூர்யாவின் ஏழாம் அறிவுடன் தைரியமாக வேலாயுதம் படத்தை ரிலிஸ் செய்து அவேரஜ் நிலையை பெற்றார் விஜய் இதிலிருந்து தெரியவில்லையா யாருக்கு மாஸ் அதிகம் என்று. ஏழாம் அறிவு வேலாயுதத்தை விட அதிகமான தியேட்டரில் ரிலிஸ் ஆனா போதும் முதல் இரண்டு வார வசூலில் வேலாயுதம் ஏழாம் அறிவை விட அதிகமாக வசூலித்தது ஆனந்த விகடன் மற்றும் பக்ஸ் ஆபிஸ்ல் பாருங்கள் தெரியும்

    ReplyDelete
  16. last 5 movies of vijay
    thalaiva-flop
    thuppaki-meha hit
    nanban-hit
    velayutham-average
    kavalan-average
    totaly 2 hit 2 average 1 flop

    last 5 movies of ajith
    billa 2-flop
    mangaatha-meha hit
    asal-flop
    aegan-flop
    billa-hit
    totaly 2 hit 3 flop

    itukku enna solringa....?

    ReplyDelete
  17. ponga pa ponga,avanga nalla samparikiranga nama tha ippadi,comment pannittu poga vendiyathu tha............

    ReplyDelete
  18. poonga da dubuku vijay vantha problem pathi ajithku vanthuiruntha innaram industry vittu peyirupan thalapathy poweR avarudaiya fanS MATTUM oorey thalaivan ENGA THALAPTHY mattum

    ReplyDelete
    Replies
    1. விஜய்க்கு கவலனுக்கும் தலைவாக்கும் மட்டும்தான் பிரச்சினை.. முந்தியெல்லாம் அரசியல்வாதி,மீடியாக்கள்ட மடியில இருந்து பால் குடிச்சு ஜால்ரா அடிச்சவன் அவன்... பிரச்சினையை எப்பிடி முகம்கொடுக்கிரதெண்டு அவனை முன்னுதாரணமாக கொள்ளாதடா..

      Delete
  19. பொன்ன விஜய் பான்ஸ்... இந்த போஸ்ட் போட்டதை நானே மறந்திட்டேன், போட்டு கனநாளைக்கு பிறகு கொஞ்சநேர இடைவெளியில நிறைய கமெண்ட்ஸ்.. யாரடா அந்த ஒருத்தன் வேற வேற ஐடியில வந்து கமெண்ட் அடிச்சது? இப்பிடி அடிச்சாப்போல விஜய்க்கு பான்ஸ் கூட எண்டு காட்டுறீங்களாடா?

    ReplyDelete
  20. tharuthalayala 2 hit kodukka mudiyala ithula maththavangala kurai solrathukku kuraichal illa ponga da

    ReplyDelete
  21. azhakuraaja arambam kooda release aga poguthaam intha thadavayaavathu unga thala sagunukku payantha maathiri payappadaama release panraara pakkalam

    ReplyDelete
  22. ippothu thaan cinema nakkeeranil padithen deepavalikku azhguraja release avathal arambam munnadiye release seiya pogiraargalam karthi kuda modhipaakkave thairiyam illatha ajithai surya alavukku uyarthi comedy panniyirukiraargal sema comedy.... first karthiya samalikka parunga da

    ReplyDelete
  23. அடடா. அருமையான தகவல். அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்திலையே உட்காந்துகோங்க. வருங்கால சந்ததி பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  24. விஜய் ரசிகன்டா

    ReplyDelete

comment