Tuesday, December 18, 2012

அஜித்தின் டாப் 10 திருப்புமுனைப் படங்கள்

அஜித்தின் திரைப்பட கரியரில் வெற்றிகள், தோல்விகளின் மத்தியில் சில படங்கள் அவரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன.அதில் எனது நோக்கின்படி பத்து படங்களை தரவரிசைப்படுத்தியுள்ளேன். குறிப்பு- இது அஜித்தின் டாப் 10 சிறந்த படங்களின் பட்டியல் அல்ல. திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களின் தரவரிசையே ஆகும்.

10. பவித்திரா 

1994 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் நாசர்,ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். வணிகரீதியாக பெரியளவு வெற்றி பெறாவிடினும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம். அஜித்தின் அன்றைய ஹீரோ வால்யூவிற்கு ஏற்றாட்போல ஹிட்டாக அமைந்தது. தமிழில் ஹீரோவா அஜித்துக்கு இது இரண்டாவது படம். 

9. காதல் மன்னன் 

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணின் முதல் படம். பரத்வாஜின் இசையில் 1998 இல் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் மானு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, விவேக், கரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். முழுநீள காதல் கதையுடன் அமைந்த இத்திரைப்படம் வணிக,விமர்சன ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல 1997 இல் வெளிவந்த அஜித்தின் நேசம்,ராசி,உல்லாசம்,பகைவன்,ரெட்டை ஜாடை வயது ஆகிய ஐந்து படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு வந்து மிகப்பெரிய ஹிட் என்பதால் அஜித்தின் வெற்றிகரமான பயணத்தில் காதல் மன்னனும் ஒரு திருப்புமுனையே! 

8. வரலாறு 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எவ்வளவோ சிக்கலுக்குப்பிறகு வெளிவந்த திரைப்படம். ஆரம்பத்தில் இந்த திரைப்பட கதையை அஜித்துக்கு சொல்லும்போது அதில் நடிக்க அஜித் சம்மதிக்கவே இல்லை. ஆனாலும் கமல், ரஜினிகாந்தின் அறிவுரைக்கு பிறகே அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்பா, இரண்டு பிள்ளைகள் இதில் தந்தை வேடமானது நடனம் பயின்று அதன் ஒவ்வொரு அசைவுகளையும் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிற கரக்டர், ஒரு மகன் வேடம் சைக்கோ வில்லனாயும், மற்றைய மகன் நண்பர்களுடன் குடித்து கும்மாளமடிக்கும் ஒரு இளைஜனின் வேடம்.. கிட்டத்தட்ட முன்று வேடமுமே எதிரும் புதிருமான வேடம்.. இந்த முன்று கரக்டரையும் உணர்ச்சி ததும்ப நடிக்க அஜித்தைவிட வேறு எவராலுமே இயலாததால் அஜித்திடம் சம்மதம் பெற கடும் முயற்சியை மேற்கொண்டு இறுதியில் இயக்குனர் வென்றே விட்டார். இந்தப்படமானது ஜி என்ற தோல்விக்கும், திருப்பதி,பரமசிவன் என்ற அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு வந்து பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் படத்துக்கு பிறகு வரலாறு தான் தமிழ் சினிமாவில் ஐம்பது கோடியை தாண்டிய திரைப்படம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களிலே அதிகமாக வசூலிச்ச படமும் இதுதான். மேலும் இந்த படத்துக்காக அஜித்துக்கு பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

(பதிவு நீண்டுகொண்டு செல்வதால் சுருக்கமா சொல்லிவிடுகிறேன் )

7. மங்காத்தா 

ஏகன்,அசல் ஆகிய இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு 2011 இல் வெளிவந்த திரைப்படம். வெளியான அனைத்து இடங்களிலுமே கலக்சனில் கல்லா கட்டிய திரைப்படம். தமிழ்சினிமாவில் முதன்முதலா ஒரு நடிகர் சிங்கிள் ரோலில் படம் முழுவதுமா வில்லனா தோன்றி நடிச்ச திரைப்படம். 2011 இல் வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் முடியடிச்சு நம்பர் ஒன்னாக திகழ்ந்த படம். அதுமட்டுமல்லாமல் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமும்கூட. விமர்சன அடிப்படையிலும், வசூல் அடிப்படையிலும் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் திருப்புமுனையையும் ஏற்படுத்திய திரைப்படம்.

6. காதல் கோட்டை

1996 இல் வெளிவந்த முழுநீள காதல் காவியம். அன்றைய தேதியில் அஜித்துக்கென தனியா மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி, கமல்-சிறீதேவிக்கு அடுத்து சினிமாவின் சிறந்த ஜோடியாக அஜித்-தேவயானியை எல்லோரும் மெச்சுமளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த திரைப்படம். வசூலில் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு இயக்குனர் அகத்தியனுக்கு சிறந்த கதைக்கான தேசிய விருதும் இப்படத்துக்கு கிடைத்தது.

5. அமர்க்களம் 

1999 இல் வெளிவந்த திரைப்படம். வாலி, ஆனந்த பூங்காற்றே, நீவருவாயென என்ற ஹாட்ரிக் ஹிட்டுக்கு பிறகு வந்தாலும் அஜித்துக்கு கிடைத்த முதல் மாஸ் ஹிட் இதென்பதில் அஜித்தின் கரியரில் அமர்க்களம் ஒரு முக்கியமான படமே! ஒவ்வொரு நடிகனுக்குமே தாங்கள் ஏதாவது மாஸ் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோவாகணும் என்றே விரும்புவார்கள். ரஜினி-கமல் தலைமுறைக்கு பிறகு முதல் மாஸ் அந்தஸ்துள்ள ஹீரோ என்றால் அஜித்தான்.இவரின் ஏனைய சமகால போட்டி நடிகர்கள் இதற்கு 3/4 வருடங்களுக்கு பிறகே மாஸ் ஹீரோவாகினார்கள். அஜித்துக்கென்று பெண்கள்,குடும்ப ரசிகர்கள் தாண்டி இளையோர் பட்டாளங்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தது இதற்குப்பிறகே. அதுமட்டுமல்ல வாழ்க்கைத்துணைவியை பெற்றுக்கொடுத்ததும் இந்த திரைப்படமே!

4. வாலி 

1999 இல் வெளிவந்த திரைப்படம். உயிரோடு உயிராக,தொடரும் தோல்விகளுக்கும், உன்னைத்தேடி என்ற அவேரேஜ் ஹிட்டுக்கு பிறகு வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டியளிக்கையில் "இயக்குனர்களை தாண்டி நடிகனா எனது வெற்றியில் உரிமை கொள்ளவைத்த படம் வாலி" என்றார். இளவயதிலே நெகடிவ் ரோல் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்திய படம். "நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாயே நடிக்கிறது" எண்டதுக்கு முதன்முதலில் போட்ட பிரேக் வாலிதான். இந்த படம் வந்த காலத்தில் ஊடகங்கள் அஜித்தை கமலுடன் ஒப்பிட்டனர் என்பது அஜித்துக்கு கிடைத்த மேலுமோர் கௌரவம். அது மட்டுமல்ல இந்த படத்துக்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. 

3. தீனா 

2001 இல் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம். "மாஸ் னா" அஜித் எண்டதுக்கு ஏற்றாற்போல் அமைந்த திரைப்படம். ஏற்கனவே அமர்க்களத்திலே மாஸ் ஹீரோவாகிவிட்ட நிலையில், இது அவருக்கு மேலுமோர் பரிமாணத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மீடியா,ரசிகர்களால் "தல" என அழைக்கத்தொடங்கியது இந்தப்படத்திலிருந்துதான். வெறுமனே அடிதடி என்றில்லாமல் அதை ஸ்டைலிசாக வேற அஜித்தை நடிக்கவைத்தார் முருகதாஸ். காதல் கோட்டை, அமர்க்களத்துக்கு பிறகு மிகப்பெருமளவு ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொடுத்த படம் தீனா. தொடர் வெற்றிகளின் உச்சத்தில் இருந்த அஜித்துக்கு தீனாவும் ஒரு திருப்புமுனையே!

2. ஆசை

1995 இல் வெளிவந்த திரைப்படம். இது பற்றி இயக்குனர் வசந்த் சொல்கையில் "எத்தனையோ இயக்குனர்களுக்கு பிரேக் கொடுத்து முன்னேற்றிய அஜித்துக்கு,முதன் முதலில் பெரிய பிரேக் கொடுத்தவன் நான்தான், அது மட்டுமல்ல அன்றைய தேதியில் கல்லூரி மாணவிகளிடையே கேட்டால் அஜித்தை மாதிரியான ஒரு ஆண்கிடைக்கணும் என்றே சொல்வார்கள்." என்றார். அந்தளவுக்கு அஜித்தின் மீதான கிரேஸி அந்தக்காலத்திலே உருவாகிவிட்டது. இது அஜித்தின் ஆறாவது படம், ஹீரோவாக மூன்றாவது படம். பவித்திரா என்ற வெற்றிக்குப்பிறகு ஹீரோவாக மூன்றாவது படத்திலே மிகப்பெரியதொரு வெற்றியை அஜித்துக்கு முதன்முதலில் கொடுத்த படம் ஆசை.இதனால்தான் எத்தனையோ சூப்பர் டூப்பெர் ஹிட் படங்களுக்கு மேலே இதை வரிசைப்படுத்தியுள்ளேன்.  

1. பில்லா (2007)

2007 இல் வெளிவந்து பாக்ஸ் ஆபீசில் மட்டுமல்ல தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம். முழுநீள ஸ்டைலிசான படம். அதுவரை தமிழ் சினிமா கண்டிராதவாறு இயக்குனர் விஸ்ணுவர்த்தனின் கற்பனையில் உருவான படம். அஜித்தின் ஒவ்வொரு அசைவிலுமே ஒரு ஸ்டைல் இருக்கும். ஆழ்வார் என்ற தோல்விப்படத்துக்கும், கிரீடம் என்ற சராசரி வெற்றிப்படத்துக்கும் அடுத்ததாய் வந்த படம். அந்த சீசனில் ஏன் இன்றும் கூட பில்லா மோகம் தமிழ்ரசிகர்களை விட்டகலவில்லை. அன்றைய தேதியில் ரஜினியின் சிவாஜிக்கப்புறம் அதிக வசூலிச்ச படம் பில்லாதான். வசூலிலும்சரி, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் பிஸ்னஸ், ரசிகர்கள், ஒபெநிங் எல்லாவற்றிலுமே அஜித்தை மிகத்தூர இடத்துக்கு திடீரென ஏற்றி வைச்சது பில்லாதான்...சந்தேகமே இல்லை... அதனால்தான் பில்லாவுக்கு முதலிடம்.

இது எனது கண்ணோட்டத்தில் உருவான தரப்படுத்தல்.. இதில் உங்கள் அபிப்பிராயத்தை பின்னூட்டலில் இடுக..

-வருகை தந்தமைக்கு நன்றி. 







13 comments:

  1. அண்ணாத்தை என்ன அண்ணாத்த...இப்ப எல்லாம் ஒரே கலக்கல் பதிவாகவே போடுறீங்க...சூப்பர் மச்சீ.. தல பத்தி எழுதும் போது ஸ்டைல் தானாக எழுத்து நடையில் வருகுது போல... கலக்கு மச்சீ நீ கலக்கு...:)

    ReplyDelete
    Replies
    1. ஆமா கோசுபாபா, நீண்ட நாட்களாகவே இப்பிடியொரு பதிவு எழுதவேணும் எண்டிருந்தேன், தற்போது சாத்தியமாகியுள்ளது. இதேபோல அஜித்தின் எனக்கு பிடித்த டாப் 10 படங்களின் வரிசையையும் எழுதலாம் என்றுள்ளேன். நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

      Delete
  2. சி.சாரங்கன்December 18, 2012 at 8:20 PM

    என்னை பொறுத்தவரை பில்லாவை விட காதல்கோட்டை முதலிடம் வகித்திருக்கலாமே??? பில்லாவில் நடிப்பு நன்றாக இருந்தாலும் அது மீள் அமைக்கப்பட்ட படம்... ஏற்கனவே ரஜினியின் நடிப்பில் வெளியாகி உச்சகட்டத்தை தொட்ட படம், ஆனால் அஜித்தின் படங்களில் அசைக்க முடியாத இடம் காதல்கோட்டைக்கு தான் உண்டு... அதை உணர்ந்திருக்கலாமே??? அடுத்ததாக வில்லனையும், அடுத்து பில்லவை சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. இல்லை சாரங்கன், மீளமைக்கப்பட்ட படம், சிறந்த நடிப்பு,கதை போன்றவற்றை பிரதானமாக வைத்து நான் தரப்படுத்தவில்லை. அஜித்தின் ஒவ்வொரு படம் வந்து ஹிட் ஆகும்போது அந்த திரைப்படம் அஜித்தின் கரியரில் எப்பிடி திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.... இதுதான் இப்பதிவின் பிரதான நோக்கம். இதட்கேட்பவே தரவரிசைப்படுத்தியுள்ளேன்.. இந்தவகையில் பில்லாக்குத்தான் முதலிடம் கொடுக்கலாம். வசூல் அடிப்படையிலும் அஜித்துக்கு மிகப்பெரிய ஹிட். இந்த படம் வந்ததன்பின்னர்தான் அஜித் ஒரு ஸ்டைலிஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அது மட்டுமல்ல இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் மார்க்கட்டில் பெரியளவு உயர்ச்சி, ஏன் அஜித்தின் சம்பளத்தில்கூட இதற்குபிறகு பலகோடிகள் அதிகரித்தது.... (பில்லாவை தேர்வுசெய்ததட்கான காரணங்கள் இன்னும் நிறைய இருக்கு..சுருக்கமா சொல்லியிருக்கேன்)

      Delete
  3. wow great work dude enum neraya yedhirpakurean ungakitta.........

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே...வருகை தந்தமைக்கு நன்றி yuvaraj

      Delete
  4. நல்ல பதிவு நண்பா ... வில்லன் படத்தைம் சொல்லலாமல் விட்டு விட்டீர்களே , தல நடிப்பில் பட்டைய கிளப்பிய படம் அது , பில்லா காதல் கோட்டைக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் மங்காத்தாவை வைத்திருக்கலாம் , அஜித்தின் சமகால நடிகர்கள் அது போல ஒரு படம் பண்ண வேண்டுமென்றால் இன்னும் பத்து வருடங்கள் ஆகும் ம், அவர்களால் இன்னமும் தீனா போல ஒரு மாஸ் படம் கொடுக்க முடியவில்லை ,

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லைத்தான்..அதனால் என்னுடைய அலசலில் சில பிழைகள் இருக்கலாம். எனக்கு தெரிந்த அறிவுக்கு வரிசைப்படுத்தியுள்ளேன்.... உங்கள் அபிப்பிராயத்துக்கு நன்றிகள் ராஜா...

      Delete
  5. Mugavari padaththai vittutteengale baas......

    ReplyDelete
    Replies
    1. நடிப்பு,கதை போன்றவற்றை பிரதானமாக வைத்து நான் தரப்படுத்தவில்லை. அஜித்தின் ஒவ்வொரு படம் வந்து ஹிட் ஆகும்போது அந்த திரைப்படம் அஜித்தின் கரியரில் எப்பிடி திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.... இதுதான் இப்பதிவின் பிரதான நோக்கம். இதட்கேட்பவே தரவரிசைப்படுத்தியுள்ளேன்..... mugavari hit thaan..but, athu intha 10 films i vida periyalavu change i ajith ku kudukkela... thanks 4 ur visit & comments....

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. nice dude thala always thala... keep rocking with this kind of similar post :)

    ReplyDelete
  8. Top 9 film Ok. But, 10th film (Citizen or Villan or Mugavari
    )

    ReplyDelete

comment