Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம்- திரைப்பட விமர்சனம்

ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லுமளவுக்கு ஹிட் படங்களை தனக்கேயுரிய பாணியில் ஸ்டைலிசா கொடுத்துவந்த கௌதம் வாசுதேவ மேனனுக்கு யார் கண் பட்டுதோ, இப்பவெல்லாம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இறுதியாக விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பிறகு வந்த "நடுநிசி நாய்கள்", "ஏக் திவானா தா" (விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்) இந்த இரண்டும் தோல்வியடைந்ததது. அதுமட்டுமல்ல திரைக்கதை,இயக்கத்தில தனது பிடிவாதமான போக்கால் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய்,சூர்யாவின் படங்களும் கைநழுவி போய்விட்டன. எது எப்பிடியோ எனினும் கௌதமின் படங்களுக்கான கிரேஸி இன்னமும் குறையவில்லை. இந்தப்படத்துக்கான இசையமைப்பாளரை தேர்வுசெய்வதில் ரஹுமான், ஹரிஸ் என போய் இறுதியில் இளையராயாவிடமே அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் இசைவெளியீட்டு விழாவை வேற மிகப்பிரமாண்டமாக செய்தார்கள். இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளும் எடுக்க தீர்மானித்தார்கள். அப்புறமாக ஹிந்தியை கைவிட்டு தமிழ்,தெலுங்கில் மட்டும் எடுக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தெலுங்கில் ஜீவாவின் கரக்டருக்கு பதிலாக "நானீ" நடிக்கிறார்.
அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..


நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம் 
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் 
இசை- இளையராஜா 
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.

படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......  
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.

சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது.  இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. 

இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.

சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்.... 
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..

8 comments:

 1. சமந்தாவுக்காக(ஜீவாவுக்காக்கவும்தான்) பாக்கலாம்,அப்பிடித்தானே பாஸ்....?

  ReplyDelete
  Replies
  1. ஆமா நிச்சயமாக... பொதுவா எல்லோருக்குமே சமந்தாவை பிடிக்கும்.. சமந்தாக்காகவே ஆண்கள் எல்லோரும் போய்ப்பார்க்கலாம்... நன்றி கிருபன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

   Delete
  2. nadunilayana vimarsanam ..thodara vaalthukal anna

   Delete
  3. நன்றி suthan உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

   Delete
 2. newsalai.com இருந்து அப்படியே விமர்சனத்தை திருடி உள்ளீர்கள் ?

  ReplyDelete
  Replies
  1. அவர்கள்தான் எனது பதிவை அப்பிடியே திருடிவிட்டார்கள்.... இந்த விமர்சனத்தை நான் பிரசுரிச்சது
   Friday, December 14, 2012. அப்பிடியே அவர்கள் பிரசுரிச்ச திகதியை பாருங்கள்.... Saturday 15th December 2012 அன்று.............. இப்போ சொல்லுங்கள் யார் யாரிடமிருந்து திருடினது?

   http://newsalai.com/details/Neethane-En-Ponvasantham-Movie-Review.html

   Delete
 3. enakku padam pidichirukku rajavukku bgmil perithaga velaillamal padalgal moolam padathai nagarthirukkum vidham arumai...idhu thamil pada ulagathirkku pudhumai...(ini mokka padagal illamal nalla padangal uruvavithirkku nalla arambamam ) rajavum edirpaarthadai vida adakki vaasithu nammai padathota innaithuvittar enabadhu en karauthu,indha padathukku a.r.rahman alladhu harris isai amathu irunndhal sema comedy padamaga amainthirukkum..rajavin bgm illamal paadagal vaithe padam kondu vandha gauthamkku hats off.......neengal vimarsikkum alavu padam mokkaiyaga illai edhirpaarthadu pol primadham illa vittalum nep best thaan.
  ini varum thamil padangallukku mokkaiyana paadalgal (dream songs/kuthu songs/maniratnam's kadal songs)kondu low budget padangal uruvaagamal irukka nep nallathoru padai amaithiruppadu arumai...rajavin isai endrum best adhai niraivaga use pannikonda gautham menon meendum oru murai hats off

  ReplyDelete
  Replies
  1. sure boss.. enakkum nallaave pidichchirukku.... unga varukaikkum comment ku m nanri balakrishnan

   Delete

comment