Friday, December 20, 2013

என்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்


நடிகர்கள்- ஜீவா, வினய், சந்தானம்,திரிஷா,ஆண்ட்ரியா 
இயக்கம்- அஹமட் 
இசை- ஹரிஸ் ஜெயராஜ் 
ஒளிப்பதிவு-மதி 
தயாரிப்பு- தமிழ் குமரன், ராமதாஸ் 
வெளியீடு- ரெட் ஜெயிண்ட்ஸ் 

"கோ"விற்கு பின்னர் தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து மீளுவாரா ஜீவா? என்றிருந்த வேளையில் "ஹிட்" என்று சொல்லுமளவுக்கு என்றென்றும் புன்னகை திரைப்படம் இன்று ரிலீசாகியிருக்கு. படம் வெளிவருவதற்கு முன்னராகவே இப்படம் பற்றிய பாஸிட்டிவ் அபிப்பிராயங்கள் மீடியாக்களில் வெளிவந்ததால் நிச்சயம் பலருக்கு இப்படத்தை பார்க்க தூண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்ல. 

படத்தின் கதை இதுதான், சிறுவயதிலிருந்தே நண்பர்களான ஜீவா-வினய்-சந்தானம் வளர்ந்ததும் விளம்பர கம்பனியொன்றை நடாத்தி வருகின்றனர். சிறுவயதில் ஜீவாவின் தாயார் தந்தையை விட்டு சென்றுவிடவே அந்த விரக்தியில் வாழ்ந்துவந்த ஜீவாவின் தந்தை நாசர் ஜீவாவிற்கு பெண்கள் பற்றிய நம்பிக்கையீனங்களை சொல்லி சொல்லி வளர்க்கவே பெண்கள், காதல், திருமணம் இதிலெல்லாம் நாட்டமில்லாமலே ஜீவா வளர்ந்து வருகின்றார், அதுபோலவே தனது நண்பர்களும் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கிறார்... பின்னர் ,ஜீவா ஜீவாவின் நண்பர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா? இதுவே படத்தின் பிற்பாதி, இதை திரையில் சென்று பார்த்து மகிழுங்கள்.


ஜீவா,திரிஷா - வினய்,சந்தானம் கூடவே இருந்தாலும் தனியாளாய் படத்தை தாங்கி நிற்கின்றார். படத்தின் கதைக்கேற்ப அழகான, இளமையான, துடிப்பான, தேவைப்ப்படுமிடத்தில் காமெடித்தனமான ஹீரோவாக ஜீவா திரையில் தோன்றுகின்றார். நீதானே என் பொன்வசந்தம் சுமாராயினும் ஜீவா-சமந்தாவுக்காக எவ்வாறு ஓரளவுக்கேனும் ரசித்ததுபோல இதிலும் ஜீவா-திரிஷா ஜோடி கலக்கலாக இருக்கிறது. இடைவேளைக்குமுதல் திரிஷாவுக்கு முக்கியத்துவம் பெரிதாக கொடுக்கப்படவில்லை என்றாலும் இடைவேளைக்கு பின்னர் திரிஷாவின் பங்கு சிறப்பானதே!

வினய், சந்தானம்- படத்தில் ஜீவாவின் கரக்டர் கொஞ்சம் சீரியசானதாக இருப்பதால் வினய், சந்தானம் ஆகிய இருவரும் ஆடியன்சை நன்றாகவே சிரிக்கவைத்துவிட்டனர். கிடத்தட்ட "உன்னாலே உன்னாலே" போலவே வினய்க்கு கரக்டர். சந்தானமும் தன்பங்கிற்கு சிறப்பாகவே நடித்துள்ளார். அண்மைய படங்களில் இவரின் மொக்கை காமெடிகலால் நொந்துபோனவர்களுக்கு இப்படம் பெரிய திருப்தியை கொடுக்கும். இயக்குனர் ராஜேஷ் போல சந்தானத்தை முதன்மைப்படுத்தாது திரைக்கதை,காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சந்தானத்தால் நொந்துபோனவர்கள் இங்கே பயப்பிட தேவையில்லை.. தாராளமாகவே படத்தை பார்க்கலாம்.


இசையமைப்பாளர்- பாடல்கள் இதட்குமுதல் கேட்கவில்லை. படத்திற்கான பின்னணி இசை சிறப்பானதாகவே இருந்தது. வழக்கமாக இயக்குனர் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையைவிட குறையவே பாட்டை இசையமைக்கும் ஹாரிஸ் இந்தப்படத்துக்கு தானாகவே முன்வந்து மேலதிகமாக ஒரு பாடலை இசையமைத்து கொடுத்துள்ளாராம்.

இயக்குனர்- இயக்குனர் அஹமெட்டுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் "வாமணன்" சரிவர போகாவிடினும் இந்தப்படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார். ராஜீவ் மேனன், மறைந்த இயக்குனர் ஜீவா(அவரின் கீழ் உதவி இயக்குனரா இருந்தவர்???), கௌதம் மேனனின் மேக்கிங் சாயல் இவரிலும் இருக்கின்றது. 'ஈகோ கொண்ட ஆணின் வாழ்க்கை எப்பிடி போகிறது?' ஒருவரிக்கதையை மையமாக வைத்து வித்தியாசமான காட்சியமைப்புடன் படத்தை மெருகேற்றியிருக்கிறார். 

படத்தில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு குறைகள் இல்ல, மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழக்கூடிய படம்... 

3 comments:

  1. //இயக்குனர் அஹமெட்டுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் "வாமணன்" சரிவர போகாவிடினும் இந்தப்படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார்//
    10 கோடிக்கு எடுத்த படம் 26 கோடி வசூல் செய்துள்ளது எப்படி ? நான் வாமணன் படம் பார்க்கவில்லை

    ReplyDelete

comment