Tuesday, March 26, 2013

அஜித்தும் சமூக போராட்டங்களும்


தற்போது தமிழகம் ,முழுவதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதராவாக மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். இவ்வளவு நாளும் மூச்சு பேச்சில்லாம இருந்த நடிகர் சங்கமும் ஏப்ரல் 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. என்ன போராட்டம் நடந்தாலும் ரஜினி,கமல் போன்ற நடிகர்கள் அதில் ஏதாவதொரு பங்களிப்பை செய்யணும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இது வெறும் எதிர்பார்ப்புடன் இருந்தால் ஓகே, அதைவிடுத்து கட்டாயப்படுத்தல், ஆதரவளிக்கும்பட்சத்தில் தாறுமாறா அவர்களுக்கெதிரா கதைத்தல் அர்த்தமற்றதொன்றே! அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நாங்கள் ஒருபோதும் தலையிடமுடியாது. நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசுக்கு அவர்களை எடுத்த எல்லாத்துக்கும் குரல் கொடுக்கணும் என்பது பிழையானததொன்றாகும். மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் திரையரங்கு சென்று டிக்கட் எடுக்கும் அந்தக்கணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு படம் நல்லா இருக்கணும், இரண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கணும் என்றதா? இல்ல, நீங்க குடுக்கிற நூறு, இருநுறு காசால அவங்க கோடிக்கணக்கா சம்பாதிக்கணும் எண்டதா? ஒரு படத்தை மக்கள் பார்க்கும்போது பார்ப்பவர்களும் சந்தோசப்படுகிறார்கள், படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் போன்றோரும் தங்கள் உழைப்புக்கேற்ப ஊதியத்தை பெற்றுக்கொள்கிராகள். இது நம்மவர் பலருக்கு பொறுக்குதே இல்ல. ஆனா சில நடிகர்கள் தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை வேணுமெண்டே படங்களின் ஊடாக மக்களுக்கு சித்தரிக்கிறார்கள், கேட்டா அது படக்கதைக்கேற்பவே வடிவமைக்கப்பட்டது, அதுவும் இயக்குனர்களால்தான் வடிவமைக்கப்பட்டது என்று ரீல் விடுவார்கள். அது ரீல் என்றாலும் அதை நம்பி அவர்களை தலைவர் என்று கருதிற நாங்கள்தான் நம்பர் ஒன் முட்டாள் என்பதை மறந்துபோகவேணாம். இனியாவது சினிமா ஹீரோக்களை நிஜத்தலைவர்களாக கற்பனை பண்ணுவதை தவிருங்கள்.
அடுத்து மேட்டருக்கு வருவோம், தமிழக போராட்டங்களில் அஜித்தும் ஒன்றும் செய்யவில்லை என்றெல்லாம் அவ்வப்போது கிளப்பிவிடப்படுகிறது, மேலும் அடுத்து வரப்போற உண்ணாவிரத போராட்டத்தில் அஜித் கலந்துகொல்வதட்கான சாத்தியப்பாடுகளும் குறைவே! இதனால் வருகிற கிழமை அஜித் தவிர போராட்டத்தில் பங்கேற்ற மற்றைய நடிகர்கள் மக்கள் தலைவர்களாகவும் அஜித் போன்ற பங்கேற்காதவர்கள் வில்லனையும் சித்தரிக்கப்படப்போரார்கள். சிலவேள அஜித் போனா தல தப்பிடும்.இல்லாவிடில் அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கு பெரியதொரு சவால் காத்திருக்கிறது. ஆமா அஜித் எதிர்ப்பாளர்களுடன் முட்டி மோதுவதுதான். முதல்ல அவர்களுக்கு ஒரு விடயத்தை நாம புரியவைக்கணும். அஜித்தை ரஜினியோ,கமலோ,விஜயோ,சூர்யா உடனோ ஒப்பிடவேணாம் இந்தவிடயத்தில். அதற்கான காரணங்களை அலசிப்பார்ப்போம்.

1. அஜித் ஒரு தனிமனிதன். ரசிகர்கள் தவிர அஜித்துக்கு எந்தவொரு பின்புலமுமில்ல,குறிப்பாக அரசியல் மட்டத்திலோ, மீடியா மட்டத்திலோ அஜித்துக்கு அன்றும் இன்றும் சப்போட் இருந்ததில்லை, நாளையும் இருக்கப்போவதில்லை.காரணம் தமிழ் சினிமாவின் பிழைப்பிற்காக ஜால்ரா அடிக்காத ஒரே மனிதன் அஜித்தான்.. அதனால்தான் இந்த கதி.. மாணவர்களுக்கு ஆதரவாக சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை தமிழக அரசு ஒருபோதும் விரும்பாது. விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த பிரச்சினைபோல் நாளை அஜித் படத்துக்கு எதிரா ஒரு பிரச்சினை கிளம்புமாயின் அஜித்துக்கு சப்போட்டா ரசிகர்கள் தவிர வேற யாரும் கதைக்கப்போறதில்லை. இதே வேறு முன்னணி நடிகர்களுக்கு நடந்தா உயர் மட்டங்களில் இருந்து நிறைய ஆதரவுகள் வரும். அல்லாவிடில் ஆட்சியாளரின் காலிலாவது போய் விழுவார்கள். அஜித்தான் அப்பிடி இல்லையே!


2. அஜித் ஒருபோதும் தன்னுடைய படங்களை வந்து பாருங்கள் என்று மக்களிடையே புரமோட் பண்ணுவதில்ல, ஏன் படம் சம்பந்தமான எந்தவொரு விழாக்களுக்கும் செல்வதில்லை. தனது பட விழாக்களுக்கோ வேறு தேவைக்காகவோ தனது ரசிகர்களை கூட்டம் கூட்டமாக வரவழைத்து பகடைக்காயா பயன்படுத்துவதில்லை.

3. தனது படங்களில் தான்தான் மக்களின் தலைவன் என்றெல்லாம் போலி மாயையை ஒருபோதும் உருவாக்கியதில்லை அல்லது மிகமிக குறைவு. ஆதலால் அஜித் ரசிகர்கள் ஒருபோதும் அஜித் அரசியலுக்கு வருவார், அவர்தான் அடுத்த முதலமைச்சராகணும், ஏதாவது அநீதி நடந்தா அஜித் குரல் கொடுக்கணும் என்றெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமா நடிகர்கள் வேறு நிஜ தலைவர்கள் வேறு என்பதை தனது நடவடிக்கையால் ரசிகர்களுக்கு சரியான வழியை காட்டியுள்ளார்.

4. அஜித் பொதுவாகவே எந்தவொரு விழாக்களிலும் பங்குபற்றுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றுபவர். நடிகர்களுக்கு ஆதாயம் தேடும் போராட்டங்களிலே அஜித் கலந்துகொள்வதில்லை, உதாரணமாக நடிகர்களை பாதிக்கும் வரிவிலக்கை எதிர்த்து அண்மையில் நடந்த போராட்டத்திலே அஜித் பங்குபற்றவில்லை. அப்பிடி இருக்கும்போது வேறு போராட்டங்களில் கலந்துகொள்ளும்படி நிர்ப்பந்திப்பது அர்த்தமற்றதொன்றாகும்.

5. நாலுபேருக்கு பப்ளிக்கில உதவிசெய்து தன்னை பெரியாளாக காட்டிக்கொள்ளுவதில்லை.மாறாக சத்தமின்றி எத்தனையோபேருக்கு உதவிகளை செய்து வருகின்றார். இதெல்லாம் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதில்லை. உதவிபெற்றவர்கள் மூலமாக பலவருடங்களுக்கு பிறகே தெரியவரும். அதனால் சமுக பிரச்சினைகளில் அவரின் பங்கை ரசிகர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை.


இதற்குமுதல் இலங்கைத்தமிழருக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றிய அஜித் மற்றும் அர்ஜுனுக்கு எதிரா சரத்குமார் போன்றோர் எப்பிடியெல்லாம் குற்றங்களை சோடிச்சார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் ஒரு அநீதிக்கெதிரா சுயலாபம் கருதாமல் போராடுபவர்கள் எப்போதும் பாராட்டுதலுக்குரியவர்கள். ஆனா, போராடாமல் ஒதுங்கி இருப்பவர்களை துரோகிகளாக பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. சினிமா நடிகர்களை ஒரு சராசரி மனிதர்களாக பாருங்கள். அவர்கள் எங்களால் கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பலவருட உழைப்புக்கு கிடைத்த பலன். இதுக்கப்புறமும் நடிகர்களை குறை சொல்பவர்களுக்குக்கு தில் இருந்தா அவர்களின் படத்தை பார்க்காமல் இருங்கள்..

4 comments:

 1. அருமை நண்பா..!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு.....

   Delete
 2. அருமையான பதிவு சஜி.
  தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை நடிகர்கள் மட்டுமே திணிக்கிறார்கள் என்று முழுதாக சொல்ல முடியாது. ஒரு நடிகரை எப்படி மக்கள் ரசிப்பார்கள் என்று உணர்ந்து இயக்குனர்களும் காட்சி அமைப்பார்கள். பாடலாசிரியர்களும் பாட்டு எழுதுவார்கள். எல்லாம் வியாபாரத்துக்கு தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆனா பெரும்பாலும் நடிகர்களே தாங்கள் மக்களின் தலைவர் என்ற மாயையை திரைப்படம் ஊடாக காட்டும்படி சொல்லிவிட்டு கடைசியில அது படக்கதைக்கேற்பவே வடிவமைக்கப்பட்டது, அதுவும் இயக்குனர்களால்தான் வடிவமைக்கப்பட்டது என்று இயக்குனர்களில் பிழையை தூக்கி போட்டுவிடுவார்கள்.

   Delete

comment