Sunday, November 11, 2012

அஜித்தும் அஜித் ரசிகர்களும்... ஸ்பெசல் அலசல்;



நீண்டகாலமா அஜித் பற்றிய எந்தவொரு பதிவும் போடாததால் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்... அஜித்,அஜித் ரசிகர்கள் போக்குகள் பற்றிய சிறியதொரு தொகுப்பே இது... முதலில் அஜித் ரசிகர்கள் எப்பிடிப்பட்டவர்கள் என்று பார்ப்பம்.. அஜித் ரசிகர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள்தான். பொதுவா எல்லோரினதும் கருத்து என்னவென்றால் அஜித் ரசிகர்கள் எல்லாம் வில்லங்கம் பிடித்தவர்கள் என்பது, ஓரளவுக்கு உண்மையும்கூட அதற்கு காரணம் இல்லாமலல்ல..  அமர்க்களத்தில் தான் ஒரு மாஸ் ஹீரோ எண்டதை வெளிக்காட்டினபின் இன்றுவரை அவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று சொல்பவையில் பெரும்பாலானவை நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடித்த படங்களே! ஹீரோ படத்தில் எப்பிடியிருப்பாரோ அது அவரின் வெறித்தனமான ரசிகர்களின் போக்கிலும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதில் மறுப்பில்லை. இதை நீங்க ரஜினி,கமல் ரசிகர்களுக்கிடையிலான வித்தியாசத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம்..  அதுமட்டுமல்ல அஜித் என்ற நடிகனை தாண்டி நிஜ வாழ்க்கையில் அஜித் என்ற மனிதனை நேசிக்கிறதுக்கே ஒரு பெரிய கூட்டம் இருக்கு... 
தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும் அஜித்திடம் ரசிகர்களுக்கு வெறி உண்டாக முக்கிய காரணங்களாகும். அஜித் ரசிகர்கள் அஜித்திடம் வைத்துள்ள வெறித்தனத்தை வேற எந்தவொரு நடிகர்களிடமுமே பார்க்கமுடியாது.. தமிழ் சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவா இருந்தா மட்டுமே ரசிகர்கள் வெறித்தனமா இருப்பார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்... எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரும் நிஜத்திலும் ஹீரோவாக இருப்பதாலேயே அவர்களுக்கு பின்னால் வெறித்தனமான ரசிகர்கள் நிறையவே இருந்தார்கள்.
 அதில், எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கு அப்போதைய மக்களின் அறியாமையும் ஒரு சாதகமாக அமைந்தது என்பதில் மறுப்பில்லை.. எம்.ஜி.ஆர் தனது வாழ்நாள் முழுவதுமே மக்களின் அறியாமைத்தனத்தால் நன்றாகவே பிழைத்தார்.. அதேபோல ரஜினியின் ஆரம்ப தசாப்தகாலங்களும் இதேபோலவே.. ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் எல்லோரும் விழிப்படைந்துவிட்டார்கள்.. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை நன்றாகவே புரிந்துவிட்டார்கள். அப்பிடியிருக்கையில் அஜித்துக்கு இருக்கும் இவ்வளவு பெரிய வெறித்தனமான கூட்டம் எல்லோரையுமே வியக்கவைக்கிறது.. சரி, அஜித் ரசிகர்கள் அஜித்தை எவ்வாறு திரையில் பார்க்க விரும்புகிறார்கள்? எதை ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்... 
அஜித்துக்கு மிகப்பெரிய மைனசே டான்ஸ் மற்றும் காமெடிதான். இதில் அஜித் டான்சிலுள்ள குறைபாடு அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் ஜோக்கை அஜித் ரசிகர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அஜித் எப்போதுமே தீனா, அட்டகாசம், பில்லா, மங்காத்தாவில் வந்ததுபோல கெத்தா இருக்கணும் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பம். தமது ஹீரோவை ஒரு காமெடிப்பீசாக பார்ப்பதற்கு எந்தவொரு அஜித் ரசிகனும் விரும்பமாட்டான். அதனால்தான் என்னவோ எல்லோராலும் விரும்பப்பட்ட கிரீடம் திரைப்படம் அஜித் ரசிகர்களை கவராததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதே காமெடி அம்சங்களுடன் விஜய் நடித்திருந்தால் அவரது ரசிகர்கள் நிச்சயம் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்திருப்பார்கள்.. 
இதைவிட ஹீரோயினுக்கு பின்னால முன்னால திரியிறது, அதிகம் அலம்புறது, ஹீரோயினுடன் பாடல் காட்சிகளில் சல்லாபப்படுறது, சாப்டான பாத்திரங்களில் நடிப்பது.. இப்பிடி ஏதாவது படத்தில் இருக்குமாயின் காறித்துப்பக்கூட தயங்கமாட்டார்கள்.. சில நடிகர்கள் லிப்டு லிப் கிஸ் குடுத்திட்டு அதை எப்பிடி குடுத்தேன் எண்டு பப்ளிக்கில விளக்கம்வேற சொல்வார்கள், சிலர் லிப்டையே கடிப்பார்கள், சிலர் உண்மையிலே கிஸ் குடுக்காம வேற தொழிநுட்பங்களை பயன்படுத்தி லிப்டு லிப் கிஸ் சீனை வைச்சிடுவாங்க..ஆனா, அஜித் அதெல்லாம் சரிப்பட்டுவராதெண்டு மங்காத்தாவில் வெங்கட்பிரபுவிடம் உறுதியாகவே சொல்லிட்டார்.. ஆரம்பத்தில் யாரின் துணையின்றி கஷ்டப்பட்ட காலங்களில் கைவிட்ட மீடியாக்கள் இப்ப என்னடா எண்டா அஜித் ஒரு இடத்துக்கு போனால் என்ன நிற சேட்டு போட்டு போனார்? எப்பிடி ஹெயார் ஸ்டைல் இருந்திச்சு? எண்டதையெல்லாம் புட்டு புட்டு எழுதுறாங்கள்(சத்தியம் தியேட்டருக்கு அஜித் போனபோது அண்ட் வேறு சில தருணங்களில்).. அது மட்டுமல்ல அண்மையில் விஜய் டிவியால் அஜித்துக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகள் அஜித் விழாவுக்கு போகாததால் விஜய் டீவி நிறுவனரே நேரடியாக அஜித்தின் வீட்டுக்கு சென்று வழங்கி, அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை விழாவின் காணொளிபிரதியுடன் சேர்த்து டீவியில் ஒளிபரப்பாகி பப்ளிசிட்டி தேடினார்கள்.. இதற்குமுதல் ரஜினிக்கு எந்திரனுக்கான மக்கள் விருது மற்றும் செவாலியார் சிவாஜி விருதை, ரஜினி வராததால் அவரின் வீடு தேடி சென்று கொடுத்து இதேபோல செய்தார்கள்..
எது எப்பிடியோ எத்தனையோ எதிரிகளின் எதிர்ப்புக்கும்,சூழ்ச்சிக்கும் நடுவே விடாப்பிடியாக அஜித் கடைப்பிடித்த கொள்கைகள் இன்று ரசிகர்களால் அவருக்கு தலைக்கு மேல் ஆதரவை அள்ளிக்குடுத்துக்கொண்டிருக்கிறது.. விழாக்களுக்கு செல்லாமை, தனது படங்களுக்கு புரோமோஷன் செய்யாமை, ரசிகர் மன்றங்களை கலைத்தமை இவற்றையெல்லாம் ஒரு குறையாக பப்ளிசிட்டி பண்ணின வேளையிலும் அஜித் ரசிகர்கள் அஜித் மேலுள்ள அந்த விசுவாசத்தை கடுகளவேனும் குறைக்கவில்லை மாறாக படத்துக்கு படம் ரசிகர்கள் அளிக்கும் ஒபெநிங் எல்லோரையும் வியக்கவைக்கிறது.. 
                          வாழ்க தல! வளர்க உன் புகழ்....

26 comments:

  1. Replies
    1. நன்றி பாலா அண்ணா! உங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்

      Delete
  2. Lovely Article anna :-) proud to b a Thala Fan B-) Love u Thala :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி இந்து! உங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்... im also proud to b a Thala Fan

      Delete
  3. கண்ணா இது எல்லாம் தல ரசிகர்களுக்கு என்றே இருக்கின்ற மிடுக்கு, ஆணவம், கர்வம்.... அதுதான் நம்ம பசங்க சொல்லுவாங்க "தல ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..." என்று... கண்ணா நீங்க சொன்னது 100% சரி... யார் படம் வந்தாலும் வரட்டும் என் தல படம் வந்தா மிரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. sure...தலையைப்போல தல ரசிகர்களும் எப்போதும் ஒரு செருக்கிருக்கும்.. அதை மாத்தமுடியாது...

      Delete
  4. இன்னொன்னை சொல்ல மறந்துட்டேன் நண்பா... அதை நீங்களும் சுட்டிக்காட்ட மறந்துட்டீன்களோ இல்லை மறைத்துடீன்களோ தெரியவில்லை...கூட நடிக்கும் நடிகையின் ரவுசறை(காற்சட்டையை) பாடல் காட்சியின் போது கழட்டி, இழுத்து பார்க்கும் ஆள் நம்ம ஆள் இல்லை...மற்றையது மாமா இயக்கம் சீ சீ அது மக்கள் இயக்கம் என்று ஒன்றும் வைத்திருக்காதவர்.. இருந்த மன்றந்த்தையே கலைத்தவர்...

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... அவருடைய ரசிகர்கள் அதைத்தான் ரசிக்கிறார்கள்.. சிலவேள நான் அதை சுட்டிக்காட்டியிருந்தால் அவர்கள் அதை பெருமையாகவும் நினைக்கலாம் ..

      Delete
  5. மச்சீ... பதிப்பு சூப்பர் சும்மா நரம்புகளில் கொக்கேன் அடித்தது போல ஒரு இதமான வருடல் சூப்பர் மச்சீ... தொடர்ந்து தல புகழ் பாட வாழ்த்துகள்... எவனாவது எக்குதப்பாக கமெண்ட் அடித்தால் சொல்லு மச்சீ சும்மா நாறு நாராக கிழித்து தொங்க போட்டுடுவம்...ஓகே வா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோசுபா! உங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்... proud to b a Thala Fan

      Delete
    2. proud to be thala fan.......

      Delete
  6. wow............ we are all thala bloods

    ReplyDelete
    Replies
    1. நன்றி Anonymous! உங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.

      Delete
  7. தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும்

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கு நன்றி செந்தில்குமார் அண்ணா/// அஜித் பற்றிய பதிப்பை பாகம் 25 உடன் நிறுத்திவிட்டீர்களே! தயவுசெய்து தொடருங்கள்.. இன்னமும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்...

      Delete
  8. தல எப்பவும் தலதான உங்கள் பதிவு மிக அருமை

    தல எப்பவுமே தலதான்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆட்டோமொபைல் தமிழன்! உங்களின் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்........... proud to b a Thala Fan!

      Delete
  9. நன்றி தினபதிவு, தங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும்.. என்னுடைய பதிவை உங்கள் தளத்தில் இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  10. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  11. தலையைப்போல தல ரசிகர்களும் எப்போதும் ஒரு செருக்கிருக்கும்.. அதை மாத்தமுடியாது...
    Super...

    ReplyDelete
    Replies
    1. நன்றி Anonymous உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்..

      Delete
  12. தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும் அஜித்திடம் ரசிகர்களுக்கு வெறி உண்டாக முக்கிய காரணங்களாகும். அஜித் ரசிகன்...தலயின்.முரட்டு பக்த்தன்..அஜித்சிவா

    ReplyDelete
  13. தனக்கெண்டு ஒரு கொள்கை, எந்த சமயத்திலும் யார் எதிர்த்தாலும் விட்டுக்கொடுக்காத மனத்தைரியம், தனக்கொன்று சரியெண்டு பட்டால் அது பிழையென்றாலும் சரிவர செய்துமுடிக்கின்ற துணிச்சல், தானும் தன்வேலையும் என்றிருக்கும் நேர்மைத்தனமும், யார் புத்திமதியையும் கேட்கவிரும்பாத அடங்காத்தனமும், யாருக்கும் ஜால்ரா அடிக்கவிரும்பாத வெறித்தனமும், யார் நிழலிலும் உறங்க விரும்பாத ரோசத்தனமும் அஜித்திடம் ரசிகர்களுக்கு வெறி உண்டாக முக்கிய காரணங்களாகும். அஜித் ரசிகன்...தலயின்.முரட்டு பக்த்தன்..அஜித்சிவா

    ReplyDelete
    Replies
    1. நன்றி Ajithsiv உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்..

      Delete

comment