சரி, இப்போ இன்னொரு முக்கிய பிரச்னைக்கு போவோம்.... வேற ஒண்டுமில்ல பில்லா 2 ஒபெநிங்கும் துப்பாக்கி ஒபெநிங்கும்... பில்லா 2 படம் வெளியாக முன்னர் அஜித்தை பிடிக்காதவர்கள் இது "ஏ" சேட்டிபிக்கட் படம், அது இதெண்டு நிறைய புலம்பினாங்க... ஆனா படம் வந்தாப்பிறகு அதை பாதிப்பேரு மறந்துவிட்டார்கள், அதிலும் துப்பாக்கி வந்தாப்பிறகு அனைத்து அஜித் எதிர்ப்பாளர்களுமே பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதை மறந்துவிட்டார்கள்... ஏனென்டா பில்லா 2 "ஏ" சேட்டிபிக்கட் படம் எண்டதால அதற்கு 30% வரி உண்டு..அதாவது பில்லா 2 இன் மொத்த கலக்சனில் 30% ஆனா பங்கு அரசாங்கத்துக்கு வரியாக சென்றுவிடும். மீதி 70% ஆனா பங்கே கலக்சனாக கருதப்படும்.. அதாவது தமிழக பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் யாவுமே வரியாக செலுத்தவேண்டியது போக மீதி 70% ஆனா பங்கே ஆகும்.. 70% ஆனா பங்கை துப்பாக்கியின் முழு கலக்சனுடன் ஒப்பிடுவதற்காக சேட்டிபிக்கட் விஷயத்தை மறந்தே போனார்கள்போலும். ஆனால் அதைவைத்துத்தான் படம் வெற்றியா? தோல்வியா?அவரேஜ்ஜா? என கணிக்கப்படும்.. ஏனென்டா மீதி 70% ஆனா பங்கு கலக்சன்தானே விநியோகிஸ்தர்கள்,தியேட்டர் அதிபர்களுக்கு போகப்போகுது???......
ஆனா, அஜித்தை பிடிக்காதவர்கள்(எல்லோருமல்ல, குறிப்பிட்ட சிலர்) இதை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே இந்தப்பதிவை நான் எழுதணும் என்று எண்ணினேன்... கொஞ்சம் அடிப்படையிலிருந்தே போவோமென்...உதாரணத்துக்கு அஜித் ரசிகர்களின் பல்வகமையை பார்த்தால் அதில் கிட்டத்தட்ட 90% ஆனோர் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களே!, ஆனா விஜய் ரசிகர்களை பார்த்தா அவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது வீதமானோர்தான் ஆண்கள், அதிலும் அநேகமானோர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள்.. மிகுதி தரப்பினர் பெண்கள்,மற்றும் குடும்ப ரசிகர்கள்.. சூர்யா ரசிகர்களை பார்த்தா கிட்டத்தட்ட முப்பது வீதமானோர்தான் ஆண்களா இருப்பார்கள்.... சுருக்கமா சொன்னால் அஜித்தின் ரசிகர்கள் இளைஜர்கள், விஜயின் ரசிகர்கள் சிறுவர்கள்,பெண்கள்.... சூர்யாவின் ரசிகர்கள் பெண்கள்,குடும்பத்தினர் .... இந்த ரசிகர்களின் பல்வகமைதான் அஜித்தின் "கிங் ஆப் ஒபெநிங்" கு அடிப்படை காரணம்......
ஆனா, இதில காமெடி என்னவெண்டா இன்னொரு நடிகரின் பட கலக்சனோடு அஜித்தின் பில்லா 2 பட கலக்சனை ஒப்பிடேக்க 30% வரி போக மீதி 70% ஆனா பங்கை வைச்சு ஒப்பிடுவதுதான்... நான் தெரியாமல்தான் கேக்குறேன் வரியா செலுத்திய 30% ஆனா கலக்சன் என்ன வானத்தில இருந்தா வந்திச்சு? அதுவும் பில்லா 2 படத்தை பார்க்கவந்தவர்களால வந்த கலக்சன்தானே!.. அப்போ இன்னொரு படத்துடன் பில்லா 2 பட கலக்சன்களை ஒப்பிடும்போது உண்மையான கலக்சனையல்லவா ஒப்பிடணும்??? குறிப்பாக துப்பாக்கி வெளிவந்தாப்பிறகுதான் இவ்வாறான சுவாரிசயங்கள் இடம்பெறத்தொடங்கின.
துப்பாக்கி முதல் 6 நாள் மொத்த கலக்சன் 4.83 கோடிகள் (source)
தமிழகத்தில் முதன் நாள் வசூல்
பில்லா 2 மொத்த கலக்சன் 10.85 கோடிகள் (நெட் கலக்சன் 7.525 கோடிகள்) (source)
துப்பாக்கி மொத்த கலக்சன் 9.25 கோடிகள் (source)
தமிழகத்தில் முதன் 3 நாள் வசூல்
பில்லா 2 மொத்த கலக்சன் 27.15 கோடிகள் (நெட் கலக்சன் 19 கோடிகள்) (source)
துப்பாக்கி படத்துக்கு யூ சேட்டிபிகேட் எண்டதால எந்தவித வரி அறவிடலும் இல்ல...மொத்த கலக்சன்தான் நெட் கலக்சன். ஆனா உண்மை நிலை (தெரிந்தும்) தெரியாது ஒரு சில அஜித் எதிர்ப்பாளர்கள் சமுக வலைத்தளங்களில் துப்பாக்கியின் மொத்த கலக்சனை பில்லா 2 இன் நெட் கலக்சனுடன் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.. இதிலிருந்து அவர்களின் இயலாத்தன்மை புலப்படுகிறது..
தமிழகம் தவிர்ந்த கேரளாவில் முதன் நாள் வசூலில் மாற்றான் 96.5 லட்சங்களும் துப்பாக்கி 87 லட்சங்களும் வசூலிச்சுள்ளமை குறிப்பிடத்தக்கது (source)..வெளிநாடுகளில் வசூல் நிலைமைகள் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்.. என்னதான் பெரிய ஹிட் எண்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா சிங்கப்பூரில் 5 கோடிகள், யூ .கே, அமெரிக்காவில் மொத்தமா முன்று கோடிகளும், கேரளாவில் நான்கு கோடிக்களும்தான் வசூலிக்கும். இதனால் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிரதேச கலக்சன் நிலவரங்கள் மொத்த கலக்சனில் பெரிதாக பாதிப்பு செலுத்தாது. பொதுவா மொத்த கலக்சன்களில் வெறும் 10% - 15% ஆனைவையே தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து தமிழ் படம் ஒன்றுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
thala-the king of opening forever
தமிழகம் தவிர்ந்த கேரளாவில் முதன் நாள் வசூலில் மாற்றான் 96.5 லட்சங்களும் துப்பாக்கி 87 லட்சங்களும் வசூலிச்சுள்ளமை குறிப்பிடத்தக்கது (source)..வெளிநாடுகளில் வசூல் நிலைமைகள் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்.. என்னதான் பெரிய ஹிட் எண்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா சிங்கப்பூரில் 5 கோடிகள், யூ .கே, அமெரிக்காவில் மொத்தமா முன்று கோடிகளும், கேரளாவில் நான்கு கோடிக்களும்தான் வசூலிக்கும். இதனால் தமிழகம் தவிர்ந்த ஏனைய பிரதேச கலக்சன் நிலவரங்கள் மொத்த கலக்சனில் பெரிதாக பாதிப்பு செலுத்தாது. பொதுவா மொத்த கலக்சன்களில் வெறும் 10% - 15% ஆனைவையே தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து தமிழ் படம் ஒன்றுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
thala-the king of opening forever