Showing posts with label உதயநிதி. Show all posts
Showing posts with label உதயநிதி. Show all posts
Tuesday, June 4, 2013
தீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)
பண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே! இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...
2012
இவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.
2011
இவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.
2010
இம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.
2009
இம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..
2008
இம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹரியின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.
2007
இம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.
2006
அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.
2005
இவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
2004
இம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2003
அஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.
2002
இவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.
Sunday, May 20, 2012
பாக்ஸ் ஆபீஸ் கலாட்டா....
தமிழ் சினிமாவில் வருடாவருடம் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தாலும் அந்த படங்களின் நிலை என்ன? மொத்த வசூல் என்ன? படம் வெற்றியா தோல்வியா எண்டு எவராலுமே உறுதிசெய்ய முடியாத நிலை.. அதற்கு முதலாவது காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள்தான், இவர்களுக்கு மட்டும்தான் படத்தின் உண்மை நிலவரங்கள் தெரியும், அது மட்டுமல்ல உத்தியோகபூர்வமாக படத்தின் வசூல் கணக்கை வெளியிடவேண்டிய பொறுப்பும் இவர்களுக்கே உண்டு.. ஆனால் இவர்களில் எத்தனை பேர் வசூல் கணக்கை வெளியிடுகிறார்கள்? ஏதாவது ஓரிரு படத்திற்கே உண்மையான வசூல் நிலவரங்களை மக்கள் அறிய முடிகிறது.... இதற்கு உண்மையான காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்டவர்கள் வசூல் கணக்கை வெளியிடுவதில்லை? என்று பார்த்தால், ஒரு காரணம் அதிகமாக வசூலிச்சபடங்களின் உண்மை நிலவரங்களை வெளியிட்டா அதிகப்படியான வரி செலுத்தவேணும் என்று, ஆனால் இதற்கான தேவை மிகமிக குறைவென்றே சொல்லணும்.. ஏனென்றால் நூற்றுக்கணக்கான படங்கள் வருடாவருடம் வெளிவரும்போது அதில் தேறுபவை கிட்டத்தட்ட பத்து பதினைந்து படங்களே! அதிலும் மூக்கில விரலை வைக்கிறளவுக்கு வெற்றிப்படங்கள் என்றா நான்கு அல்லது ஐந்து படங்கள்தான்.. கடந்த ஆண்டை எடுத்து பார்த்தாலே புரியும் blockbuster ரக படங்கள் என்றால் மங்காத்தா,கோ,காஞ்சனா மட்டுமே...
சரி, உண்மையான வசூல் கணக்கை வெளியிடாமைக்கான மற்ற காரணம் என்னவெண்டு பார்த்தால், "ஹீரோக்கள்ட கௌரவ பிரச்சனைதான்" உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்ட படங்கள் பிளாப்பாகி தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வரும்போது உண்மையான வசூல் கணக்கை சொன்னால் அவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டிடும் என்றதுக்காக உண்மையான வசூலை சொல்வதில்லை. அதில் கொடுமை என்னவென்றால் ஓடாத மொக்கை படங்களுக்கும் "விண்ணைத்தாண்டும் விஸ்வரூப வெற்றி" என்று பில்டப் விடுவதுதான்.. சில நடிகர்கள் தங்களின் படங்கள் வெளிவந்து ரெண்டாம், மூன்றாம் நாளிலே மீடியாக்களுக்கு போய் "சக்சஸ் மீட்டிங்" என்று வைத்திடுவாங்க, அதில தங்களின் படங்களின் கலக்சன் எந்திரனை உடைச்சிட்டு, சிவாஜியை தாண்டிட்டு என்று கொஞ்சம்கூட வாய்கூசாமல் சொல்வார்கள். இதில பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் தயாரிப்பாளர்கள்/ விநியோகிஸ்தர்கள்/ தியேட்டர் ஓனர்கள்தான்.. என்ன செய்ய உண்மை நிலவரங்களை சொன்னால் பிழைப்பு நாறிடும், அதால அமைதி காத்துக்கொண்டிருக்கவேண்டியதுதா ன்.. சிலவேளைகளில் தொடந்து ஒரு நடிகரின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் பப்ளிக்காயே குரல்கொடுப்பார்கள்..அப்போதுதான் சிலசில உண்மைகள் வெளிவரும்.
இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு "சக்சஸ் மீட்டிங்" வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள், ஆனா சுறா என்ற படம் வந்து படுஊத்தல் ஊத்தவே இனியும் அமைதியா இருந்து பிரயோசனம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கெதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள்..அதுபோலவே அண்மையிலும் தனுசின் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளும், அதிகரிக்கும் அவரின் சம்பளத்துக்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள், அடுத்த படத்தை வெல்ல வைக்கணும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள்.. அல்லாவிடில் சம்பளத்தையும் அதிகரித்து ஹீரோக்கள் நல்லா பிழைப்பார்கள், தயாரிப்பாளர்/விநியோகிஸ்தர் பாடுதான் திண்டாட்டமா போகும்..
அதைவிட இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பாக ஊடகங்களின் செய்திகள்... இதை முழுமையாக ஆராயப்போனால் பத்து பதிவுகளே தாண்டிடும். வெறும் இரண்டாயிரம் ரூபா இருந்தாலே போதும் நாமும் ஒரு வெப்சைட்டை தொடக்கி மனம்போல செய்திகளைபோட.. அண்மையில் நண்பன் வெளிவரும்போது superwoods.com இல் வரும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்டை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், ஒவ்வொரு நாளும் உலகம்பூராக எவ்வளவு வசூல் எண்டு கணித்து போடுவாங்கள்... எப்பிடியையா சாத்தியம்? ஒரு இரவுக்குள்ள உலகம் முழுவதும் ரிலீசான படத்திண்ட கலக்சனை எண்ணி அனுப்புவாங்களோ! ஆங்கில படங்களுக்கு வேணும்னா சாத்தியப்படலாம். ஆனா இந்திய திரைப்படங்களுக்கு அறவே சாத்தியமில்லை............
எல்லாத்தையும்விட மிகப்பெரிய முறைகேடு என்னவென்றால் அண்மையில் வெளிவந்த ஓகேஓகே படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்தான். 2007 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை வார இறுதியில் behindwoods.com இல் வெளிவரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிவரும் காலப்பகுதியில் அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போகும் என்றுதான் சொல்ல தோணுகிறது, ஆமா மூன்றாம் வார முடிவில் 7.85cr என்று போட்டிருந்தார்கள், அதன் பிறகு என்ன மாயம் நடந்திச்சோ தெரியல நான்காம் வாரம் முடியேக்க 15cr என்று போட்டிருந்தார்கள்.. சரி, மறுபடியும் பழைய நிலவரங்களை பார்ப்பம் என்றால், முந்தய வார வசூல் எல்லாவற்றையுமே மாற்றி கூட்டிவிட்டார்கள்.... என்னய்யா பித்தலாட்டம்? official site என்று behindwoods ஐ நம்பி பார்த்தால் எங்கட காதிலையே பூ வைப்பார்கள்போலும்.... அது மட்டுமல்ல வல்லவன் படம் பிளாப் என்று முன்னர் behindwoods ல போட்டிருந்தார்கள்.. பிறகு சிம்பு எல்லா மேடைகளிலும் வல்லவன் வெற்றி வெற்றி என்று பில்டப் விட இவங்களும் ஹிட் என்றே அறிவித்துவிட்டார்கள். அதேபோல அண்மையில் வெளிவந்த நண்பனுக்கு மூன்று/நான்கு வாரம் கழிந்தபின் ஹிட் என்று அறிவித்தாங்க, பின்னர் சில நாள் கழித்து நண்பன் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக கலக்சனை அள்ளிட்டு என்று ஒரு செய்தியை போட்டு நண்பனை "சூப்பர் ஹிட்" ஆக அறிவித்தார்கள்.. 150cr வரை வசூலித்த சிவாஜியை நண்பன் பிரேக் பண்ணிட்டு என்றால் ஏனையா சூப்பர் ஹிட் குடுக்கிறீங்க? பேசாம பிளக்பாஸ்டர் குடுக்கவேண்டியதுதானே!!!..... ஒன்று மட்டும் சொல்லமுடிகிறது behindwoods ஆனது சிலரின் கைப்பிள்ளையாக செயற்படத்தொடங்கிவிட்டது.. சாதாரண மயிர்புடுங்கி இணையத்தளங்கள் ஒரு பக்க சார்பாக செய்திகள் போடுவது வேற விடயம், ஆனால் எல்லோராலும் நம்பப்படும் ஒரு இணையத்தளம் இவ்வாறு பக்கசார்பாக நடப்பது வேதனைக்குரிய விடயம்தான்........................................ இனி எந்த படத்தினதும்ம் உண்மையான வசூல் நிலவரங்களை அறிந்துகொள்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.. காரணம் நடுநிலையான ஊடகங்கள் என்று எவையுமே இல்லை....................
சரி, உண்மையான வசூல் கணக்கை வெளியிடாமைக்கான மற்ற காரணம் என்னவெண்டு பார்த்தால், "ஹீரோக்கள்ட கௌரவ பிரச்சனைதான்" உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்ட படங்கள் பிளாப்பாகி தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வரும்போது உண்மையான வசூல் கணக்கை சொன்னால் அவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டிடும் என்றதுக்காக உண்மையான வசூலை சொல்வதில்லை. அதில் கொடுமை என்னவென்றால் ஓடாத மொக்கை படங்களுக்கும் "விண்ணைத்தாண்டும் விஸ்வரூப வெற்றி" என்று பில்டப் விடுவதுதான்.. சில நடிகர்கள் தங்களின் படங்கள் வெளிவந்து ரெண்டாம், மூன்றாம் நாளிலே மீடியாக்களுக்கு போய் "சக்சஸ் மீட்டிங்" என்று வைத்திடுவாங்க, அதில தங்களின் படங்களின் கலக்சன் எந்திரனை உடைச்சிட்டு, சிவாஜியை தாண்டிட்டு என்று கொஞ்சம்கூட வாய்கூசாமல் சொல்வார்கள். இதில பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் தயாரிப்பாளர்கள்/ விநியோகிஸ்தர்கள்/ தியேட்டர் ஓனர்கள்தான்.. என்ன செய்ய உண்மை நிலவரங்களை சொன்னால் பிழைப்பு நாறிடும், அதால அமைதி காத்துக்கொண்டிருக்கவேண்டியதுதா
இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு "சக்சஸ் மீட்டிங்" வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள், ஆனா சுறா என்ற படம் வந்து படுஊத்தல் ஊத்தவே இனியும் அமைதியா இருந்து பிரயோசனம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கெதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள்..அதுபோலவே அண்மையிலும் தனுசின் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளும், அதிகரிக்கும் அவரின் சம்பளத்துக்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள், அடுத்த படத்தை வெல்ல வைக்கணும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள்.. அல்லாவிடில் சம்பளத்தையும் அதிகரித்து ஹீரோக்கள் நல்லா பிழைப்பார்கள், தயாரிப்பாளர்/விநியோகிஸ்தர் பாடுதான் திண்டாட்டமா போகும்..
அதைவிட இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பாக ஊடகங்களின் செய்திகள்... இதை முழுமையாக ஆராயப்போனால் பத்து பதிவுகளே தாண்டிடும். வெறும் இரண்டாயிரம் ரூபா இருந்தாலே போதும் நாமும் ஒரு வெப்சைட்டை தொடக்கி மனம்போல செய்திகளைபோட.. அண்மையில் நண்பன் வெளிவரும்போது superwoods.com இல் வரும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்டை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், ஒவ்வொரு நாளும் உலகம்பூராக எவ்வளவு வசூல் எண்டு கணித்து போடுவாங்கள்... எப்பிடியையா சாத்தியம்? ஒரு இரவுக்குள்ள உலகம் முழுவதும் ரிலீசான படத்திண்ட கலக்சனை எண்ணி அனுப்புவாங்களோ! ஆங்கில படங்களுக்கு வேணும்னா சாத்தியப்படலாம். ஆனா இந்திய திரைப்படங்களுக்கு அறவே சாத்தியமில்லை............
எல்லாத்தையும்விட மிகப்பெரிய முறைகேடு என்னவென்றால் அண்மையில் வெளிவந்த ஓகேஓகே படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்தான். 2007 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை வார இறுதியில் behindwoods.com இல் வெளிவரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிவரும் காலப்பகுதியில் அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போகும் என்றுதான் சொல்ல தோணுகிறது, ஆமா மூன்றாம் வார முடிவில் 7.85cr என்று போட்டிருந்தார்கள், அதன் பிறகு என்ன மாயம் நடந்திச்சோ தெரியல நான்காம் வாரம் முடியேக்க 15cr என்று போட்டிருந்தார்கள்.. சரி, மறுபடியும் பழைய நிலவரங்களை பார்ப்பம் என்றால், முந்தய வார வசூல் எல்லாவற்றையுமே மாற்றி கூட்டிவிட்டார்கள்.... என்னய்யா பித்தலாட்டம்? official site என்று behindwoods ஐ நம்பி பார்த்தால் எங்கட காதிலையே பூ வைப்பார்கள்போலும்.... அது மட்டுமல்ல வல்லவன் படம் பிளாப் என்று முன்னர் behindwoods ல போட்டிருந்தார்கள்.. பிறகு சிம்பு எல்லா மேடைகளிலும் வல்லவன் வெற்றி வெற்றி என்று பில்டப் விட இவங்களும் ஹிட் என்றே அறிவித்துவிட்டார்கள். அதேபோல அண்மையில் வெளிவந்த நண்பனுக்கு மூன்று/நான்கு வாரம் கழிந்தபின் ஹிட் என்று அறிவித்தாங்க, பின்னர் சில நாள் கழித்து நண்பன் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக கலக்சனை அள்ளிட்டு என்று ஒரு செய்தியை போட்டு நண்பனை "சூப்பர் ஹிட்" ஆக அறிவித்தார்கள்.. 150cr வரை வசூலித்த சிவாஜியை நண்பன் பிரேக் பண்ணிட்டு என்றால் ஏனையா சூப்பர் ஹிட் குடுக்கிறீங்க? பேசாம பிளக்பாஸ்டர் குடுக்கவேண்டியதுதானே!!!..... ஒன்று மட்டும் சொல்லமுடிகிறது behindwoods ஆனது சிலரின் கைப்பிள்ளையாக செயற்படத்தொடங்கிவிட்டது.. சாதாரண மயிர்புடுங்கி இணையத்தளங்கள் ஒரு பக்க சார்பாக செய்திகள் போடுவது வேற விடயம், ஆனால் எல்லோராலும் நம்பப்படும் ஒரு இணையத்தளம் இவ்வாறு பக்கசார்பாக நடப்பது வேதனைக்குரிய விடயம்தான்........................................ இனி எந்த படத்தினதும்ம் உண்மையான வசூல் நிலவரங்களை அறிந்துகொள்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.. காரணம் நடுநிலையான ஊடகங்கள் என்று எவையுமே இல்லை....................
- வருகை தந்தமைக்கு நன்றி-
Saturday, May 12, 2012
மங்காத்தாவும் நொந்துபோன உதயநிதியும்....
காலை நித்திரையால எழும்பி வெப்சைட்டுக்களில் என்ன செய்திகள் வந்திருக்குதெண்டு சும்மா தட்டி பார்த்தா செம அதிர்ச்சி, அது வேற ஒண்டுமில்லை "ஒருகல் ஒருகண்ணாடி" பற்றி உதயநிதி தெரிவித்த ஒரு கருத்துத்தான்... "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.".. இதுதான் அவர் கூறின கருத்து.... அவற்றை கருத்திண்ட ஆழம் இதுதான்.. தமிழ்நாடு அண்மைய வசூல் ஒப்பீட்டு நிலவரப்படி முதலாவது ஏழாம் அறிவு அடுத்தது ஓகேஓகே அடுத்தது மங்காத்தா எண்டு...... இதை நினைத்து சிரிக்கிறதா இல்லை அழுகிறதா எண்டு கொஞ்சநேரம் ஒரே குழப்பமா இருந்திச்சு.......... சரி, அதுக்குமுதல் தயாரிப்பாளராக உதயநிதியை பற்றி கொஞ்சம் பார்ப்பம்......
ஒருகல் ஒருகண்ணாடியானது உதயநிதியின் தயாரிப்பில் வெளிவந்த ஐந்தாவது திரைப்படமாகும், ஓகேஓகே ஐ தவிர இவர் தயாரித்த மிகுதி நான்கு படங்களுமே வெற்றிப்படங்கள் அல்ல, அதில் குருவி,மன்மதன் அம்பு ஆகிய ரெண்டு படங்களும் படுதோல்விப்படங்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமும்கூட.. மற்றைய ரெண்டு படங்களான ஆதவன்,ஏழாம் அறிவு ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் மிக்ஸ் ரிப்போட்தான், கிளீன் ஹிட் என்றில்லை... இரண்டுமே அவேரேஜ் படம்தான். அப்பிடி என்றால் வெற்றியா தோல்வியா என்று பார்த்தால் தோல்வியென்றுதான் சொல்லணும்.. இதேபோலத்தான் அஜித்தின் திருப்பதி,பரமசிவன் படங்கள், மற்றும் விஜயின் ஒருசில தோல்விப்படங்களுக்கும் இதே கதிதான்... அவேராஜ்ஜா ஓடின படமென்றாலும் வெற்றியா/தோல்வியா என்றுதான் இறுதியில் பார்ப்பார்கள்.. அப்போது அவை தோல்வியாகவே கணிக்கப்படும்.. என்னதான் ஒவ்வொரு படத்திலயும் அடிவாங்கினாலும் விடுற பில்டப்புக்கு அளவே இல்லை.. குருவி படத்துக்கு 150வது நாள் வெற்றிவிழாவை பிரமாண்டமாய் செய்து, படங்களின் ஓடிய நாட்களை வைத்து வெற்றியை அறிவிக்கும் மரபையே கேவலப்டுத்தினார்கள். அதற்கப்புறம் ஆதவன் வெளிவந்தசமயம் வசூல் நிலவரங்களை "சிவாஜிக்கு அடுத்ததாய்" என்ற ஒரு சொல்லை பயன்படுத்தியே பில்டப் விட்டார்கள்.. அடுத்ததாய் மன்மதன் அம்பு படத்திற்கு வசூல் ரீதியில் பில்டப் விட்டதா தெரியவில்லை.. அதற்கப்புறம் கடைசியா வந்த ஏழாம் அறிவிற்கு விட்ட பில்டப்பை ஊரே அறியும்...... 100 கோடியே தாண்டாத படத்தை எந்திரன், சிவாஜிக்கு அடுத்ததாய் மிகப்பெரிய வசூலிச்ச படமாய் விளம்பரப்படுத்தினார்கள்.. இவ்வாறு உதயநிதி விடும் பில்டப்புக்கு அளவே இல்லை எண்டு சொல்லலாம்..... இவற்றை தயாரிப்பில அல்லது வெளியீட்டில் ஏதாவது படங்கள் ரிலீசானா டுவீட்டர் பக்கம் தலைகாட்டவே முடியாது... அந்தளவுக்கு ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொருநாளும் எல்லா சோவும் ஓடி முடிஞ்சாப்பிறகு வந்த கலக்சனை எல்லாம் கூட்டி பார்த்தாள்போல வசூல் கணக்குகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார்... பாவம் உதயநிதி.. ஊருக்கே தெரிஞ்சிட்டு இவற்றை பித்தலாட்டம்.. ஆனா, இன்னமும் இவர் தான் சொல்லுறதை எல்லாம் நம்பிட்டு இருக்காங்க எண்டு நம்பிட்டிருக்கார்...
சரி, நாம விடயத்துக்கு வருவோம்.....
எந்திரன் வெளிவந்து அடுத்த இரண்டாண்டுகளில் வெளிவந்த படங்களில் எந்தவொரு மிக்ஸ் ரிப்போட்டும் இல்லாமல், வெளியான அனைத்து இடங்களிலுமே சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் மங்காத்தாதான்... மொத்த வசூலிலும் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்தபடியாய் இன்றுவரை அதிக வசூலிச்ச படம் என்றாலும் மங்காத்தாதான்.... நினைத்துக்கூட பார்க்கமுடியாதளவிலான வெற்றி அது, வெறும் நாற்பது கோடிகளில் தயாரிச்ச படம் மொத்தமாக 130 கோடிகள் வசூல் செய்தது.. அதற்கடுத்ததாய் மொத்தவசூல் அதிகம் என்றால் ஏழாம் அறிவை குறிப்பிடலாம்(net profit அல்ல).. ஆனால் உதயநிதியின் கருத்தை ரெண்டுவிதமாய் பார்த்தால், ஒன்று மங்காத்தாவை விட ஏழாம் அறிவின் தமிழ்நாட்டு வசூல் கூட என்பது.. மற்றது ஓகேஓகே ட தமிழ்நாடு வசூல் மங்காத்தாவை விட அதிகம் என்பது...
இதற்கு நான் சொல்லும் பதில் இதுதான்.....ஏழாம் அறிவுட பட்ஜெட் கிட்டத்தட்ட எண்பது கோடி என்று சொன்னார்கள், அதே சந்தேகப்படவேண்டிய ஒரு விடயம்தான்...அந்தப்படத்தை பார்த்தா தெரியும் எண்பது கோடி செலவழிக்கிற அளவுக்குக்கு பிரமாண்டம் எண்டு எதுவுமில்லை..குறிப்பாக முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு நிமிட சீனுக்கும் ஒவ்வொரு கோடி செலவளித்தோம் என்று சொன்னாங்களே!! சப்பா தாங்கமுடியேலப்பா! சரி அதைவிடுவம், எண்பது கோடி எண்டே எடுத்தாலும்,எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவு படத்துக்கு விநியோகிஸ்தரும் உதயநிதிதான்.. ஆதலால் உதயிடமிருந்து நேரடியாக தியேட்டருக்கே சென்றிருக்கும். எப்பிடியும் 90 கோடியளவில் வியாபாரம் நடந்தாலும் மங்காத்தாட வசூலை முறியடித்தது என்றால் 130 கோடிகள் தாண்டியிருக்கணும், கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபா நிகரலாபம்.... எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவுக்கு நாற்பது கோடி நிகர லாபம் என்றால் ஏழாம் அறிவு சூப்பர்ஹிட் அல்லது பிளக்பஸ்டர் என்றல்லவா அறிவிக்கப்பட்டிருக்கணும்? ஏன் எல்லா வெப்சைட்டும் அவேரேஜ் எண்டு குடுத்திருக்காங்க?? என்ன சிரிப்பென்றால் ஹிட் என்றுகூட வெப்சைட்டுகள் அறிவிக்கவில்லை.. பட்ஜெட்டுக்கேற்ப நிகரலாபத்தை அடிப்படையா வைச்சு வருடமுடிவில் வெளியான அறிக்கையில் வேலாயுதத்துக்கு பிறகே ஏழாம் அறிவு இடம்பிடித்தது...... அவரேஜ் ரக படம் என்றதால் மட்டுமட்டாக 100 கோடிகளை எடுத்திருக்கவே சந்தர்ப்பம் அதிகம். பொதுவாக மொத்த வசூலில் 70% ஆனவை தமிழ்நாட்டிலே வசூல் ஆகும்.. அதற்கடுத்ததாய் rest of tamilnadu, malaysiya, uk, us and canada இல் முறையே அதிக கலக்சனை வசூலிக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.. இதில் தெலுங்கு, யூகே போன்றவற்றில் ஏழாம் அறிவு மங்காத்தாவை விட சற்று அதிகமாய் அதிகம் வசூலிச்சது, மற்றைய தமிழ் நாடு தவிர்ந்த இடங்களிலும் மங்காத்தாவிற்கு சற்று அதிகமான வசூல்..... அப்பிடி இருக்கும்போது தமிழ்நாட்டில் எப்பிடி மங்காத்தாவை விட ஏழாம் அறிவு கூட வசூலிச்சிருக்கும்?... சந்தர்ப்பமே இல்ல........
அடுத்த விடயம் ஓகேஓகே.........மூன்றாம் வார முடிவில் behindwoods இன் தரவுப்படி சென்னை வசூல் மங்காத்தாவை விட அதிகம்தான். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலும் மங்காத்தாவிட அதிகம் என்பது சின்னப்பிள்ளைத்தனமா இல்ல? 70% ஆன கலக்சன் தமிழ்நாட்டில இருந்து வரேக்க, உதயநிதியின் கருத்துப்படி மொத்த வசூலை மதிப்பிட்டால் கிட்டத்தட்ட 90 கோடிகளை தாண்டியல்லவா இருக்கணும்???............. அப்பிடியாயின் ஏன் behindwoods verdict- superhit என்று குடுத்திருக்காங்க? Blockbuster குடுத்திருக்கலமே!................. அண்ணை உதயநிதி! உங்கட பிராட்டு வேலையெல்லாம் ஊருக்கு தெரிஞ்சுபோச்சு.... இனியாவது ரூட்டை மாத்துங்க...............................
(behindwoods இணையத்தளம் ஒருபோதுமே அஜித்துக்கு ஆதரவா இருந்ததில்ல, எப்பவுமே அஜித்தை நான்காம்,ஐந்தாம் இட நடிகராகவே தரப்படுத்துவார்கள்.. அதனால்தான் எதிரிரியின் தகவல்களை source ஆக எடுத்துள்ளேன்......)
வருகைக்கு நன்றி..
Subscribe to:
Posts (Atom)