Tuesday, June 4, 2013
தீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)
பண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே! இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...
2012
இவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.
2011
இவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.
2010
இம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.
2009
இம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..
2008
இம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹரியின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.
2007
இம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.
2006
அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.
2005
இவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
2004
இம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2003
அஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.
2002
இவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.
Labels:
அஜித்,
உதயநிதி,
சினி அலசல்,
சூர்யா,
பாக்ஸ் ஆபீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment