Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா- சுருக்கமான விமர்சனம்.

பாக்கியராஜின் "இன்று போய் நாளை வா" திரைப்பட கதையை அனுமதியின்றி திருடி படம் எடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து சந்தானம்-பாக்கியராஜ் இடையேயான சமரசத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. படத்தின் கதை என்னவென்றா ஊரில வெட்டித்தனமா சுத்தித்திரியும் மூன்று பசங்க ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அந்தப்பெண் யாரை காதலிக்கிறாள் என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்... முன்று பசங்களாக சந்தானம்,பவர்ஸ்டார்,சேது ஆகியோரும் ஹீரோயினாக விசாகா சிங் உம், கௌரவத்தோற்றத்துக்கு சிம்புவும் மற்றும் பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

சந்தானம்- சொல்லவே தேவையில்ல, ஓகேஓகே, கலகலப்புக்கு பிறகு மீண்டும் ஒரு முழு நீள திரைப்படம் ஒன்று சந்தானத்தை நம்பியே எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றாட்போல் பின்னி எடுத்திருக்கிறாரெண்டே சொல்லணும். பவர்ஸ்டாரின் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரும்புதிருமாக சந்தானம் அடிக்கும் பஞ் தியேட்டரையே அதிரவைக்கிறது. 

பவர்ஸ்டார்- இன்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னாள் இப்பிடி ஒராள் இருக்கிறாரா? என்று கேட்டால் சினிமாவில் பைத்தியமா ஈடுபபாடுடையவர்கள் பலருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. குறுகிய காலத்தில் கோமாளித்தனத்தாலும், அப்பாவித்தனத்தாலும், அனுதாபத்தாலும்(நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு) பெரிய ஸ்டாராக????... இல்லீங்க இல்லீங்க.... எல்லோருக்கும் அறிமுகமானார். நான் பார்த்த திரையரங்கின் பவர்ஸ்டார் அறிமுகமாகும் காட்சியின்போது எழுந்த ஆர்ப்பரிப்பு வேறு நடிகர்களின் படத்துக்கு இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். (இத்தனைக்கும் அவரின் எந்த படத்தை பார்த்து இம்பிரஸ் ஆனீங்க என்று ஒரு வார்த்தை நச்சென்று கேட்டா?..வேணாம் கேக்குறவனுக்கே வலிச்சிடும்.)
சரி, படத்தில் எப்பிடி என்று பார்த்தால். கஷ்டப்பட்டு நடிக்கிறது புரிகிறது..என்றாலும் படத்துக்கு தன்னால் மைனஸ் வராதவாறு தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்...

இதுதவிர இந்தப்படத்தில் நடித்த அனைத்து இதர நடிகர்,நடிகைகளும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.....பாடல்களும் பரவாயில்ல, குறிப்பாக பழைய பாடல்களின் ரிமேக் செய்யப்பட்ட பாடல்கள் நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் நன்றாகவே இருந்தது...


படத்தின் பிளஸ் என்று பார்த்தால்....

தொடங்கியதிலிருந்து முடியும்வரை ஆடியன்சுக்கு அலுப்பு தட்டாமல்,எரிச்சலூட்டாமல் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் சிறப்பாகவே நகர்த்துகின்றார்...

குறிப்பாக கதாபாத்திரங்களுக்கான பாத்திரத்தேர்வு மிகப்பெரிய வெற்றியை முதல்லே அளித்துவிட்டது என்றுதான் சொல்லணும். குறிப்பாக சந்தானம்,பவர்ஸ்டார்,கணேஷ் ஆகியோர் திரையில் தென்படும்போது அவர்களின் கதைவசனங்களை கேட்கமுன்னரே ஆடியன்ஸ் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு வந்துகொண்டே இருந்தது.. இவ்வாறாக பாத்திரத்தேர்வு நேர்த்தியாக இருந்தா என்னதான் படத்தில் இடையிடையே ஓட்டைகள் இருப்பினும் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.

முழுக்க முழுக்க காமெடிப்படம் மற்றும் முன்னணி ஹீரோக்கள் இல்லாததால் ரசிகர்களால் லாஜிக் பிழைகள் மற்றும் விதண்டாவாதமான எதிர்க்கருத்துக்கள் வெளிவராது............

எது எப்பிடியோ இந்த பொங்கலில் மூன்று படங்கள் வெளிவந்தாலும் இந்த ஒரு படமே போதும் பொங்கல் பொங்கி வழிய... சினிமா ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீர்கள்... குடும்பத்தினர்,நண்பர்களுடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்....

comment