அடுத்ததாய் பட விமர்சனத்துக்கு போவோம்..
நடிகர்கள்- ஜீவா,சமந்தா,சந்தானம்
இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன்
இசை- இளையராஜா
ஒளிப்பதிவு- எம்.எஸ்.பிரபு, ஓம் பிரகாஷ்
தயாரிப்பு- ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்றேட் குமார்,ஜெயராம், கௌதம் மேனன்.
வெளியீடு- போட்டான் காதாஸ், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.
படத்தின் கதை என்று சொல்லப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை. இது கௌதம் மேனனின் படங்களில் எதிர்பார்க்கமுடியாது.. அவரின் படங்களை பொறுத்தவரை கதையை நம்பி படம் எடுப்பதில்லை, சிறியதொரு கருவை வைச்சு தனது மேக்கிங்கால் வித்தியாசமான முறையில் ஆடியன்ஸிடம் கொண்டுபோய் சேர்ப்பார். மணிரத்தினம்,ராஜீவ் மேனன்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு பட இயக்குனர்) பாணியிலான இவரது மேக்கிங் வேற இயக்குனர்களிடம் காணக்கிடைக்காததாலும், மணிரத்தினத்தின் படங்கள் இப்போதெல்லாம் பெரிதா வராததாலும் இவரின் இயக்கம் ஒரு தனித்துவமானதாகவே இருக்கின்றது. கதையின்படி ஜீவா,சமந்தா இருவருமே சிறுவயதிலிருந்து பாடசாலை,காலேஜ் என ஒன்றாக படித்து பழகியவர்கள், காதல் வயப்படுகிறார்கள்.. அவ்வப்போது இருவரிடையே ஈகோ பிரச்சினை. பின்னர் பிரிந்து சென்றுவிடுகிறார்கள், சமந்தாவுடனான காதல் சரிப்பட்டுவராதெண்டு தெரிந்த ஜீவா பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்... அப்புறம் என்ன நடக்கிறது?? இதுதான் சுவாரிஸ்யம்.. வழமையான கௌதம் படங்களிலிருந்து கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. இதை படத்தை பார்க்கும்போதே அறிந்துகொள்ளுங்கள்.......
ஜீவா,சமந்தா- இந்த படத்தின் பெரிய பிளசே இவர்கள் இருவரும்தான். ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக இளமையாக, அழகாக சும்மா லட்டுமாதிரி இருக்கிறார்கள். அதனால படம் பிடிக்காதவர்களும் இவர்களை பார்த்தே ஓரளவு திருப்திப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பதிலாக ஹாண்ட்சம் இல்லாத ஹீரோவையும், அட்டு பிகரையும் போட்டிருந்தா முப்பது நிமிடத்துக்குமேல எவரும் பொறுமையாக திரையரங்கில் இருந்திருக்கமாட்டார்கள்.
சந்தானம்- கௌதமின் கைகிளாஸ் படத்துக்கு சந்தானம் மாதிரியான காமெடியன்கள் அவ்வளவு பொருத்தமில்லை எண்டாலும் ஆமை வேகத்தில் செல்லும் ஸ்கிரீன்பிளேக்கு சந்தானத்தின் காமெடிதான் ஆடியன்சை நித்திரை கொள்ளவிடாமலாவது வைச்சிருந்தது.
இயக்குனர் கௌதம் மேனன்- கௌதமிடமிருந்து எதிர்பார்த்தளவு இல்லை. முதற்பாகம் மெதுவாகவே நகருகிறது, அதைவிட எடிட்டிங்கில் படு சொதப்பல். நிறைய காட்சிகள் துண்டாடப்பட்டுவிட்டது. இரண்டாம் பாகம்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது.
இசையமைப்பாளர்- ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை சொதப்பலெண்டே சொல்ல தோன்றுகிறது. குறிப்பாக பின்னணியில் இவர் கொடுக்கும் குரல் தாங்கமுடியல... அதை வேறு பாடகர்களைக்கொண்டு குரல் கொடுக்கவைத்திருக்கலாம். பாடல்கள் மட்டும் பார்க்கக்கூடியதாயுள்ளது.
சுருக்கமா சொல்லப்போனால் இந்தப்படத்தில் ஜீவா,சமந்தா, சந்தானம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். பாடல்கள் நல்லாயுள்ளன. பின்னணி இசை சொதப்பலாயுள்ளது... கௌதமின் இதற்கு முன்னைய முழுநீள காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துடன் ஒப்பிடமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்ககூடியதாயுள்ளது..
எனது கருத்துப்படி முதற்பாகம் அவரேஜ், இரண்டாம் பாகம் சூப்பர்.... மொத்தத்தில் ஓகே ரகம்....
கௌதமின் வழமையான ஹிட் படங்களே "ஏ" சென்றரில்தான் வசூலில் கல்லா கட்டும். "பி","சி" ஆடியன்சை பெரிதாக கவருவதில்லை. அப்பிடி இருக்கும்போது இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தேறுவது சந்தேகம்தான்..


.jpg)






























