*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோனி*
எனக்கு பிடித்த தென்னாபிரிக்க அணி வீரர்களைப்பற்றிக்கூட இதுவரை எந்தவொரு பதிவும் இடவில்லை கிரிக்கட்டில் தனியொருவரைப்பற்றி நான் எழுதும் முதல் ஆக்கம் இதுவே. வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முதலெல்லாம் இந்திய டீமில பிடிக்காத பிளேயர் யாரெண்டு கேட்டா டோனி எண்டுதான் முதலில் சொல்வேன். இதுக்காகவாவது இந்தியா தோற்கணும், டோனி வேளைக்கு அவுட் ஆகணும் என்று விருப்பப்படுவேன். காரணம், கங்குலி மீது எனக்கிருந்த பிடிப்புத்தான். நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கிய காலத்தில் கங்குலி இந்திய அணித்தலைவராயிருந்தார். அக்காலகட்டத்தில் அதாவது அசாருதீன், ஜடேயா, மொங்கியா போன்ற வீரர்கள் இந்திய அணியிலிருந்து விலகிய சமயத்தில் இந்திய அணி பலங்குன்றியதாகவே இருந்தது. துடுப்பாட்டவரிசையில் சச்சின், கங்குலி, திராவிட் தவிர எவருமே சிறப்பான, தொடர்ச்சியான பெறுபேற்றை வழங்குபவர்களல்ல. அதேபோலவே பந்துவீச்சும் சொதப்பல், களத்தடுப்பு ஆகலும் மோசம். அப்பவெல்லாம் பந்தை விழுந்து பிடிப்பதற்கே வீரர்களிடம் போதிய பயிற்சி இல்ல, கீப்பர் திராவிட், அஜய் ராத்ரா, விஜய் டஹியா எண்டு ஆள்தான் அவ்வப்போது மாறினார்களே தவிர உருப்படியான ஹீப்பர் என்று சொல்ல எவருமில்ல. அப்பிடி மோசமாக இருந்த காலத்திலும் இந்திய அணியினர் மண்டித்து கீழே விழவில்லை. இயலுமானவரை போட்டி கொடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் துடுப்பாட்டத்தில் அக்காலத்தில் கங்குலியின் ஆதிக்கமும், வெறித்தனமான தலைமைத்துவமும்தான். இதனால்தான் எனக்கு இன்றுவரை கங்குலியை மறக்கமுடியவில்லை. கங்குலி போய் ராவிட்டின் தலைமைப்பதவி போகும்வரையிலும் இந்தியாவின் சிறந்த கப்டன் என்றால் கங்குலிதான் என்று மீடியாக்கள், ரசிகர்கள் கங்குலியை புகழ்ந்தன.
ஆனால் டோனியின் அணித்தலைமை பிரவேசம் எப்போது ஆரம்பிச்சோ அன்றிலிருந்து எல்லாமே டோனிமேனியா ஆகிவிட்டது. டோனி கப்டனா வந்த காலப்பகுதியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது, அதுமட்டுமில்ல கங்குலி காலப்பகுதியைவிட தோனி காலப்பகுதியில் மற்றைய அணிகளும் பலவீனமடைந்துவிட்டன. அதனால் என்னிடம் ஒரு கேள்வி நல்ல டீம் இருந்தா எந்த கப்டனாலும் ஜெயிக்கலாம். டாடா மோசமான அணியை வைச்சே எவ்வளவு சாதிச்சிட்டார்.. அப்பிடி இருக்கேக்க தோனிக்கு இவ்வளவு புகழா?? இதுதான் நம்ம கடுப்பு. இந்த கடுப்பெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது சென்னைக்கு வெறித்தனமா சப்போட் பண்ணத்தொடங்கினேனோ அதிலிருந்து முற்றுமுழுதாக போய்விட்டது. இண்டைக்கு தோனியை ஹீரோவாக நினைக்கிற ரசிகர்களில் நானும் ஒருத்தன்.
1. இந்தியாவின் நம்பர் ஒன் வெற்றிகரமான கப்டன் இவர்தான். இவரின் காலப்பகுதியில்தான் அதிகப்படியான வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.
2. இவரின் அணித்தலைமையின்கீழ் 50/50, T20, Chambion trophy ஆகிய மூன்று கிண்ணங்களும் இந்திய அணிக்கு கிடைத்தன.
3. போட்டியை அணுகும் முறை, அதாவது போட்டியின் எத்தருணத்திலும் குழப்பமடையமாட்டார். வீரர்களை மைதானத்தில் கண்டிப்பதில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக்குதிப்பதுமில்ல, தோல்வி என்றால் துவள்வதுமில்லை. ஒரு அணித்தலைவருக்கு திறமைக்கு அப்பால் இருக்கவேண்டிய உளவியல் சிறப்புக்கள் முழுவதும் டோனியிடம் உண்டு.
4. இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு அப்பால் களத்தடுப்புக்கு அதிக சிரத்தை எடுத்தவர் டோனிதான். அண்மையில் Chambion trophy கிண்ணத்தை வென்றுவிட்டு வெற்றிக்கு முதலாவது காரணம் என்றுமில்லாத திறமையான களத்தடுப்புத்தான் என்று டோனி கூறியது குறிப்பிடத்தக்கது.
5. நான் அறிந்தவரையில் இந்திய கிரிக்கட் வரலாற்றிலே சிறந்த விக்கட் காப்பாளர் டோனிதான். அது மட்டுமல்ல இந்திய விக்கட் காப்பாளர்களிடையே சிறப்பாக துடுப்பெடுத்தாடவல்லவர்களில் டோனி முதலாமவர். (ராவிட்டை முழுநேர விக்கட் கீப்பாளராக கருதமுடியாதெனின்)
6. இளையோருக்கு ஊக்கப்படுத்தல், வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தல்.. அதாவது அண்மையில் நடந்த Chambion trophy போட்டிக்கான குழாமில் துணிச்சலாக கம்பீர், சேவாக், யுவராஜ், சஹீர்கான், ஹர்பஜன் போன்ற சிரேஸ்ட வீரர்களை நீக்கி சாதிச்சும் காட்டினார்.
இவ்வாறான அம்சங்கள்தான் இன்று தோனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்டேலிய மண்ணில் இடம்பெற்ற தொடர்ச்சியான டெஸ்ட் தோல்வியை அடுத்து டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகணும் என்று அறிக்கைகள் விட்ட கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தற்போது டோனியின் தொடர்ச்சியான அணித்தலைவர் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்றைய இந்திய அணியில் டோனி ஒரு தவிர்க்கமுடியாத வீரர். இவரின் அணித்தலைமைப்பதவிக்கு போட்டிக்கு இப்போதுள்ள வீரர்களிடையே எவருக்கும் சரியான தகுதி இல்ல. ஆகவே இன்னும் நீண்ட காலத்துக்கு அணித்தலைவர் அரியாசனத்தில் டோனியை பார்க்கலாம்.
((தற்போது காயத்தில் இருக்கும் டோனியின் மீள்வருகைக்காக காத்திருப்போம்:))
nice. captain cool MSD.
ReplyDeletesuper.. Wish u Happy Birthday dhoni...
ReplyDeleteடேய் அண்ணா இத இத இதத்தான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தன்.. கலக்கல் சூப்பர்... வால்த்துக்கள்..!!!
Deleteகோசுபா@ எழுதணும் என்று முதல்லே ஜோசிக்கேல.. திடீரென பேஸ்புக்கில 12 மணியளவில் மற்றவங்க டோனிக்கு பேர்த்டே விஷ் பண்ணுறதை பார்த்திட்டுதான் எழுதணும் என்று ஐடியாவே வந்திச்சு...
ReplyDeletevarunan, senthuran mohan நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்..
ReplyDelete