Saturday, March 16, 2013

தமிழ் சினிமாவின் சாதாரண ரசிகர்கள் vs அறிவுஜீவிகள்


ரசிகர்களிடையே எவ்வளவு பாகுபாடு? எல்லோருக்கும் வெளிப்படையா பார்க்கும்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் தமக்கிடையே முட்டி மோதிக்கொள்வதுதான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனா மறைமுகமா அடிமட்ட ரசிகர்களுக்கும் அறிவுஜீவிகளுக்குமிடையிலான மோதல்கள் கண்ணுக்கு தெரிவது அரிதே! சமுகவலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக் பாவிப்பவர்கள்,பிளாக் வாசிப்பவர்களுக்கே இவ்வாறான பிரச்சினைகள் தெரியவரும். அதாவது இப்பிடியொரு பிரிவினைவாதத்தை தூண்டுவது இந்த அறிவுஜீவிகள் என்று தங்களைத்தானே நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டு திரியும் ஒருசிலர்தான். அவர்கள் பொதுவாக குறிப்பிட்டு தாக்குவது ரஜினி,அஜித்,விஜய் ரசிகர்களைத்தான். அதாவது இவர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாம், தங்கள் கதாநாயகனை நடிகன் என்றதற்கு அப்பால் மேலே தூக்கி வைத்து கொண்டாடுவது, குறிப்பாக இவர்களின் கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது போன்ற செயல்கள் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்கிறதே இல்லை,மேலும் இவர்களின் படம் என்றால் நம்பமுடியாத ஒபெநிங் சீன், ஒரே டைம்ல இருபதுமுப்பது பேருக்கு சேர்த்துவைச்சு அடிக்கிறது, பஞ் டயலாக்,தத்ரூபமான படங்களைவிட்டு எப்ப பார்த்தாலும் கமர்சியல் படங்களை தேர்வுசெய்து நடிக்கிறது இதெல்லாம் இந்த அறிவுஜீவிகளுக்கு பிடிக்காதாம்.. 
பாலாட படங்களைப்போல தலைக்கு மொட்டையடிச்சோ/ முகத்துக்கு வர்ணம் பூசியோ/ உடம்பில புழுதி பூசியோ/ தாடி,முடி வளர்த்தோ, ஹீரோக்களை எப்பபாரு ஏதோ ஒரு குறையை வைச்சு காட்டினாலோ அந்த கருமாந்திரங்களைஎல்லாம் ஆமை வேகத்தில போற படமெண்டாலும் பாப்பாங்க, பொதுவா கமல்,மணிரத்தினம்,பாலா படங்களை விரும்புவோர்தான் தங்களை தாமே அறிவு ஜீவிகள் என சமுகத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். காரணம் இவர்களின் படங்கள் எல்லோருக்கும் புரியாது ஆதலால் வசூலில் பெரிதா கல்லா கட்டுவதில்லை, இதனால் இவர்களின் படங்களை வாங்குவதில் தயாரிப்பாளர்கள் பின்நிற்பது கூட, இந்த விரக்தியில்தான் இவர்களின் ரசிகர்கள் தங்களின் ஆத்திரத்தை மற்றவர்களிடம் திணிக்கிறார்கள் "ரசனை குறைந்தவர்கள், வித்தியாசமா எடுத்தா அதை புரிந்துகொள்ளுற அளவுக்கு இவர்களிடம் அறிவில்லை" என்றெல்லாம் மற்றவர்களை எள்ளிநகையாடுவார்கள்.

ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ளவேணும், சினிமா என்பது பொழுதுபோக்கே! அந்த கண்ணோட்டத்தில்தான் அநேகமானோர் திரையரங்குக்கு செல்கின்றனர். ஆனா, பொழுதுபோக்கு அம்சங்களை தகுந்த முறையில் மக்கள் ரசிக்கும்படியாக வழங்குதல் வேணும். பில்லா 2, வேலாயுதம், அலெக்ஸ் பாண்டியன்,ராஜபாட்டை போன்ற படங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்து பேச வரேல.மாறாக மங்காத்தா, சிவாஜி,துப்பாக்கி,சிங்கம் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கை வழங்கியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பிடியான படங்களை பாமரை ரசிகர்களும் புரிந்துகொள்வார்கள். தசாவதாரம், விஸ்வரூபம் போல இதை புரிந்துகொள்ள ஏழாம் அறிவெல்லாம் தேவையில்லை. சரி, அவங்க வாதப்படி தொடந்து அரைச்ச மாவை அரைக்க்காது வித்தியாசமான படைப்புக்களை வழங்கவேனும் என்றாலும் முதலில் கவனிக்கவேண்டியது எவ்வாறு அந்தப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதென்பது!! இதுவே முக்கியம்... என்னதான் உலகத்தரத்தில் படம் எடுத்தாலும் மக்களுக்கு புரியிறமாதிரி படம் இல்லாவிடில் மக்கள் எப்பிடி அதற்கு வரவேற்பு அளிப்பார்கள்??? இன்றையதினம் பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டேன்,உண்மையில் சிறந்ததொரு படம். தேயிலைத்தொழிளார்கள் முன்னைய காலப்பகுதியில்(தற்போதும்???) பட்ட அவலங்களை துல்லியமாக பாலா சித்தரித்திருக்கிறார், வரவேற்கப்படவேண்டிய திரைப்படமும்கூட. ஆனா இந்தப்படத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்களா என்றா இல்லை. அதுக்காக அவர்களை குறை சொல்ல முடியுமா? சிறுவர்கள்,பெண்கள்,பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களைப்போய் இந்தப்படம் பார் எண்டு சொல்லமுடியுமா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை. அதை இந்த அறிவுஜீவிகள் புரிந்துகொள்வார்களா? 
இந்த விடயத்தில் சில மசாலா பிரியர்கள் மத்தியில் வித்தியாசமான குழப்பங்கள் எழும் எவ்வாறெனின், கமல்,பாலா,மணி போன்றோரின் படங்களை பார்த்தவுடன் யாரவது படம் எப்பிடி என்று கேட்டா என்ன சொல்வது? சிலவேள மனசு பிடிக்கேல என்று சொன்னாலும் அதை பப்ளிக்கா சொன்னா தங்களை கேவலப்படுத்துவாங்களோ! என்ற தயக்கம். அதால அடிமட்ட ரசிகர்கள் அவ்வப்போது தங்களை அறிவுஜீவிகளா காட்டிக்கொள்கிற சந்தர்ப்பங்களும் உண்டு... மாசோ! கிளாசோ! மக்களுக்கு புரியிற மாதிரி படம் எடுங்கப்பா.........
இப்படிக்கு நானும் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.

9 comments:

  1. சூப்பரா சொல்லி இருக்கீங்க பாஸ்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பரே! அறிவு ஜீவிகளின் தொல்லை தாங்கமுடியாமல்தான் இந்த பதிவை எழுதினேன். நாம எப்பவுமே கமெர்சியல் ரசிகர்கள்தான். வருகை தந்தமைக்கு நன்றி ஹாரி...

      Delete
  2. பாலாவின் நான் கடவுள் கமலின் விஸ்வரூபம் G.N குமாரவேலின் ஹரிதாஸ் தற்போது பரதேசி...... இத்தகைய திரைப்படங்கள் தான் தமிழ் சினிமாவிற்கு புதியதொரு அங்கீகாரத்தை கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை....... ஆனால் பாமர மக்களுக்கும் புரியும்படி திரைக்கதையை அமைத்தால் நன்று..... அதில் பாலா மணிரத்னம் போன்ற சில படைப்பாளிகள் தவற விட்டு விடுகிறார்கள்....... எனவே இவர்களின் திரைப்படங்களை சஜி அவர்கள் கூறியபடி "அறிவுஜீவி"களால் தான் புரிந்து கொள்ள முடியும்...... புரியிற மாறி படம் எடுங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. மெதுவா கதையுங்கள் சஞ்சய்.. அறிவுஜீவிகளுக்கு கேட்டிட்டா உங்களையும் முட்டாள் லிஸ்டில சேர்த்துப்போடுவங்க.

      //// புரியிற மாறி படம் எடுங்கப்பா/////
      தொடந்தும் புரியாத மாதிரியே படம் எடுத்தா அவரவர் நிலைதான் பின்னோக்கி நகரும். ஆரம்ப காலத்தில ரஜினியை தன்னுடன் ஒப்பிடவே முடியாத நிலையில் இருந்த கமல் இன்று அதற்கு மறுதலையா இருக்கிறார். இந்த யாதார்த்தை புரிந்தா ஓகே....

      Delete
  3. அதுக்காக பாலா, கமல், மணி எடுக்கும் எல்லா படங்களும் புரியாததாக இருக்கு என்று ஓட்டு மொத்தமாக குற்றம் சாட்டி விட முடியாது.. இவர்களின் படங்கள் பார்க்க போதுமான விளக்கம் வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க.. இவர்களின் படத்தினை பார்க்க பொறுமை வேண்டும். இல்லையே கஷ்டம்தான். அதுக்காக பாலா, மணி, கமல் படங்களை ஆதரிப்பவர்களை அறிவுஜீவிகள் என்று சொல்லி அறிவுஜீவிகளை மொத்தமாக அவமானப்படுத்திவிட முடியாது. ஆக மொத்தத்தில் என் கருத்து ஒரு மங்காத்தா வந்தா ஒரு விஸ்வரூபம் வரணும்; ஒரு துப்பாக்கி வந்தால் ஒரு பரதேசி வரணும் அப்போதுதான் சினிமாவில் ஒரு சமநிலை பேணப்படும்..

    ***பதிவும் அலசலும் அருமை***

    ReplyDelete
    Replies
    1. ////அதுக்காக பாலா, கமல், மணி எடுக்கும் எல்லா படங்களும் புரியாததாக இருக்கு என்று ஓட்டு மொத்தமாக குற்றம் சாட்டி விட முடியாது.. ///////
      ஆமா ஆமா பொதுவாத்தான் சொன்னேன், எல்லாமல்ல.


      ///இவர்களின் படத்தினை பார்க்க பொறுமை வேண்டும். இல்லையே கஷ்டம்தான்.//////
      அதை எல்லோருடனும் எதிர்பார்க்கமுடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை.

      ////அதுக்காக பாலா, மணி, கமல் படங்களை ஆதரிப்பவர்களை அறிவுஜீவிகள் என்று சொல்லி அறிவுஜீவிகளை மொத்தமாக அவமானப்படுத்திவிட முடியாது.//////// இதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்களே!


      ////ஒரு மங்காத்தா வந்தா ஒரு விஸ்வரூபம் வரணும்; ஒரு துப்பாக்கி வந்தால் ஒரு பரதேசி வரணும் அப்போதுதான் சினிமாவில் ஒரு சமநிலை பேணப்படும்../////// நிச்சயமாக.

      வருகைக்கு நன்றி கோகுலன்.

      Delete
  4. ரசிகர்கள் பல வகை.பெரும்பாலானவர்கள் மாசாலா படங்களையே ரசிக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரே மாதிரி இருந்தால் அலுப்பு தட்டிவிடும்.அவ்வப்போது யாதார்த்தமாக எடுக்கப்படும் படங்களும் வரவேண்டும் அதே நேரத்தில் அதே நேரத்தில் யதார்த்தம் என்ற பெயரில் காபிகுடிப்பதை அப்படியே காட்டுவது.மாடிப்படியில் இறங்கி ஒவ்வொரு படியாக வருவதை காட்டுவது.நெடு நேரம் பேசாமல் முகத்தையே காட்டிக் கொண்டிருப்பது போன்ற மொக்கைகள் தவிர்க்கப் படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மசாலாவோ யதார்த்தமோ என்பது முக்கியமில்லை எதுவாயினும் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும்வகையில் இருத்தல் வேணும்... அல்லாவிடில் மக்கள் ரசிக்கமாட்டார்கள்தானே! அச்சமயம் அவர்களை குறைசொல்லப்படாது..... இதுவே என்வாதம். நன்றி T.N.MURALIDHARAN உங்கள் வருகைக்கு...

      Delete
  5. தசாவதாரம் படத்தை மொக்கைப்படம் அதில் என்ன இருக்கிறது ஒரு கருமாந்திரமும் அதிலே இல்லை என்று விட்டு வணிக நோக்கத்திற்காக வந்த ஒரு மொக்கைப்படத்தை போய் அதை விட சிறந்தது (தசாவதாரத்தை விட) என்றால் அந்த ரசிகனை எவ்வாறு சகோ அழைப்பது...

    மற்றையபடி பதிவில் சில இடங்களில் ஒத்துப் போகிறேன்.. காரணம் ரசிகர்களை வைத்து ஒரு கலைஞனை ஒப்பிடவும் ஏலாது அவன் திறமையை தீர்மானிக்கவும்.. ஏலாது

    ReplyDelete

comment