Sunday, April 29, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 2 (பிறந்தநாள் ஸ்பெசல்)

                              Happy advance birthday to my dear Thala Ajith

பாகம் 1 ஐ படிக்க
இன்று உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்தால் சொந்த உழைப்புக்கு அப்பால் ஆரம்பத்தில் யாராவது ஒருவரின் ஆதரவு இருந்ததெண்டே சொல்லலாம்.. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எவருமே இல்லை. அவர் எப்பிடி வந்தார்? யாரால வந்தார் என்பது இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கு. ஏனெனில் அவர் ஒரு சுயம்பு, தன்னந்தனியே போராடி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தைரியத்துடன் உழைத்து வெற்றிக்கொடியை ஏற்றியுள்ளார். இன்றும்கூட அவரின் வெற்றிக்கு,வளர்ச்சிக்கு யாருமே சொந்தமோ,உரிமையோ கொண்டாட முடியாது.. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்,வெற்றியிலும் அவர் மட்டுமே உரித்துரையவராவார்.. அஜித்தின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அஜித்தாலே செதுக்கப்பட்டது.. வாழ்க்கை கொடுத்த வலி இன்று அவரை பூரண மனிதனாகிவிட்டது.. தான் வாழ்வில் பட்ட துன்பங்களை தன்னுடைய ரசிகர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் அவருக்கு அதீத வெறி உண்டு.. 


இவர்தான் ராம்ஜி

அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "யாரையும் கண்மூடித்தனமாய் நம்பவேண்டாம்" என்று சொன்னார்.. இதுகூட அவரின் வாழ்வில் சந்தித்த ஒரு ஏமாற்றம்தான்... கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் "ராம்ஜி" என்று ஒரு நடன பயிற்சிவிப்பாளர் கொடிகட்டி பறந்தார், நடன இயக்குனர் என்பதற்கு அப்பால் ஹீரோக்களுக்கு டூப்பாக, ஹீரோக்களுடன் சிறுசிறு வேடங்களிலும் வந்து போனவர்.. இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர், இவரின் வளர்ச்சியில் அஜித்தின் பங்கு நிறையவே உண்டு.. ஒருதடவை பணஉதவி கேட்டு அஜித்திடம் சென்றபோது எவ்வளவு தேவை என்று கேட்க சற்று தயங்கவே... நண்பராச்சே வெற்று காசோலையில் கையொப்பம் இட்டு குடுத்தார் தேவையானதை எடுக்கச்சொல்லி.. ஆனா, இதை சாதகமாக பயன்படுத்திய ராம்ஜி மிகப்பெருமளவு பணத்தை அபகரித்துவிட்டு வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்... இது அஜித்தின் வாழ்விலே மறக்கமுடியாத நம்பிக்கை துரோகமாச்சு......... (ராம்ஜி காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு என்ற பாட்டு சீனில் ஆடியவர்) 

அஜித்தும் சூப்பர்ஸ்டாரும்...


அஜித்தும் சூப்பர்ஸ்டாரும் என்பதை பார்க்கமுன் ஒருவிடயத்தை உணர்ந்துக்கொள்ளணும்... தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வளர்ந்து வரும்போது முன்னைய தலைமுறை நடிகர்களே பிரிந்து புது தலைமுறை நடிகர்களுக்கு ஆதரவளிப்பார்கள்... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தலைமுறை நடிகர்களில் ஒருவர் மாஸ் ஹீரோவாக இருப்பார், அவரின் ரசிகர்களை யார் அடுத்த தலைமுறை நடிகர்கள் கவர்கிறார்கள் என்பதுதான் போட்டி.... எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பெருமளவானோர் அடுத்த தலைமுறையில் ரஜினிக்கு ஆதரவளித்தார்கள்... அதேபோல ரஜினியின் ரசிகர்களை அடுத்த தலைமுறை நடிகர்களில் யார் கவருவது??? இதுதான் இப்போதுள்ள தலைமுறை நடிகர்களான அஜித்,விஜய்க்கு இடையிலான போட்டி... இந்த விடயத்தில் ஆரம்பத்தில் அஜித் இது பற்றி கண்டும் காணாமலே இருந்தார்.. ஆனால் விஜய் மேடைக்கு மேடை ரஜினியை தலைவர் தலைவர் என்று துதிபாடி பக்காவா காய்நகர்த்தினார்..ரஜினியே ஒரு சமயத்தில் விஜய் தன்னுடைய ரசிகர்தான் என்றும், ஒரு மேடையில் விஜய்,விக்ரமை பார்த்து "இவர்களை பார்க்க நானும் கமலும் போல இருக்கு" என்றார்.. அதே சமயத்தில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஜித் "எனக்கு சூப்பர்ஸ்டாராக வர ஆசை உண்டு" என்று சொன்னார், அதை திருபடுத்திய மீடியாக்கள் அஜித் தான்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொன்னதாக பப்ளிசிட்டி பண்ணினார்கள்.. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் அந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களை விஜய் பக்கம் விரும்பியோ விரும்பாமலோ இழுக்க முக்கிய காரணமா போச்சு... அதன் தாக்கம் அன்று அஜித்தை வெகுவாய் பாதித்தது...


ஆனால், என்னதான் பாம்பை அணைத்து பால் குடுத்தாலும் அது பால் குடுத்தவனை கொத்தவே செய்யும்... அதை ரஜினி ரசிகர்கள் 2005/07 காலப்பகுதியில்தான் உணந்தார்கள்.. சந்திரமுகியுடன் போட்டியா சச்சினை இறக்கியது, மற்றும் வெறும் 2000 பேர் பங்குபற்றிய லோயா கல்லூரி வாக்கெடுப்பில் இரண்டு சதவீத வித்தியாசத்தில் வென்றுவிட்டு போட்ட கூத்துக்கள்..... உடனேயே ரஜினி ரசிகர்களை அஜித் பக்கம் சாதுவாக திசை திருப்ப செய்தன..... அதுக்கப்புறம் அஜித்தின் காட்டிலும் அடமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது... 2006 இல் அஜித் மூன்று வேடங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் சக்கைப்போடு போட்ட வரலாறு படத்தில் அஜித்தின் பிரமாத நடிப்பை பார்த்து தன்னுடைய இல்லத்துக்கு அஜித்தை விருந்துக்கு அழைத்தார் சூப்பர்ஸ்டார்... அன்றைய அந்தநாள் அஜித்தின் தலையெழுத்தையே மாற்றும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்... ஆமா, அப்போதுதான் தனது பலவருட கனவான பில்லா ரீமேக் உரிமையை ரஜினியிடம் கேட்டார் அஜித்... சூப்பர்ஸ்டாரும் உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.. அதுமட்டுமில்லை பட தொடக்கவிழாவுக்கு வந்து விளக்கேற்றியும் விட்டார்... படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது.... பாட்ஷா படம் வரும்போது அப்போதைய போட்டி நடிகர்களிலிருந்து ரஜினி எப்பிடி எட்டாத உயரத்துக்கு போனாரோ அதேபோல பில்லா வந்தாப்பிறகு அஜித்தும் போட்டி நடிகர்களுடன் ஒப்பிடுகையில் எங்கேயோ உச்சத்துக்கு போய்விட்டார்.. தமிழ் சினிமாவிலே பில்லா மாதிரி ஒரு முழுக்கமுழுக்க ஸ்டைலிசான படத்தை அதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை.. அதே பில்லாபோல தாங்களும் ஸ்டைலிசா நடிக்க ஆசைப்பட்டு போட்டிநடிகர் தோல்வியுற்றதும் எல்லோருக்கும் தெரிந்ததே..


அது மட்டுமில்லாது, ஆரம்ப காலத்தில் மனம்போல மேடைகளில்,மீடியாக்களுக்கு முன்னாள் பேசிவந்த அஜித்துக்கு ரஜினி வழங்கிய ஆன்மீக புத்தகம் அஜித்துக்கு வாய்க்கட்டு போட்டு அவரை பூரண மனிதனாக்கியது.. அதற்குப்பிறகு அவரின் பேச்சில் பக்குவம்,முதிர்ச்சி பளிச்சிட்டது....பின்னர் பாலா, அஜித்தை பணம் கேட்டு மிரட்டியபோது ரஜினி செய்த உதவி, அப்புறம் அசல் பட தொடக்கவிழாக்கும் ரஜினி வந்து சிறப்பித்தார்... அப்புறமாய் சந்திரமுகி பாகம் ரெண்டு கதையுடன் வந்த இயக்குனர் வாசுவுக்கு அஜித்தை சிபாரிசு செய்தார்..எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" வில் அஜித்தின் பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது.. இவ்வாறு இன்றுவரை ரஜினி-அஜித் உறவு பலம் மிக்கதாய் இருக்கின்றது..ஒரு அஜித் ரசிகனாய் எந்தக்காலத்திலுமே ரஜினி மீது மிகுந்த மரியாதையை ஒவ்வொரு அஜித் ரசிகனும் வைத்திருப்பான். எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது தமிழகத்தில் உள்ள ஒரு அஜித் ரசிகர் மன்றத்தினர்(எந்த இடம் என்று நினைவில் இல்ல) ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம்கூட செய்தார்கள். அதேபோல ரஜினி ரசிகர்களும் இன்று அஜித்தை ரெம்பவே நேசிக்கிறார்கள்......





Saturday, April 28, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 1 (பிறந்தநாள் ஸ்பெசல்)


மே முதலாம் திகதியை உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.. அஜித் ரசிகர்களுக்கு இந்த நாள் தொழிலாளர்தினம் என்பதற்கு ஒருபடி மேலே போய் "தல தினம்" ஆகவே கொண்டாடுகிறார்கள்.. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்.. "ஏற்றிவிடவும் தந்தையுமில்ல, ஏந்திக்கொள்ளவும் தாய்மடியில்லை.. தன்னை தானே சிகரத்தில் வைத்தவர்" ஆமா யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்று எத்தனையோ எதிர்ப்புகள், நம்பிக்கை துரோகங்களுக்கு மத்தியில் தனியாளாய் நின்று வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற நடிகர் அஜித்குமாரின் பிறந்ததினம்தான் மே ஒன்று...... தல என்ற ஒரு சகமனிதனின் அசைவிற்கு பின்னால் விசில் சத்தம், வெடிச்சத்தம், கைதட்டல்கள் என்று விண்ணை பிளக்குமென்றால் அதுதான் தமிழ் சினிமாவிற்கு "தல தினம்".. உழைப்பால் உயர்ந்த உயரிய மனிதன்.. அமராவதி தொடங்கி மங்காத்தா வரை இருபது ஆண்டுகளில் ஐம்பது படங்கள் நடித்து அட்டகாசம் செய்து ஒவ்வொரு ரசிகனையும் அசலும் வட்டியுமா அமர்க்களப்படுத்திய ஒரே ராஜா.... அவரை பற்றி சொல்ல சன் டீவியோ, விஜய் டீவியோ, ஜெயா டீவியோ தேவையில்லை.. ஏனென்றால் தலைகளுக்கெல்லாம் அவரே தல.. ஒரு நல்ல மனிதன் நல்ல நடிகன் ஆகலாம், ஆனா ஒரு நல்ல நடிகன் நல்ல மனிதனாகினான் என்றால் அது அஜித்தான்...



தமிழ் சினிமாவின் சரித்திரத்தை ஒருதடவை திரும்பி பாருங்கள்.. அப்போது உங்களுக்கு புரியும், கீழே உள்ள கேள்விகளுக்கு யார்?, எத்தனை பேர் பொருத்தமானவர்கள் என்று?...

தமிழ் சினிமாவில் யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்றி நிலைத்து நின்று சாதித்தவர்கள் யார்யார்?

ரசிகர்களையே சந்திக்காது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் யார்?

அடுத்தவனை வீழ்த்தணும் என்று நினைக்காது "வாழு வாழவிடு" என்ற கொள்கையுடன் தன்பாட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர்?

ரசிகர்களுக்கென்றும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குதென்று உணர்ந்து, அதனால் தனக்கு வரப்போகும் பாதக தன்மைகளையும் பொருட்படுத்தாது தனது ரசிகர் மன்றங்களை கலைக்கும் துணிவு எத்தனை பேருக்குண்டு?

மூன்றாம் தரப்பினர் அறியாமல் பிறருக்கு உதவி செய்வோர் எத்தனை பேர்?



தன்னுடைய படத்தை பாருங்கள் என்று ஊர் ஊரா போய் புரமோஷன் செய்யாமல் பிடித்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லுகின்ற தைரியம் எத்தனை பேருக்குண்டு? 

பொது இடங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் மேடையில் இருப்பவர்களை துதிபாடாமல் தனது மனதில் பட்டத்தை பயப்பிடாமல் சொல்லும் தைரியம் எத்தனை பேருக்குண்டு?

தனது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக ரசிகர்களையோ, அரசியல்வாதிகளையோ, மற்றைய எந்தவொரு தரப்பினர்களையோ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்?

படப்பிடிப்பு தளத்தில் அடிமட்ட ஊழியர்களை மதித்து அவர்களின் குறைநிறைகளை விசாரித்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகக்கூடிய உயர்ந்த பண்பு எத்தனை பேருக்குண்டு?

ஊரில உள்ள எல்லா டீவி சனல்களுக்கும் போய் தன்னை பப்ளிசிட்டி பண்ணாம இருப்பவர்கள் எத்தனைபேர்?

படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே ஊடகங்களுக்கு போய் தன்னுடைய படம் வெற்றி வெற்றி என்று கூவாதவங்க எத்தனை பேரு?

காசு குடுத்து தியேட்டர்ல படத்தை ஓட்டுறவங்க, ஓடாத படத்துக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டுறவங்க மத்தியில் அவ்வாறு செய்யாது மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஹீரோக்கள் யார்யார்?



மேலே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.... தற்போதைய தலைமுறையில் அத்தனை கேள்விகளுக்கு பொருந்தக்கூடிய நடிகர் என்றால் அது அஜித் ஒருவராக மட்டும்தான் இருக்கமுடியும்.... ஒரு காலத்தில் அஜித் என்ற நடிகருக்கென்று ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்று ஒருபடி மேலே போய் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அஜித் என்ற மனிதரை நேசிக்கத்தொடங்கிவிட்டது.... அதனால்தான் எதிரிகள் வெட்ட நினைக்கும்போதும் கோடரியை உடைக்கும் அளவுக்கு காட்டுமரம்போல் விருட்சமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறார்.. ரசிகர்களை சந்திப்பதில்லை, ரசிகர் மன்றங்களை கலைத்தார்,விழாக்களுக்கு செல்வதில்லை,ஊடகங்களின் செல்வாக்கில்லை..ஆனாலும் எத்தனை படங்கள் தோத்தாலும் அதையும் மிஞ்சும் வகையில் அதற்கு அடுத்து வரும் படங்களுக்கு இருக்கும் மலையளவு ஒபெநிங்தான் தமிழ் சினிமாவையே அஜித்தை நோக்கி வாய்பிளக்க வைக்கின்றது..


பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஊடகங்கள் அஜித்தை "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று வர்ணித்துள்ளார்.. காரணம் இவரது பேச்சிலுள்ள அந்த திமிர்.. ஏன் இப்பகூட அஜித்தை பிடிக்காதவர்கள் சொல்லும் ஒரு கருத்து இதுதான்.... ஆமா அஜித்துக்கு திமிர்தான்.. அதை நானும் ஒத்துக்கொள்ளுறேன், அடிபட்டு பள்ளத்தில் இருக்கும்போது ஏறி மிதித்தவர்களை பீனிக்ஸ் போல எழுந்துவந்ததன் பிற்பாடு கொஞ்சிகுலாவவா சொல்றீங்க???.... என்னதான் பேச்சில் ஒரு திமிர் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும், அண்மையில்கூட ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் "உங்க தன்மானத்தை யாருக்காவது விட்டுக்குடுக்காதீங்க, உங்க வேலையை நூறு சதவீதம் ரசித்து செய்யுங்கள்....நல்லா படியுங்கள்...யாரையும் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள், யார் பின்னாலும் போகாதீர்கள்..மற்றவன் காலை மிதித்து முன்னேறாதீர்கள்.. சிம்பிளா சொல்றேன்.. வாழு வாழவிடு"......................Hats off my dear thala...... இந்த..இந்த..இந்த திமிர்தான் அஜித்தை பின்பற்றும அவரது ரசிகர்களுக்கு ஒரு "கிக்" ஐ கொடுக்கின்றது.......



-வருகை தந்தமைக்கு நன்றி-

Wednesday, April 4, 2012

தப்புமா கார்த்தியின் சகுனி ஆட்டம்??.



ஜனவரி முதல் நாள் வருகிறது, பொங்கலுக்கு வருகிறது, புதுவருடத்துக்கு வருகிறதென்று ஏப்ரல் மாதமே வந்துவிட்டது.. இன்னமும் படம் எப்ப ரிலீஸ் ஆகுதென்ற திகதியை உறுதிப்படுத்தமுடியாமல் தவிர்க்கிறது சகுனி படக்குழு... கடசியாக 2011  பொங்கலுக்கு வந்த சிறுத்தைக்கு பிறகு ஒன்றரை வருடங்களுக்கு பிறகுதான் அடுத்த படமான சகுனி வெள்ளித்திரைக்கு வரும்போல....   அப்பிடி என்னதானையா செய்யிறாங்க என்று கொஞ்சம் அலசித்தான் பார்ப்போமேன்.........


கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஆடுகளம்,காவலனுடன் கார்த்தியின் சிறுத்தையும் வந்தது.. சிறுத்தை படமானது தெலுங்கின் "கமெர்சியல் கிங் இயக்குனர்" என வர்ணிக்கப்படும் ராஜமௌலியின் இயக்கத்தில் ரவிதேயா மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2006 இல் வெளிவந்த "விக்ரமகுரு" என்ற படத்தின் ரீமேக் ஆகும்... முழுக்க முழுக்க தெலுங்கின் காரமசாலாவை அடையாளப்படுத்தும் இந்த படம் தமிழில் எப்பிடி போகும்? ....அதுவும் வெறும் மூன்றே மூன்று படங்கள் நடித்த கார்த்தி ஒரே நேரத்தில இருபது வில்லன்களை போட்டுத்தள்ளினா தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம்வேற அவர்களுக்குள் இருந்தது... ஆதலால் இயக்குனர் சிவா, ராஜமௌலியுடன் கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் வரை கதைவிவாதத்தில் ஈடுபட்டாராம், அதாவது தமிழ் இந்த படத்தை ரீமேக் பண்ணும்போது எந்தெந்த சீன்களை மாற்றவேணும், எதை மாற்றக்கூடாது என்பது பற்றி... சரி, ஒருவாறு படம் திரைக்கு வந்தவுடன் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,எப்பிடித்தான் மாற்றினாலும் அச்சொட்டா தெலுங்கு வாடை இருப்பது.. 


 இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்து ஏன்டா இந்த படத்தை பார்த்தேன் என்றிருந்தது.. கார்த்தி வில்லன்களுக்கு அடிக்கிற ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்ததுபோன்றதொரு பீலிங்க்ஸ். செம மொக்கையா இருந்திச்சு.... படம் நிச்சயமாக ஊத்தப்போகுது என்றுதான் நான் நம்பி இருக்க, ஒருவார முடிவில் வசூல் நிவரங்கள் வரத்தொடங்க பெரிய ஆச்சரியமா இருந்தது... வசூலில் ஆடுகளம், காவலனை பின்தள்ளிவிட்டு சக்கைப்போடு போட்டது.. இன்றுவரை இந்தப்படம் எப்பிடி தமிழ் ரசிகர்களால் "சூப்பர் ஹிட்" ஆனது என்பதற்கான காரணம் சரிவர புரியவில்லை.. எப்பிடியோ கொஞ்சம் படத்துக்கு அப்பால் அலசும்போது ஒருசில காரணங்கள் எழுந்தன, ஒன்று இந்தப்படம் பண்டிகைக்காலங்களில் வந்ததமை,  பண்டிகைக்காலம் என்றா இயல்பாகவே திரையரங்குக்கு கூட்டம் ஒதுங்குவது புதிதல்ல, மற்றது சிறுத்தையுடன் போட்டிக்கு வந்த காவலன்,ஆடுகளம் படங்கள் ஆக்சன் படமாக அமையாதது.. போட்டிப்ப்டங்கள் ரெண்டு மூன்று வரும்போது என்னதான் மொக்கை அக்சன் படங்களும் கொஞ்சம் தப்பித்துவிடும்... மேலும் விஜய் படம் வந்ததால் விஜய் 
எதிர்ப்பாளர்கள் சிறுத்தைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம்...  


சரி , ஏதோ சிறுத்தை சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.. சரி இனி நாம சகுனி ஆட்டத்துக்குள் நுழைவோம்... அறிமுக இயக்குனரின் படம் எண்டதால இயக்குனர் மீதான எதிர்பார்ப்பை தூக்கி போடலாம்... முழுக்க முழுக்க கார்த்தி மீதான எதிர்பார்ப்புத்தான்... படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி, அரசியல்வாதிகளை நக்கலடிப்பதாகவே இருக்கும் என மீடியா வாயிலாக கேள்விப்பட்டேன்... குறிப்பாக ஸ்பெக்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. உண்மையில் எந்த பிரச்னையை சித்தரிக்கப்போறார்கள் என்று சரியாக புரியாவிடினும், படத்தின் போக்கு நிச்சயமாக தெலுங்கு சாயலைத்தான் கொண்டிருக்கபோகிறது என்பது படத்தின் டெயிலரை பார்க்க ஊகிக்கமுடிகிறது..... இக்கதையை தெரிவுசெய்வதட்கு "சிறுத்தை" அளித்த வெற்றிதான் முக்கிய காரணியாக இருக்கலாம்....


சிறுத்தை படத்தில் உண்மையிலே கார்த்தியை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? அல்லது நான் மேலே சொன்ன காரங்களால்தான் படம் ஒடினதா என்பதுதான் இப்போது இருக்கும் பிரச்சனை... அஜித், விஜய், சூர்யா போன்றோர்களே இருபது படத்திற்கு அப்பால்தான் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார்கள்... அஜித் 25வது படத்தில்(அமர்க்களம்), விஜய் 36 வது படத்தில்(திருமலை), சூர்யா 23வது படத்தில்(அயன்)...தனுஷ்,சிம்பு,ஜீவா,ஜெயம் ரவி போன்றோர் இன்னமும் அந்த லிஸ்டுக்குள் இல்லை... அப்பிடி இருக்கும்போது கார்த்தியால் எப்பிடி முடியும்???? ............... படமே வரேல அதுக்குள்ளே இப்பவே வெற்றி தோல்வி பற்றி கதைக்கிறதா? சரி..சரி... அப்பிட்யே இந்த விசயத்திலிருந்து "எஸ்" ஆவோம்....


ம்ம்ம்.... அடுத்து ஆரம்பத்திலே சொல்லவந்ததை சொல்லிமுடித்திடுவோம்.. சகுனி பட தாமதத்துக்கு என்ன காரணம்??, இந்த படம் கொஞ்ச நாளைக்கு முதல்லே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம்... சரி படம் எப்பிடி என்று சிவகுமார் மற்றும் சூர்யாவுக்கு காண்பிக்கப்பட்டதாம், அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமானது.. சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லனா நடித்தவரின் பெர்போமான்ஸ் சூர்யாவுக்கு திருப்தியளிக்கவில்லையாம்.. ஆதலால் பழைய வில்லனுக்கு பதிலாக பிரகாஸ்ராஜ்ஜை போட்டு வில்லன் வார சீன் முழுவதையும் திருப்பி எடுக்கச்சொல்லிட்டாராம்... பாவம் கார்த்தி, சின்னப்பிள்ளையாச்சே அப்பா, அண்ணாட சொல்லை தட்டேலாது.... சரி ஏதாவது நடத்துங்கப்பா என்று சொல்லிட்டு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் "அலெக்ஸ் பாண்டியன்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்....
(அயன் படத்தின்ட மைனசே வில்லன்தான்... எப்பிடி அதை சூர்யா மறப்பார்?)


எது எப்பிடியோ சகுனி ஆட்டத்தை பார்க்கப்போற ரசிகர்களில் திணிக்காது வில்லன்களில் திணித்தா போதும்...

Saturday, March 31, 2012

"3" பட விமர்சனம்: எனது அலசலில்....


அப்பாடா ஒரு மாதிரி எங்கள் எல்லோரையும் பிடித்துக்கொண்டிருந்த கொலைவெறி கொஞ்சம் ஆறிவிட்டது என்றுதான் சொல்லணும்.....இந்த படத்தில் அமைந்த "வை திஸ் கொலைவெறி" என்ற ஒரு பாடல் ஒரு படத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் என்று கொஞ்சம்கூட படக்குழுவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.. "தமிங்கிலத்தில்" தனுஷ் எழுதி, பாடிய இந்த பாடல், வழமையான பார்முலாவுக்கு அப்பால் அதன் compose பண்ணுகின்ற வீடியோவை பரீட்சார்த்த முயற்சியாக படம் ரிலீஸ் ஆவதற்கு(Mar 30, 2012) பலமாதங்கள் முன்னதாகவே வெளியிட்டார்கள்(Nov 16,2011)... பாடலும் எதிர்பார்ப்பிற்கு பலமடங்கு மேலாக மொழி,நாடு கடந்து சகலதரப்பாலும் youtube மூலம் பார்க்கப்பட்டது... இறுதியில் படத்தின் வியாபாரத்தையே இந்த ஒரு பாடல்தான் நிர்ணயித்திருக்கின்றது... சுமார் 20 கோடிகளுக்கு உட்பட்ட செலவில் எடுத்துமுடிந்த படம், அதன் மூன்றுமடங்கிலும் அதிகமாக(65-70crores) தமிழ்,தெலுங்கு,ஹிந்தியில் விநியோக்கிக்கப்பட்டிருக்கின்றது.......





சரி இனி படத்தை ஒருக்கா அலசித்தான் பார்ப்போமே!.....

நடிகர்கள்- தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர், பிரபு, பானுப்பிரியா, ரோகினி
இயக்கம்- ஐஸ்வர்யா.R.தனுஷ்.
இசை- அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
தயாரிப்பு-கஸ்தூரி ராஜா.

வாழ்க்கையின் மூன்று பருவங்களில் ஆண்- பெண் இடையே நிகழும் காதல் பற்றிய கதையைத்தான் "3" படம் பெயருக்கேற்றாற்போல் சித்தரிக்கின்றது.. காலேஜ் பருவம், திருமண வயதுப்பருவம், திருமணத்துக்கு பிந்திய வாழ்க்கை என்பனவே அந்த மூன்று பருவங்களும்.. ஒரு மரண வீட்டில் ஸ்ருதி அழுதுகொண்டிருப்பதிலிருந்து ஆரம்பமான கதை தொடர்ச்சியாக ஸ்ருதியின் பிளாஸ்பேக்காயே படம் நகர்ந்துகொண்டிருக்கின்றது... ஒருபுறம் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்திட்டு இருக்கும் ஸ்ருதி குடும்பம், மறுபுறம் தனுஷ், சிவா, சுந்தர் என கலக்கல் கூட்டணியின் பிரசன்னம் என படத்தின் முதல்பாதி சுவாரிசயமாக போகின்றது, தனது காதலை ஸ்ருதியிடம் சொல்லி, இரு வீட்டாரின் அரைகுறை சம்மதத்துடன் கிளப் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.......... அதன்பின், படத்தின் இரண்டாம்பாதியில் பல திருப்புமுனைகள் நிகழ்கின்றன... தனுஷ் ஒரு bipolar disorder நோயாளி என்பது தெரிய வருகின்றது.. இந்நோய் உடையவர்கள் பொதுவாக உளவியல் ரீதியாய் இருமுனை சீர்குலைவு உள்ளவர்களாக இருப்பார்கள்.. இப்பிடியான மனநிலையுடைய தனுஷ் எப்பிடி குடும்பத்தை கொண்டு செல்கிறார்? அவரின் இந்த நோயின் தாக்கம் மனைவி, நண்பர்களை எப்பிடி பாதிக்கின்றது? இறுதியில் தனுசுக்கு என்ன நிகழ்கிறது? என்பதுவே படத்தின் தொடர்ச்சி.........


தனுஷ்.....
இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாவதற்கு முதலாவது காரணமே தனுஷ் எழுதி, பாடிய அந்த கொலைவெறி பாடல்தான்.. சரி அதை விடுத்து திரையில் அவரது பங்கை பார்ப்போமாயின், மிகச்சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிக்காட்டியுள்ளார்... "வேங்கை" படத்தில் அரிவாள் சைசிலிருந்து சுத்தி இருக்கிற வில்லன்களை எல்லாம் போட்டுத்தள்ளி எங்களையும் கடுப்பேத்தினமாதிரி அல்லாமல், தனது வழமையான பாணியில் மிகத்தத்ரூபமாக காமெடி,சோகம்,கோவம்,ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் மனுஷன் பின்னி எடுத்துள்ளார்..  "வேங்கை" தவிர எந்தவொரு படத்திலுமே தனுஷ் தன்னுடைய நடிப்பால் படத்தை சொதப்பியதே இல்லை.. இதிலும் அப்பிடித்தான்.... ஒரு தேசிய விருது பெற்ற நாயகன் என்பதை நடிப்பால் உணர்த்தியுள்ளார்............


ஸ்ருதி ஹாசன்....
என்னவோ தெரியேல,பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் பொதுவா ஹீரோக்களை மையமா வைத்துதான் கதை போகும், ஹீரோயின்களை ஊறுகாய் போலவே பயன்படுத்துவார்கள், ஆனா ஸ்ருதிக்கு மட்டும் தொடர்ச்சியா இரண்டாவது படத்திலும் heavy role ஒன்று வழங்கப்பட்டுள்ளது.. இடைவேளைக்குமுதல்வரை திருப்தியாக இருந்த ஸ்ருதியின் பிரசன்னம், இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கடுப்பேத்தியதுபோல இருக்கு.... காரணம் இயல்புக்கு அப்பால் மிகைப்படுத்திய நடிப்பு, இன்னொன்று கதை... கதைக்கேற்றாற்போல இடைவேளைக்கு பிறகு ஒன்றரை மணிநேரமா அழுமூஞ்சியுடனே காணப்படுகின்றார்.... பார்க்கவே சினம் கொள்ளவைத்தது...

அனிருத்
இசை சிறப்பாகவே இருக்கின்றது.. குறை சொல்ல இடமில்ல, இடைவேளைக்கு பிறகு கதைக்கேற்றாட்போல மெதுவான அவரின் இசை திகிலாக செல்லும் கதைக்கு நன்றாகவே ஒத்துப்போகின்றது... மேலும் பாடல்கள் பெரும்பாலானவை முதலே ஹிட் ஆகிவிட்டன. 


ஐஸ்வர்யா தனுஷ்
என்ன செய்தாலும் இந்த பெண்மணிக்கு பெரிய மனசுதான் பாருங்க, தன்னுடைய புருசனை வைத்தே என்னமாதிரி ஸ்ருதியுடன் நெருக்கமா எடுத்திருக்கின்றார்???? அறிமுக இயக்கம் என்பதால் ஒருசில பிழைகள் இருந்தும், பெரியதொரு அனுபவ முதிர்ச்சி படத்தில் தென்படுகின்றது... உண்மையிலே முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவின் கற்பனைதானா? அல்லது நியூட்டனின் கண்டுபிடிப்புக்களைப்போலவா? என்பது கொஞ்சம் சந்தேகமாய்த்தான் இருக்கு..
இந்தப்படத்தில் ஆரம்பத்தில் ஸ்ருதிக்கு பதிலாக அமலபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு கால்ஷீட் பிரச்சனையால்(??) அமலா மாற்றப்படார், இந்த நிகழ்வின்பின் ஐஸ்வர்யாவின் சினிமா ஆளுமை பற்றி கடுமையா விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. 


வேல்ராஜ்(ஒளிப்பதிவாளர்)
இந்தப்படத்தில் தனுசின் நடிப்புக்கு அடுத்ததாக வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவே மிகத்துல்லியமாகவும்,சிறப்பானதாகவும் அமைந்திருக்கின்றது. குறிப்பாக மாலை,இரவு, மழைகாட்சிகளை இயற்கையுடன் ஒன்றித்துப்போகும்வாறு சிறப்பாகவே அமைத்துள்ளார்... 

பாடல்கள் 
நான் புதுப்பாடல்கள் கேட்பதில்லை என்பதால் இதிலிருந்து "எஸ்" ஆகிறேன்.... ஆனால், ஊடங்கங்களில் படித்ததன் அடிப்படையில் பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்... குறிப்பா "கொலைவெறி" பாடல் டெரா ஹிட்............

கதை
கதை என்று பெரிதா சொல்வதற்கில்லை, சின்னதொரு கதைக்கருவை வைத்து நடிகர்களின் நடிப்புக்கு களம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கின்றது....


படத்தின் சில குறை நிறைகள்......
1. தனுஸ், ஸ்ருதிக்கு அப்பால் நடித்த துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.. குறிப்பாக சிவாவின் நையாண்டி நடிப்பும்,ஸ்ருதியின் தங்கையா நடித்தவரின் குழந்தைத்தனமான நடிப்பும் , அதைவிட சுந்தரின் சீரியசான நடிப்பும் படத்துக்கு வெகுவாகவே உயிரூட்டியுள்ளது... குறிப்பாக தனுசுக்கு bipolar disorder என்ற நோய் இருப்பது தெரியவந்ததன்பின் சுந்தரின் பங்கு எல்லோரையும் வெகுவாகவே கவர்ந்துள்ளது....

2. மூன்று பருவங்களிலும் தனுஷ், ஸ்ருதியின் தோற்றத்தை (look) சிறப்பாகவே காட்டியிருக்கார்கள்.. காலேஜ் பருவத்தில் தனுஷ், ஸ்ருதி ஆகியோர் ரெம்பவே இளமையாக தோன்றுகிறார்கள். lunch box உடன் தனுஷ் செல்வது, ரெட்டைப்பின்னலுடன் காலேஜ் சீருடையில் ஸ்ருதி தோற்றமளிப்பது எல்லோரையும் ரசிக்கவைத்திருக்கின்றது. மேலும் போகப்போக வயது முதிர்ச்சிக்கேற்ப முகத்தோற்றத்தையும் சிறப்பாக இயக்குனர் காட்டியிருக்கிறார்..

3. படத்தின் பிரதான குறை என்னவென்றால், இந்த படம் பார்க்கும்போது இடைவேளைக்கு பின்னரான சீன் முழுவதும் தனுசின் இதற்கு முதல் படமான "மயக்கமென்ன" படத்தை நினைவுபடுத்தியது.... அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் வந்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது....


4. படத்தின் இரண்டாம் பாகம் ஆமைவேகத்தில் செல்லுகின்றது, இது எனது பார்வையில் சரியாக இருந்தாலும் சரியான அளவு கமெர்ஷியல் காட்சிகள் இல்லாததால் சிலருக்கு பிடிக்காமல் போய்விடலாம்... மேலும் இரண்டாம் பாகத்தின் கதை,தனுசின் அபரித நடிப்பு  திகிலானதாக இருக்கின்றது, பார்க்கிற எங்களுக்கே அந்த நோய் வந்திடும்போல இருக்கின்றது..... இது படத்தின் கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாகம் முழுவதும் அப்பிடியே காட்சி நகருவது கொஞ்சம் ஓவராய்த்தான் போச்சு, குறிப்பாக பதினைந்து-இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கேலாது.......... படம் என்னதான் நல்லா இருந்தாலும் அதை ஆடியன்ஸ் ரசித்து பார்க்கும்படி இருக்கவேணுமென்பதே மிகமுக்கியம்... அந்த விடயத்தில் படக்குழுவினர் தோற்றுப்போய்விட்டார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது....

5. முதல்பாதியில் படத்தின் காட்சியமைப்பும் சிறப்பாக சொல்லுமளவுக்கு இல்லை என்றே சொல்லவேணும், குறிப்பாக மணிரத்தினம்,கௌதம்மேனன் போன்றோரின் படங்களின் மேக்கிங் உடன் ஒப்பிட்டுபார்க்கும்போது அதன் குறைகளை தெரிந்துகொள்ளலாம். சிவா+தனுஷ் காம்பினேஷன் சிறப்பா இருந்ததால் விறுவிறுப்பாய் போனது.... முதற்பாதியில் டியுசன் சீன் நிறையத்தரம் தொடர்ச்சியா வந்தமையும் சற்று தொய்வை ஏற்படுத்தியது. 

6. படம் ரிலீஸ் ஆவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முதல்லே இந்த படத்தில் தனுசுக்கு இறுதியில் என்ன நடக்குது என்று மீடியாக்களில் கசியவந்தது.. பிறகு அம்முடிவு சூப்பர்ஸ்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் பின்னர் அது மாற்றப்பட்டதெண்டும் செய்திகள் வெளியாகின...  மேலும் படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலே இறுதியில் தனுசுக்கு என்ன நடக்குதென்று ஊகிக்கக்கூடியதாயிருக்கின்றது.. இதுவும் சில ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.


படத்துக்கு இன்னுமொரு நெருக்கடி என்னவென்றால் இதன் உச்சக்கட்ட வியாபாரம்தான்.... நான் மேலே சொன்னதுபோல் போட்ட பட்ஜெட்டின் மூன்று மடங்குக்கு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, (மலையாளம்????) என பரவலாக விற்றுவிட்டார்கள்.... இதனால் கஸ்தூரிராஜாவுக்கு செம இலாபம், மாட்டிக்கொள்ளப்போவது விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்தான்... படத்தை பார்த்துவிட்டுத்தான் விநியோகிஸ்தர்கள் வாங்கினார்களா? அல்லது கொலைவெறி பாடலின் ஹிட்டை வைத்துத்தான் இந்த விலைக்கு வாங்கினார்களா? என்பது சந்தேகமே!! காரணம் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்றால் குறைந்தது 80 கோடிகளையாவது வசூலிக்கவேணும்..  குறிப்பாக ஆக்சன் படங்கலால்தான் அவ்வாறானதொரு வசூலை பெறமுடியும்... இந்தப்படம் நாற்பது கோடிகளை தொடும் என்பதே சந்தேகமாய்த்தான் இருக்கு..இறுதியில் ரஜினியின் பாபா படத்துக்கு வந்த நிலைமையும் வரலாம்...... எதற்கும் கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்ப்போம்... ஹிந்தி,தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் சிலவேளை இந்த படம் எடுபடுதோ தெரியவில்ல... "அவன் இவன்" படம்கூட தமிழில் சரிவர போகவில்லை, ஆனால் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.....


 படத்தில் என்னதான் குறைகள் இருந்தாலும் என்னுடைய கருத்துப்படி படம் சூப்பர்.. எவ்வளவு நாளைக்குத்தான் ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், காமெடியை பார்க்கிறது???..... சமூகத்திலே வெளிவாரத சில பிரச்சினைகள், குறிப்பாக bipolar disorder நோயாளி பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? இவ்வாறான படங்களின் மூலம்தான் சில பிரச்சனைகள் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுகின்றன.... எனக்கு அஜித்துக்கு அப்புறம் பிடித்த இரு நடிகர்களில் தனுசும் ஒருவர்... தனுஷ் இந்தப்படத்தில் எத்தனைபேரை ஏமாற்றினாலும் என்னை ஏமாற்றவில்லை............. தனுஷ் ராக்கிங்......

Wednesday, March 14, 2012

தமிழ் சினிமாவில் இரு ஹீரோக்களின் ஆதிக்கத்தை சூர்யா உடைப்பாரா?


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் யாராவது இரு நடிகர்கள்தான் முன்னிலைவகிப்பார்கள் அல்லது  முன்னிலை வகிக்கவைக்கப்படுவார்கள்.. அவற்றிற்கேற்ப ரசிகர்களும் பெரும்பாலானோர் இரண்டாக பிரிந்திருப்பார்கள். இது இந்தியாவின் எந்தமொழி சினிமாவுக்கும் இல்லாததொன்றாகும், பொதுவாக மீடியாக்களே இந்தவேலையை கச்சிதமாக செய்கின்றன. ஒரு காலகட்டப்பகுதியிலுள்ள முன்னணி,போட்டி நடிகர்கள் இருவரை இந்த லிஸ்டில் அடக்குகிறார்கள், அவர்களுக்கிடையிலான போட்டித்தன்மை வலுவிழக்கும் சமயத்தில் அடுத்த தலைமுறை நடிகர்களிடையே இது தாவுகின்றது.. 



இவ்வாறான இந்த போட்டித்தன்மையால் இரு நடிகர்களுக்கும் நிறைய வெறித்தனமான ரசிகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உருவாகிறார்களோ அந்தளவுக்கு எதிர்ப்பாளர்களும் உருவாகிறார்கள். இதனால் அந்த குறிப்பிட்ட இரு நடிகர்களின் படங்கள் வரும்போது விமர்சகர்கள்,மற்றும் எதிர்த்தரப்பு நடிகரின் ரசிகர்களால் அவை உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது, காரணம் அதில எங்கை எல்லாம் பிழைபிடித்து எதிர்மறையான விமர்சனங்கள் வழங்கலாம் என்ற நோக்கம்தான். இதனால் அந்த வட்டத்தில் சிக்கப்படும் இரு நடிகர்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை, உதாரணத்துக்கு அண்மையில் வந்த விக்ரமின் மொக்கைப்படமான ராஜபாட்டைக்கு வந்த விமர்சனங்களையும், கடந்த காலங்களில் வந்த அஜித்-விஜயின் சுறா,வில்லு,ஏகன் போன்ற படங்களுக்கு வந்த விமர்சனங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.. போட்டிநடிகர்களது படங்கள் மொக்கையானால் எந்தளவுக்கு மோசமான விளைவுகளை பெற்றுக்கொடுக்கின்றதெண்டு. ஆனால், இதைவிட இன்னொரு உண்மையையும் மறுக்கேலாது, உதாரணத்துக்கு அஜித்-விஜய் ரசிகர்கள் என்னதான் முட்டி மோதிக்கொண்டாலும் அஜித் படம் வருகுதென்றால் அஜித் ரசிகர்களின் பலமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் ரசிகர்களும்தான் அந்த படத்தை எதிர்பார்க்கிறார்கள், ஏனென்டால் படத்தை பார்த்தால்தானே ஏதாவது பிழைபிடிக்கலாம் என்ற அந்த ஒரேயொரு நோக்கம்தான்.. அதனால்தான் போட்டி நடிகர்களின் படங்களுக்கு அதிக ஒபெநிங், மொத்த வசூல் என்பன அதிகரிக்ககாரணம்.  பாக்ஸ்ஆபீசிலும்கூட இவர்களது படங்களே முன்னிலை வகிக்கின்றன/



இவ்வாறான போட்டி நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது முன்றாம் நடிகர்களாக சிலர் முன்னேறிய வரலாறும் உண்டு, அவர்கள் என்னதான் பெரிய ஹிட் குடுத்தாலும் நீண்டகாலத்துக்கு அவர்களால் நிலைத்துநிற்க முடியாமல் போவதும் கண்கூடு. எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் துருவங்கள் தமிழ்சினிமாவை ஆண்டபோது முன்றாவது நடிகராக ஜெமினிகணேசன் அவர்கள் அந்தக்காலத்தில் பெருமளவில் பேசப்பட்டார், ஆயினும் அவரால் எம்.ஜி.ஆர்- சிவாஜியின் பாதியளவு புகழைக்கூட பெறமுடியவில்லை என்பது உண்மை. அதேபோல அடுத்த தலைமுறை நடிகர்களில் ரஜினி-கமல் ஆகிய இருவரும் சிம்மாசனமிட்டுக்கொண்டார்கள், இவர்களுக்கு அடுத்தாற்போல நடிகர் மோகன் ஒரு காலகட்டத்தில தொடர்ச்சியான ஹிட்டுக்களை குடுத்துவந்தார், அதுவும் தொடர்ச்சியாக வெள்ளிவிழா கண்ட திரைப்படங்கள் குறிப்பிட்டளவு அடங்குகின்றன.. ஆதலால்தான் இன்றுவரை தமிழ்சினிமாவில் "வெள்ளிவிழா நாயகன்" என்ற அந்த பட்டத்தை தொடந்தும் தன்வசப்படுத்தியிருக்கார், அப்பிடியிருந்த மோகனாலும் சினிமாவில் ரஜினி-கமலைப்போன்று நீண்டகால நிரந்தர இடத்தை பிடிக்கமுடியவில்லை.. 


அதற்கப்புறம் 1996/97 காலப்பகுதியில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாய் படம் நடிப்பதை நிறுத்திவிட்டதாலும், ரஜினி-கமல் போட்டியில் ரஜினி அசைக்கமுடியாதளவுக்கு எங்கேயோ உச்சத்துக்கு சென்றுவிட்டதாலும் ரஜினி-கமல் போட்டி வலுவிழக்க தொடங்கிவிட்டது, அதுக்கப்புறம்தான் அஜித்-விஜய் என்ற போட்டி ஆரம்பமானது, நான் நினைக்கிறேன் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியைப்போல மற்ற தலைமுறையினருக்கிடையில் விறுவிறுப்பு இருந்ததா தெரியேல.. காரணம் எம்.ஜி.ஆர், ரஜினி மாஸ் படங்களையும், சிவாஜி,கமல் கிளாஸ் படங்களையும் கூடுதலா நடிச்சதால், மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுக்கே போட்டியின்றி அதிக வரவேற்பை பெற்றன.. ஆனால் அஜித் விஜய் இருவருமே மக்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாகவே தங்களை காட்டிக்கொள்கிறார்கள், மக்களும் அதட்கேற்ப அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர் என்றே சொல்லணும்.


அஜித்-விஜயின் கடும் போட்டிக்கு மத்தியில் முன்றாவதாக முதலில் உருவெடுத்தவர்தான் நடிகர் பிரஷாந்த், இவர் அஜித்-விஜய்க்கு முதலே சினிமாவுக்குள் வந்துவிட்டாராயினும், போட்டி வட்டத்தினுள் முதல் இரு இடத்தை பிடிக்க இவரால் முடியவில்லை.. முன்றாவதாகவே இருந்தார்.. இவரும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குடுத்தாலும், தன்னுடைய சாக்லேட் பட பாணியிலிருந்து ஆக்சன் பாணிக்கு மாறியதால் ஏற்பட்ட தோல்விகள், தகுந்த ஆளுமையின்மை குறிப்பாக சொந்த ஆளுமையின்றி அப்பா பிள்ளையாக இருந்துவந்தார், இவருடைய படங்களின் கதைகள் பெரும்பாலும் இவரது அப்பா தியாகராஜனாலே தெரிவு செய்யப்பட்டன (இதேநிலைமைதான் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளைத்தவிர அதுக்குமுதல் இருந்தது) ,மற்றும் திருமணத்துக்கு பின்னரான குடும்ப சிக்கல் சிலவற்றாலும் திடீரென பீல்ட்அவுட் ஆனார்.. நீண்டகாலத்துக்குப்பிறகு அண்மையில் வந்த "மம்பட்டியான்" திரைப்படமும் சரிவர போகவில்லை. அதன்பின் விக்ரம் அந்த லிஸ்டில் பேசப்பட்டாலும் தொடர்ச்சியற்ற அவரின் வெற்றிகள், தேர்ந்தெடுத்த கிளாஸ் வகையிலான படங்கள் போன்றன அஜித்-விஜயை நெருங்க அவரால் முடியாமல் போனது.. ஆனாலும் அவர் தொடர்ச்சியாக தனது பாணியில் வித்தியாசம் வித்தியாசமாக படைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்.



இவருக்கு அடுத்ததாக இந்த போட்டி வட்டத்துக்குள் இணைந்தவர்தான் சூர்யா.. அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் தோல்வியடைந்த சமயம் முன்னேறியவர் என்றும், அவர்கள் கைவிட்ட படங்களை நடிச்சே இந்தளவுக்கு முன்னேறினார் என்றும் பலராலும் விமர்சிக்கப்படுபவர், இந்த விமர்சனம் எவ்வளவு மடமைத்தனம் என்பது சினிமா தெரிந்த எல்லோருக்குமே புரியும்..அதைவிடுவோம்.. சூர்யாவை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அஜித்-விஜய் சேர்ந்து நடிக்கவிருந்த நேருக்குநேர் படத்தில், இறுதியில் அஜித் விலக அவருக்கு பதிலாக சூர்யா அந்த படத்தில் நடித்ததன் மூலம் 1997 இல் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அறிமுகமாகி ஆரம்பத்தில் விஜயகாந்த்,விஜய் போன்றோருடன் நடிச்ச்ச ஒருசில படங்கள் ஓரளவுக்கு ஹிட் குடுத்தாலும் தனித்துநின்று சாதிக்கமுடியவில்லை, அதுபோல அவரால் நடிப்பு,டான்ஸ்,ஸ்டைல்,காமெடி என்று எதிலுமே அப்போது சிறப்பாக பிரகாசிக்கமுடியவில்லை, அதன் பிறகு 2001 இல் அவர் நடித்த நந்தா திரைப்படம்தான் அவரின் நடிப்புக்கு முதன்முதலில் பட்டை தீட்டியதென்று சொல்லலாம், பாலாவின் பாசறையில் நேர்த்தியாக பட்டைதீட்டப்பட்டார்.. 



அதன்பிறகு காக்ககாக்க,கஜினி, வேல், வாரணம் ஆயிரம் எண்டு நிறைய ஹிட் குடுத்தாலும் அதுவரையிலும் அஜித்-விஜய்க்கு நெருக்கடியானதாய் இருந்தாரெண்டு சொல்லமுடியாது. காரணம் அவர் நடித்த படங்கள் முழுக்கமுழுக்க மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்று இல்ல. ஆனால் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. தமிழ்சினிமாவில் என்னதான் கஷ்டப்பட்டு தரமான படைப்புக்களை நடிகர்கள் வழங்கினாலும் மாஸ் ஹீரோக்களைத்தான் தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், அதன்விளைவுதான் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்றோரின் அபரிதமான வளர்ச்சி. சூர்யாவின் இவ்வாறான திரையுலகப் பயணத்தில் 2009 இல் வெளிவந்து சக்கைப்போடு போட்ட "அயன்" திரைப்படம்தான் அவரை அஜித்-விஜய் நிலைக்கு அருகாமையில் உயர்த்தி பேசவைத்தது, அதுமட்டுமல்லாது சூர்யாவுக்கென்றும் ஒரு ரசிகர் கூட்டத்தை குறிப்பிட்டளவில் உருவாக்கிய படமும் அயன்தான்.. 



அதன்பின் வந்த ஆதவன் தோல்வியடைய "சிங்கம்" மீண்டுமொரு புளோக்பாஸ்டரை அவருக்கு அளித்தது, சிங்கம் திரைப்படம் விஜயின் "சுறா" திரைப்படம் வெளியாகி கொஞ்ச நாட்களில் வெளிவந்து சுறா படுதோல்வியடைய சிங்கம் அடித்து தூள் கிளப்பியது.. இது சூர்யாவுக்கு பெரும் மாஸ் அந்தஸ்தை கொடுத்தாலும் முதன்முதலில் சூர்யாவுக்கென்று வெளியே கண்கூடாக பெருமளவு எதிர்ப்பாளர்களை உருவாக்கியதும் சிங்கம் படத்துக்கு பிறகுதான். அவர்கள் வேறு யாருமில்லை, விஜய் ரசிகர்கள்தான் பெருமளவில் சூர்யா எதிர்ப்பாளர்களாக மாறினார், அஜித் ரசிகர்களிலும் ஒரு சிலர் எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.. இவர்கள் அவரின் படங்களில் உள்ள குறைகளால் வந்த எதிர்ப்பாளர்கள் இல்லை.. அவரின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் வயித்தெரிச்சலால் உருவான கூட்டம்.. இவர்களின் பொறாமைத்தீக்கு எண்ணெய் ஊத்தும்வகையில் கடந்த ஆண்டு வந்த படம்தான் "ஏழாம் அறிவு" படம்வந்தவுடன் இந்த படத்துக்கு வந்ததுபோன்ற எதிர்மறை விமர்சங்களை அண்மையில் நான் வேறு எந்தவொரு படத்திற்கும் பார்க்கவில்லை, காரணம் படம் வெளிவரமுதல் இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் உதயநிதி இந்த படம்தொடர்பாக தெரிவித்த அந்த ஓவர் எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்புக்கு படம் திருப்தி செய்யவில்லை என்பது உண்மைதான்.. ஆனா படம் வெளிவந்து ஒரு வாரம் கழிச்சு வசூல் விபரங்கள் வெளிவரும்போதுதான் தெரிந்தது எதிர்விமர்சனங்களால படத்தின் வசூல் வேட்டையை தடுக்கமுடியல, ரஜினி, கமல், அஜித் படங்களுக்கு அடுத்ததாய் அதிக வசூலிச்ச படமா ஏழாம் அறிவு சாதனை புரிந்துள்ளது.. படம் நன்றாக வசூலிச்சாலும் போட்ட உயர் பட்ஜெட்டுக்கு ஏழாம் அறிவு அவரேஜ்ஜாகவே இறுதியில் கணிக்கப்பட்டது. பலத்த எதிர்விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஜய்ட வேலாயுதம் படத்துடனும் வந்த ஏழாம் அறிவு பட வசூல் நிலவரம் ஒட்டுமொத்த சினிமா விற்பன்னர்களையே வாய்பிளக்க வைக்கின்றது..  அது மட்டுமல்ல சூர்யாவின் அடுத்த படமான மாற்றான் படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பு, அவரின் படங்களுக்கு உள்ள வியாபாரம், படத்துக்கு முதலிடப்படும் பட்ஜெட்டின் அளவு, சம்பளம், தமிழகம் தாண்டி தெலுங்கில் சூர்யாக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து பார்த்தால் இவர் மோகன், பிரசாந்த் மாதிரி அல்லாமல் இருவரின் கைக்குள் இருக்கும் தமிழ் சினிமாவின் மரபையே மாற்றி அமைப்பார்போல தெரிகிறது.. 



மோகன், பிரசாந்த் போன்றோரின் வீழ்ச்சியை வைத்து சூர்யாவை மட்டம்தட்டுவது பொருத்தமில்லை என்பதுதான் என்வாதம். ஏனென்டால் அவர்கள் இருவரது படங்கள் பெரும்பாலும் ஒரேமாதிரியானவை, ஆக்சன் படங்கள் அவர்களுக்கு பெரிதா கைகுடுக்கவில்லை மேலும் அவர்கள் சாக்லெட் ஹீரோ சப்ஜெட் படங்களையே அதிகம் தேர்வுசெய்து வெற்றி பெற்றார்கள். சாக்லேட் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் பலமான நிரந்தர ரசிகர் கூட்டம் இருப்பது சாத்தியமில்ல. ஆனால் சூர்யா வித்தியாசம் வித்தியாசமான படைப்புக்களை வழங்கும் ஒரு நடிகர், முழுக்க முழுக்க கமெர்சியல், மாஸ் ஹீரோ என்று சொல்லமுடியாவிட்டாலும் அதில் குறிப்பிட்டளவு வெற்றியை பெற்றவர்.. இன்னும் சில படங்கள் ஹிட் குடுத்துவிட்டு எதிர்காலத்தில் தொடர்ச்சியான மாஸ் கலந்த கமெர்சியல் படங்கள் நடிக்க தொடங்குவாராயின் மக்கள் நிச்சயம் சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக அங்கீகரிப்பார்கள்... அதன்பின் அவரின் வளர்ச்சி தவிர்க்க,தடுக்கமுடியாததொன்றாகும்.. இரு ஹீரோக்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரக்கூடிய காலமும் வெகுதொலைவில் இல்லை என்றும் சொல்லலாம்....

Sunday, February 26, 2012

பேஸ்புக்கின் "Theme" ஐ மாற்றுவதற்கு...

1. முதலாவதாக நீங்க எந்த browser பயன்படுத்துகிறீர்களோ அதற்கு எதிரேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..


2. நீங்க கிளிக் செய்ய ஒரு சிறு extension தானாக தரவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் browser இல் Install செய்யப்படும்.


3. அப்புறம் உங்கள் பேஸ்புக்கின் theme புதிய வடிவத்துக்கு மாறியிருக்கும். 
    (இரண்டுவகையான மாதிரிகள் கீழே தரப்பட்டுள்ளன..)


மாதிரி 1
download for Mozilla Firebox: http://is.gd/cRNXCR
download for Internet Explorer: http://is.gd/eKoHTF
download for Google Chrome: http://is.gd/cRNXCR



மாதிரி 2

download for Mozilla Firebox: http://is.gd/W0OMFe
download for Internet Explorer: http://is.gd/yldWIo
download for Google Chrome: http://is.gd/W0OMFe




                                                                                                          -நன்றி-

Saturday, February 25, 2012

"அது இது எது"... "பவர் புவர் ஐடியா" ஸ்டார்ஸ்



விஜய் Tv யின் "அது இது எது" நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் 
வெள்ளிவிழா நாயகன்(??) பவர்ஸ்டார், சாம் அன்டர்சன், மற்றும் லொள்ளு சபா புகழ் ஈஸ்டர்....... சிவகார்த்திகேயன் சும்மாவே வாரு வாரெண்டு வாருவார்.. இவங்கவேற திருநெல்வேலி அல்வா போல செமையா மாட்டிட்டாங்க.. விடவா போறார்???? சாம் அன்டர்சனுக்கு "ஐடியா ஸ்டார்" என்று ஒரு பட்டம் வேற கொடுத்திட்டாங்க, ம்ம்ம்..என்ஜாய் பண்ணுங்க...


part 1


Part 2


Part 3


Part 4


Part 5
(ஆட்டமா? தேரோட்டமா?.... நோட்டமா? கதிராட்டமா????............
 தலைவா யூ ஆர் கிரேட்........)



comment