Friday, May 31, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1998 ஆம் ஆண்டு)


கடந்த பதிவில் தமிழ் சினிமாவின் பொற்காலம்(1999 ஆம் ஆண்டு) என்ற தலைப்பில் 1999 இல் வெளிவந்த எனக்கு பிடித்த திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்கியிருந்தேன்.அதன் தொடர்ச்சியா இப்பதிவில் 1998 ஆம் ஆண்டில் வெளியான என்னை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பை பகிரவுள்ளேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

1. காதல் மன்னன் 


அஜித்-சரண் கூட்டனியில் உருவான இரண்டாவது திரைப்படம். முழுநீள காதல் திரைப்படம். வெறும் ஒருரூபாய்க்காக பந்தயம் பிடித்துவரும் ஹீரோ ஹீரோயினின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு போட்டோகிராபரா சென்று இறுதியில் அந்த பெண்ணையே கரம் பிடிக்கிறார்.. இதுதான் படத்தின் கதை.பாரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அருமை.

2. மூவேந்தர்


ஹீரோ,ஹீரோவின் அப்பா, தாத்தா என சண்டியர்களாகவே காலத்தை கழிக்கும் இவர்கள், சரத்குமார் தேவயானியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரத்,மற்றுமிருவரும் எவ்வாறு திருந்துகிறார்கள்? என்பதே படத்தின் கதை. வித்தியாசமான கதைக்கருவில் உருவான குடும்பத்திரைப்படம்.

3. மறுமலர்ச்சி 


மம்முட்டி,தேவயாணி நடிப்பில் உருவான முழுநீள கிராமத்து குடும்பக்கதை. வழமையான கதைக்களம் என்றாலும் இயக்குனர் பாரதி சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

4. நினைத்தேன் வந்தாய் 


வழமையான முக்கோண காதல் கதையாகினும், படத்தில் அமைந்த அனைத்துப்பாடல்களும் சுப்பரோ சூப்பர்.. மேலும் காமெடி காட்சிகளை அதிகம்கொண்டிருப்பதாலும் வழமையான முக்கோண காதல் கதையிலும் கொஞ்சம் மாறுபட்டதாகவே பார்ப்போரை மகிழ்விக்கும்.

5. ஜீன்ஸ் 


இருவேடங்களில் பிரஷந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த திரைப்படம். கதை பெரிதாக சொல்லுமளவுக்கு புதிதாயில்லாவிடினும் சங்கரின் பிரமாண்டம் மற்றும் இசைப்புயலின் அதிரடி பாடல்களுக்காக எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.

6. நட்புக்காக 



கே.எஸ் ரவிக்குமார் தனக்கேயுரிய பாணியில் அசத்திக்காட்டிய திரைப்படம். நட்பை சித்தரித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் அவை பொதுவாக கல்லூரி நண்பர்களின் நட்பு அல்லது நடுத்தர வயதினருடைய நட்பையே சித்தரிக்கும். இது வயதுபோன காலத்திலும் விஜயகுமார்-சரத்குமாரின் நட்பு எப்பிடி வலிமையானது?? என்பதை அழகாகவே இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கார்.

7. உன்னிடத்தின் என்னை கொடுத்தேன் 


அஜித்,கார்த்திக்,ரோஜா நடிப்பில் உருவான நகைச்சுவை+காதல்+குடும்ப திரைப்படம். பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத திரைப்படம். பாடல்கள் அனைத்தும் இன்றும் எல்லோர் வாயில் முணுமுணுத்தபடியே இருக்கின்றது..

8. கண்ணெதிரே தோன்றினாள்


உயிருக்குயிரா நேசிக்கின்ற நண்பனின் தங்கையை காதலிக்கலாமா? அதனால் எப்பிடியான பிரச்சினைகள் நட்புக்குள் வரும்.. என்பது பற்றிய திரைப்படம்தான் இது. பிரஷாந்த்,சிம்ரன் நடிப்பில் உருவான மற்றுமொரு அற்புதமான திரைப்படம்.

இது தவிர அவள் வருவாளா,சிம்மராசி,பூவேலி,தாயின் மணிக்கொடி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களும் என்னை மிகவும் கவர்ந்த படங்களாகும். இவ்வாண்டு மொத்தமாக 67 திரைப்படங்கள் வெளியாகின.

Saturday, May 25, 2013

தமிழ் சினிமாவின் பொற்காலம் (1999 ஆம் ஆண்டு)


நான் தமிழ் சினிமா பார்க்கத்தொடங்கியது கிட்டத்தட்ட 1997,1998,1999 காலப்பகுதியில். அந்தக்காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் டீவி இல்லை, எங்கையாவது திருமணவீடு,பூப்புனித நீராட்டுவிழா என்றால் இரவில் அந்த வீட்டில் படம் போடுவார்கள். ஒரு ஊரே அங்கு திரண்டுவரும் படம் பார்க்க. அப்பவெல்லாம் படம் பார்க்கும்போது அநேகமாக ஒன்றும் புரியாது. சண்டைக்காட்சிகள் வந்தா மட்டும் மும்முரமா கண் டீ.வியை நோக்கி இருக்கும். மற்றும்படி நண்பர்களுடன் அரட்டை. கிட்டத்தட்ட அந்த நினைவுகள் கடந்து இன்றைக்கு பதினைந்து வருடங்கள் ஆகினும், அந்தக்காலத்தில் வெளியான படங்களே எப்போதும் எனது விருப்பத்தெரிவில் முதலிடம். அவற்றுள் 1999 இல் வெளியான என்னை கவர்ந்த சில படங்களின் தொகுப்பை பகிரலாம் என்று நினைக்கிறேன். (விருப்ப ஒழுங்கின்படி தரப்படுத்தவில்லை, எழுமாறான தரப்படுத்தல்)

படையப்பா 

நீ வயசானாலும் உன் அழகும்,ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை என்று ரஜினியைப்பார்த்து சொந்தர்யா ஒரு வசனம் சொல்வார். அதேபோலவே திரைப்படமும் பதினைந்து வருடங்கள் தாண்டியும் இன்னும் எல்லோரினதும் விருப்பத்துக்குரிய படமாகவே இருக்கிறது. படம் தொடக்கத்தில் சாதாரண கல்லூரி மாணவனா இருக்கும் ரஜினி படம் முடியும்போது தனது பிள்ளைகளுக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார். இளமை கெட்டப்பில் இருந்து முதுமை கெட்டப் வரை ரஜினிகாந்தை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் செவ்வனே நடித்திருக்கமுடியாது.

உன்னைத்தேடி 



சுந்தர்சி இயக்கத்தில் அஜித், மாளவிகா,விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். குடும்ப கதையம்சத்துடன்கூடிய திரைப்படம். தேவா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை.

வாலி 

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் எண்டதை விட அசத்திய திரைப்படம். ஒருமுறை அஜித் பேட்டி குடுக்கையில் தன்னுடைய கரியரில் தான் நடித்த படங்களில் தன்னுடைய நடிப்பால் வெற்றியடைந்தது என்று பெருமைப்படக்கூடிய முதலாவது திரைப்படம் வாலி என்றார். அந்தளவுக்கு பின்னி எடுத்திருப்பார். அண்ணன் தம்பியாக கெட்டப் வேறுபாடின்றி வாயசைவு,கண்ணசைவில் கதாபாத்திரங்களை வேறுபடுத்தி துல்லியமாக நடித்திருப்பார். இந்தப்படத்துக்காக அஜித்துக்கு இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.

ஆனந்த பூங்காற்றே



ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்,கார்த்திக்,மீனா நடிப்பில் வெளியான குடும்ப சித்திரம். பலமானதொரு திரைக்கதையை வைத்து இயக்குனர் சிறப்பாகவே காட்சியமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் அருமை.

அமர்க்களம்

சொல்லவே தேவையில்ல. நவீன அஜித்குமாரை செதுக்கிய திரைப்படம். தமிழ் சினிமாவில் மாஸ் மாஸ் மாஸ் என்று சொல்வார்களே! அதுக்கு வித்திட்டதே இந்த திரைப்படம்தான். முகத்தில் லேசான தாடி, அழகு,வெறித்தனம்,தாதாயிசம் என எல்லாமே உருவாக இந்தப்படத்தில் அஜித் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார். அஜித்தின் ரசிகர் வட்டத்தின் மிகப்பெரும் ஏற்றம் இந்தப்படத்துக்குப்பிறகே!

நீ வருவாயென 

பார்த்தீபன்,அஜித்,தேவயானி நடிப்பில் உருவான காதல் காவியம். பாடல்கள் அனைத்துமே இன்றைக்கும் பட்டையை கிளப்பவல்லது.

ஜோடி 

பிரசாந்த்,சிம்ரன் நடிப்பில் வெளிவந்த காதல்+குடும்ப காவியம். ஹீரோயினின் பெற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோவும், ஹீரோவின் பற்றோர்களை இம்பிரஸ் பண்ண ஹீரோயினும் என்ன செய்கிறார்கள்? இதுவே இப்படத்தில் சுவாரிசியம்.

ஆசையில் ஓரு கடிதம் 



பிரசாந்த்,கௌசல்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான அருமையான திரைப்படம். கௌசல்யாவில் வாழ்க்கையில் பிரசாந்தின் காமெடித்தனம் எவ்வாறு வினையாகிறது..இதுவே படத்தின் ஹைலைட்.

கண்ணுபடப்போகுதையா



பாரதி கணேஷ் இயக்கத்தில் விஜயகாந்த்,சிம்ரன்,கரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். எத்தனை தடவை வேணும்னாலும் சலிக்காம பார்க்கக்கூடிய குடும்பச்சித்திரம். பாடல்கள்,காட்சியமைப்பு எல்லாமே பிரமாதம். செண்டிமென்தான் கொஞ்சம் ஓவர். இது தற்கால சந்ததியினருக்கு ஒரு மைனசாவும் இருக்கலாம்.

துள்ளாத மனமும் துள்ளும்.



எனக்கு பொதுவா விஜயின் அக்சன் படங்கள் பிடிக்கிறேலை. இன்றுவரை விஜயின் பிடித்த முதல் ரெண்டு படம் எதுவென்று கேட்டா ஒன்று பிரியமானவளே மற்றயது துள்ளாத மனமும் துள்ளும். தகுந்த கதைக்களத்துடன் எழில் அவர்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள்,சிம்ரனின் அபரிதமான நடிப்பின் துணையோடு மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.

பாட்டாளி 



சரத்குமார்,தேவயாணி,ரம்யாகிரிஷ்ணன் நடிப்பில் உருவான முழுநீள காதல்+குடும்ப திரைப்படம். தேவயானியை காதலித்துக்கொண்டு ரம்யாவுடன் குடும்பம் நடத்தும் சரத்குமார் படும்பாடு என்ன?? இதுவே படத்தின் ஹைலைட்.

காதலர் தினம்

ரஹ்மானின் மந்திர இசையில் குணால்,சோனாலி பிந்துவே நடிப்பில் வெளியான அற்புதமான திரைப்படம். ஒரு பிள்ளையை வளர்க்கிற அளவுக்கு பெற்றோரிடம் பணவசதி இல்லை என்றால் பிள்ளையை பெறவேகூடாது. இதுவே படத்தில் கடைசியில் நாயகன் சொல்லும் தத்துவம். எத்தனைமுறை வேணும்னாலும் பார்க்கலாம்.


இதுதவிர இவ்வாண்டு வெளியான சூரியப்பார்வை, என்சுவாசக்காற்றே,கனவே கலையாதே,சேது உட்பட படங்களும் என்னை நன்றாக கவர்ந்த படங்கள். இதேபோல் இதுவரை பார்க்காத 1999 இல் வெளிவந்த படங்களும் உண்டு. இவ்வாண்டு மொத்தமாக 81 படங்கள் வெளிவந்தன.

Thursday, May 23, 2013

மறக்கமுடியாத தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தோல்விகள்

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் பரமரசிகர்களில் நானும் ஒருத்தன். எத்தனையோ வெற்றிகளை தென்னாபிரிக்க அணி பெற்றபோது கைதட்டி குதூகலித்தாலும் ஒருசில தோல்விகள் என்றுமே மறக்கமுடியாதவை. அதில் பெரும்பாலானவை உலகக்கிண்ண போட்டித்தொடர் மற்றும் சம்பியன் டிராபிக் போட்டித்தொடர்களில் பெற்ற தோல்விகளை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமான 2000 ஆண்டிற்கு பிறகேயான ஒருநாள் போட்டிகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

1. ICC Champions Trophy, 2002/03 / இந்தியா vs தென்னாபிரிக்கா (Scorecard)




கொழும்பில் நடைபெற்ற சம்பியன் கிண்ண அரையிறுதிப்போட்டியில், எதிரணி இந்திய அணி என்றதால் மிகுந்த ஆர்வத்துடனும் வெறியோடும் பார்த்த போட்டி. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்தில் மிக வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தாலும் பிற்பாடு 261 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 262 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடியபோது கிப்ஸ் சிறப்பானதொரு சதத்தை பெற்றும்,இறுதியில் கலீசின் மந்தமான துடுப்பாட்டத்தால் அநியாயமாக தோல்வியடைந்தது. என்னவோ தெரியேல இந்தப்போட்டிக்குப்பின் கலீசில் பயங்கர கடுப்பு.

2. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs மேற்கிந்தியா (Scorecard)


முதலில் துடுப்பெடுத்தாடிய மேட்கிந்தியதீவுகள் இறுதி இருபது ஓவர்களில் 170 ஓட்டங்கள்வரை எடுத்தது. இப்போ இது சாதரமான விடயம் எண்டாலும் பத்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு ரன்ஸ் எடுப்பது பெரியவிடயமே! தென்னாபிரிக்க அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும்போது முதலில் தாமதமாக பந்து வீசியதுக்காக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே இறுதியில் தோல்விக்கும் காரணமாச்சு, ஆம் மூன்று ஓட்டங்களால் தோல்வி.

3. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs இலங்கை (Scorecard)


டக்வோர்த்-லூயிஸ் முறையில் வெற்றியிலக்கை களத்தில் நின்ற துடுப்பாட்டவீரர்களுக்கு தவறாக வழங்கியதால் முதற்சுற்றுடனேயே தென்னாபிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது. டக்வோர்த்-லூயிஸ் முறையில் இரண்டு பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எண்டிருந்தது. அணித்தலைவர் பொலக் இரண்டு பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தாலே போதும் என்று களத்தில் துடுப்பெடுத்தாடிய வீரர்களுக்கு தவறுதலாக சொல்ல,பட்டிங் செய்துகொண்டிருந்த பவுச்சர் கடைசிக்கு முதல் பந்தில் சிக்சர் அடித்துவிட்டு, வெண்டாச்சுதானே எண்டு கடைசிப்பந்தில் ஓட்டம் பெறாமல் பந்தை மறித்துவிட்டார். ஆனா பிற்பாடுதான் போலக்குக்கு தெரிந்தது இந்தவிடயம். ஆகவே போட்டி சமநிலையில் முடிவடைந்து, தென்னாபிரிக்க அணி முதல் சுற்றோடே தொடரை விட்டு வெளியேறியது.
(மழை பெய்யத்தொடங்கியதால், 45 ஓவர்களில் போட்டி கைவிடப்ப்படுமாயின் டக்வேர்த்-லூயிஸ் முறைப்படி 230 runs எடுத்தா வெற்றி பெறலாம் என்றிருந்தது.மற்றும்படி தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாட தொடங்குகையில் 45 ஓவர்களில் target 230 runs எண்டல்ல.... மழை இடையில்தான் வந்தது.)

4. ICC World Cup, 2002/03 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)


306 என்ற உயர்வான ஓட்ட எண்ணிக்கையை முதலில் துடுப்பெடுத்தாடி பெற்றும், டக்வேர்த்-லூயிஸ் முறையில் நியுசிலாந்து வெற்றி பெற்றது.            

5. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs பங்களாதேஷ் (Scorecard)


கடைக்குட்டி அணியான பங்களாதேசுடன் 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

6. ICC World Cup, 2006/07 / தென்னாபிரிக்கா vs நியுசிலாந்து (Scorecard)



தென்னாபிரிக்கா அணிக்கு உலகக்கிண்ணம் என்றா என்னவோ தெரியேல முக்கியமான போட்டிகளில் பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாகிடுவார்கள். இது ஒவ்வொரு உலகக்கிண்ணபோட்டித்தொடரிலும் நடக்கிறது. பெரும்பாலும் தூரதிஸ்டத்தாலேயே வெளியேறிக்கொண்டுவந்தது. ஆனா கடந்தமுறை உலகக்கிண்ண போட்டியில் காலிறுதியில் கடைக்குட்டி அணியான நியுசிலாந்திடமே தோல்வியுற்றது எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியது. பார்க்கப்போனா காலிறுதியோ/அரையிறுதியோ நெதர்லாந்து,அயர்லாந்து அணி வந்தாலும் தென்னாபிரிக்காவால் வெற்றிபெறமுடியாதுபோல, அந்தளவுக்கு ஜென்மத்துசனியன் தென்னாபிரிக்காவை தொடர்ந்துகொண்டே போகிறது.


Wednesday, May 1, 2013

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 3 (பிறந்தநாள் ஸ்பெசல்)


இன்று மே 1, உழைக்கும் வர்க்கத்தின் நாயகன், தன்னிகரில்லா நாயகன் தன்னம்பிக்கை,தனிவழி, எளிமைக்கு பெயர்போன கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் எங்கள் நாயகன் தல அஜித்துக்கு எமது பிறந்ததின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் எல்லாம் இணையத்தளங்கள் பார்ப்பதில்லை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தவிர்ந்து எந்தவொரு நடிகரையும் பற்றி அப்போது எனக்கு தெரியாது, தெரிய விரும்பியதுமில்லை. பத்திரிகை படிக்கும்போது நடுப்பக்கம் வருகுதென்றால் அதற்கு முந்தய பக்கத்தை பார்த்துவிட்டு அடுத்து நடுப்பக்கத்தை அண்டிய இரு பக்கத்தையும்  சேர்த்து திருப்புவேன். அந்தளவுக்கு அப்போ அஜித் ரசிகனாயிருந்தும் சினிமா நடிகர்கள் மீது சினிமாவுக்கு வெளியே பிடிப்பு இருந்ததில்லை. சினிமாவில் மட்டும் அஜித்தை பிடிக்கும். சினிமா என்றாலே வெறுமனே கூத்தாடிகளின் கூடாரம் என்ற எண்ணம். ஆனால் பிற்பாடு ஒரு நடிகர் சினிமாவில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் ரசிகனுக்கு முன்னுதரணமாக இருக்கிறார் என்றதை இன்றுவரை அவதானித்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அது அஜித்தில் மட்டும்தான்.



மன்றங்களை வைத்து ரசிகர்களின் பணத்திலும் ,உழைப்பிலும், அறியாமையிலும் பிழைப்பு நடத்தவில்லை, தன்னுடைய படத்தை வந்து பாருங்கள் என்று கூவவில்லை, ஆடியோ வெளியீட்டுவிழா,மற்றும் தன்னுடைய தனிப்பட்ட பட சார்பான விழாக்களை நடத்தி ரசிகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லை, தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல தவறவில்லை... மேலும் இம்முறை தனது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டவுட்,களியாட்டங்களை கைவிடுமாறும் கூறியுள்ளார். இவ்வாறு அவரின் நேர்த்தியான செயற்பாடுகளை சொல்லிட்டே போகலாம். 



முன்னணி நடிகர்கள் எல்லோருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் எப்பவுமே ஸ் பெசலானவர். இவரின் ரசிகர் வட்டத்தை பார்த்தால் 90% இளைஜர்களே!!! இவர்களில் பெரும்பாலானோர் அஜித் படம் ரிலீசானால் மூன்று, நான்கு தடவை போய் பார்த்துவிடுவார்கள். இவர்கள் முதல் மூன்று தொடக்கம் ஏழு நாள் வரை கொடுக்கும் ஒபெநிங்கால் முதல் ஏழு எட்டு நாளிலே படத்தை விற்ற தொகையின் முக்கால்வாசி தொகையை தியேட்டர் அதிபர்கள் பெற்றுவிடுவார்கள். சிறுவர்கள்,பெண்களை அதிகப்படியாக ரசிகர்களை வைத்திருந்தா இப்பிடியெல்லாம் எதிர்பார்க்கேலாது. அவங்க ஒருதடவை படம் பார்க்கப்போவதே சந்தேகமாச்சே!! இதனால்தான் அஜித் படங்கள் கையை கடிப்பதில்லை. இதுவரை எந்தவொரு தியேட்டர் உரிமையாளர்களும் அஜித் படத்தால் நஷ்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்யவுமில்லை.



1. அஜித் துணிச்சலாக மன்றங்களை கலைத்தபோதே......


2. நரைச்ச தலையுடன் பப்ளிக்கில் தென்ப்படும்போதும், ஏன் நரைத்த தலைமயிர், தாடியுடன் எதுக்கும் கவலைப்படாமல் நடிக்கும்போதும்..

3. ஆடியோ வெளியீட்டுவிழா, இதர படம் சார்ந்த புரோமோசன்களுக்கு செல்லாமல் இருக்கையிலே....

இவை சொல்வது ஒன்றைத்தான், இவை எவையும் அஜித்துக்கு தேவையில்லை, இவற்றை செய்யாமல் இருந்தால்தான் பிழைக்கலாம் என்ற எல்லையை அஜித் தாண்டிவிட்டார். நடிகன் என்ற வட்டத்தை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்பது வெளிப்படை உண்மையாக தெரிந்துவிட்டது. இதே தைரியம் அஜித்தைவிட ரஜினிக்கு மட்டுமே இருக்கின்றது. ஆனா அவர் கூட படத்தில் தனது உண்மையான வயதை காட்ட இன்றுவரை தயங்குகிறார். சும்மா சிந்தித்து பாருங்கள் மேற்கூறியதுபோல ஏனைய நடிகர்கள் இருந்தா என்னவாகும் என்று? அந்தளவுக்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் நிரந்தரமாகவே அவரை நேசிக்கிறார்கள். அவற்றில் ஒருவனாக நானும் இருப்பதில் பெருமையடைகிறேன். 
தல ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... 


கடந்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெசலாக நான் எழுதியவை. (கிளிக் செய்யவும்)


இன்று வெளியான அஜித்தின் 53 வது படத்துக்கான டெயிலர் இதோ! 

Ajith 53 - Official Teaser 


unofficial linkகிலுள்ள டெயிலரை பார்க்கவோ, share செய்யவோ வேணாம். அஜித் ரசிகர்களே! அவற்றிற்கெதிராக செய்யவும் 

comment