Monday, October 22, 2012

பலிக்கடாவாகிய சூர்யா..........

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முதலெல்லாம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களை நஸ்டப்படுத்தாத நடிகர்கள் யாரெண்டு பார்த்தா ரஜினிக்கு அப்புறம் எல்லா சினிமா விற்பன்னர்களும் முணுமுணுப்பது சூர்யாதான்... சூர்யாவிடம் கால்சீட் பெற்றுவிட்டால் கோடிகளில் இலாபத்தில் புரளலாம் என்பது அவர்களின் எதிர்பாப்பு.. உண்மையும்கூட... தொட்டதெல்லாம் பொன் என்று உச்சத்துக்கு சென்ற சூர்யாவுக்கு யார் கண் பட்டுதோ தெரியேல இறுதி இரு படங்களுமே பெருத்த ஏமாற்றம்.. ஏழாம் அறிவு, மாற்றான் இரண்டுமே சரிவர போகவில்லை.. அதற்கு முதல் 2005 முதல் 2010 வரை அவர் ஹீரோவாக நடித்த படங்களில் "மாயாவி" தவிர எதுவுமே தோல்விப்படமல்ல.. அதற்குள் "ஆறு", "ஆதவன்" சராசரியாக ஓடியது, மிகுதி எல்லாமே கிளீன் ஹிட்... இவ்வாறு உச்சத்துக்கு போன சூர்யாவின் அண்மைய சறுக்கலுக்கு என்ன காரணம்? இதுதான் தற்போதைய கேள்வி.... 
இதற்கு நிறைய காரணங்கள் இருப்பினும்.. பிரதான காரணம் ஒன்றை அலசுவது சாலச்சிறந்தது.. பொதுவாக ஒரு ஹீரோக்கு மாஸ் படங்கள் ஹிட் குடுத்து மாஸ் ஹீரோ ஆகிவிட்டாலே அதற்குப்பிறகு அவர்களிடம் தரமான படங்களை காணுவது அபூர்வம்.. ஐந்து பாட்டு, ஐந்து பைட், பஞ்ச டயலாக் எண்டு ரசிகர்களை சாவடிக்காத குறையாக கதைகளை தேர்வுசெய்து படம் நடிப்பார்கள்.. அதேபோல சூர்யாவும் அயன்,ஆதவன்,சிங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு அந்த வழியில்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அதுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கு அவ்வகையிலான படங்களில் ஆர்வம் இல்லையெனவும்.. வித்தியாசமான கதைக்களங்கள்தான் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதட்கேற்றால்போலவே அவரின் அடுத்தடுத்த படங்களான ஏழாம் அறிவு, மாற்றான் கதைத்தேர்வும் இருந்தது....  அது மட்டுமல்ல முன்னணி இயக்குனர்களான முருகதாஸ் மற்றும் கே.வி ஆனந்தின் படங்கள்... இங்கைதான் சூர்யா மிகப்பெரிய தவறை விட்டிருந்தார்.. 
எல்லா இயக்குனர்களிடையேயும் ஒரு பொதுவான குணாதிசியம் இருக்கின்றது என்னவெனில்.. அவர்களின் படங்களின் பாணி ஒரேமாதிரியிருக்கும்.. உதாரணமாக பாரதிராயாவின் படமெண்டால் கிராமத்து மண்வாசனை அள்ளிவீசும்,.. ரவிக்குமார், விக்ரமன் படங்கள் என்றால் குடும்ப கதைகளை சித்தரிப்பவையாக இருக்கும், ஹரி படங்கள் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களாக இருக்கும்...... இதற்கு மாறுதலாக அவர்கள் பொதுவாக படங்கள் எடுப்பதில்லை, அவ்வாறு எடுப்பினும் சரிவராமலே போயின.. இதற்கு நல்ல உதாரணம் சரணின் அசல், பிரபுதேவாவின் வில்லு எண்டு ஒரு பட்டியலை சொல்லிக்கிட்டே போகலாம்... அதேபோலவே முருகதாசுக்கும் ஒரு ரெண்ட் உள்ளது, கே.வி.ஆனந்துக்கும் ஒரு ரெண்ட் உள்ளது.. ஆனால் இவர்கள் கடைசியா எடுத்த படத்தை பார்த்தா இவர்களின் முந்தைய படங்களின் ரெண்டிலிருந்து முற்றிலும் விலகியிருப்பதை நீங்க அறியலாம்... தீனா, கஜினி, ரமணா போன்ற படங்களை எடுத்த முருகதாசுக்கு ஏன் சூர்யா ஏழாம் அறிவு படத்தை கொடுத்தார்? அயன், கோ மாதிரியான படங்களை இயக்கிய கே.வி.ஆனந்துக்கு ஏன் மாற்றான் படத்தை கொடுத்த்தார்? மசாலா ஹிட் குடுத்த இயக்குனர்களுக்கு வரலாற்று கதைகளையும், விஞ்ஞான ரீதியிலான படங்களை எடுக்க சொன்னால் அவங்களால என்னதான் பண்ணமுடியும்?
சூர்யா நடிக்கவெண்டு வந்திட்டா எந்தவகையிலான ரிஸ்கையும் எடுக்கவல்ல நடிகர் எண்டதை கச்சிதமாக பயன்படுத்தி முருகதாசும்,கே.வி.ஆனந்தும் ஒருக்கா புதுசா ஏதாவது செய்து பார்ப்போமேன் எண்டு சூர்யாவை பலிக்காடா வைச்சு பழகிட்டார்கள். தன்னால இந்த ரெண்ட் சரிவராதெண்டு புரிந்த முருகதாஸ் துப்பாக்கி படத்தில தண்ட பழைய ரெண்டுக்கே போய்விட்டார்.. கே.வி.ஆனந்தும் பெரும்பாலும் தண்ட பழைய பாணிக்கே மாறிடுவார்.. அப்போ சூர்யா என்ன இளிச்சவாயனா? உங்க உங்க பாணியிலே சூர்யாவுக்கும் ஒரு ஹிட் குடுத்திருக்கலாமே! ....... லஞ்சம், ஊழல் பிரச்சனைகளை மையமா வைச்சு பிரமாண்டமா படங்களை எடுத்துவந்த சங்கர் தண்ட பாணிக்கு முற்றிலும் மாறாக எந்திரன் என்ற படத்தை எடுத்து மிகப்பெரிய ஹிட் குடுத்து இந்திய அளவில நம்பர் ஒன் இடத்தை பிடித்ததுக்கு பதிலடியாக தாங்களும் சாதிச்சு காட்டுவம் எண்டுதான் முருகதாசும்,ஆனந்தும் முயட்சிசெய்திருக்கினம்போல.. ஆனா எல்லாமே புஸ்வாணம் ஆகிட்டு..... ஒருவேள ஏழாம் அறிவும், மாற்றானும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தால் சங்கரின் இடத்தை இவர்கள் பிடித்திருக்கலாம் எண்டதை மறுக்கேலாது............. என்னவோ முருகதாஸ்,ஆனந்தின் பேராசைக்கு சூர்யா பலிக்காடாகிட்டார் எண்டது மட்டும் உண்மை...
வித்தியாசமாக கதைத்தேர்வு செய்திட்டு பெரிய இயக்குனர்களுக்கு படத்தை கொடுப்பது  மட்டும் முக்கியமல்ல... அந்தக்கதைக்கு அந்த இயக்குனர் பொருத்தமானவரா என்பதையும் தீர்மானிக்கவேணும்..

(மாற்றான் எனக்கு நல்லாவே பிடித்தது... ஆனா பொதுவான விமர்சனங்களின் அடிப்படையிலும், கலக்சனின் அடிப்படையிலுமே இப்பதிவை எழுதியுள்ளேன்....)




comment