Wednesday, June 27, 2012

சகுனியும் கேவலங்களும் (இது விமர்சனம் இல்லை )

பலத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை போடுகின்றதென்று ஒருசில மீடியாக்களால் சகுனி தூக்கிவைத்துகொண்டாடப்படும் இவ்வேளையில், சத்தமில்லாமல் இன்னுமொரு காரியத்தையும் சகுனி படக்குழுவினர் செய்துவிட்டனர்.. ஆமாங்க "சக்சஸ் மீட்டிங்" ஐ வைத்துவிட்டார்கள்.. தமிழகத்தின் புதிய பாக்ஸ் ஆபீஸ் கிங் எண்டு கார்த்தி,சூர்யா ரசிகர்களால் விளம்பரப்படுத்தப்படும் கார்த்தி, தமிழகத்தின் புதிய சக்சஸ் மீட்டிங் கிங் எண்டு எல்லா ரசிகர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். உண்மையை சொல்லப்போனால் கார்த்தியின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும்போது சகுனியின் ஒபெநிங் கலக்சனானது கிட்டத்தட்ட ஒன்றரை,இரண்டு மடங்காகியுள்ளது உண்மைதான்.. காரணம் முன்னைய படத்தைவிட அதிக விளம்பரப்படுத்தல், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை.. அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டால் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக்கொள்ளலாம்.. எவ்வாறெனின் படம்வரமுதல் முற்பதிவு செய்வதால் ஒரு குறிப்பிட்ட வருமானம் முதல்லே கிடைக்கும். மேலும் எப்பிடியும் படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே விமர்சங்கள் அதிகப்படியா வரத்தொடங்கும், இதற்கிடையில் அதிகப்படியானோர் படத்தை பார்த்துவிடுவார்கள்.. இதன் காரணமாக சகுனியும் ஒபெநிங் கலக்சனில தப்பிச்சுக்கொண்டதெண்டே சொல்லலாம்..
சரி, நாம சக்சஸ் மீட்டிங் பக்கம் திரும்புவம்... இந்த கொடுமை எப்பதான் தமிழ் சினிமாவை விட்டு போகப்போகுதோ தெரியேல.. ரெண்டு வருடங்களுக்கு முதல் பாரத்தமண்டா ஒரு முன்னணி நடிகர் மட்டுமே இந்த விடயத்தில கில்லாடியா இருந்தார்.. அட்டர் பிளாப் படங்களுக்கெல்லாம் அவர் நடத்தின சக்சஸ் மீட்டிங்கை அவரது ரசிகர்களே இப்பவும் மனதுக்குள் நினைத்து நினைத்து சிரிப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படியான சில நடவடிக்கையால்தான் குறித்த அந்த நடிகர் சமுகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தவிர மிகுதி எல்லா ரசிகர்களாலும் மோசமாக கலைய்க்கப்பட்டு வருகின்றார்.. இப்ப என்னடா என்றா கார்த்தி தம்பியும் ஏட்டுக்கு போட்டியா சக்சஸ் மீட்டிங் வைத்துவிட்டார்.. நான் நினைக்கிறேன் சகுனிக்கு வந்த மோசமான விமர்சங்கள் படத்தின் கலக்சனுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் என்ற பயத்தில ஒரு முன்னெச்சரிக்கையா இந்தவேலையை கச்சிதமா முடித்துவிட்டார்போலும்..
சக்சஸ் மீட்டிங்:பாகம் 1 (video)
சக்சஸ் மீட்டிங்:பாகம் 2 (video)
சக்சஸ் மீட்டிங் வைக்கிறது என்னைப்பொறுத்தவரையில் தப்பென்று சொல்லமாட்டேன்.. ஆனால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியா, நம்பும்படியா வைக்கணும்.. படம் வெளிவந்து மூன்றாம்,நான்காம் வாரங்களில் படம் உண்மையிலே அதிகப்படியாக வசூலிக்கும் பட்சத்தில் வைத்தா அதை ஏற்றுக்கொள்ளலாம்.. அதைவிடுத்து முப்பது,நாற்பது கோடிகளுக்கு படத்தை விநியோகிஸ்தர்களுக்கு விற்றுவிட்டு முன்றாம், நான்காம் நாளில் சக்சஸ் மீட்டிங் வைத்தா என்னய்யா கதையிது? கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சகுனி திரைப்படம் கடந்த ஜூன் 22 இல் உலகெங்கும் ரிலீசாகி ஜூன் 25 அன்று(படம் ரிலீசாகி நான்காம் நாள்) காலை ஹைதராபாத்திலும், மதியம் சென்னையிலும் சக்சஸ் மீட்டிங் வைத்தார்கள்.. அப்பிடியாயின் முதல் முன்று நாளில் அதன் வசூல் ஐம்பது கோடியை தாண்டிவிட்டதா?.... இருபதுகோடிகூட தாண்டியிராது.. அதற்குள் சக்சஸ் மீட்டிங் வைத்து கொண்டாடுறாங்க... தயாரிப்பாளரும், விநியோகிஸ்தர்களும் படத்தின்ட உண்மையான வசூலை ஹீரோக்களுக்கு பயப்பிடாது எப்ப பகிரங்கமாக தெரிவிக்கிறார்களோ! அப்பத்தான் இவ்வாறான பேர்வழிகளும் திருந்துவாங்கள்....
தற்போது காலம் எங்கையோ போய்விட்டது..இதொண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி, மற்றும் ரஜினி-கமல்,அஜித்-விஜயின் ஆரம்ப காலம் இல்ல.. சக்சஸ் மீட்டிங், போஸ்டர்ல பந்தா காடுறது, ஓடாத படங்களை காசு குடுத்கு ஓடவைத்து ரசிகர்களை ஏமாற்ற.....இப்பவெல்லாம் பேஸ்புக்,டுவீட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் நன்கு பிரபல்யமாகிவிட்டது.. என்னதான் வெட்டி பந்தா விட்டாலும் மக்கள் மத்தியில் எடுபடாது.. ஒவ்வொரு ரசிகனும் தத்தமது பிரதேசங்களில் ஒரு படம் எப்பிடி ஓடுகின்றதெண்டு பலபேருடன் கருத்துக்களை சமுகவலைத்தளங்களின் ஊடாக பகிருவதால் எது உண்மை எது பொய் என்ற நிலவரங்களை எல்லோராலும் பெற்றுக்கொள்ளமுடிகிறது...

Sunday, June 24, 2012

சகுனி ஏன் மோசமாக விமர்சிக்கப்படுகின்றது? ஸ்பெசல் அலசல்.


பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சகுனி விமர்சகர்களால் மிகமோசமாக தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.. இதுவரையில் எந்தவொரு நேர்மறையான விமர்சனத்தையும் நான் பார்க்கேல.. வழமையா நான் தியேட்டருக்கு படம் பார்க்கச்செல்லுமுன் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லை, படத்தை பார்த்துவிட்டுவந்து எனது பிளாக்கில் விமர்சனத்தை எழுதியபின்னரே மற்றவர்களின் விமர்சனங்களை பார்ப்பேன்.. காரணம், விமர்சனங்களை முதலே பார்த்தால் படம் பார்க்கும்போது விறுவிறுப்பு இருக்காது அத்துடன் நாங்கள் சொந்தமா விமர்சனம் எழுதும்போது அதில் மற்றவிமர்சகர்களின் வசன, சொற்பிரயோகங்கள் இயல்பாகவே எங்களிடம் ஒட்டிவிடும் என்பதற்காகவே முதல்லே விமர்சனகளை பார்ப்பதை தவிர்க்கின்றனான்..
ஆனால் இம்முறை சகுனி பார்க்கப்போகமுதலே மற்றவர்களின் விமர்சனங்களை படித்திடனும் என்று தோன்றிச்சு,காரணம் தல அஜித்துடனே போட்டியிட சகுனியை களமிறக்க முயன்றமைதான்.. ஆனால், சென்சார் பிரச்சனை,பில்லா 2 தமிழ்நாடு விநியோகிஸ்தர் ஆஸ்கர் ரவியின் "ஸ்பைடர் மான்" வெளியீடு, அப்புறமாக விநியோகிஸ்தர்களின் வேண்டுகோள் காரணமாக பில்லா 2 ஜூலை 13இற்கு பிற்போடப்பட்டுவிட்டது.. என்றாலும் அப்பிடி என்னதான் சகுனி சாதிச்சுவிடப்போகுது என்ற எதிர்பார்ப்புத்தான் முதலே விமர்சனங்களை பார்க்க தோணிச்சு, பார்த்தா எல்லாமே நெகடிவ் ஆகவே இருந்திச்சு..மிகமோசமாக விமர்சித்திருந்தார்கள். சந்தானம்-கார்த்தியின் காமெடியைத்தவிர மோசமான திரைக்கதை, தேவையில்லாத இடத்தில பாடல்கள்,சண்டைகள், அதிக இடங்களில் லாஜிக் மீறல் என்று அடுக்கடுக்கா பிளாக் மற்றும் முகப்பு புத்தகங்களில் மோசமாக விமர்சித்திருந்தார்கள்.. சரி படம் படுமொக்கையாத்தான் இருக்குது எண்ட எண்ணத்தில பார்க்கப்போனா எல்லாமே நேர்மாறாகவே எனக்கு தோணிச்சு. படுமொக்கை என்று எதிர்பார்த்துபோனதால கொஞ்சம் நல்லா இருந்ததாலையோ என்னவோ எனக்கு குடுத்த காசுக்கு ஓகே என்றே இருந்திச்சு.. லாஜிக் மீறல்கள் இருப்பது உண்மைதான், சாதாரண அப்பாவி இளைஜனா வரும் ஹீரோ சீஎம்மை பிடிக்கேல எண்டதுக்காக கந்துவட்டி ராதிகாவை சென்னை மேயராக்கியது, பலவருடங்கள எதிர்க்கட்சித்தலைவரா இருந்த கோட்டா சிறீனிவாசனை முதலமைச்சராக்கியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. ஆனா விமர்சனங்களில் வந்ததுபோன்று மொக்கையா படம் இருக்கவில்லை.. படம் முடியும்வரை சலிப்பில்லாமல் பார்க்கக்கூடியவாறு இருந்திச்சு...சரி ஏன் சகுனி இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகின்றது என்று ஒருக்கா அலசிப்பார்ப்பம்....
அடிப்படைகாரணம் படத்திலுள்ள ஓட்டைகள்தான்,அப்புறமா பார்த்தால் 
ரசிகர்கள் பெரிய ஹீரோக்கள்ட படம் என்றால் வேறு கோணத்திலும், பிரபல்யமாகாத ஹீரோக்கள்ட படம் என்றால் வேற கோணத்திலையுமே பார்க்கிறார்கள்.. என்னைப்பொறுத்தவரையில் சகுனி மொக்கைப்படமேண்டால், ஒருகல் ஒரு கண்ணாடி, கலகலப்பு இவையிரண்டுமே மொக்கைதான்.. அதில மட்டும் லாஜிக் பிழை இல்லையா?.. சகுனி பார்க்கப்போகும்போது கார்த்தியை உதயநிதி,விமல்,சிவா ரேஞ்சில பாவனை செய்தால் நிச்சயம் சகுனியும் எல்லோரையும் திருப்திப்படுத்தியிருக்கும்.. அதைவிடுத்து ரசிகர்கள் பெரியாக்கள்ட படம் என்றால், அந்த குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் எங்கை பிழை பிடிக்கலாம் என்ற நோக்குடன் படத்தை பார்ப்பதால்தான் இவ்வாறான படங்கள் கடுமையா விமர்சிக்கப்படுகின்றன..
அடுத்ததாக இவர்களின்மீது உள்ள வெறுப்பும் ஒரு காரணம்...
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சூர்யா-கார்த்தி மேல எரிச்சல்ல இருக்கும்போது, சகுனி படத்தால அஜித் ரசிகர்களும் கார்த்தியை வெறுக்கத்தொடங்கிவிட்டார்கள்.. காரணம் பண்டிகைக்காலம் அல்லாத நாளில் பில்லாவுடன் சகுனியை களமிறக்கியது.. ஆனால் இது எந்தளவுக்கு கார்த்தி தரப்பில் பிழை என்று சொல்லமுடியவில்லை.. இதுபற்றி விரிவாக முதலொரு பதிவில் எழுதியுள்ளேன்(இங்கே கிளிக் செய்யவும்). இதனால் அஜித்-விஜய் ரசிகர்கள் எப்பிடியாவது சகுனி பிளாப் ஆகணும் என்று சமுகவலைத்தளங்களில் சகுனிக்கெதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறாகள்.. அது மட்டுமல்ல இப்பெல்லாம் சூர்யா-கார்த்தியின் படங்கள் எதிர்பார்ப்புக்கு மேலதிகமா செல்வாக்கால் நிறைய திரையரங்குகளை பெற்றுக்கொள்கிறார்கள்.. அத்தோடு தங்களது படங்களுக்கு இவர்கள் விடும் பில்டப் எல்லாம் சூர்யா-கார்த்தி ரசிகர்கள், சினிமா பற்றி ஆழமா ஆராயாது படங்களை பார்த்ததோடு சரி என்றிருக்கு ரசிகர்கள் தவிர மிகுதி எல்லோருமே இந்த அண்ணா தம்பியில லைட்டா பொறாமை கலந்த வெறுப்பை கொண்டிருக்கிறார்கள். அதால பிளாக், வெப்சைட் வைத்திருப்பவர்கள் சகுனியை வாரு வாரெண்டு வாருகிறார்கள்.(பிளாக், வெப்சைட் வைத்திருப்பவரகளுக்கு சினிமா அறிவு கொஞ்சம் ஜாஸ்திதான். அன்றாட சினிமா நிலவரங்களை அவதானிச்சுக்கொண்டிருப்பவர்களாச்சே!..அப்போ இவர்களின் கூத்து கும்மாளங்களை பார்த்து பார்த்து நொந்துபோய்ய்த்தானே இருப்பார்கள்?) 
அடுத்து சகுனியில என்னதான் கார்த்தி சகுனி ஆட்டம் ஆடினாலும் அதன் பிளசே கார்த்தி-சந்தானத்தின் ஜோக்தான். இதுவும் ஒரு மைனஸா இருக்கலாம்.. எப்பிடி என்றா அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே, கலகலப்பு இரண்டும் முழுநீள காமெடிப்படங்கள். நீண்ட நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடின/ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்.. உண்மையை சொல்லப்போனால் ரசிகர்கள் இன்னும் ஒரு வருடத்துக்கு ஜோக் படமே தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு திருப்திப்படுத்தின படங்கள்.. அப்பிடி இருக்கும்போது மீண்டும் ஒரு கிட்டத்தட்ட முழுநீள ஜோக்கான சகுனி திரைப்படம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.. குறிப்பாக சந்தானத்தின் தொடர்ச்சியான ஜோக் ரசிகர்கள் மத்தியில் புளிச்சுப்போனதாகவும் மாறியிருக்கலாம்.. இதும் சகுனிக்கு எதிர்மறையான விமர்சனங்களை வரக்காரணமாக இருக்கலாம்..
அதைவிட சிலபேருக்கு விசித்திரமான கோபம் சகுனிமேல.. ஏனென்டா லட்டு மாதிரி கதாநாயகியை வைத்துக்கொண்டு சரிவர பயன்படுத்தவில்லை எண்டு.. ஆமாங்க அம்மணி இடைவேளைக்கு முதல் கொஞ்ச சீனில வாரா,அப்புறமா கிளமாக்சிலதான்.. ஏன்னா ஹீரோவுடன் ஹீரோயின் சேர்ந்திட்டா எண்டதை காட்ட. (ஹீரோவுடன் ஹிரோயின் சேரேல எண்டாலே பீல் பண்ணுற ஒரு கூட்டம் இன்றும் இருக்குத்தானே!)
எது எப்பிடியோ படம் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் மிகப்பெரிய ஒபெநிங் கலக்சன் கிடைக்கும்.. அதற்கப்புறம் கலக்சன் நிலவரங்களை பொறுத்திருந்துதான் பார்க்கணும்... 

வருகை தந்தமைக்கு நன்றி..

Saturday, June 16, 2012

பில்லா 2 Vs சகுனி மூன்றாம்கோண அலசல்

வழமையா பொங்கல்,புதுவருடம், தீபாவளி என்று பண்டிகையால, அன்றையதினம் வெளியாகும் திரைப்படங்களும் களைகட்டுவது வழக்கம்.இப்ப என்னடா என்றால் வெளியாகும் படங்களால் பண்டிகைபோல தமிழகம் களைகட்டிக்கொண்டிருக்கின்றது. ஆமா, பில்லா 2, சகுனி இந்த இரண்டினதும் வெளியீடுதான் இதற்கு காரணம்.. வழமையா பண்டிகைக்காலங்களில்தான் ஒன்றிற்கு மேற்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் நேருக்குநேர் மோதும், காரணம் பண்டிகைக்காலங்களில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் அமைதல், பண்டிகையை என்ஜாய் பண்ணுவதற்காக நிறையப்பேரு தியேட்டர் பக்கம் செல்லுதல்.. அதாவது பண்டிகைக்காலங்கள் போன்ற விசேட தினங்களில் மட்டும் தியேட்டர் வாசல் மிதிக்கும் கூட்டம் நிறையவே நிறைய இருக்கு.. அதனால பண்டிகைக்காலங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் நேருக்குநேர் மோதும்போது வழமையான தினங்களுக்கு மாறாக எல்லாத்தரப்புக்குமே சாதகமாக இருக்கும்.(படம் மொக்கையா இருந்தா ஒன்றும் செய்யேலாது, அது சோலோவா வந்தாலும் ஊத்தும்.).. இந்தமுறை என்னவென்றால் பண்டிகை அல்லாத நாளில் மேற்படி இரண்டு படங்களும் நேருக்குநேர் மோதுவதுதான் பிரச்சனை. தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டுக்கு அப்பால் குறிப்பிட்ட இலாபத்தை வைத்து விநியோகிஸ்தர்களுக்கு விற்க, விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு ஒருபகுதி இலாபம் வைத்து தியேட்டர் ஓனர்களுக்கு விற்றுவிடுவார்கள்.. இந்த இரண்டு தரப்பும் தப்பிச்சுவிடும்... ஒட்டுமொத்தமா மாட்டிக்கப்போவது தியேட்டர் ஒனர்கள்தான். (சில சமயம் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்படவும் சாத்தியம் இருக்கு, வேலாயுதம் படைத்தால ஆஸ்கர் ரவி நஷ்டப்பட்டது எல்லோருக்குமே தெரிந்த விடயம்.. பில்லா 2 உம் ஆஸ்கர்தான் வெளியிடுவதால் கவனமாய்த்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.).. அதைவிட ஏட்டுக்கு போட்டியா விநியோகிஸ்தர்கள் தியேட்டர்களை புக் பண்ணுவதிலும் நிறைய ரிஸ்க் எடுக்கவேணும்..

பில்லா ஆரம்பத்தில ஏப்ரலுக்குதான் ரிலீஸ் பண்ணத்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள், ஆனால் பெப்சியின் வேலை நிறுத்தம், எஸ்.ஏ.சி இடையில கொண்டுவந்த திட்டம் இதனால் உரிய தினத்துக்கு படப்பிடிப்பை முடிக்க இயலாமல் மே, ஜூன் என்று பல தேதிகளுக்கு பிற்போடப்பட்டன. இறுதியில் ஜூன் 22 ரிலீஸ் என்ற நிலைக்குவந்திருந்தது, படம் அப்போ சென்சருக்கு போகாததால் தயாரிப்பாளரால் உத்தியோகபூர்வமாக ரிலீஸ் திகதி அறிவிக்கப்படவில்லை.. ஆனால் தமிழகம் தவிர்ந்த வெளிநாடுகளில் ஜூன் 22 டிக்கட் அடிச்சே விற்றுவிட்டார்கள்.. இதன் மர்மம்தான் எனக்கு இன்னமும் புரியவில்லை..
சரி நாம பிரச்சினைக்கு வருவோம்..... 
ஆரம்பத்தில பில்லா 2 ஜூன் 22 ரிலீஸ்என்றிருந்தவேளை சகுனி ஜூலை 6 என்று அறிவித்தார்கள்..பிறகு என்னவாச்சோ தெரியல திடீரென சகுனியும் ஜூன் 22 ரிலீஸ்என்று அறிவித்தார்கள்..இதிலிருந்துதான் சிக்கலே ஆரம்பித்துவிட்டது.. அதாவது கார்த்தியை அஜித்துடன் மோதவிட்டதன் நோக்கம் என்ன? இதுதான் தற்போதைய சூடான அலசல்.. தமிழ் சினிமாவின் "கிங் ஆப் ஒபெநிங்" என்று வர்ணிக்கப்படும் அஜித்துடனேயே மோதுமளவுக்கு கார்த்திக்கு தைரியம் வந்திட்டா? என்பதுதான் ஆச்சரியமாயிருக்கு... வேல் Vs அழகிய தமிழ்மகன், சிறுத்தை Vs காவலன், வேலாயுதம் Vs ஏழாம் அறிவு.... இந்த மூன்று கடந்தகால நேரடிப்போட்டிகளில் விஜயை ஜெயிச்சாச்சு, அப்பிடியே அஜித்தையும் ஜெயிச்சா தற்போதைய தலைமுறையில் தாங்கதான்(சூர்யா-கார்த்தி) டாப் ஆகலாம் என்ற நோக்கமா தெரியேல... ஏனெனில் பில்லா 2 இன் பட உரிமை விற்பனையாகி ஓரிரு நாளிலே சகுனியும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் உரிமை கிட்டத்தட்ட பில்லா 2ஐ நெருங்கிவிட்டதாகவும் கார்த்தி தரப்பு அறிவித்திருந்தது.. அதில காமெடி என்னவெண்டா இவ்வாறு அறிவுப்பு வெளியாகியபோது பட சூட்டிங்கே முடியேல, மீள்படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.. அந்த சமயத்தில் எவ்வாறையா படத்தின் உரிமை விற்க சாத்தியம்?... இவ்வாறான சம்பவங்கள் வேணுமெண்டே அஜித்தை சீண்டுவதுபோல தென்படுகிறது... ஆனால், இவையாவும் ஊகத்தின் அடிப்படையிலான சந்தேகங்கள் என்பதை மறுக்கேலாது... இதன் மறுபக்கத்தையும் ஒருக்கா ஆராய்வம்....
சகுனி படம் தெலுங்கில் சுமார் பத்து கோடிக்கு விற்கப்பட்டது... ஒரு தமிழ் படமொன்றுக்கு தெலுங்கில் பத்துக்கோடி உரிமம் என்பது மிகப்பெரிய தொகைதான்... இந்தளவுக்கு தமிழ் படம் தெலுங்கில் வசூலிப்பது கொஞ்சம் கடினமான விடயம்தான்... ஆகவே, தமிழுக்கு சமாந்தரமாக தெலுங்கு நிலவரத்தை கார்த்தி தரப்பு அலசிப்பார்க்கும்போது ஜூன் கடைசியிலும், ஜூலை முதல் வாரத்திலும் தெலுங்கில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ராஜமௌலியின் "நான் ஈ" திரைப்படமும் அல்லு அர்ஜுன் நடித்த மற்றுமொரு திரைப்படமும் வெளிவர உள்ளது.. இதனால் சகுனி ஜூலை 6 இல் ரிலீசானால் தெலுங்கில் முன்னணிப்படங்களோடு அதிக தியேட்டர்களை பெற்று போட்டி போடுவது கஷ்டம்.. அதே நேரத்தில் தெலுங்கு பட விநியோகிஸ்தர்களும் சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டு சகுனியை வேளைக்கே ரிலீஸ் பண்ணச்சொல்லி சொல்லியதாகவும், அதனால்தான் ஜூன் 22 இற்கு ரிலீஸ் திகதி மாற்றப்பட்டதாகவும் சினி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.............. இவ்வாறு திரைமறைவில் ஆயிரம் விடயங்கள் நடக்கும், எது எப்பிடியோ ரசிகர்கள் வீண்விவாதங்களை தவிர்த்து வரப்போகும் இரு படங்களையும் பார்த்து மகிழுங்கள்.....
இதற்கிடையில் பில்லா 2 இற்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படத்திற்கு புதிய சிக்கலை கொண்டுவந்துவிட்டது... "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் 30% entertainment tax அறவிடப்படும்.. அத்துடன் இது "வயது வந்தவர்களுக்கு மட்டுமான" படமாக கருதப்படும்.. குறிப்பாக 18 வயதுக்கு குறைவானவர்கள் தியேட்டர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.. ஆனாலும், எல்லா திரையரங்குகளிலும் இந்த நடைமுறையை கடைப்பைடிக்கமாட்டாங்க.. multiplex centers களில் இந்த நடைமுறை கடுமையாக பின்பற்றப்படும்.. இதனால் multiplex centers களில் கலக்சன் வெகுவாகவே பாதிக்கப்படும்..குறிப்பாக சென்னை பாக்ஸ் ஆபீசில் வீழ்ச்சியை சந்திக்கவும் வாய்ப்புண்டு.. மேலும் குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தயங்கவும்கூடும்.... இது இந்தியா தவிர வெளிநாடுகளில் எந்தவகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் சொல்ல முடியேல.. தெரிந்தவர்கள் பின்னூட்டலில் அதுபற்றி தெரிவிக்கவும்.. (அஜித்தின் வாலி திரைப்படத்துக்கும் ஏ சான்றிதழே வழங்கப்பட்டது).... சென்சார்க்கு போகும்போது அவர்கள் U /A சான்றிதழ் வழங்கவேணுமெனின் நிறைய சீன்களை கட் பண்ணவேணும் என்று சொல்ல அதுக்கு பில்லா தரப்பு சம்மதிக்கவில்லை.. இரு தரப்பிற்குமிடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. தற்போது மும்பையிலுள்ள மேல்சென்சார் பாட்டுக்கு படத்தை அனுப்பவுள்ளதாக தற்சமயம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது... இதனால் படவெளியீடு ஒருவாரத்துக்கு(ஜூன் 29) பிற்போடப்பட்டுள்ளது...  
இது தவிர பில்லா 2 பட தயாரிப்பாளர்கள், மற்றும் படக்குழுவினரின் ஆளுமையான செயற்பாடுகளையும் விமர்சகர்கள் கடுமையாக சாடுகிறார்கள், இதுவும் தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது... எது எப்பிடியோ தற்போதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பில்லா 2ற்கு 1200 இற்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைத்துள்ளனவாம்... குறிப்பாக பிரான்சில் எந்தவொரு தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத வரவேற்பு பில்லா 2இற்கு கிடைத்திருக்கு.. மொத்தமாக அங்கு 13 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.. அது மட்டுமன்றி முதல் தடவையாக பெல்ஜியத்தில் தமிழ் திரைப்படம் ஒன்று(பில்லா 2 ) ரிலீஸ் ஆகின்றது......         
தல நீ ஆடு தல.......

comment