Friday, May 25, 2012

திராவிட தேசத்தை ஆளப்போகும் அஜித்

அஜித்தின் பில்லா 2 திரைப்படமே இன்னும் ரிலீஸ் ஆகேல, அதற்குள் இன்னமும் படப்பிடிப்பே ஆரம்பமாகாத பெயரிடப்படாத விஷ்ணுவர்த்தனின் படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்காகிவிட்டது என்றே சொல்லத்தோன்றுகின்றது. முதல் காரணம் 2007 இல் வெளிவந்த பில்லா பீவர்தான்.. அந்த படத்தில் அஜித்தை ஸ்டைலாக காட்டியதுபோல வேற எந்தவொரு நடிகர்களையும் இதுவரை பார்க்கமுடியேல, அந்தளவுக்கு அஜித்தின் ஒவ்வொரு அசைவுகளுமே ஸ்டைலிசா இருந்திச்சு.. படமும் சக்கைப்போடு போட்டது.. பாட்ஷா படம் வந்தாப்பிறகு ரஜினி-கமல் போட்டியில் ரஜினி எப்பிடி மேலே போனாரோ அதேபோல அஜித்துக்கும் பில்லா வரும்போது போட்டி நடிகர்களிலிருந்து எங்கயோ உச்சத்துக்கு போய்விட்டார்.... அஜித் என்ற அந்த மூன்றெழுத்து மந்திரத்துக்கப்பால் பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம் படத்தில் நடிக்கும் மற்றைய நட்சத்திரங்கள்தான்.. முதலில் தெரிவுசெய்யப்பட்டவர் ஆர்யா, இவருக்கு இறுதியாக ஹிட் குடுத்த படம் என்றால் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம்தான். அதுக்கப்புறம் வெளிவந்த சிக்குபுக்கு, அவன்-இவன் இரண்டுமே பெரிதாக ஓடவில்லை. ஆர்யாவுக்கென்று தனி மவுசு இருக்கின்றதென்று சொல்லமுடியாட்டிலும். அவரது நகைச்சுவை பாங்கான நடிப்பு எல்லோரையுமே இலகுவாக கவரும். ஆனாலும் அஜித் படத்தில் வழமையான ஆர்யாவை பார்க்கமுடியாது,"பாஸ் என்கிற பாஸ்கரன்" இற்கு முந்தய ஆர்யாவைத்தான் பார்க்கப்போறோம். ஆமா அவரிற்கு வில்லன் ரோல்...................
ஆர்யாவுக்கு அடுத்ததாக இணைந்தவர்கள் நயன்தாரா, மற்றும் டப்சி ஆகியோர். அஜித் படங்களை பொறுத்தவரையில் எப்பவுமே அஜித்தை சுற்றித்தான் கதை போகும்.. ஹீரோயின்களுக்கு வேலை கொஞ்சம் குறைவுதான்.. அத்துடன் தற்போதைய நிலையில் நயன்தாரா, மற்றும் டப்சி ஆகியோர் டாப் நிலையில் இல்லாதவர்கள். இதால இந்த படத்துக்கு இவர்களால் எதிர்பார்ப்பு கூடபோவதில்லை.. கஜால் அல்லது சமந்தாவை இணைத்திருந்தால் அவர்களாலும் ஒரு எதிர்பார்ப்பு படத்திற்கு கிடைத்திருக்கும்.. அடுத்ததாய் இசையமைப்பாளர் யுவன், இது சொல்லவே தேவையில்லை 1980/90 களில் ரஜினி-இளையராஜா கூட்டணி எப்பிடி தமிழ்சினிமாவை ஆட்டிப்படைச்சுதோ அதேபோல அஜித்-யுவன் கூட்டணி இன்று அசத்திக்கொண்டிருக்கிறது.. ஏகன் தவிர இவர்கள் இருவரும் இணைந்த தீனா,பில்லா,மங்காத்தா மூன்று படங்களுமே பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டவை.. ஆதலால் யுவனின் சரவெடி இசை மிக மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.... அடுத்ததாய் அஜித்தால் சிபாரிசு செய்யப்பட்ட அஸ்வின், இவர் மங்காத்தாவில் அசத்தலா தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார்... நிச்சயம் இதிலும் தகுந்த பாத்திரம் வழங்கப்படின் சிறப்பான பங்களிப்பை குடுப்பார் என்பதில் சந்தேகமில்லை....
அடுத்ததாய் இணைந்தவர்கள் பிரித்திவிராஜ் மற்றும் அரவிந்தசாமி.... இவற்றில் பிரித்திவிராஜ்கு தமிழில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிடினும், கேரளாவில் மம்முட்டி-மோகன்லாலுக்கு அடுத்ததாய் இவருக்கு பெரிய ஒபெநிங் இருக்கின்றது என்றாலும் பிரித்திவிராஜ் இருக்கிறதால கேரளா மக்கள் முண்டியடித்து பார்ப்பார்கள், வசூல்ல அடித்து தூள் கிளப்பும் என்றெல்லாம் சொல்லமுடியாது.. காரணம் அங்குள்ள நம்பர் ஒன் சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி-மோகன்லால் போன்றோரே ஐந்து பத்து கோடியில் படம் எடுத்திட்டு அதை ஹிட் ஆக்க படும்பாடு!!!!.... அவர்களின் இன்றைய நிலையில் ஒரு படம் ஹிட் அடிச்சா நாலைந்து படங்கள் தொடந்து ஊத்தும்.. அந்தளவு மோசமான நிலையிலே அவர்களின் பிழைப்பும் போகுது.. குறிப்பாக தமிழ்நாடு மக்கள் போலல்லாது கேரளாவில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் சனத்தின் எண்ணிக்கையும் பயங்கர குறைவு.. என்றாலும் தனியே அஜித்தின் படம் என்டதைவிட பிரித்திவிராஜூம் கூட நடிக்கும்பட்சத்தில் கூடுதலான வசூல் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கத்தான் செய்யும்.. அதனால் அவரின் பிரசன்னம் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை... அடுத்ததாய் அரவிந்தசாமி... ஏனையா இந்தாளை எடுத்தாங்க? எடுத்ததை விட எடுக்காம விடுறதுதான் என்னைப்பொறுத்தவரையில் சிறந்த முடிவென தோன்றுகிறது... விஸ்ணுவுக்கு ஏன் இந்த விஷ பரீட்சையோ தெரியல............
இறுதியா இந்த லிஸ்டில் இணைந்தவர்கள்தான் மிகமிக முக்கியமானவர்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களான ரவிதேஜா மற்றும் நாகார்ஜுன்.. அதற்குமுன் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இது மட்டும் சாத்தியமாகுமெனின் அஜித்தின் எதிர்கால நகர்வுகளுக்கு மிகமுக்கிய பங்காற்றும் என்பதை மறுக்கமுடியாது.. காரணம் தெலுங்கு மாக்கட் என்பது கன்னடம்,மலையாளம் போலல்லாது மிகப்பெரியது... ஏன் தமிழைவிடவே சற்று அதிகம் என்றும் சொல்லலாம். இன்றைக்கு ரஜினி,கமலுக்கு அப்புறம் சூர்யா,கார்த்தி ஆகியோருக்கு தெலுங்கிலும் அதிக ஒபெநிங் உண்டு.. அவர்களின் படங்கள் நன்றாக அமைந்து தமிழ் கடந்து ஓடுவது ஒருபுறம், மற்றையது தங்களது படங்களுக்கு ஆந்திரா சென்று அங்கயும் புரமோஷன் செய்து வருகின்றனர்... எந்தவொரு மொழியிலும் நடிகர் படத்தை புரமோஷன் செய்யாவிடின் படத்தை வெல்லவைப்பதென்பது கஷ்டமான விடயம்.. இதற்காகவே ஹிந்தி ஹீரோக்கள் நிறைய சாகசங்கள்,கூத்துகள் காட்டுவார்கள்... ஆனா, அஜித்தை பொறுத்தவரையில் தான் புரமோஷன் செய்வதை விரும்பாத மனிதர். ஆனால் தமிழில் அவருக்கென்று ஒரு வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருப்பதால் புரமோஷன் தேவைப்படுவதில்லை.. ஆனா அவரின் படங்கள் வேறு மொழியிலும் சக்கைப்போடு போடவேணும் என்றால் கட்டாயம் களத்தில இறங்கி புரமோஷன் செய்தே ஆகணும்.. அதற்கு எப்போதும் அஜித் சம்மதிக்கமாட்டார்..ஆதலால், தெலுங்கு முன்னணி நடிகர்களை படத்தினுள் உள்வாங்குவதன்மூலம் அவர்கள் மூலமாக ஒரு ஒபெநிங்கை பெற்று தனது பெயரையும் நிலைநாட்டி காலப்போக்கில் தமிழ்நாட்டைப்போல தெலுங்கையும் ஆளலாம்............
மற்றும் அஜித் விட்ட இன்னுமொரு பிழை என்னவென்றால், பில்லா(2007) படத்தை தெலுங்கி டப் பண்ணி ரிலீஸ் பண்ணாமல் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கு உரிமையை விற்றது... பில்லா படம் மட்டும் மங்காத்தா போல தெலுங்கிலையும் டப் பண்ணி விட்டிருந்தா நிச்சயம் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டிருக்கும்.. அஜித்தின் இன்றைய நிலையும் எங்கயோ போயிருக்கும்.. இப்ப சூர்யாக்கு தெலுங்கில் எப்பிடி ஒபெநிங் இருக்குதோ அதேபோல 2007 இலே அஜித்த்துக்கு அப்பிடியொரு நிலை ஏற்பட்டிருக்கும். காலம் கடந்துதான் அஜித்துக்கு அந்த அறிவு வந்திருக்கு என்று சொல்லத்தோன்றுகிறது.... இப்பவெல்லாம் அஜித் படங்கள் நேரடியாவே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.. அண்மையில் மங்காத்தா செம ஹிட் ஆகிச்சு, இனி பில்லா 2 உம் டப்பாகி வெளிவரப்போகுது.. அதுக்கடுத்ததாய் விஷ்ணுவுடனான படமும் அவ்வாறு டப்பாகி ரிலீஸ் ஆகப்போகுது.. 
மொத்தத்தில் மலையாளம்,தெலுங்கு என திராவிட தேசத்தையே கலக்கப்போகும் படம் அஜித்+விஷ்ணு கூட்டணியிலான படம்... என்னதான் விஷ்ணுட படத்தில மலையாள,தெலுங்கு நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அதில் சூரியனா சுடர் விடப்போவது நம்ம தலைதான்....................... ரஜினி படங்களை பார்த்தால் தெரியும் ஒரு பட்டாளமே நடிக்கும்.. ஆனால் தண்ட பங்கு குறையுமே எண்டு ரஜினி அதைப்பற்றி வருத்தப்படுவதில்லை, காரணம் என்னதான் பட்டாளம் இருந்தாலும் ரஜினி என்ற ஒரு மனிதன் இல்லாவிடில் அந்த படம் படமல்ல பப்படம்தான்........ அதே நிலைக்கு தற்போது அஜித்தும் வந்துவிட்டார்............. வாழ்த்துக்கள் தல...............

Sunday, May 20, 2012

பாக்ஸ் ஆபீஸ் கலாட்டா....

தமிழ் சினிமாவில் வருடாவருடம் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தாலும் அந்த படங்களின் நிலை என்ன? மொத்த வசூல் என்ன? படம் வெற்றியா தோல்வியா எண்டு எவராலுமே உறுதிசெய்ய முடியாத நிலை.. அதற்கு முதலாவது காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள்தான், இவர்களுக்கு மட்டும்தான் படத்தின் உண்மை நிலவரங்கள் தெரியும், அது மட்டுமல்ல உத்தியோகபூர்வமாக படத்தின் வசூல் கணக்கை வெளியிடவேண்டிய பொறுப்பும் இவர்களுக்கே உண்டு.. ஆனால் இவர்களில் எத்தனை பேர் வசூல் கணக்கை வெளியிடுகிறார்கள்? ஏதாவது ஓரிரு படத்திற்கே உண்மையான வசூல் நிலவரங்களை மக்கள் அறிய முடிகிறது.... இதற்கு உண்மையான காரணம் என்ன? ஏன் சம்பந்தப்பட்டவர்கள் வசூல் கணக்கை வெளியிடுவதில்லை? என்று பார்த்தால், ஒரு காரணம் அதிகமாக வசூலிச்சபடங்களின் உண்மை நிலவரங்களை வெளியிட்டா அதிகப்படியான வரி செலுத்தவேணும் என்று, ஆனால் இதற்கான தேவை மிகமிக குறைவென்றே சொல்லணும்.. ஏனென்றால் நூற்றுக்கணக்கான படங்கள் வருடாவருடம் வெளிவரும்போது அதில் தேறுபவை கிட்டத்தட்ட பத்து பதினைந்து படங்களே! அதிலும் மூக்கில விரலை வைக்கிறளவுக்கு வெற்றிப்படங்கள் என்றா நான்கு அல்லது ஐந்து படங்கள்தான்.. கடந்த ஆண்டை எடுத்து பார்த்தாலே புரியும் blockbuster ரக படங்கள் என்றால் மங்காத்தா,கோ,காஞ்சனா மட்டுமே... 
சரி, உண்மையான வசூல் கணக்கை வெளியிடாமைக்கான மற்ற காரணம் என்னவெண்டு பார்த்தால், "ஹீரோக்கள்ட கௌரவ பிரச்சனைதான்" உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்ட படங்கள் பிளாப்பாகி தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டம் வரும்போது உண்மையான வசூல் கணக்கை சொன்னால் அவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டிடும் என்றதுக்காக உண்மையான வசூலை சொல்வதில்லை. அதில் கொடுமை என்னவென்றால் ஓடாத மொக்கை படங்களுக்கும் "விண்ணைத்தாண்டும் விஸ்வரூப வெற்றி" என்று பில்டப் விடுவதுதான்.. சில நடிகர்கள் தங்களின் படங்கள் வெளிவந்து ரெண்டாம், மூன்றாம் நாளிலே மீடியாக்களுக்கு போய் "சக்சஸ் மீட்டிங்" என்று வைத்திடுவாங்க, அதில தங்களின் படங்களின் கலக்சன் எந்திரனை உடைச்சிட்டு, சிவாஜியை தாண்டிட்டு என்று கொஞ்சம்கூட வாய்கூசாமல் சொல்வார்கள். இதில பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் தயாரிப்பாளர்கள்/ விநியோகிஸ்தர்கள்/ தியேட்டர் ஓனர்கள்தான்.. என்ன செய்ய உண்மை நிலவரங்களை சொன்னால் பிழைப்பு நாறிடும், அதால அமைதி காத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.. சிலவேளைகளில் தொடந்து ஒரு நடிகரின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தின் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் பப்ளிக்காயே குரல்கொடுப்பார்கள்..அப்போதுதான் சிலசில உண்மைகள் வெளிவரும். 
இதுக்கு நல்ல உதாரணம் என்றால் விஜயின் தொடர்ச்சியான ஐந்து படங்கள் தோற்கும்போது முதல் நான்கு படங்கள்வரை எந்த தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை எடுக்கவில்லை. அதை சாட்டாக வைத்து வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு "சக்சஸ் மீட்டிங்" வேற வைச்சாங்கள்.. அந்த சமயம் நிறைய விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் எல்லாம் வெற்றி என்று நம்பிட்டு இருந்தார்கள், ஆனா சுறா என்ற படம் வந்து படுஊத்தல் ஊத்தவே இனியும் அமைதியா இருந்து பிரயோசனம் இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கெதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள்..அதுபோலவே அண்மையிலும் தனுசின் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளும், அதிகரிக்கும் அவரின் சம்பளத்துக்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமே விநியோகிஸ்தர்கள்தான்.. படங்கள் தோல்வியுறும் சமயத்தில் உண்மையான வசூல் நிலவரங்களை அறிவித்து ஹீரோக்கள்ட முகத்திரையை கிழித்தால் அவர்கள் தமது சம்பளத்தையும் குறைப்பார்கள், அடுத்த படத்தை வெல்ல வைக்கணும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள்.. அல்லாவிடில் சம்பளத்தையும் அதிகரித்து ஹீரோக்கள் நல்லா பிழைப்பார்கள், தயாரிப்பாளர்/விநியோகிஸ்தர் பாடுதான் திண்டாட்டமா போகும்.. 
அதைவிட இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பாக ஊடகங்களின் செய்திகள்... இதை முழுமையாக ஆராயப்போனால் பத்து பதிவுகளே தாண்டிடும். வெறும் இரண்டாயிரம் ரூபா இருந்தாலே போதும் நாமும் ஒரு வெப்சைட்டை தொடக்கி மனம்போல செய்திகளைபோட.. அண்மையில் நண்பன் வெளிவரும்போது superwoods.com இல் வரும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்டை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், ஒவ்வொரு நாளும் உலகம்பூராக எவ்வளவு வசூல் எண்டு கணித்து போடுவாங்கள்... எப்பிடியையா சாத்தியம்? ஒரு இரவுக்குள்ள உலகம் முழுவதும் ரிலீசான படத்திண்ட கலக்சனை எண்ணி அனுப்புவாங்களோ! ஆங்கில படங்களுக்கு வேணும்னா சாத்தியப்படலாம். ஆனா இந்திய திரைப்படங்களுக்கு அறவே சாத்தியமில்லை............
எல்லாத்தையும்விட மிகப்பெரிய முறைகேடு என்னவென்றால் அண்மையில் வெளிவந்த ஓகேஓகே படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட்தான். 2007 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை வார இறுதியில் behindwoods.com இல் வெளிவரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் மக்கள் மத்தியில் ஓரளவு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிவரும் காலப்பகுதியில் அந்த நம்பிக்கை அறவே இல்லாமல் போகும் என்றுதான் சொல்ல தோணுகிறது, ஆமா மூன்றாம் வார முடிவில் 7.85cr என்று போட்டிருந்தார்கள், அதன் பிறகு என்ன மாயம் நடந்திச்சோ தெரியல நான்காம் வாரம் முடியேக்க 15cr என்று போட்டிருந்தார்கள்.. சரி, மறுபடியும் பழைய நிலவரங்களை பார்ப்பம் என்றால், முந்தய வார வசூல் எல்லாவற்றையுமே மாற்றி கூட்டிவிட்டார்கள்.... என்னய்யா பித்தலாட்டம்? official site என்று behindwoods ஐ நம்பி பார்த்தால் எங்கட காதிலையே பூ வைப்பார்கள்போலும்.... அது மட்டுமல்ல வல்லவன் படம் பிளாப் என்று முன்னர் behindwoods ல போட்டிருந்தார்கள்.. பிறகு சிம்பு எல்லா மேடைகளிலும் வல்லவன் வெற்றி வெற்றி என்று பில்டப் விட இவங்களும் ஹிட் என்றே அறிவித்துவிட்டார்கள். அதேபோல அண்மையில் வெளிவந்த நண்பனுக்கு மூன்று/நான்கு வாரம் கழிந்தபின் ஹிட் என்று அறிவித்தாங்க, பின்னர் சில நாள் கழித்து நண்பன் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக கலக்சனை அள்ளிட்டு என்று ஒரு செய்தியை போட்டு நண்பனை "சூப்பர் ஹிட்" ஆக அறிவித்தார்கள்.. 150cr வரை வசூலித்த சிவாஜியை நண்பன் பிரேக் பண்ணிட்டு என்றால் ஏனையா சூப்பர் ஹிட் குடுக்கிறீங்க? பேசாம பிளக்பாஸ்டர் குடுக்கவேண்டியதுதானே!!!..... ஒன்று மட்டும் சொல்லமுடிகிறது behindwoods ஆனது சிலரின் கைப்பிள்ளையாக செயற்படத்தொடங்கிவிட்டது.. சாதாரண மயிர்புடுங்கி இணையத்தளங்கள் ஒரு பக்க சார்பாக செய்திகள் போடுவது வேற விடயம், ஆனால் எல்லோராலும் நம்பப்படும் ஒரு இணையத்தளம் இவ்வாறு பக்கசார்பாக நடப்பது வேதனைக்குரிய விடயம்தான்........................................ இனி எந்த படத்தினதும்ம் உண்மையான வசூல் நிலவரங்களை அறிந்துகொள்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.. காரணம் நடுநிலையான ஊடகங்கள் என்று எவையுமே இல்லை.................... 

- வருகை தந்தமைக்கு நன்றி- 

Saturday, May 12, 2012

மங்காத்தாவும் நொந்துபோன உதயநிதியும்....


காலை நித்திரையால எழும்பி வெப்சைட்டுக்களில் என்ன செய்திகள் வந்திருக்குதெண்டு சும்மா தட்டி பார்த்தா செம அதிர்ச்சி, அது வேற ஒண்டுமில்லை "ஒருகல் ஒருகண்ணாடி" பற்றி உதயநிதி தெரிவித்த ஒரு கருத்துத்தான்... "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.".. இதுதான் அவர் கூறின கருத்து.... அவற்றை கருத்திண்ட ஆழம் இதுதான்.. தமிழ்நாடு அண்மைய வசூல் ஒப்பீட்டு நிலவரப்படி முதலாவது ஏழாம் அறிவு அடுத்தது ஓகேஓகே அடுத்தது மங்காத்தா எண்டு...... இதை நினைத்து சிரிக்கிறதா இல்லை அழுகிறதா எண்டு கொஞ்சநேரம் ஒரே குழப்பமா இருந்திச்சு.......... சரி, அதுக்குமுதல் தயாரிப்பாளராக உதயநிதியை பற்றி கொஞ்சம் பார்ப்பம்......

 ஒருகல் ஒருகண்ணாடியானது உதயநிதியின் தயாரிப்பில் வெளிவந்த ஐந்தாவது திரைப்படமாகும், ஓகேஓகே ஐ தவிர இவர் தயாரித்த மிகுதி நான்கு படங்களுமே வெற்றிப்படங்கள் அல்ல, அதில் குருவி,மன்மதன் அம்பு ஆகிய ரெண்டு படங்களும் படுதோல்விப்படங்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமும்கூட.. மற்றைய ரெண்டு படங்களான ஆதவன்,ஏழாம் அறிவு ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் மிக்ஸ் ரிப்போட்தான், கிளீன் ஹிட் என்றில்லை... இரண்டுமே அவேரேஜ் படம்தான். அப்பிடி என்றால் வெற்றியா தோல்வியா என்று பார்த்தால் தோல்வியென்றுதான் சொல்லணும்.. இதேபோலத்தான் அஜித்தின் திருப்பதி,பரமசிவன் படங்கள், மற்றும் விஜயின் ஒருசில தோல்விப்படங்களுக்கும் இதே கதிதான்... அவேராஜ்ஜா ஓடின படமென்றாலும் வெற்றியா/தோல்வியா என்றுதான் இறுதியில் பார்ப்பார்கள்.. அப்போது அவை தோல்வியாகவே கணிக்கப்படும்.. என்னதான் ஒவ்வொரு படத்திலயும் அடிவாங்கினாலும் விடுற பில்டப்புக்கு அளவே இல்லை.. குருவி படத்துக்கு 150வது நாள் வெற்றிவிழாவை பிரமாண்டமாய் செய்து, படங்களின் ஓடிய நாட்களை வைத்து வெற்றியை அறிவிக்கும் மரபையே கேவலப்டுத்தினார்கள். அதற்கப்புறம் ஆதவன் வெளிவந்தசமயம் வசூல் நிலவரங்களை "சிவாஜிக்கு அடுத்ததாய்" என்ற ஒரு சொல்லை பயன்படுத்தியே பில்டப் விட்டார்கள்.. அடுத்ததாய் மன்மதன் அம்பு படத்திற்கு வசூல் ரீதியில் பில்டப் விட்டதா தெரியவில்லை.. அதற்கப்புறம் கடைசியா வந்த ஏழாம் அறிவிற்கு விட்ட பில்டப்பை ஊரே அறியும்...... 100 கோடியே தாண்டாத படத்தை எந்திரன், சிவாஜிக்கு அடுத்ததாய் மிகப்பெரிய வசூலிச்ச படமாய் விளம்பரப்படுத்தினார்கள்.. இவ்வாறு உதயநிதி விடும் பில்டப்புக்கு அளவே இல்லை எண்டு சொல்லலாம்..... இவற்றை தயாரிப்பில அல்லது வெளியீட்டில் ஏதாவது படங்கள் ரிலீசானா டுவீட்டர் பக்கம் தலைகாட்டவே முடியாது... அந்தளவுக்கு ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொருநாளும் எல்லா சோவும் ஓடி முடிஞ்சாப்பிறகு வந்த கலக்சனை எல்லாம் கூட்டி பார்த்தாள்போல வசூல் கணக்குகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார்... பாவம் உதயநிதி.. ஊருக்கே தெரிஞ்சிட்டு இவற்றை பித்தலாட்டம்.. ஆனா, இன்னமும் இவர் தான் சொல்லுறதை எல்லாம் நம்பிட்டு இருக்காங்க எண்டு நம்பிட்டிருக்கார்...



சரி, நாம விடயத்துக்கு வருவோம்.....
எந்திரன் வெளிவந்து அடுத்த இரண்டாண்டுகளில் வெளிவந்த படங்களில் எந்தவொரு மிக்ஸ் ரிப்போட்டும் இல்லாமல், வெளியான அனைத்து இடங்களிலுமே சக்கைப்போடு போட்ட திரைப்படம் என்றால் மங்காத்தாதான்... மொத்த வசூலிலும் ரஜினி,கமல் படங்களுக்கு அடுத்தபடியாய் இன்றுவரை அதிக வசூலிச்ச படம் என்றாலும் மங்காத்தாதான்.... நினைத்துக்கூட பார்க்கமுடியாதளவிலான வெற்றி அது, வெறும் நாற்பது கோடிகளில் தயாரிச்ச படம் மொத்தமாக 130 கோடிகள் வசூல் செய்தது.. அதற்கடுத்ததாய் மொத்தவசூல் அதிகம் என்றால் ஏழாம் அறிவை குறிப்பிடலாம்(net profit அல்ல).. ஆனால் உதயநிதியின் கருத்தை ரெண்டுவிதமாய் பார்த்தால், ஒன்று மங்காத்தாவை விட ஏழாம் அறிவின் தமிழ்நாட்டு வசூல் கூட என்பது.. மற்றது ஓகேஓகே ட தமிழ்நாடு வசூல் மங்காத்தாவை விட அதிகம் என்பது...

இதற்கு நான் சொல்லும் பதில் இதுதான்.....ஏழாம் அறிவுட பட்ஜெட் கிட்டத்தட்ட எண்பது கோடி என்று சொன்னார்கள், அதே சந்தேகப்படவேண்டிய ஒரு விடயம்தான்...அந்தப்படத்தை பார்த்தா தெரியும் எண்பது கோடி செலவழிக்கிற அளவுக்குக்கு பிரமாண்டம் எண்டு எதுவுமில்லை..குறிப்பாக முதல் பதினைந்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு நிமிட சீனுக்கும் ஒவ்வொரு கோடி செலவளித்தோம் என்று சொன்னாங்களே!! சப்பா தாங்கமுடியேலப்பா! சரி அதைவிடுவம், எண்பது கோடி எண்டே எடுத்தாலும்,எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவு படத்துக்கு விநியோகிஸ்தரும் உதயநிதிதான்.. ஆதலால் உதயிடமிருந்து நேரடியாக தியேட்டருக்கே சென்றிருக்கும். எப்பிடியும் 90 கோடியளவில் வியாபாரம் நடந்தாலும் மங்காத்தாட வசூலை முறியடித்தது என்றால் 130 கோடிகள் தாண்டியிருக்கணும், கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபா நிகரலாபம்.... எண்பது கோடி பட்ஜெட்டில் உருவான ஏழாம் அறிவுக்கு நாற்பது கோடி நிகர லாபம் என்றால் ஏழாம் அறிவு சூப்பர்ஹிட் அல்லது பிளக்பஸ்டர் என்றல்லவா அறிவிக்கப்பட்டிருக்கணும்? ஏன் எல்லா வெப்சைட்டும் அவேரேஜ் எண்டு குடுத்திருக்காங்க?? என்ன சிரிப்பென்றால் ஹிட் என்றுகூட வெப்சைட்டுகள் அறிவிக்கவில்லை.. பட்ஜெட்டுக்கேற்ப நிகரலாபத்தை அடிப்படையா வைச்சு வருடமுடிவில் வெளியான அறிக்கையில் வேலாயுதத்துக்கு பிறகே ஏழாம் அறிவு இடம்பிடித்தது...... அவரேஜ் ரக படம் என்றதால் மட்டுமட்டாக 100 கோடிகளை எடுத்திருக்கவே சந்தர்ப்பம் அதிகம். பொதுவாக மொத்த வசூலில் 70% ஆனவை தமிழ்நாட்டிலே வசூல் ஆகும்.. அதற்கடுத்ததாய் rest of tamilnadu, malaysiya, uk, us and canada இல் முறையே அதிக கலக்சனை வசூலிக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.. இதில் தெலுங்கு, யூகே போன்றவற்றில் ஏழாம் அறிவு மங்காத்தாவை விட சற்று அதிகமாய் அதிகம் வசூலிச்சது, மற்றைய தமிழ் நாடு தவிர்ந்த இடங்களிலும் மங்காத்தாவிற்கு சற்று அதிகமான வசூல்..... அப்பிடி இருக்கும்போது தமிழ்நாட்டில் எப்பிடி மங்காத்தாவை விட ஏழாம் அறிவு கூட வசூலிச்சிருக்கும்?... சந்தர்ப்பமே இல்ல........


அடுத்த விடயம் ஓகேஓகே.........மூன்றாம் வார முடிவில் behindwoods இன் தரவுப்படி சென்னை வசூல் மங்காத்தாவை விட அதிகம்தான். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலும் மங்காத்தாவிட அதிகம் என்பது சின்னப்பிள்ளைத்தனமா இல்ல? 70% ஆன கலக்சன் தமிழ்நாட்டில இருந்து வரேக்க, உதயநிதியின் கருத்துப்படி மொத்த வசூலை மதிப்பிட்டால் கிட்டத்தட்ட 90 கோடிகளை தாண்டியல்லவா இருக்கணும்???............. அப்பிடியாயின் ஏன் behindwoods verdict- superhit என்று குடுத்திருக்காங்க? Blockbuster குடுத்திருக்கலமே!................. அண்ணை உதயநிதி! உங்கட பிராட்டு வேலையெல்லாம் ஊருக்கு தெரிஞ்சுபோச்சு.... இனியாவது ரூட்டை மாத்துங்க...............................
(behindwoods இணையத்தளம் ஒருபோதுமே அஜித்துக்கு ஆதரவா இருந்ததில்ல, எப்பவுமே அஜித்தை நான்காம்,ஐந்தாம் இட நடிகராகவே தரப்படுத்துவார்கள்.. அதனால்தான் எதிரிரியின் தகவல்களை source ஆக எடுத்துள்ளேன்......)

                                            வருகைக்கு நன்றி..

Friday, May 11, 2012

கலகலப்பு- கலக்கலான விமர்சனம்..


ஒரு கல் ஒரு கண்ணாடி வந்து ஒரு மாதங்களே ஆகவில்லை, அதற்குள் மீண்டுமொரு முழுக்க முழுக்க காமெடியிலான படம்... சுந்தர்சியின் இருபத்தைந்தாவது படமும்கூட.. எல்லோருக்கும் வாற அந்த கதாநாயகன் ஆசைதான் சுந்தர்சியின் இயக்குனர் எண்ட சினிமா பயணத்திற்கு இடையே சின்ன தடங்கல் ஏற்பட்டாலும், மனுஷன் நல்லா பட்டு தெளிந்துவிட்டார்போலும்.. மீண்டும் இயக்குனராகவே விஸ்வருபம் எடுத்திட்டார். சுந்தர்சி ஹீரோவாக நடிக்கும்போது அந்த படங்கள் தோல்வியடையவேணும் என்று நான் நினைத்ததுண்டு, ஏனென்டா அப்பதானே மீண்டும் முழுநேர இயக்குனராக மாறுவார் எண்ட அந்த ஆசைதான்.... மணிரத்தினம்,சங்கர்,பாலா,அமீர் போன்ற முதல்தர இயக்குனர் இல்லாவிடினும் ரசிகர்களை ஏமாற்றாத இயக்குனர்களில் இவர் முதன்மையானவர்... உள்ளத்தை அள்ளித்தா, வின்னர்,கிரி,லண்டன்,ரெண்டு என்று சந்ததி சந்ததியா பேசும் அளவுக்கு நகைச்சுவைகளை இவரின் படங்களில் அவதானிக்கலாம்.. அதே வரிசையில்தான் இந்த "கலகலப்பு" திரைப்படமும்.....................


சரி இனி விமர்சனத்துக்கு போவோம்.....


நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா
இயக்கம்- சுந்தர்சி
இசை- விஜய் எபநிசியர்
ஒளிப்பதிவு- சுந்தர்
தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி
வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV)

முதற்பாகம்..................
விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல... இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் கையெழுத்துபோடணும் எண்டதால விமலோடையே சேர்ந்து இருக்கிறார்... அப்பிடியே ரெண்டு அழகுப்பதுமைகளும் விமலுக்கு அஞ்சலியும், சிவாக்கு ஓவியாவுமாக ஆளுக்கொன்றாக செட் ஆகுறார்கள்.. இதற்கிடையில் அஞ்சலிக்கு ஊரில மாப்பிளை பார்க்க, அவசரம் அவசரமாக அஞ்சலிட ஊருக்கு கிளம்புறார் விமல்.... இதோட முதற்பகுதி ஓவர்......................


இரண்டாம் பாகம்...
இந்தப்பட கதையை ரெண்டு பகுதியா பிரிச்சு எழுத காரணமே சந்தானம்தான்... காரணம், அவர் முதற்பாதியில் இல்லை... அவர் இல்லாத அந்த முதற்பாதி என்னைப்பொறுத்தவரையில் பெரிதாக இல்லை எண்டே சொல்லத்தோன்றுகிறது.. சிவாவின் மொக்கை ஜோக்குகளை முதற்பாதியில சகிக்கவே முடியல.. ஏதோ ஜோக் அடிக்கிறேன் எண்டு கோவம் வாறமாதிரி காமெடி பண்ணினார்.... ரெண்டாம் பாகத்தில சந்தானத்திண்ட அறிமுகத்தோட படமும் விறுவிறுப்பாக நகரத்தொடங்கியது.. குறிப்பாக சந்தானத்திண்ட அறிமுகமே செமையா இருந்திச்சு, ரஜினி,அஜித்,விஜய்க்கே இல்லாத ஒரு மாஸ் இன்ட்ரோடக்சன்.. ஆனா அவர் மாசா இல்ல தூசா எண்டு படத்தை பார்த்து அறிந்துகொள்ளுங்க..........


சந்தானம்- ஒருவிதத்தில் நோக்கும்போது சூப்பர்ஸ்டாருக்கும் சந்தானத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. ரஜினிட படங்களை பார்த்தால் தெரியும், கிட்டத்தட்ட மல்டிஸ்டார்ஸ்ட படம்போலவே இருக்கும், படத்தில வாற ஒவ்வொருத்தருமே அடிக்கடி திரையில் பார்த்த முகங்களாய் இருக்கும்.. ஆனால், எத்தனை பேர் வந்தாலும் படம்பார்த்துமுடிய ரஜினி மட்டுமே மனதுக்குள் நிற்பார்.. அதுபோலவே சந்தனமும்.. மற்ற எல்லா நடிகர்களையும் பின்தள்ளிவிட்டு அவற்றை காட்சிகளே படம் பார்த்துமுடிந்தபின் மனதில் நிற்கும்... ஓகேஓகே கு பிறகு மீண்டும் கலக்கியிருக்கிறார்..... இந்தப்படத்திலும் இடைவேளையின்பின் சந்தானத்தின் வருகைக்குப்பிறகுதான் படம் செம கலாட்டாவா போகுது.....

சுந்தர்சி- இடைவேளைக்கு பிறகு காமெடியுடன் விறுவிறுப்பாகவும் எடுத்திருக்கிறார். பரவாயில்ல ரகமே குடுக்கலாம்... இன்னமும் அவருடைய பழையபாணியிலே நிக்கிறார்... சந்தானம் எண்ட ஒராள் படத்தில் இருப்பதால் சுந்தர்சிட தலை தப்பிக்கும்போல இருக்கு...

விமல்- விமலுக்கு முழுநீள காமெடிப்படம் சரிப்பட்டுவராதுபோலவே தோன்றுகிறது... சீரியசான கதாபாத்திரத்துடன் அப்பப்ப சில காமெடி சீன்களே இவருக்கு மிகப்பொருந்தும்.. என்றாலும் பரவாயில்ல.. சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. இயன்றளவு முயற்சித்திருக்கின்றார்...


சிவா- கடுப்பேத்திட்டார் மைலோட்..... இவரு மேடையில நிகழ்ச்சி தொகுத்துவழங்கும்போது எப்பிடி இருப்பாரோ! அதேபோலவே படத்திலும் ஒவ்வொரு dialog delivery and face reactions. எனக்கு சிவாவின் நடிப்பில் திருப்தியில்லை.... நான் படம் பார்த்த திரையரங்கில் கொஞ்சப்பேர்தான் இருந்தபடியால் மற்றவர்களின் response எப்பிடி என்று சொல்லமுடியாதுள்ளது....

அஞ்சலி,ஓவியா- அசத்திட்டாங்க... (எல்லாத்திலையும்)

இசையமைப்பாளர், பாடல்கள்- முதன்முதலா தியேட்டர்ல படம் பார்க்கும்போதுதான் பாடல்கள் கேட்டேன்.. நல்லாய் இருந்ததுபோன்றதொரு உணர்வு.... பின்னணி இசையும் நன்றாகேவே இருக்கின்றது..

ஒளிப்பதிவு- குறை சொல்வதற்கில்ல... சிறப்பாகவே உள்ளது.


படத்தில் மேலும்சில குறைநிறைகள்...

எடிட்டிங் படு சொதப்பல்.. காட்சிகள் திடீர் திடீரென துண்டாடப்படுகின்றது. interest ஆக ஒரு சீன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென துண்டாடப்பட்டு மற்ற சீன் வருகிறது. எடிட்டரின் பிழை என்றாலும் சுந்தர்சி இதை திருத்தியிருக்கணும்... கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பார்முலாவில் இதுவொரு பெரிய பிழையாக தெரியாது..காரணம் ரசிகர்கள் அப்போது கதைக்கும்,நடிப்புக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. பிலிம் மேக்கிங்,ஸ்கிரீன்பிளே தொடர்பில் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள்... ஆனால், இப்போ காலம் மாறிட்டு, சுந்தர்சிதான் இன்னும் மாறேல.. இது சுந்தர்சியின் update ஆகாத direction formula ஐயே காட்டுகின்றது.....

சந்தானம்,விமல், மனோபாலா இந்த மூன்றுபேரும் தங்களுக்கிடையில் வாகனத்தில் துரத்துப்படும் காட்சி எல்லோரையும் ரசிக்கவைக்கிறது.....
படத்தில் வரும் காமெடி பஞ்வசனங்களும் சூப்பரா இருக்கு....

படத்தில பஞ்ச சுப்பு குழுவினரின் ஆரம்பகாட்சிகள், குறிப்பாக வைரக்கடை வைத்திருந்து பின் வைரத்தை எடுத்திட்டு தாங்களே கடைக்கு நெருப்புவைத்திட்டு, அவங்க போடுற சீன்கள் ரெம்ப போரா இருந்திச்சு......


காமெடி படம் என்றபடியால் லாஜிக் பிழைகள் பெரிதாக அவதானிக்கப்படாது... இது இந்தப்படத்துக்கு ஒரு பிளசாக இருக்கும்... மேலும்,
பொதுவாக காமெடி படங்கள் பெரிதாக சூப்பர்ஹிட்டோ, பிளாக்பஸ்டர் ஹிட்டோ அடித்ததாய் இல்லை.. அந்தளவுக்கு தமிழக ரசிகர்கள் விரும்பி பார்க்கமாட்டார்கள்.. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓகேஓகே வெளிவந்து தற்சமயம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கு.. இன்னிலையில் ஓகேஓகே வெளிவந்து ஒருமாதமே ஆகாதநிலையில் இன்னொரு முழுநீள காமெடிப்படமான கலகலப்பு படத்தின் வெளியீடு வெற்றியளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது......

ஓகேஓகே அளவுக்கு இல்லையென்றாலும் ஓகே அளவுக்கு இருக்கின்றது..
மொத்தத்தில் எனது கருத்துப்படி படம் என்ஜாய் பண்ணி பார்க்கலாம்........


Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்...


சே இப்பிடியொரு நல்ல படத்தை வெறும் ஒன்றே முக்கால் மணிநேரத்தில ஏன்தான் முடித்தாங்களோ தெரியேல... மூன்று மணிநேரம் என்றாலும் சலிக்காம பார்த்துக்கொண்டிருக்காலாம்... படம் கமெர்ஷியல் படமோ, ஆக்சன் படமோ அல்லது commedy sequence அதிகம் உள்ள படமோ இல்லை... கிட்டத்தட்ட அங்காடித்தெருபோல நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கதையை பக்காவா எடுத்திருக்கிறார்கள்... சாமுராய், காதல், கல்லூரிக்கு பிறகு பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வழக்கு எண் 18/9.. முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்றே சொல்லலாம், முக்கியமான பாத்திரங்கள் எல்லாவற்றையுமே புதுமுகங்களை வைத்து பின்னியிருக்கிறார்...


சரி இனி கதைக்கு வருவோம்....

நடிகர்கள்- மிதுன் முரளி, சிறீ, ஊர்மிளா மகன்தா, மகேஷ் யாதவ்.
இயக்கம்- பாலாஜி சக்திவேல்.
இசை- ஆர்.பிரசன்னா.
ஒளிப்பதிவு- விஜய் மில்டன்.
தயாரிப்பு- சுபாஸ் சந்திரபோஸ், ரூனி ஸ்கிரீவ்லா.

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன்(இந்த படத்தின் ஹீரோ) வீட்டு கஷ்டத்தை உணர்ந்து கடனை அடைப்பதற்காக படிப்பை கைவிட்டு வெளியூர் செல்கிறான்.. அங்கே ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வரும்போது அவனின் பெற்றோர் ஊரில் இறந்த செய்தியை ஊரில் இருந்து தொலைபேசியில் ஹோட்டல் முதலாளிக்கு தெரியப்படுத்தியும் முதலாளி அவனுக்கு சொல்லாமல் வேலைவாங்கிட்டு இருக்கையில் அங்கு வந்த நண்பன் மூலம் நிலைமையை கேட்டறிந்து அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் வேளையில் சேர்ந்து பிளாட்பாரத்திலே வாழ்க்கையோ செலுத்திக்கொண்டிருக்கிறான்....


அப்போது அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்குகின்றான்... இதற்கிடையில் அந்த பெண்ணும் இன்னொரு வீட்டை வேலை செய்யும் ஒரு வேலைக்காரி என்பது குறிப்பிடத்தக்கது.. இதற்கு சமாந்தரமாக ஹீரோவின் காதலி பணிபுரியும் வீட்டு பெண்ணுக்கும், இன்னொரு பையனுக்குமிடையிலான காதல்வேற போய்க்கொண்டிருக்கும்.. அதை காதல் எண்டு சொல்லேல்லாது, காதலிக்கிற மாதிரி அவன் நடிச்சு ஏமாத்த முயற்சிக்கிறான்... இவ்வாறே சமாந்தராமாக இரு கதைகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும்.... அதற்கப்புறம் ஹீரோவின் ஒருதலைக்காதல் ஜெயிக்குதா? மற்ற ஜோடிகளுக்கு என்ன ஆச்சு என்பதே படத்தின் தொடர்ச்சி.. அதை படத்தை பார்த்தே அனுபவியுங்கள்.....


இயக்குனர்- சாமுராய்,கல்லூரி என்ற தோல்விப்படத்தையும் காதல் என்ற வெற்றிப்படத்தையும் வழங்கிய பாலாஜி சக்திவேலுக்கு நிச்சயம் இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.. முழுக்க முழுக்க இயக்குனரின் ஆதிக்கம்தான் இந்தப்படத்தில்.... ஸ்கிரீன்பிளே, பிலிம் மேக்கிங் இரண்டுமே சூப்பர்... தரமான பாத்திரத்தெரிவு, குறிப்பாக தன்னை மட்டும் நம்பி புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் தரமானதொரு படைப்பை வழங்கியிருக்கின்றார்... அவருக்கு ஒரு சல்யூட்.....

ஒளிப்பதிவாளர்- இயக்குனருக்கு அடுத்ததாய் இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான்... அவருடைய ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றது. குறிப்பாக படம் தொடங்கையில் ஒரு பெண் கண்சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது கண்ணுக்குள் இருந்து கமெரா பிடிக்கப்பட்டதுபோல் ஒரு காட்சி எடுத்திருந்தார்... மற்றும் சமையல் செய்யும்போது அடுப்பினுள் இருந்து கேமரா ஷாட் எடுத்ததுபோன்ற சீன்.... இதைவிட background colour எல்லாமே சூப்பராக இருந்தது..


ஹீரோ- சங்கர்,கே.வி ஆனந்த, முருகதாஸ் போன்றோரின் படமெண்டால் இவரை பாட்டு சீனுக்கு ஹீரோக்கு பின்னால நின்று ஆடவிடுவாங்க என்று சொல்வதே சந்தேகம்தான்... சராசரியான படம் ஒன்றின் ஹீரோவுக்குரிய தோற்றப்பாடு இல்லாவிடினும், இந்த படக்கதைக்கு மிக நன்றாகவே பொருந்துகின்றார், ஒவ்வொரு அசைவும் படத்துடன் நன்றாகவே ஒட்டிக்கொள்கிறது.... சொல்லப்போனால் ஆடுகளம் படத்தில் தனுஷ்ட body language எவ்வாறு படத்துடன் ஒன்றித்துப்போனதோ அதேபோல கிட்டத்தட்ட இந்தபட ஹீரோவும் சிறப்ப்பனதொரு perfomanceஐ வழங்கினார்.. மற்றைய நடிகர்களும் தத்தமது பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்...

இசையமைப்பாளர்- இசையமைப்பாளரும் படத்திற்கேற்ப சிறப்பாகவே பணிபுரிந்திருக்கிறார்.. சிலசில சீன்களில் வேறு படப்பாடல் வரிகளை background music ஆக போட்டு அசத்தியிருக்கிறார்(அதை சிறப்பாக கருதமுடியாது)... rinhing tone கு அவர் குடுத்த பாடல்வரி, மற்றும் கவுண்டமணியின் ஜோக் வரிகள் தியேட்டரில் நிறைய கைதட்டல்களை வாங்கியிருக்கின்றது....படத்தில் இரண்டு பாடல்கள், இரண்டுமே பின்னணியில் செல்லும்... அதில் ஒரு பாடல் சிறப்பானதாக அமைந்திருக்கின்றது...


படத்தில் ஒருசில குறைநிறைகள்.......

படத்தின் இரண்டாவது ஹீரோ எப்பிடிப்பட்டவர் என்று அவரின் சீன் வந்து கொஞ்ச நேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிகிறது, அப்பிடி இருக்கும்போது தொடந்தும் அவர் நல்ல பிள்ளைபோல காதலியிடம் கொஞ்சிகுலாவுவதை நீண்ட நேரம் காட்டுவது சலிப்பை ஏற்படுத்துகிறது... அவர் எப்பிடிப்பட்டவர் என்றதை கடைசியிலே காண்பித்திருக்கலாம்...

அண்மையில் வெளிவந்த தனுசின் 3 படத்தின் இரண்டாம்பாகம் நிறையப்பேருக்கு பிடிக்காமல் போனதுபோன்றதொரு பிழையை இப்பட இயக்குனர் விடவில்லை.படம் என்னதான் சீரியஸா போய்க்கொண்டிருந்தாலும், இடையிடையே சிலசில வசனங்கள், நடிகர்களின் அசைவுகள் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறது, மேலும் படம் ஓரளவு வேகத்துடன் திரில்லிங்காயும் நகர்கிறது.. இதுவும் ஒரு பிளஸ் என்றே சொல்லணும்.....


படம் வெறும் 1.45 மணிநேரத்தில் முடிவடைகிறது... ஏன் இவர்களுக்கு இந்த விபரீத முடிவோ தெரியவில்லை...குறைந்தது 2.15 மணிநேரமாவது இருந்திருக்கணும்...

எப்பவும் படத்தின் பிழைகளை சுட்டிக்காட்டுவது இலகுவான விடயம்..இந்தப்படத்துக்கு நிறைகளை சொல்லப்போனால் இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் தேவைப்படும்...... மொத்தத்தில் படம் சூப்பர்.. தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல படைப்பை ரசிகர்களுக்கு தந்திருக்கின்றது......

Saturday, May 5, 2012

சூர்யா! இது உங்களுக்கே நியாயமா? பாகம் 1


இந்த பதிவு சூர்யாவை கலாய்ப்பதற்காக எழுதப்படவில்லை.... தற்போதைய தலைமுறையில் அஜித்துக்கு பிறகு எனக்கு பிடித்த சூர்யாவின் சினிமா வரலாற்றின் சில மறுபக்கங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.... சூர்யாவின் சினி அத்தியாயமே மற்ற நடிகர்கள் குறிப்பாக அஜித் வேண்டாம் எண்டு கைவிட்ட படங்களால்தான் நிரப்பப்பட்டதென்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்... அதை குறை சொல்லவும் முடியாது வேண்டாம் என்று கைவிட்ட படங்களை எடுத்து நடிக்கிறது தப்பில்லை.. ஆனால், ஒரு நடிகனுக்கு புக் ஆகி அவரும் நடிக்க சம்மதிக்கும்போது இடையில புகுந்து ஆட்டையைப்போடுறதென்பது மகாகொடுமையான விடயம்....... இந்த விடயத்தில சூர்யா இருக்கிறாரே ரெம்ப கில்லாடி..... அதுக்குமுதல் சின்னதா ஒரு அறிமுகத்தை சூர்யாவுக்கு வழங்கிட்டு விடயத்துக்கு போவோம்.....


1997 இல் நேருக்குநேர் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இந்த சூர்யா... அதுசரி, எப்பிடி அவருக்கு இந்த வாய்ப்பு என்றால், இந்த படத்தில் ஆரம்பத்தில் வசந் இயக்கத்தில் அஜித்-விஜய் ஆகிய இருவரும்தான் இணைந்து நடிக்கவிருந்தார்கள்.. அதனால் கதையமைப்பு கிட்டத்தட்ட சரிசமனாகவே உருவாக்கப்பட்டது.அஜித்துக்கு சிம்ரனும்,விஜய்க்கு கௌசல்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.. இதில் இருநடிகைக்களுமே அந்த காலத்தில் தமிழுக்கு பெரிதாக பிரபல்யம் இல்லாவிடினும் சிம்ரன் ஓரளவுக்கு கௌசல்யாவைவிட பிரபல்யமானவர் என்றே சொல்லணும்... சரி, இவ்வாறே திட்டமிட்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ஒருவாரத்துக்கு பிறகு அஜித் அதிலிருந்து விலக, அந்த இடத்தை நிரப்பியவரே சரவணன் என்ற இப்போதைய சூர்யா....


அப்பொழுது பூவே உனக்காக, லவ்டுடே என்ற இரு ஹிட்களை குடுத்த விஜய் தனக்கு ஈகுவலா சூர்யா நடிப்பதை மறுத்திருக்கலாம்.. ஆனால், நண்பராச்சே! எண்டதுக்காக மறுக்கவில்லை.... அது மட்டுமில்ல, இந்த பட பாடல்கள் வெளியாகியபோது சூர்யாவுக்கு உருவான "அவள் வருவாளா", "மனம் விரும்புதே" என்ற இரண்டு பாடல்களும் பயங்கர ஹிட் ஆகின..ஏன் இப்பவும் இந்த இரண்டு பாடல்களும் நிறையப்பேரின் உதடுகளில் தவழ்ந்துகொண்டே இருக்கும்... மறுபக்கம் விஜய்க்குரிய பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை... இதனால் இன்றும் சிலர் நேருக்குநேர் சூர்யாவின் படம்போலவே கருதுவார்கள்.. அதற்கப்புறம் 2001 இல் மீண்டும் விஜய்-சூர்யா கூட்டணி "பிரண்ட்ஸ்" படத்தில் ஒன்று சேர்ந்தது... அப்பொழுதுகூட சினிமாவில் சூர்யா பெரிதாக ஒன்றுமே சாதிக்கவில்லை.. இருந்தாலும் கிட்டத்தட்ட அரைக்கரைவாசி முக்கியத்துவம் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது... உண்மையை சொல்லப்போனால் சூர்யாவை சினிவாழ்வுக்கு அத்திவாரமிட்டதே விஜய்தான்.....



ஆனால் இப்ப சூர்யாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை விஜயை பரம எதிரியாயே பார்க்கிறார், விஜயின் ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைக்கிறார்... இன்று பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அஜித்தை காட்டினும் சூர்யாவின்மேல் எரிச்சலாய் இருப்பது சமூகவலைத்தளங்களில் பார்க்கக்கூடியதாயுள்ளது... இது சிங்கம் படத்திலிருந்தே ஆரம்பமானாலும் விஜய் ஒப்பந்தமான நண்பன் படத்தை ஆட்டையைப்போட வெளிக்கிட்டதிலிருந்து பூதாகாரமாக வெடிக்க தொடங்கிட்டு... அந்த சமயம் சங்கருக்கு விஜயை வைத்து எடுக்கத்தான் விருப்பம் இருந்தது, ஆனால் தயாரிப்பு தரப்புக்கு சூர்யாவை வைத்து எடுக்கவே விருப்பம் இருந்தது.. ஆனால், சூர்யா கேட்ட மலையளவு சம்பளத்தால் நிலைகுலைந்த படத்தரப்பு சூர்யாவை நிரந்தரமாகவே தூக்கி எறிந்தது.. நண்பன் படத்தில் விஜயை தூக்க முற்பட்டத்தில் அரசியல் காரணங்களும் இருந்தாதகவும் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. எது எப்பிடியோ அந்த பிரச்சனை ஓவர்......


அதுக்கப்புறம் விஜய் டீவியால் நடத்தப்படும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சிக்கும் முதலில் ஒப்பந்தமானவர் விஜய்தான்.. பிறகு உள்ளுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சி தொகுப்பு உரிமை சூர்யாவுக்கு கைமாறிட்டு.... உண்மையில் உள்ளுக்குள் என்னதான் நடந்துதோ!!...


அப்புறமாய் தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்சு வெற்றிகரமாய் ஓடிய "Business man" திரைப்பட உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு சூர்யா தரப்பு வாங்கிட்டு, சரி அப்பிடி வாங்கினாலும் அதை சூர்யாவோ,கார்த்தியோ நடிக்கப்போவதாக தெரியவில்லை.. சூர்யா பொதுவாக தெலுங்கு காரமசாலா பார்முலாவை விரும்பமாட்டார்.. சரி கார்த்தியை பார்த்தால் தற்போது "அலெக்ஸ் பாண்டியன்" இல் நடிக்கிறார்.. இதுமுடிய ராஜேசுடன் "ஆல் இன் அழகுராஜா" வில் நடிக்கவுள்ளார்.. அப்புறமாய் வெங்கட்பிராவுடன் இணையவுள்ளார்.... அப்பிடி என்றால் ஏன் Business man இன் உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு வாங்கினார்கள்? விஜய் வாங்கக்கூடாது என்ற காரணத்துக்காகவா?.. ஏனென்றால் பொதுவா மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை விஜய்தான் தமிழ் ரீமேக் பண்ணி நடிப்பார்... அதனால்தான் அப்பிடியொரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியதாயுள்ளது.......
(பாகம் 2 அடுத்துவரும் நாட்களில்...........)


(அருமையான குடும்பம்..... அடுத்தவனுக்கு ஆப்படிக்காமல் இருந்தால் எல்லோராலும் விரும்பப்படுவீங்க..........)
                                                         
                              வருகை தந்தமைக்கு நன்றி..

comment