Sunday, April 29, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 2 (பிறந்தநாள் ஸ்பெசல்)

                              Happy advance birthday to my dear Thala Ajith

பாகம் 1 ஐ படிக்க
இன்று உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்தால் சொந்த உழைப்புக்கு அப்பால் ஆரம்பத்தில் யாராவது ஒருவரின் ஆதரவு இருந்ததெண்டே சொல்லலாம்.. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் எவருமே இல்லை. அவர் எப்பிடி வந்தார்? யாரால வந்தார் என்பது இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கு. ஏனெனில் அவர் ஒரு சுயம்பு, தன்னந்தனியே போராடி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தைரியத்துடன் உழைத்து வெற்றிக்கொடியை ஏற்றியுள்ளார். இன்றும்கூட அவரின் வெற்றிக்கு,வளர்ச்சிக்கு யாருமே சொந்தமோ,உரிமையோ கொண்டாட முடியாது.. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும்,வெற்றியிலும் அவர் மட்டுமே உரித்துரையவராவார்.. அஜித்தின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் அஜித்தாலே செதுக்கப்பட்டது.. வாழ்க்கை கொடுத்த வலி இன்று அவரை பூரண மனிதனாகிவிட்டது.. தான் வாழ்வில் பட்ட துன்பங்களை தன்னுடைய ரசிகர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் அவருக்கு அதீத வெறி உண்டு.. 


இவர்தான் ராம்ஜி

அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "யாரையும் கண்மூடித்தனமாய் நம்பவேண்டாம்" என்று சொன்னார்.. இதுகூட அவரின் வாழ்வில் சந்தித்த ஒரு ஏமாற்றம்தான்... கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் "ராம்ஜி" என்று ஒரு நடன பயிற்சிவிப்பாளர் கொடிகட்டி பறந்தார், நடன இயக்குனர் என்பதற்கு அப்பால் ஹீரோக்களுக்கு டூப்பாக, ஹீரோக்களுடன் சிறுசிறு வேடங்களிலும் வந்து போனவர்.. இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர், இவரின் வளர்ச்சியில் அஜித்தின் பங்கு நிறையவே உண்டு.. ஒருதடவை பணஉதவி கேட்டு அஜித்திடம் சென்றபோது எவ்வளவு தேவை என்று கேட்க சற்று தயங்கவே... நண்பராச்சே வெற்று காசோலையில் கையொப்பம் இட்டு குடுத்தார் தேவையானதை எடுக்கச்சொல்லி.. ஆனா, இதை சாதகமாக பயன்படுத்திய ராம்ஜி மிகப்பெருமளவு பணத்தை அபகரித்துவிட்டு வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்... இது அஜித்தின் வாழ்விலே மறக்கமுடியாத நம்பிக்கை துரோகமாச்சு......... (ராம்ஜி காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு என்ற பாட்டு சீனில் ஆடியவர்) 

அஜித்தும் சூப்பர்ஸ்டாரும்...


அஜித்தும் சூப்பர்ஸ்டாரும் என்பதை பார்க்கமுன் ஒருவிடயத்தை உணர்ந்துக்கொள்ளணும்... தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வளர்ந்து வரும்போது முன்னைய தலைமுறை நடிகர்களே பிரிந்து புது தலைமுறை நடிகர்களுக்கு ஆதரவளிப்பார்கள்... அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தலைமுறை நடிகர்களில் ஒருவர் மாஸ் ஹீரோவாக இருப்பார், அவரின் ரசிகர்களை யார் அடுத்த தலைமுறை நடிகர்கள் கவர்கிறார்கள் என்பதுதான் போட்டி.... எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பெருமளவானோர் அடுத்த தலைமுறையில் ரஜினிக்கு ஆதரவளித்தார்கள்... அதேபோல ரஜினியின் ரசிகர்களை அடுத்த தலைமுறை நடிகர்களில் யார் கவருவது??? இதுதான் இப்போதுள்ள தலைமுறை நடிகர்களான அஜித்,விஜய்க்கு இடையிலான போட்டி... இந்த விடயத்தில் ஆரம்பத்தில் அஜித் இது பற்றி கண்டும் காணாமலே இருந்தார்.. ஆனால் விஜய் மேடைக்கு மேடை ரஜினியை தலைவர் தலைவர் என்று துதிபாடி பக்காவா காய்நகர்த்தினார்..ரஜினியே ஒரு சமயத்தில் விஜய் தன்னுடைய ரசிகர்தான் என்றும், ஒரு மேடையில் விஜய்,விக்ரமை பார்த்து "இவர்களை பார்க்க நானும் கமலும் போல இருக்கு" என்றார்.. அதே சமயத்தில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஜித் "எனக்கு சூப்பர்ஸ்டாராக வர ஆசை உண்டு" என்று சொன்னார், அதை திருபடுத்திய மீடியாக்கள் அஜித் தான்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொன்னதாக பப்ளிசிட்டி பண்ணினார்கள்.. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் அந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களை விஜய் பக்கம் விரும்பியோ விரும்பாமலோ இழுக்க முக்கிய காரணமா போச்சு... அதன் தாக்கம் அன்று அஜித்தை வெகுவாய் பாதித்தது...


ஆனால், என்னதான் பாம்பை அணைத்து பால் குடுத்தாலும் அது பால் குடுத்தவனை கொத்தவே செய்யும்... அதை ரஜினி ரசிகர்கள் 2005/07 காலப்பகுதியில்தான் உணந்தார்கள்.. சந்திரமுகியுடன் போட்டியா சச்சினை இறக்கியது, மற்றும் வெறும் 2000 பேர் பங்குபற்றிய லோயா கல்லூரி வாக்கெடுப்பில் இரண்டு சதவீத வித்தியாசத்தில் வென்றுவிட்டு போட்ட கூத்துக்கள்..... உடனேயே ரஜினி ரசிகர்களை அஜித் பக்கம் சாதுவாக திசை திருப்ப செய்தன..... அதுக்கப்புறம் அஜித்தின் காட்டிலும் அடமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது... 2006 இல் அஜித் மூன்று வேடங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் சக்கைப்போடு போட்ட வரலாறு படத்தில் அஜித்தின் பிரமாத நடிப்பை பார்த்து தன்னுடைய இல்லத்துக்கு அஜித்தை விருந்துக்கு அழைத்தார் சூப்பர்ஸ்டார்... அன்றைய அந்தநாள் அஜித்தின் தலையெழுத்தையே மாற்றும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்... ஆமா, அப்போதுதான் தனது பலவருட கனவான பில்லா ரீமேக் உரிமையை ரஜினியிடம் கேட்டார் அஜித்... சூப்பர்ஸ்டாரும் உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.. அதுமட்டுமில்லை பட தொடக்கவிழாவுக்கு வந்து விளக்கேற்றியும் விட்டார்... படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது.... பாட்ஷா படம் வரும்போது அப்போதைய போட்டி நடிகர்களிலிருந்து ரஜினி எப்பிடி எட்டாத உயரத்துக்கு போனாரோ அதேபோல பில்லா வந்தாப்பிறகு அஜித்தும் போட்டி நடிகர்களுடன் ஒப்பிடுகையில் எங்கேயோ உச்சத்துக்கு போய்விட்டார்.. தமிழ் சினிமாவிலே பில்லா மாதிரி ஒரு முழுக்கமுழுக்க ஸ்டைலிசான படத்தை அதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை.. அதே பில்லாபோல தாங்களும் ஸ்டைலிசா நடிக்க ஆசைப்பட்டு போட்டிநடிகர் தோல்வியுற்றதும் எல்லோருக்கும் தெரிந்ததே..


அது மட்டுமில்லாது, ஆரம்ப காலத்தில் மனம்போல மேடைகளில்,மீடியாக்களுக்கு முன்னாள் பேசிவந்த அஜித்துக்கு ரஜினி வழங்கிய ஆன்மீக புத்தகம் அஜித்துக்கு வாய்க்கட்டு போட்டு அவரை பூரண மனிதனாக்கியது.. அதற்குப்பிறகு அவரின் பேச்சில் பக்குவம்,முதிர்ச்சி பளிச்சிட்டது....பின்னர் பாலா, அஜித்தை பணம் கேட்டு மிரட்டியபோது ரஜினி செய்த உதவி, அப்புறம் அசல் பட தொடக்கவிழாக்கும் ரஜினி வந்து சிறப்பித்தார்... அப்புறமாய் சந்திரமுகி பாகம் ரெண்டு கதையுடன் வந்த இயக்குனர் வாசுவுக்கு அஜித்தை சிபாரிசு செய்தார்..எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" வில் அஜித்தின் பேச்சுக்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது.. இவ்வாறு இன்றுவரை ரஜினி-அஜித் உறவு பலம் மிக்கதாய் இருக்கின்றது..ஒரு அஜித் ரசிகனாய் எந்தக்காலத்திலுமே ரஜினி மீது மிகுந்த மரியாதையை ஒவ்வொரு அஜித் ரசிகனும் வைத்திருப்பான். எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது தமிழகத்தில் உள்ள ஒரு அஜித் ரசிகர் மன்றத்தினர்(எந்த இடம் என்று நினைவில் இல்ல) ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம்கூட செய்தார்கள். அதேபோல ரஜினி ரசிகர்களும் இன்று அஜித்தை ரெம்பவே நேசிக்கிறார்கள்......





Saturday, April 28, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 1 (பிறந்தநாள் ஸ்பெசல்)


மே முதலாம் திகதியை உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.. அஜித் ரசிகர்களுக்கு இந்த நாள் தொழிலாளர்தினம் என்பதற்கு ஒருபடி மேலே போய் "தல தினம்" ஆகவே கொண்டாடுகிறார்கள்.. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்.. "ஏற்றிவிடவும் தந்தையுமில்ல, ஏந்திக்கொள்ளவும் தாய்மடியில்லை.. தன்னை தானே சிகரத்தில் வைத்தவர்" ஆமா யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்று எத்தனையோ எதிர்ப்புகள், நம்பிக்கை துரோகங்களுக்கு மத்தியில் தனியாளாய் நின்று வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற நடிகர் அஜித்குமாரின் பிறந்ததினம்தான் மே ஒன்று...... தல என்ற ஒரு சகமனிதனின் அசைவிற்கு பின்னால் விசில் சத்தம், வெடிச்சத்தம், கைதட்டல்கள் என்று விண்ணை பிளக்குமென்றால் அதுதான் தமிழ் சினிமாவிற்கு "தல தினம்".. உழைப்பால் உயர்ந்த உயரிய மனிதன்.. அமராவதி தொடங்கி மங்காத்தா வரை இருபது ஆண்டுகளில் ஐம்பது படங்கள் நடித்து அட்டகாசம் செய்து ஒவ்வொரு ரசிகனையும் அசலும் வட்டியுமா அமர்க்களப்படுத்திய ஒரே ராஜா.... அவரை பற்றி சொல்ல சன் டீவியோ, விஜய் டீவியோ, ஜெயா டீவியோ தேவையில்லை.. ஏனென்றால் தலைகளுக்கெல்லாம் அவரே தல.. ஒரு நல்ல மனிதன் நல்ல நடிகன் ஆகலாம், ஆனா ஒரு நல்ல நடிகன் நல்ல மனிதனாகினான் என்றால் அது அஜித்தான்...



தமிழ் சினிமாவின் சரித்திரத்தை ஒருதடவை திரும்பி பாருங்கள்.. அப்போது உங்களுக்கு புரியும், கீழே உள்ள கேள்விகளுக்கு யார்?, எத்தனை பேர் பொருத்தமானவர்கள் என்று?...

தமிழ் சினிமாவில் யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்றி நிலைத்து நின்று சாதித்தவர்கள் யார்யார்?

ரசிகர்களையே சந்திக்காது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் யார்?

அடுத்தவனை வீழ்த்தணும் என்று நினைக்காது "வாழு வாழவிடு" என்ற கொள்கையுடன் தன்பாட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர்?

ரசிகர்களுக்கென்றும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குதென்று உணர்ந்து, அதனால் தனக்கு வரப்போகும் பாதக தன்மைகளையும் பொருட்படுத்தாது தனது ரசிகர் மன்றங்களை கலைக்கும் துணிவு எத்தனை பேருக்குண்டு?

மூன்றாம் தரப்பினர் அறியாமல் பிறருக்கு உதவி செய்வோர் எத்தனை பேர்?



தன்னுடைய படத்தை பாருங்கள் என்று ஊர் ஊரா போய் புரமோஷன் செய்யாமல் பிடித்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லுகின்ற தைரியம் எத்தனை பேருக்குண்டு? 

பொது இடங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் மேடையில் இருப்பவர்களை துதிபாடாமல் தனது மனதில் பட்டத்தை பயப்பிடாமல் சொல்லும் தைரியம் எத்தனை பேருக்குண்டு?

தனது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக ரசிகர்களையோ, அரசியல்வாதிகளையோ, மற்றைய எந்தவொரு தரப்பினர்களையோ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்?

படப்பிடிப்பு தளத்தில் அடிமட்ட ஊழியர்களை மதித்து அவர்களின் குறைநிறைகளை விசாரித்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகக்கூடிய உயர்ந்த பண்பு எத்தனை பேருக்குண்டு?

ஊரில உள்ள எல்லா டீவி சனல்களுக்கும் போய் தன்னை பப்ளிசிட்டி பண்ணாம இருப்பவர்கள் எத்தனைபேர்?

படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே ஊடகங்களுக்கு போய் தன்னுடைய படம் வெற்றி வெற்றி என்று கூவாதவங்க எத்தனை பேரு?

காசு குடுத்து தியேட்டர்ல படத்தை ஓட்டுறவங்க, ஓடாத படத்துக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டுறவங்க மத்தியில் அவ்வாறு செய்யாது மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஹீரோக்கள் யார்யார்?



மேலே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.... தற்போதைய தலைமுறையில் அத்தனை கேள்விகளுக்கு பொருந்தக்கூடிய நடிகர் என்றால் அது அஜித் ஒருவராக மட்டும்தான் இருக்கமுடியும்.... ஒரு காலத்தில் அஜித் என்ற நடிகருக்கென்று ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்று ஒருபடி மேலே போய் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அஜித் என்ற மனிதரை நேசிக்கத்தொடங்கிவிட்டது.... அதனால்தான் எதிரிகள் வெட்ட நினைக்கும்போதும் கோடரியை உடைக்கும் அளவுக்கு காட்டுமரம்போல் விருட்சமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறார்.. ரசிகர்களை சந்திப்பதில்லை, ரசிகர் மன்றங்களை கலைத்தார்,விழாக்களுக்கு செல்வதில்லை,ஊடகங்களின் செல்வாக்கில்லை..ஆனாலும் எத்தனை படங்கள் தோத்தாலும் அதையும் மிஞ்சும் வகையில் அதற்கு அடுத்து வரும் படங்களுக்கு இருக்கும் மலையளவு ஒபெநிங்தான் தமிழ் சினிமாவையே அஜித்தை நோக்கி வாய்பிளக்க வைக்கின்றது..


பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஊடகங்கள் அஜித்தை "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று வர்ணித்துள்ளார்.. காரணம் இவரது பேச்சிலுள்ள அந்த திமிர்.. ஏன் இப்பகூட அஜித்தை பிடிக்காதவர்கள் சொல்லும் ஒரு கருத்து இதுதான்.... ஆமா அஜித்துக்கு திமிர்தான்.. அதை நானும் ஒத்துக்கொள்ளுறேன், அடிபட்டு பள்ளத்தில் இருக்கும்போது ஏறி மிதித்தவர்களை பீனிக்ஸ் போல எழுந்துவந்ததன் பிற்பாடு கொஞ்சிகுலாவவா சொல்றீங்க???.... என்னதான் பேச்சில் ஒரு திமிர் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும், அண்மையில்கூட ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் "உங்க தன்மானத்தை யாருக்காவது விட்டுக்குடுக்காதீங்க, உங்க வேலையை நூறு சதவீதம் ரசித்து செய்யுங்கள்....நல்லா படியுங்கள்...யாரையும் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள், யார் பின்னாலும் போகாதீர்கள்..மற்றவன் காலை மிதித்து முன்னேறாதீர்கள்.. சிம்பிளா சொல்றேன்.. வாழு வாழவிடு"......................Hats off my dear thala...... இந்த..இந்த..இந்த திமிர்தான் அஜித்தை பின்பற்றும அவரது ரசிகர்களுக்கு ஒரு "கிக்" ஐ கொடுக்கின்றது.......



-வருகை தந்தமைக்கு நன்றி-

Wednesday, April 4, 2012

தப்புமா கார்த்தியின் சகுனி ஆட்டம்??.



ஜனவரி முதல் நாள் வருகிறது, பொங்கலுக்கு வருகிறது, புதுவருடத்துக்கு வருகிறதென்று ஏப்ரல் மாதமே வந்துவிட்டது.. இன்னமும் படம் எப்ப ரிலீஸ் ஆகுதென்ற திகதியை உறுதிப்படுத்தமுடியாமல் தவிர்க்கிறது சகுனி படக்குழு... கடசியாக 2011  பொங்கலுக்கு வந்த சிறுத்தைக்கு பிறகு ஒன்றரை வருடங்களுக்கு பிறகுதான் அடுத்த படமான சகுனி வெள்ளித்திரைக்கு வரும்போல....   அப்பிடி என்னதானையா செய்யிறாங்க என்று கொஞ்சம் அலசித்தான் பார்ப்போமேன்.........


கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஆடுகளம்,காவலனுடன் கார்த்தியின் சிறுத்தையும் வந்தது.. சிறுத்தை படமானது தெலுங்கின் "கமெர்சியல் கிங் இயக்குனர்" என வர்ணிக்கப்படும் ராஜமௌலியின் இயக்கத்தில் ரவிதேயா மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2006 இல் வெளிவந்த "விக்ரமகுரு" என்ற படத்தின் ரீமேக் ஆகும்... முழுக்க முழுக்க தெலுங்கின் காரமசாலாவை அடையாளப்படுத்தும் இந்த படம் தமிழில் எப்பிடி போகும்? ....அதுவும் வெறும் மூன்றே மூன்று படங்கள் நடித்த கார்த்தி ஒரே நேரத்தில இருபது வில்லன்களை போட்டுத்தள்ளினா தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம்வேற அவர்களுக்குள் இருந்தது... ஆதலால் இயக்குனர் சிவா, ராஜமௌலியுடன் கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் வரை கதைவிவாதத்தில் ஈடுபட்டாராம், அதாவது தமிழ் இந்த படத்தை ரீமேக் பண்ணும்போது எந்தெந்த சீன்களை மாற்றவேணும், எதை மாற்றக்கூடாது என்பது பற்றி... சரி, ஒருவாறு படம் திரைக்கு வந்தவுடன் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,எப்பிடித்தான் மாற்றினாலும் அச்சொட்டா தெலுங்கு வாடை இருப்பது.. 


 இந்த படத்தை நான் திரையரங்கில் பார்த்து ஏன்டா இந்த படத்தை பார்த்தேன் என்றிருந்தது.. கார்த்தி வில்லன்களுக்கு அடிக்கிற ஒவ்வொரு அடியும் எனக்கு விழுந்ததுபோன்றதொரு பீலிங்க்ஸ். செம மொக்கையா இருந்திச்சு.... படம் நிச்சயமாக ஊத்தப்போகுது என்றுதான் நான் நம்பி இருக்க, ஒருவார முடிவில் வசூல் நிவரங்கள் வரத்தொடங்க பெரிய ஆச்சரியமா இருந்தது... வசூலில் ஆடுகளம், காவலனை பின்தள்ளிவிட்டு சக்கைப்போடு போட்டது.. இன்றுவரை இந்தப்படம் எப்பிடி தமிழ் ரசிகர்களால் "சூப்பர் ஹிட்" ஆனது என்பதற்கான காரணம் சரிவர புரியவில்லை.. எப்பிடியோ கொஞ்சம் படத்துக்கு அப்பால் அலசும்போது ஒருசில காரணங்கள் எழுந்தன, ஒன்று இந்தப்படம் பண்டிகைக்காலங்களில் வந்ததமை,  பண்டிகைக்காலம் என்றா இயல்பாகவே திரையரங்குக்கு கூட்டம் ஒதுங்குவது புதிதல்ல, மற்றது சிறுத்தையுடன் போட்டிக்கு வந்த காவலன்,ஆடுகளம் படங்கள் ஆக்சன் படமாக அமையாதது.. போட்டிப்ப்டங்கள் ரெண்டு மூன்று வரும்போது என்னதான் மொக்கை அக்சன் படங்களும் கொஞ்சம் தப்பித்துவிடும்... மேலும் விஜய் படம் வந்ததால் விஜய் 
எதிர்ப்பாளர்கள் சிறுத்தைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம்...  


சரி , ஏதோ சிறுத்தை சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.. சரி இனி நாம சகுனி ஆட்டத்துக்குள் நுழைவோம்... அறிமுக இயக்குனரின் படம் எண்டதால இயக்குனர் மீதான எதிர்பார்ப்பை தூக்கி போடலாம்... முழுக்க முழுக்க கார்த்தி மீதான எதிர்பார்ப்புத்தான்... படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி, அரசியல்வாதிகளை நக்கலடிப்பதாகவே இருக்கும் என மீடியா வாயிலாக கேள்விப்பட்டேன்... குறிப்பாக ஸ்பெக்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. உண்மையில் எந்த பிரச்னையை சித்தரிக்கப்போறார்கள் என்று சரியாக புரியாவிடினும், படத்தின் போக்கு நிச்சயமாக தெலுங்கு சாயலைத்தான் கொண்டிருக்கபோகிறது என்பது படத்தின் டெயிலரை பார்க்க ஊகிக்கமுடிகிறது..... இக்கதையை தெரிவுசெய்வதட்கு "சிறுத்தை" அளித்த வெற்றிதான் முக்கிய காரணியாக இருக்கலாம்....


சிறுத்தை படத்தில் உண்மையிலே கார்த்தியை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? அல்லது நான் மேலே சொன்ன காரங்களால்தான் படம் ஒடினதா என்பதுதான் இப்போது இருக்கும் பிரச்சனை... அஜித், விஜய், சூர்யா போன்றோர்களே இருபது படத்திற்கு அப்பால்தான் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார்கள்... அஜித் 25வது படத்தில்(அமர்க்களம்), விஜய் 36 வது படத்தில்(திருமலை), சூர்யா 23வது படத்தில்(அயன்)...தனுஷ்,சிம்பு,ஜீவா,ஜெயம் ரவி போன்றோர் இன்னமும் அந்த லிஸ்டுக்குள் இல்லை... அப்பிடி இருக்கும்போது கார்த்தியால் எப்பிடி முடியும்???? ............... படமே வரேல அதுக்குள்ளே இப்பவே வெற்றி தோல்வி பற்றி கதைக்கிறதா? சரி..சரி... அப்பிட்யே இந்த விசயத்திலிருந்து "எஸ்" ஆவோம்....


ம்ம்ம்.... அடுத்து ஆரம்பத்திலே சொல்லவந்ததை சொல்லிமுடித்திடுவோம்.. சகுனி பட தாமதத்துக்கு என்ன காரணம்??, இந்த படம் கொஞ்ச நாளைக்கு முதல்லே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாம்... சரி படம் எப்பிடி என்று சிவகுமார் மற்றும் சூர்யாவுக்கு காண்பிக்கப்பட்டதாம், அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமானது.. சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லனா நடித்தவரின் பெர்போமான்ஸ் சூர்யாவுக்கு திருப்தியளிக்கவில்லையாம்.. ஆதலால் பழைய வில்லனுக்கு பதிலாக பிரகாஸ்ராஜ்ஜை போட்டு வில்லன் வார சீன் முழுவதையும் திருப்பி எடுக்கச்சொல்லிட்டாராம்... பாவம் கார்த்தி, சின்னப்பிள்ளையாச்சே அப்பா, அண்ணாட சொல்லை தட்டேலாது.... சரி ஏதாவது நடத்துங்கப்பா என்று சொல்லிட்டு அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் "அலெக்ஸ் பாண்டியன்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்....
(அயன் படத்தின்ட மைனசே வில்லன்தான்... எப்பிடி அதை சூர்யா மறப்பார்?)


எது எப்பிடியோ சகுனி ஆட்டத்தை பார்க்கப்போற ரசிகர்களில் திணிக்காது வில்லன்களில் திணித்தா போதும்...

comment